மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஓடும் ரெயிலிலிருந்து கணவன் வெளியே தள்ளியதால் தண்டவாளத்தில் குழந்தை பெற்ற மனைவி
- ஆந்திரா–தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை 1367 பேர் பலி
- ராகுல் தொகுதி பற்றி விமர்சனம்: மத்திய மந்திரி இராணி மீது பிரியங்கா தாக்கு
- குஜ்ஜார்கள் போராட்டம் - சட்டம் ஒழுங்கை காக்க எடுத்த நடவடிக்கை என்ன: ராஜஸ்தான் அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு
- ரப்பர் விவசாயிகள் பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் பேசி தீர்வு காண்பேன்: ராகுல்காந்தி உறுதி
- தாமதமாக வேலைக்கு வந்த 17 விமான பணிப்பெண்கள் அதிரடி சஸ்பெண்டு
- ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற்றது திரிபுரா அரசு
- ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு குறித்து முக்கிய முடிவு: கர்நாடக மந்திரிசபை கூட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது
- முஸ்லிம் என்பதால் மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே துரத்தப்பட்ட இளம்பெண்
- பொருளாதாரம் பற்றி விவாதிப்பதற்காகவே மன்மோகனை மோடி அழைத்தார் - காங்கிரஸ் விளக்கம்
- தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் ஒடுக்க வேண்டும் என்ற மனோகர் பாரிக்கர் கருத்துக்கு கண்டணம் தெரிவித்து பாக். தீர்மானம்
- ராம்தேவின் பதஞ்சலி உணவு பூங்காவில் மோதல்: ஒருவர் சுட்டுக் கொலை
- கவர்னருக்கு அதிக அதிகாரம்: மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக டெல்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
- தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி: இலங்கை அமைச்சரின் கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில்
- ரெயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த மாணவி 12-ம் வகுப்பு தேர்வில் 63 சதவீதம் மதிப்பெண் பெற்றார்
- உ.பி.யில் தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 40 பயணிகள் படுகாயம்
- சரமாரி தாக்குதலுக்கு பிறகு மோடி-மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு
- கேரள மீனவர் வீட்டில் வஞ்சிரம் மீன் வறுவல் மற்றும் மத்தி மீன் குழம்பு வகைகளை ருசித்து சாப்பிட்ட ராகுல்
- இந்தியாவில் 2 வங்கிக் கணக்குகளை வைத்துக்கொள்ளலாம்: கிரீன்பீஸ் அமைப்புக்கு டெல்லி ஐகோர்ட் அனுமதி
- பிரதமரானால் என்ன செய்வீர்கள்? அரத பழசான கேள்விக்கு அசத்தல் பதில் சொல்லும் அல்ட்ரா குட்டீஸ் வீடியோ
| ஓடும் ரெயிலிலிருந்து கணவன் வெளியே தள்ளியதால் தண்டவாளத்தில் குழந்தை பெற்ற மனைவி Posted: 27 May 2015 10:25 PM PDT ஒடிசா மாநிலத்தில் ஓடும் ரெயிலிலிருந்து கர்ப்பிணி மனைவியை கணவன் தள்ளி விட்டதால் அந்தப் பெண் தண்டவாளத்திலேயே குழந்தையை பிரசவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோராபுட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று அந்தப்பெண் தனது கணவர் சூரஜ் கெர்கடாவுடன் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கணவன் |
| ஆந்திரா–தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை 1367 பேர் பலி Posted: 27 May 2015 10:17 PM PDT கத்திரி வெயிலின் தாக்கம் தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் அதிகமாக காணப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அதிகபட்சமாக 116.6 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. இதனால் பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. பொது மக்கள் எங்குமே தலை காட்ட முடியாமல் வீட்டுக் குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். |
| ராகுல் தொகுதி பற்றி விமர்சனம்: மத்திய மந்திரி இராணி மீது பிரியங்கா தாக்கு Posted: 27 May 2015 10:08 PM PDT உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் காங்கிரஸ் அரசு பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வந்ததாக மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி குற்றம் சாட்டினார். |
| Posted: 27 May 2015 09:59 PM PDT ராஜஸ்தான் மாநிலத்தில் இடஒதுக்கீடு தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி குஜ்ஜார் இன மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் காரணமாக அம்மாநிலத்தில் சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. |
| ரப்பர் விவசாயிகள் பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் பேசி தீர்வு காண்பேன்: ராகுல்காந்தி உறுதி Posted: 27 May 2015 09:39 PM PDT காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கேரளாவில் கடந்த 2 நாட்களாக சுற்றுப்பயணம் செய்தார். நேற்று அவர், கோட்டயம் மாவட்டம் ஆலுவாவில் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார். அப்போது ராகுல்காந்தியை 18 ரப்பர் விவசாய அமைப்பைச் |
| தாமதமாக வேலைக்கு வந்த 17 விமான பணிப்பெண்கள் அதிரடி சஸ்பெண்டு Posted: 27 May 2015 09:37 PM PDT ஏர் இந்தியா நிறுவனம் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விமான பணிப்பெண்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருவது, விமானங்களை தாமதமின்றி இயக்குவது என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. |
| ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற்றது திரிபுரா அரசு Posted: 27 May 2015 09:02 PM PDT திரிபுராவில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாத காலமாக அமலில் உள்ள இச்சட்டம் இம்மாத இறுதியுடன் காலாவதியாகிறது. 18 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட |
| Posted: 27 May 2015 08:10 PM PDT சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் மற்றும் அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா ஆகியோர் கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். அப்பீல் செய்யுமாறு தமிழக எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. |
| முஸ்லிம் என்பதால் மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே துரத்தப்பட்ட இளம்பெண் Posted: 27 May 2015 05:21 PM PDT மும்பையை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பெண் ஒருவர் முஸ்லிம் என்பதால் வெளியே துரத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிஸ்பா குவாதரி என்ற 25 வயது பெண் ஊடகத்துறையில் வேலை பார்த்து |
| பொருளாதாரம் பற்றி விவாதிப்பதற்காகவே மன்மோகனை மோடி அழைத்தார் - காங்கிரஸ் விளக்கம் Posted: 27 May 2015 04:50 PM PDT மோடி-மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், பொருளாதாரம் பற்றி விவாதிப்பதற்காகவே மன்மோகனை பிரதமர் அழைத்ததாக கூறியுள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாம் ஆண்டு தொடக்க |
| Posted: 27 May 2015 12:32 PM PDT தீவிரவாதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கருத்துக்கு கண்டணம் தெரிவித்து பாகிஸ்தான் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அண்மையில் சென்ற மனோகர் பாரிக்கர், |
| ராம்தேவின் பதஞ்சலி உணவு பூங்காவில் மோதல்: ஒருவர் சுட்டுக் கொலை Posted: 27 May 2015 09:23 AM PDT பாபா ராம்தேவின் பதஞ்சலி உணவு மற்றும் மூலிகைப் பூங்காவின் பாதுகாவலர்களுக்கும், லாரி சங்க உறுப்பினர்களுக்குடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரின் பதர்தா பகுதியில் ராம்தேவின் பதஞ்சலி உணவு மற்றும் மூலிகைப் பூங்கா உள்ளது. இங்கிருந்து லாரிகள் மூலம் பொருட்கள் மார்க்கெட்டுகளுக்கு ஏற்றிச் செல்லப்படுகின்றன. |
| Posted: 27 May 2015 09:14 AM PDT டெல்லி கவர்னருக்கு அதிக அதிகாரம் வழங்கப்படுவது தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்புக்கு எதிராக டெல்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை கவர்னர் நஜீப் ஜங்குக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்தது. அதிகாரிகள் நியமனம், பொது ஒழுங்கு, போலீஸ் உள்ளிட்டவற்றில் டெல்லி கவர்னருக்குத்தான் அதிகாரம் உண்டு என்று மத்திய அரசு கடந்த 21–ந் தேதி |
| தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி: இலங்கை அமைச்சரின் கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில் Posted: 27 May 2015 08:50 AM PDT மீன்பிடி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆண்டின் 65 நாட்கள் இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற சமரச திட்டத்தை இலங்கையிடம் இந்திய அரசு தெரிவித்தது. இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. 65 நாட்கள் அல்ல.. இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க 65 மணி நேரம்கூட அனுமதிக்க மாட்டோம் |
| ரெயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த மாணவி 12-ம் வகுப்பு தேர்வில் 63 சதவீதம் மதிப்பெண் பெற்றார் Posted: 27 May 2015 08:18 AM PDT மராட்டிய மாநிலம், கட்கோபர் பகுதியில் உள்ளூர் ரெயிலில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தவறி விழுந்த மோனிகா(17) என்ற மாணவி ரெயிலின் படிக்கட்டுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கினார். இந்த விபத்தில் இரு கைகளும் துண்டிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளியாக மாறிப்போனார். எனினும், விடாமுயற்சியுடன் படித்துவந்த இவர், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மராட்டிய மாநில உயர்நிலைப்பள்ளியின் 12-ம் வகுப்பு தேர்வில் இன்னொரு மாணவியின் மூலம் பரீட்சை எழுதினார். இதில் 63 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். |
| உ.பி.யில் தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 40 பயணிகள் படுகாயம் Posted: 27 May 2015 07:38 AM PDT உத்தர பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் இன்று தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 40 பயணிகள் படுகாயம் அடைந்தனர். சுமார் 70 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து, ஷியோகாபாத் பகுதியில் உள்ள பாகர்பூர் கிராமத்தின் அருகில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர், சாலையோரத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து அமுக்கியதால் காயமடைந்ததுடன், வெளியேற முடியாமல் தவித்தனர். |
| சரமாரி தாக்குதலுக்கு பிறகு மோடி-மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு Posted: 27 May 2015 07:08 AM PDT மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி ஆட்சியின் சாதனைகளை ஆளும்கட்சியும், ஏமாற்றத்தை காங்கிரஸ் கட்சியும் பட்டியலிட்டு வரும் நிலையில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சித்து, கண்டனக் கணைகளை தொடுத்து வருகின்றனர். மோடியின் ஆட்சியில் அவருக்கு நெருக்கமான நபர்கள் ஆதாயம் அடைந்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகின்றது. எனது ஆட்சியி |
| Posted: 27 May 2015 06:52 AM PDT கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, திருச்சூர் மாவட்டத்தில் அக்கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மீனவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றார். அப்போது விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரிப்பதுபோல் மீனவர்களிடமிருந்து கடலை அபகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ராகுல் குற்றம்சாட்டினார். கடலின் அருகில் வசிக்கும் மக்கள் கடலை |
| இந்தியாவில் 2 வங்கிக் கணக்குகளை வைத்துக்கொள்ளலாம்: கிரீன்பீஸ் அமைப்புக்கு டெல்லி ஐகோர்ட் அனுமதி Posted: 27 May 2015 06:22 AM PDT அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு(NGO) எதிரான மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் இயக்கமான கிரீன்பீஸ் தனது 2 வங்கிக் கணக்குகளை நடத்திக் கொள்ளலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அயல்நாட்டு நிதிப்பங்களிப்பு கட்டுப்பாட்டு சட்டத்தை கிரீன்பீஸ் அமைப்பு மீறியதாகவும், வெளிநாட்டிலிருந்து வரும் நிதியை உள்நாட்டு நிதியுடன் |
| பிரதமரானால் என்ன செய்வீர்கள்? அரத பழசான கேள்விக்கு அசத்தல் பதில் சொல்லும் அல்ட்ரா குட்டீஸ் வீடியோ Posted: 27 May 2015 06:18 AM PDT பள்ளிக்காலத்தில் நம் கற்பனைத்திறனை அதிகம் சோதித்த ஒரு கேள்வி இந்தியாவின் பிரதமரானால் என்ன செய்வாய்? இதற்கு எவ்வளவோ முயற்சி செய்து நாமும் பதிலளித்திருப்போம். ஆனால், இதே கேள்வியை இந்தியா முழுவதிலும் உள்ள 7 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளிடம் கேட்கப்பட்ட போது வந்த பதில்கள் ஆச்சர்யமானது. பலர் பெண்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுப்பேன், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு தண்டனை வழங்கும் 377 சட்டப்பிரிவை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |