Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மாஸ் நாளன்று வெளியாகிறது ஹைக்கூ டீசர்

Posted:

வெங்கட்பிரபு இயக்கத்தில், சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள மாஸ் திரைப்படம், வரும் 29ம் தேதி, திரைக்கு வர உள்ளது. இந்த படத்துடன், சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பான "ஹைக்கூ" படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

இதுகுறித்து, ஹைக்கூ படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் சமூக ...

“ஹீரோயினாக நடிப்பதால் மட்டுமே பெயர் கிடைத்துவிடாது” - 'குணச்சித்திர' பானுவின் விளக்கம்..!

Posted:

தாமிரபரணி பானு தனி கதாநாயகியாக நடித்த காலம் மலையேறிவிட்டது. அதனால் இப்போது தன்னை தேடிவரும் நல்ல வாய்ப்புகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார். தமிழில் அவர் நடித்துவரும் சகுந்தலாவின் காதலன் படத்தில் கதாநாயகி சகுந்தலா கேரக்டரில் இவர் தான் நடிக்கிறார் என்றாலும் படத்தில் மற்றவர்களை போல அவருக்கும் அது ஒரு கதாபாத்திரம் மட்டும் ...

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தார் மோகன்லால்..!

Posted:

ஜோஷியின் டைரக்சனில் மோகன்லால் நடித்துள்ள ஆக்சன் படமான 'லைலா ஓ லைலா' படம் கடந்தவாரம் வெளியாகி விட்டது. அதேபோல ரஞ்சித் டைரக்சனில் நடித்து வரும் 'லோஹம்' படத்தில் தன்னுடைய போர்ஷனை முடித்து விட்டார் மோகன்லால்.. இந்தப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. அடுத்த படத்தின் வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன் இந்த இரண்டு பணிகளும் ...

பிரின்ஸ் படத்தில் நடிக்கும் பிரபல மூத்த நடிகர்

Posted:

பிரபல மூத்த நடிகரும், மா (மூவி ஆர்டிஸ்ட்ஸ் அசோசியேஷன்) தலைவருமான நடகிரீடி ராஜேந்திர பிரசாத், பிரின்ஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த மா (மூவி ஆர்டிஸ்ட்ஸ் அசோசியேஷன்) தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு பெரும்பாலான வாக்குகளை பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கபட்டு வெற்றி பெற்றவர் நடகிரீடி ...

விஷாலுக்கு ஜோடி ஆகிறார் நித்யா மேனன்

Posted:

இயக்குநர் பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில், விஷாலுக்கு ஜோடியாக, நித்யா மேனன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷால், தற்போது சுசீந்திரன் இயக்கத்தி்ல், பாயும் புலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், விஷாலிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை ...

கிளாமர் ரோலுக்கு தயாராகும் பிரபல நடிகை

Posted:

ஊஹலு குசகுசலாடே என்ற வெற்றிப்படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானவர் ரஷி கண்ணா. இப்படம் வெற்றி பெற்றாலும், ஒரேமாதிரியான கதாபாத்திரங்களில் நடித்ததனால் இவர் கிளாமர் ரோலில் நடிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார்கள் டோலிவுட் தயாரிப்பாளர்கள். ஆனால் ஜோரு என்ற படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்த ரஷி கண்ணா எல்லோரையும் ...

என் ஒளிப்பதிவு மரபுகளை மீறும்! - ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர்

Posted:

இவரது பெயரில் உள்ள கதிர் போலவே, இவருக்கு தொழில்...கதிரும் (ஒளி) கதிர் சார்ந்த விஷயங்களும் தான்!. தமிழ் சினிமாவில், ஒளியில் விளையாடும் வல்லவர்களில் இவரும் ஒருவர். கற்றது தமிழ் படம் மூலம் இவருக்கு கிடைத்த பளிச் அடையாளத்தை , சுப்ரமணியபுரம், நாடோடிகள், ஈசன், போராளி ஆகிய படங்களில் தக்கவைத்துக்கொண்ட திறமைமிகு ஒளிப்பதிவாளர். சமீபத்தி்ல், ...

தனது படத்தை தானே அறிவித்த மெகா ஸ்டார்

Posted:

மெகா ஸ்டார் படம் பற்றிய எத்தனை அறிவிப்புகள் வந்தாலும், சிரஞ்சீவியே அந்த இனிய செய்தியை அறிவித்தால்தான் அவரது ரசிகர்களுக்கு முழுமையான சந்தோசம் உண்டாகும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த முக்கிய தருணமும் நடந்து விட்டது. சமீபத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கடப்பா மாவட்டத்தில் உள்ள ரயில்வே கொடூருக்கு, மன்னர் ஆந்திராபோஜ ...

டிவிட்டரில் 10 லட்சம் தொடர்பாளர்களைத் தொட்ட சிவகார்த்திகேயன்

Posted:

தமிழ்த் திரையுலகில் இன்றைய வளரும் இளம் நட்சத்திரங்களில் குறிப்பிட வேண்டியவர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்த சிறிது காலத்திலேயே அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அவர் நடித்து வெளிவந்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அவருக்கு வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் ...

'பாயும் புலி' எந்த ரிசல்ட்டும் பரவாயில்லை - விஷால்

Posted:

தமிழ்த் திரையுலகில் தற்போதுள்ள இளம் நடிகர்களில் விஷால் முற்றிலும் வித்தியாசமானவராக உள்ளார். அவருக்குப் பக்கபலமாக மற்ற இளம் நடிகர்கள் இருப்பதிலிருந்தே அதைப் புரிந்து கொள்ளலாம் என்கின்றனர் கோலிவுட்டினர். தன் தம்பி விக்ராந்தைக் கூட கை கொடுத்து தூக்கி விடாமல் விஜய் இருக்கும் போது, விக்ராந்தின் நண்பரான விஷால், 'பாண்டிய நாடு' ...

அப்பா படத்தில் நடிக்க மறுத்த ஸ்ருதிஹாசன், அக்ஷரா

Posted:

கமல்ஹாசன் குடும்பமே ஒரு நடிப்புக் குடும்பம். கமல்ஹாசனின் இரு மகள்களும் தற்போது நடிகைகளாக மாறிவிட்டார்கள். ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக இருக்கிறார். அக்ஷரா ஹாசன் அறிமுகமான 'ஷமிதாப்' ஹிந்திப் படம் படுதோல்வி அடைந்தது. இன்னும் அடுத்த படத்தில் நடிக்க அக்ஷரா சம்மதிக்காமல் இருக்கிறார். அவர் தொடர்ந்து ...

பெங்களூரில் வீடு கட்டும் 'பெங்களூர் டேய்ஸ்' ஜோடி..!

Posted:

கடந்த வருடம் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்ட கையோடு சினிமாவை விட்டும் ஒதுங்கினார் நஸ்ரியா. ஆனால் திருமணமானபின் நஸ்ரியாவின் வேலை என்னவாக இருக்கிறது..? படங்களிலும் நடிக்கவில்லை. ஆனாலும் நஸ்ரியா பரப்பரப்பாக இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார். 'பெங்களூர் டேய்ஸ்' படத்தின் மூலம் ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரும் தங்களுக்கு பிடித்தமான ...

இரண்டு வாரங்களில் 9 கோடி வசூல் ; உற்சாகத்தில் திலீப்..!

Posted:

கடந்த வருட இறுதியிலும் சரி.. இந்த வருட ஆரம்பத்திலும் சரி.. திலீப் நடிப்பில் வெளியான 'வில்லாளி வீரன்' மற்றும் 'இவன் மரியாதராமன்' ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை தழுவி அவரை சோர்வடைய செய்திருந்தன.. மிகப்பெரிய வெற்றி இல்லாவிட்டாலும் கடந்த வருடம் வெளியான 'ரிங் மாஸ்டர்' அளவுக்காவது டீசன்ட்டான வெற்றியாக இருந்தால் நன்றாக ...

ரஜினி படம் விரைவில் அறிவிப்பு

Posted:

"அட்டகத்தி, மெட்ராஸ்" படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக கடந்த வாரம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இது தொடர்பாக அடுத்து எந்த விதமான அறிவிப்புகளும் வெளியாகவில்லை. ஆனால், இயக்குனர் ரஞ்சித்துக்கு கதை விவாதம் செய்வதற்காக தனியாக அலுவலகம் போடப்பட்டு கொடுத்திருப்பதாகவும், உதவியாளர்களுடன் அவர் ...

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா: லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் புதிய நிகழ்ச்சி

Posted:

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் அடிக்கடி பயன்படுத்தும் "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..." என்ற வாக்கியத்தை கிண்டலடித்து விஜய் டி.வி ஒரு காமெடி நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்ப... அது பயங்கர வைரலாகி பரவியது. வடிவேலு காமெடியைப்போல ...

தமிழில் நடிக்க சுபா புன்ஜா ஆர்வம்

Posted:

மச்சி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுபா புன்ஜா, கர்நாடகத்தை சேர்ந்த இவர் தமிழில் சாதிக்க நினைத்தார். திருடிய இதயத்தை, சண்முகா, ஒரு பொண்ணு ஒரு பையன், சுட்ட பழம் ஆகிய படங்களில் நடித்தார், நடித்த படங்களும் பெரிதாக ஓடவில்லை. புதிய வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் சொந்த மாநிலத்துக்கு திரும்பிய சுபா புன்ஜா, அங்கு ...

இயக்குனரின் கற்பனையை ஒளிப்பதிவாளர் மதிக்க வேண்டும்: என்.கே.ஏகாம்பரம்

Posted:

புறம்போக்கு படத்தின் பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவிற்காக வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்.கே.ஏகாம்பரம். பேராண்மை தவிர ஜனநாதனின் அத்தனை படங்களின் ஒளிப்பதிவாளரும் இவர்தான்.
அவர் அளித்த பேட்டி: ஒரு படத்தின் ஒளிப்பதிவு சிறக்க வேண்டும் என்றால் அந்த படத்தின் இயக்குனரின் கற்பனைக்கு ஒளிப்பதிவாளர் மதிப்பளிக்க ...

வில்லன் ஆனார் விக்ராந்த்

Posted:

விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த், கிட்டத்தட்ட அவரைப்போன்ற தோற்றம் கொண்ட விக்ராந்த் 2005ம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு நெஞ்சத்தை கிள்ளாதே, நினைத்து நினைத்து பார்த்தேன், எங்கள் ஆசான், கோரிப்பாளையம் உள்பட பல படங்களில் நடித்தார். ஆனாலும் 10 ஆண்டுகள் ஆகியும் விக்ராந்தால் ஒரு ஹீரோவாக ஜெயிக்க முடியவில்லை. ...

இசைப்பிரியா படத்துக்கு தணிக்கை சான்றிதழ் மறுப்பு

Posted:

விடுதலைபுலிகள் அமைப்பின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா இலங்கையில் நடந்த இறுதிப்போரில் ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். இசைப்ரியாவின் வாழ்க்கையை மையமாக வைத்து போர்க்களத்தில் ஒரு பூ என்ற பெயரில் எஸ்.எஸ்.கே கிரியேஷன் சார்பில் குருநாத் சல்லானி என்பவர் படமாக தயாரித்தார். கு.கணேசன் என்பவர் இயக்கினார். இந்தப் ...

50வது நாளில் 'கொம்பன்'

Posted:

பலத்த சர்ச்சைகளுக்கிடையே கடந்த ஏப்ரல் 2ம் தேதி வெளிவந்த 'கொம்பன்' திரைப்படம் இன்று வெற்றிகரமாக 50வது நாளை எட்டியுள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாக புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்தப் படம் வெளியானால் சாதி மோதலை ஏற்படுத்தும் எனக் கூறி படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். ஆனால், நீதிமன்றத்தில் அந்த வழக்கு தள்ளுபடி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™