மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பிளஸ் 2 தேர்வில் மகனை பின்னுக்கு தள்ளி அதிக மார்க்குகளை வாங்கிய 37 வயது தாய்
- ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயற்சி: தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. சிக்கியது எப்படி? வீடியோ ஆதாரம் வெளியானது
- ஆம் ஆத்மி மந்திரி மீது பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி புகார்
- தெலுங்கானா உதயமான நாள்: ஐதராபாத்தில் நாளை கொண்டாட்டம்
- பீகார் சட்டசபை தேர்தல்: நிதீஷ்குமாருடன் கூட்டணிக்கு ராகுல்காந்தி விருப்பம்
- தென்மேற்கு பருவமழை 4–ந்தேதி தொடங்கும்: வானிலை இலாகா அறிவிப்பு
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்
- கடத்தப்பட்ட சிறுமி சமூக வலைதள உதவியால் மீட்பு: குற்றவாளியை போலீஸ்காரர் மடக்கி பிடித்தார்
- நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்துக்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு
- கர்நாடகத்தில் 5 மாதத்தில் 450 பேருக்கு டெங்கு பாதிப்பு
- 745 இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டன: ஆதித்ய தாக்கரே தகவல்
- தலைமை தேர்தல் கமிஷனரை நியமிப்பதில் புதிய முறை கொண்டு வரலாம்: தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி பேட்டி
- மும்பையில் கடந்த 11 மாதங்களில் மெட்ரோ ரெயிலில் 8½ கோடி பேர் பயணம்
- தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றியதாக அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம்
- ஆகஸ்டு 31-ந்தேதி கடைசி நாள்: வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய புதிய படிவம்
- கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறிய விவகாரம்: சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் இறுதி விவாதம் இன்று தொடங்குகிறது
- பீகாரில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 6 பேர் பலி
- டெல்லி-ஆக்ரா இடையே அதிவேக ரெயில்: பிரதமர் மோடி 9-ந்தேதி தொடங்கி வைக்கிறார்
- தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
- ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டம்: மோடியின் சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடு - காங்கிரஸ் குற்றச்சாட்டு
| பிளஸ் 2 தேர்வில் மகனை பின்னுக்கு தள்ளி அதிக மார்க்குகளை வாங்கிய 37 வயது தாய் Posted: 31 May 2015 11:11 PM PDT அசாம் மாநிலம், திப்ருகர்க் மாவட்டத்தில் வசிக்கும் தாய் ஒருவர், பிளஸ் 2 தேர்வில் தனது மகனை விட அதிக மார்க்குகளை வாங்கி சாதனை படைத்துள்ளார். இந்த ஆண்டிக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வில் தனது மகன் அங்கூருடன் சேர்ந்து 37 வயதான தாய் நயன்மோனி பெஸ்பருவாவும் தேர்வு எழுதினார். |
| Posted: 31 May 2015 10:58 PM PDT தெலுங்கானா மாநிலத்தில் மாநில சட்டமன்ற மேலவைக்கு (எம்.எல்.சி.) 6 இடங்களுக்கான தேர்தல் இன்று நடந்தது. இதில் முதல்–மந்திரி சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் போட்டியிட்டன. |
| ஆம் ஆத்மி மந்திரி மீது பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி புகார் Posted: 31 May 2015 10:25 PM PDT டெல்லி மாநில அரசியலில் சமீபத்தில் கவர்னர் நஜீப் ஜங்குக்கும், முதல்–மந்திரி கெஜ்ரிவாலுக்கும் இடையே ''அதிகாரம் யாருக்கு உள்ளது?'' என்பதில் கடும் மோதல் ஏற்பட்டது. கவர்னர் நஜீப்ஜங் தலைமை செயலாளராக நியமனம் செய்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகுந்தலா காம்லினை கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியினரும் ஏற்க மறுத்தனர். |
| தெலுங்கானா உதயமான நாள்: ஐதராபாத்தில் நாளை கொண்டாட்டம் Posted: 31 May 2015 10:22 PM PDT ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் கடந்த ஆண்டு பிரித்து உருவாக்கப்பட்டது. நாளை (செவ்வாய்க்கிழமை) தெலுங்கானா மாநிலம் உருவான முதலாண்டு தினமாகும். |
| பீகார் சட்டசபை தேர்தல்: நிதீஷ்குமாருடன் கூட்டணிக்கு ராகுல்காந்தி விருப்பம் Posted: 31 May 2015 09:37 PM PDT பீகார் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது இம்மாநிலத்தில் அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க., அங்கு சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. பாரதீய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த கட்சித் தலைவரும், முதல்– மந்திரியுமான நிதீஷ்குமார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். |
| தென்மேற்கு பருவமழை 4–ந்தேதி தொடங்கும்: வானிலை இலாகா அறிவிப்பு Posted: 31 May 2015 09:36 PM PDT கோடை வெயில் காரணமாக இந்தியா முழுவதும் கடும் வெப்பம் நிலவுகிறது. இதனால் அனல்காற்று வீசி மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி இருக்கிறது. கோடை வெயிலுக்கு நாடெங்கும் நேற்று வரை 2 ஆயிரத்து 200–க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து விட்டனர். வெயில் தாக்கம் எப்போது குறையும் என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை ஜூன் 30–ந்தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியது. |
| ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் Posted: 31 May 2015 09:18 PM PDT இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், அதை மீறி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ நிலைகள் மீது நேற்று நள்ளிரவில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. அம்மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டம், கிருஷ்ணாகட்டி செக்டாரில் |
| கடத்தப்பட்ட சிறுமி சமூக வலைதள உதவியால் மீட்பு: குற்றவாளியை போலீஸ்காரர் மடக்கி பிடித்தார் Posted: 31 May 2015 08:44 PM PDT மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ரியா கடந்த 28-ந்தேதி மர்ம ஆசாமி ஒருவரால் கடத்தப்பட்டாள். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் பந்த்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுமி கடத்தப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சிறுமி ரியாவை வாலிபர் ஒருவர் தூக்கிச்செல்லும் காட்சி தெளிவாக பதிவாகி இருந்தது. |
| நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்துக்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு Posted: 31 May 2015 08:25 PM PDT பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் மசோதாவை, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக மேல்-சபையில் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. |
| கர்நாடகத்தில் 5 மாதத்தில் 450 பேருக்கு டெங்கு பாதிப்பு Posted: 31 May 2015 08:20 PM PDT 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது பழமொழி. இந்த பழமொழிக்கு ஏற்ப பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை அமைவதில்லை. இதற்கு பருவ நிலை மாற்றமும், நவீன கால உணவு பழக்க வழக்கங்களும் தான் காரணம் என கூறப்படுகிறது. தற்போதைய, உலகமயமாதல் நாளில் |
| 745 இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டன: ஆதித்ய தாக்கரே தகவல் Posted: 31 May 2015 08:10 PM PDT மும்பையில் 745 இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக சிவசேனா கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையில் மழை காலம் எப்போது வேண்டுமானால் தொடங்கலாம் என்ற நிலையில் மாநகராட்சி சாலை சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. |
| தலைமை தேர்தல் கமிஷனரை நியமிப்பதில் புதிய முறை கொண்டு வரலாம்: தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி பேட்டி Posted: 31 May 2015 08:09 PM PDT தலைமை தேர்தல் கமிஷனர் உள்ளிட்ட தேர்தல் கமிஷனர்களை, 3 உறுப்பினர்களை கொண்ட தேர்வுக்குழுவின் (கொலிஜியம்) பரிந்துரையின்பேரில், ஜனாதிபதி நியமனம் செய்யும் முறையை கொண்டு வர வேண்டும் என்று மத்திய சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது. |
| மும்பையில் கடந்த 11 மாதங்களில் மெட்ரோ ரெயிலில் 8½ கோடி பேர் பயணம் Posted: 31 May 2015 08:07 PM PDT மும்பைவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள காட்கோபர்- வெர்சோவா இடையேயான மெட்ரோ ரெயில் சேவை கடந்த ஆண்டு ஜூன் 8-ந்தேதி தொடங்கப்பட்டது. மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி 11 மாதம் நிறைவடைந்து உள்ளது. வருகிற 8-ந்தேதி அன்று மெட்ரோ ரெயில் தனது 2-வது ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ளது. இந்த நிலையில் கடந்த 11 மாதங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் தடவை மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்பட்டுள்ளதாகவும், இதில், மொத்தம் 8 |
| தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றியதாக அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம் Posted: 31 May 2015 07:52 PM PDT மும்பையில் உள்ள ஜே.ஜே. ஆஸ்பத்திரியில், கிரான்ட் அரசு மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் டாக்டர் பன்சால் கல்லூரியின் இருதய பிரிவு சிகிச்சை துறையின் தலைமை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரில் பணியாற்றி கொண்டே தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பணியாற்றியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். |
| ஆகஸ்டு 31-ந்தேதி கடைசி நாள்: வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய புதிய படிவம் Posted: 31 May 2015 07:31 PM PDT மத்திய நேரடி வரிகள் வாரிய உத்தரவின்படி வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான புதிய படிவத்தை 2 மாதங்களுக்கு முன்பு வருமான வரி இலாகா அறிமுகம் செய்தது. அதில் கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்கள் |
| Posted: 31 May 2015 07:29 PM PDT கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பான வழக்கில், சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் இன்று இறுதி விவாதம் தொடங்குகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பலன் அடைந்த ஸ்வான் டெலிகாம் போன்ற நிறுவனங்கள், கலைஞர் டி.வி.க்கு முறைகேடாக ரூ.200 கோடி அளித்ததாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் 9 நிறுவனங்கள் உள்பட மொத்தம் 19 பேர் குற்றம் |
| பீகாரில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 6 பேர் பலி Posted: 31 May 2015 07:25 PM PDT பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் திருமண விழாவை முடித்து விட்டு 30 பேர் பஸ் ஒன்றில் ரோத்தாஸ் மாவட்டத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர். பக்சார்-கோச்சாஸ் சாலையில் வந்த போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர |
| டெல்லி-ஆக்ரா இடையே அதிவேக ரெயில்: பிரதமர் மோடி 9-ந்தேதி தொடங்கி வைக்கிறார் Posted: 31 May 2015 07:18 PM PDT உலகப்புகழ்பெற்ற தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ராவுக்கும், தலைநகர் டெல்லிக்கும் இடையே 'கதிமான் எக்ஸ்பிரஸ்' என்ற அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரெயிலில் 12 அதிநவீன பெட்டிகள், 5,400 குதிரைசக்தி கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. |
| தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை Posted: 31 May 2015 07:11 PM PDT பிரதமர் நரேந்திர மோடி 'மன் கி பாத்' ('மனதில் உள்ளதை பேசுகிறேன்') என்ற தலைப்பில், நாட்டு மக்களுடன் மாதம்தோறும் அகில இந்திய வானொலி மூலம் பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் வானொலி மூலம் பேசுகையில் கூறியதாவது:- |
| Posted: 31 May 2015 04:17 PM PDT காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அஜய் மக்கான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பிரதமர் மோடி, பதவிக்கு வந்து ஓராண்டு ஆன நிலையில், 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தில் சிக்கல்கள் இருப்பதாக கூறியுள்ளார். இது, |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |