Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் இன்று நிர்ணயம்: சொத்து குவிப்பு வழக்கில் காலை 11:00 மணிக்கு தீர்ப்பு

Posted:

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீது, இன்று காலை, 11:00 மணிக்கு, கர்நாடகா ஐகோர்ட் தீர்ப்பு அளிக்க உள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் வழக்கு என்பதால், இந்த தீர்ப்பு, தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலருமான ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஜெ.,யின் தோழி சசிகலா, அவரின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். பெங்களூரு சிறப்பு ...

மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை: மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட யோசனை

Posted:

கோல்கட்டா: அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மேற்கு வங்க மாநிலத்தில், ஆட்சியை கைப்பற்ற, பா.ஜ., முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், பிரதமர் ஆன பிறகு, முதல் முறையாக மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு அறிவுரை வழங்கும் விதமாக, 'மத்திய, மாநில அரசுகள் இணக்கமான போக்கை கொண்டிருக்க வேண்டும்; பிரச்னைகளை பேசித் தீர்க்க முன்வர வேண்டும்' என்றார். அதை மம்தாவும், பின், ஏற்றுக் கொண்டார்.மத்தியில் அசுர பலத்துடன் ஆட்சியை கைப்பற்றிய, பா.ஜ., அடுத்து நடைபெற்ற, அரியானா, மகாராஷ்டிரா, ...

விவசாயியை மணந்தார் கேரள பெண் அமைச்சர்

Posted:

வயநாடு: கேரள அரசில், பழங்குடி மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சரான பி.கே.ஜெயலட்சுமி, 30, தமது உறவு முறையை சேர்ந்த, சி.ஏ.அனில் குமார், 36, என்ற விவசாயியை மணந்தார். நேற்று, வாலாடு அருகே, அமைச்சரின் சொந்த ஊரான மாம்பயிலில், திருமணம் நடைபெற்றது. காலையில் பழங்குடியினரின் 'குரிச்சியா' சடங்கு முடிந்ததும், பச்சை வண்ண பட்டுப் புடவை உடுத்தி வந்த ஜெயலட்சுமி, முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகியோரின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.வெள்ளை வேட்டி, பட்டு சட்டையுடன் வந்த அனில் குமார், ஜெயலட்சுமி யின் கழுத்தில் தாலி கட்டினார். ...

ஊடகங்களுக்கு கெஜ்ரிவால் நெருக்கடி: காங்., - பா.ஜ., கண்டனம்

Posted:

புதுடில்லி: டில்லி மாநில அரசை விமர்சித்து, செய்தி வெளியிடும் ஊடகங்கள் மீது அவமதிப்பு வழக்கு தொடரும்படி, அனைத்து துறையினருக்கும், முதல்வர் கெஜ்ரிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதற்கு, கடும் கண்டனம் எழுந்துள்ளது. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. முதல்வர் கெஜ்ரிவால், சமீபத்தில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து துறைகளுக்கும், ஒரு சுற்றிக்கை அனுப்பியிருந்தார். அதில், 'முதல்வரையும், மாநில அரசையும் விமர்சிக்கும் வகையில், தவறான செய்திகள் வெளியிடும் ஊடகங்கள் குறித்து, முதன்மை செயலரிடம் புகார் ...

'குறுவை சாகுபடி உண்டா; இல்லையா?' கருணாநிதி

Posted:

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின், நேற்றைய அறிக்கை:தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மட்டும், 3 லட்சம் ஏக்கரில், ஆண்டுதோறும் குறுவைச் சாகுபடி நடைபெறும். அதற்கு உதவியாக, ஆண்டுதோறும், ஜூன் 12ல், மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால், 2012, 2013, 2014ம் ஆண்டுகளில், அ.தி.மு.க., ஆட்சியில், மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்பட்டதால், குறுவைச் சாகுபடி பொய்த்துப் போனது. 'பம்ப் செட்' வைத்திருக்கும், ஓரளவு வசதியுள்ள விவசாயிகள் மட்டும் குறுவைச் சாகுபடி செய்தனர். இந்த ஆண்டாவது, உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்க வேண்டும் என, விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ...

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை மிரட்டிய நீதிபதி

Posted:

புதுடில்லி: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மீது, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, தேசிய மனித உரிமைக் கவுன்சிலை அணுகப் போவதாகவும், அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாகவும் மிரட்டி உள்ளார்.கடிதம்: இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கவுலுக்கு, நீதிபதி கர்ணன் எழுதியதாக கூறப்படும், கையொப்பம் இடாத கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில், சிவில் நீதிபதிகள் நியமனம் குறித்து, தலைமை நீதிபதி பிறப்பித்த நிர்வாக உத்தரவை, தானாக முன்வந்து நிறுத்தியுள்ளதாக, ...

சென்னையை அடுத்து திருச்சியிலும் ஊழல் அதிகாரிகளுக்கு நெருக்கடி

Posted:

திருச்சி : சென்னையைப் போல, பொதுப்பணித் துறையில் ஊழலில் ஈடுபட்ட பொறியாளர்களின் பெயர் பட்டியலை, வெளியிட இருப்பதாக, திருச்சியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பொறுப்பில் உள்ள, பொதுப்பணித் துறையில், ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ள, 45 சதவீதம் வரை கமிஷன் கேட்பதாக, ஒப்பந்ததாரர்கள் தரப்பில் இருந்து, கடந்த சில நாட்களுக்கு முன் புகார் எழுந்தது. சென்னையில் பொதுப்பணித் துறையில் ஊழல் செய்த, 'டாப் - 10' ஊழல் பொறியாளர்களின் பட்டியலையும், ஒப்பந்ததாரர்கள் வெளியிட்டனர்.இந்நிலையில் நேற்று அதிகாலை, திருச்சி ...

புகார் கூறும் ஒப்பந்ததாரர்கள் 'பிளாக் மெயில்' பேர்வழிகள்: லஞ்ச புகாரில் முதலிடம் பிடித்த சங்க தலைவர் பேட்டி

Posted:

''பொறியாளர்கள் மீது லஞ்ச புகார் கூறியுள்ள ஒப்பந்ததாரர்கள், 'பிளாக் மெயில்' பேர்வழிகள்; அவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளோம்,'' என, பொதுப்பணித் துறை பொறியாளர் சங்கத்தின் மாநில தலைவர் மோகன்ராஜ் கூறினார்.

10 அதிகாரிகள் :
பொதுப்பணித் துறையில் பணிகளை மேற்கொள்ள, 45 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றம் சாட்டிய ஒப்பந்ததாரர்கள், அதிகம் லஞ்சம் கேட்கும், 10 அதிகாரிகள் பெயர் பட்டியலை, ஊழல் தடுப்பு பிரிவில் புகாராக கொடுத்து உள்ளனர். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளவர், பொதுப்பணித் துறை பொறியாளர் சங்க மாநில தலைவர் மோகன்ராஜ். இது, பொறியாளர்கள் ...

லிட்டருக்கு 5.44 கி.மீ., ஓட்டுவது எப்படி? கர்நாடகாவிற்கு தமிழக அதிகாரிகள் பாடம்

Posted:

டீசல் எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிப்பது குறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள், கர்நாடக போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பாடம் எடுத்தனர்.அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில், 1,037 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பெரும்பாலானவை போதிய பராமரிப்பின்றி இயங்குவதால், அவ்வப்போது, 'பிரேக் டவுன்' ஆவது வாடிக்கையாக உள்ளது. அதேநேரத்தில், தனியார் பஸ்களுடன் போட்டி போடும் வகையில், சொகுசான வசதிகளுடன், போதிய பராமரிப்புடன், கர்நாடக மாநில போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த பஸ்களில், ஒரு லிட்டர் டீசலுக்கு சராசரியாக, 5.22 கி.மீ., ...

போப் - காஸ்ட்ரோ சந்திப்பு; அமெரிக்கா - கியூபா இடையே மீண்டும் நல்லுறவை ஏற்படுத்தியதற்கு நன்றி

Posted:

வாடிகன்:கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ, வாடிகன் நகரில், போப் ஆண்டவரை சந்தித்து, அமெரிக்கா - கியூபா இடையே மீண்டும் நல்லுறவை ஏற்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தார். ரஷ்யாவில், இரண்டாம் உலகப் போரின், 70ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட காஸ்ட்ரோ, கியூபா திரும்பும் வழியில் நேற்று, ரோம் நகருக்கு சென்றார். அங்கு, வாடிகன் நகரில் போப் ஆண்டவரை சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்கா - கியூபா இடையிலான, 50 ஆண்டு பகையை, போப் பிரான்சிஸ் முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் நட்பு மலரச் செய்தமைக்காக, காஸ்ட்ரோ நன்றி தெரிவித்தார். இது, காஸ்ட்ரோவின் தனிப்பட்ட ...

இந்தியாவில் முதலீடு: பிரணாப் வேண்டுகோள்

Posted:

மாஸ்கோ: ''புதிய எழுச்சியை கண்டு வரும் இந்தியாவில், அதிக அளவில் முதலீடு செய்ய, ரஷ்யாவில் வாழும் இந்தியர்கள் முன்வர வேண்டும்,'' என, பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டுஉள்ளார்.இரண்டாம் உலகப்போரின், 70ம் ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்க, ரஷ்யா சென்ற பிரணாப் முகர்ஜி, மாஸ்கோவில், இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:இந்தியாவை, உலகத்தின் தயாரிப்பு மையமாக உருவாக்க, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதற்கு உதவும் வகையில், ரஷ்யாவில் உள்ள இந்திய சமூகத்தினர், தங்கள் ஆற்றலையும், முதலீடுகளையும், ...

6 கட்சிகள் ஒருங்கிணையும் ஜனதா பரிவார் இப்போதைக்கு இல்லை

Posted:

பாட்னா: பீகாரில், ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து செயல்படுவதில் சந்தேகம் உள்ளதாக கூறப்படும் நிலையில், ஜனதா பரிவாரில் இணைவதில் அவசரம் காட்டப்போவதில்லை என சமாஜ்வாடி கட்சியின் ராம்கோபால் யாதவ் கூறியுள்ளார். இதனால் ஜனதா பரிவார் தற்போது உருவாவதில் சிக்கல் எழுந்துள்ளது.கடந்த லோக்சபா தேர்தலில், உ.பி., பீகார் மாநிலங்களில், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வி அடைந்தன. பா.ஜ., அபார வெற்றி பெற்றது.பா.ஜ.,வின் எழுச்சியை சமாளிக்க, இந்த மூன்று கட்சிகளுடன், மதச் சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக்தளம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™