Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தமிழகத்தில் அங்கீகாரமற்ற 4,000 நர்சரி பள்ளிகள்: கமிட்டி அமைத்து விசாரிக்க கல்வித் துறை தீவிரம்

Posted:

தமிழகத்திலுள்ள, 4,000க்கும் மேற்பட்ட அங்கீகாரம் இல்லாத மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளை, ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பாக, குழு அமைக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில், 9,600 பள்ளிகள் உள்ளன. இதில், 5,900 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்; 41 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள். மற்றவை மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள். இது தவிர, தொடக்கப் பள்ளி இயக்குனர் கட்டுப்பாட்டில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகள், தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் இயங்குகின்றன. அதேநேரம், ...

2017க்கு பின் யாரும் கறுப்பு பணம் பதுக்க முடியாது:மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டம்

Posted:

புதுடில்லி: ''வரும், 2017ம் ஆண்டுக்கு பின், இந்தியர்கள் யாரும், வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்க முடியாது. அந்த அளவிற்கு, கறுப்பு பணத்துக்கு எதிரான கடுமையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். இந்தியாவில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், இந்தியர்கள் சிலர், பல ஆயிரம் கோடி ரூபாயை பதுக்கியுள்ளனர். மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்ததும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்கவும், எதிர்காலத்தில் கறுப்பு பண பதுக்கலை தடுக்கவும் அதிரடி ...

பா.ஜ., உறுப்பினர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி சாதனை

Posted:

புதுடில்லி: 'பாரதிய ஜனதா கட்சியின் முதற்கட்ட உறுப்பினர் சேர்க்கை பணி அதிகாரப்பூர்வமாக முடிவடைந்துள்ளது' என, அக்கட்சியின் தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:

முதற்கட்ட பணி:
பா.ஜ.,வில் உறுப்பினர்களை சேர்க்கும் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. அதன்படி, 10.3 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பா.ஜ., மாபெரும் அரசியல் கட்சியாக உலகளவில் உருவெடுத்துள்ளது.குறிப்பாக, உத்தர பிரதேசம் மற்றும் உத்ரகண்ட் மாநிலங்களில் அதிகபட்சமாக, 1.8 கோடி உறுப்பினர்கள் ...

சோனியா மருமகனிடம் திடீர் மாற்றம்: மக்களிடம் தொடர்பை ஏற்படுத்த முயற்சி

Posted:

புதுடில்லி: ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள ராபர்ட் வாத்ரா, மக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார். நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி, தன், 'பேஸ்புக்' பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா. அரியானாவில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அம்மாநில அரசின் ஆதரவுடன், முறைகேடாக நிலங்களை வாங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதற்கிடையே, அரியானாவிலும், மத்தியிலும், காங்கிரஸ் ஆட்சி இழந்து, பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. இதனால், தன் மீதான ...

யார் முதல்வர் என்றே தெரியவில்லை: மர்மம் நிலவுவதாக ஸ்டாலின் தகவல்

Posted:

சென்னை: மே தினத்தையொட்டி நேற்று, சென்னைசிந்தாதிரிப்பேட்டை யில் உள்ள, மே தின நினைவுப் பூங்காவில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார், தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின். பின், அவர் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும். ஆனால் இன்று, தொழிலாளர்களுக்கு அரசால் எந்த பாதுகாப்பும் இல்லை. தினந்தோறும், பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தமிழ்நாட்டில், யார் ஆட்சி நடக்கிறதென்றே தெரியவில்லை. ஏன், யார் முதல்வர் என்றும் தெரியாத மர்மமான சூழல் ...

ஜெ.,க்காக காத்திருக்கும் 'அம்மா அமுதம்!'

Posted:

ஜெயலலிதா முதல்வர் பதவியில் இல்லாததால், 'அம்மா அமுதம்' பல்பொருள் அங்காடிகளை துவக்கும் திட்டம் தாமதமாகி வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், 'அமுதம்' என்ற பெயரில், சென்னையில், 19, கடலூரில், மூன்று என, 22 பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகிறது. இந்த கடையில், அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவை, சந்தையை விட, சற்று குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. ''தமிழகத்தில், 37 கோடி ரூபாயில், 300, 'அம்மா அமுதம்' பல்பொருள் அங்காடிகள் துவக்கப்படும்,'' என, முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு, சட்டசபையில்தெரிவித்தார். இதைஅடுத்து, மாவட்டத்திற்கு தலா, 10 கடைகளை துவக்க, வாணிப ...

சீன எல்லைக்குள் நுழைந்த இந்திய போர் விமானம்

Posted:

காத்மாண்டு: நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற இந்திய போர் விமானம், பாதை மாறி, சீனா எல்லைக்குள் நுழைந்து விட்டது என, நேபாள அரசு தெரிவித்துள்ளது.நிவாரண பொருட்கள் மற்றும் ராணுவ வீரர்களுடன் வரும் இந்திய போர் விமானங்கள், நேபாள அரசு அதிகாரிகளின் ஒப்புதலின்றி, நேபாள நாட்டின் எல்லையை ஒட்டி உள்ள, சீனாவிற்குள் தவறுதலாக நுழைந்து விடுவதாக, நேபாள ஊடகங்கள் குற்றம்சாட்டின.'இந்தியாவின் இந்த போக்கு, நேபாளம் - சீனா இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்துவதாக உள்ளது; சர்ச்சைக்குரிய இந்தியாவின் செயல், நேபாள அரசுக்கு ...

இருட்டு பெட்டியில் பயணம்; தண்ணீரும் இல்லை: கோடை பயணத்தில் சொதப்பிய பிரீமியம் ரயில்

Posted:

சென்னை - நெல்லை பிரீமியம் சிறப்பு ரயில், இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இத்துடன், எட்டு பெட்டி களில் விளக்கு வசதி இல்லாமல், பயணிகள் இருட்டில் பயணித்தனர். தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால், நெல்லை, கோவை, தஞ்சை போன்ற முக்கிய மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால், நெல்லைக்கு மட்டும் சில சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. இவற்றில், அதிக கட்டணம் கொண்ட பிரீமியம் ரயில்களும் அடங்கும். கட்டணம் அதிகம் என்றாலும், வேறு வழியின்றி இந்த ரயிலிலும் பெரும்பாலானோர் பயணிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, 9:05 மணிக்கு, ...

இன்ஜி., தரவரிசை பட்டியல் ஜூனில் வெளியீடு

Posted:

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை, ஜூன் முதல் வாரத்தில், அண்ணா பல்கலை வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, போலி தர வரிசைப் பட்டியல்களை நம்ப வேண்டாம் என, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர். வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், வரும் 6ம் தேதி முதல், சென்னை அண்ணா பல்கலை உட்பட, தமிழகம் முழுவதும், 60 மையங்களில் வழங்கப்படுகின்றன. மொத்தம், 2.40 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தமிழகம் முழுவதும், 596 இன்ஜினியரிங் கல்லூரிகளில், கடந்த ஆண்டில், இரண்டு லட்சம் இடங்கள் இருந்தன. ஆனால், கவுன்சிலிங் ...

தன் மீதான விமர்சனங்களுக்கு செயலில் பதிலளித்த சச்சின்

Posted:

மும்பை: ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்ற சச்சின், பார்லிமென்டிற்கு வந்தது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. அவர் வளர்ச்சி திட்டங்கள் செய்தது குறித்தும் கேள்விகள் எழுந்தன. ஆனால் இதற்கெல்லாம் பதிலளித்துள்ளார் சச்சின். வார்த்தைகளால் அல்ல செயலால்.மகாராஷ்டிராவில் பழங்குடியினர் வசிக்கும் ஆரேய் என்ற பகுதி, அம்மாநில அதிகாரிகளால் பல ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்டு வந்தது. இங்கு வசித்த மக்கள், மின்சாரம் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி தவித்து வந்தனர். சிறுத்தை பயத்திலும் அவர்கள் பயந்து வந்தனர். இயற்கை உபாதைகளை கழிக்கும் போது ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™