Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கெஜ்ரிவால் மோதலுக்கு முற்றுப்புள்ளி: டெல்லியில் கவர்னருக்கே முழு அதிகாரம்- மத்திய அரசு அறிவிப்பு

Posted: 21 May 2015 10:40 PM PDT

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலில் வெற்றி பெற்று முதல்–மந்திரியாக இருக்கிறார். அங்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நஜீப் ஜங் கவர்னராக பதவி வகிக்கிறார். அதிகாரிகள் நியமனம் தொடர்பாக கவர்னருக்கும், முதல்–மந்திரிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தலைமைச் செயலாளராக சகுந்தலா கேம்லினை கவர்னர் நியமனம் செய்தார். இதை ஏற்க கெஜ்ரிவால் மறுத்தார். அவரை

தெலுங்கானாவில் கோதாவரி ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி

Posted: 21 May 2015 10:04 PM PDT

கோதாவரி ஆற்றில் ஆந்திர அரசு பஸ் கவிந்ததில் 2 பேர் பலியானார்கள். ஐதராபாத் அருகே உள்ள சாரப்பாக்கம் என்ற இடத்தில் இருந்து பத்ராச்சலத்துக்கு ஆந்திர அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 42 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் பத்ராச்சலம் அருகே கோதாவரி ஆற்று பாலத்தில் சென்ற போது

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று இளம்பெண் தற்கொலை

Posted: 21 May 2015 09:55 PM PDT

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த வட்டிஇன்ட்லு கிராமத்தில் ஒரு விவசாய கிணற்றில் 2 பெண் குழந்தைகள் இறந்து கிடப்பதாக கங்கவரம் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவல் அறிந்ததும் கங்கவரம் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களின் உதவியோடு 2 பெண் குழந்தைகளின்

115 டிகிரி கொளுத்தியது: ஆந்திரா, தெலுங்கானாவில் வெயிலுக்கு 160 பேர் பலி

Posted: 21 May 2015 09:38 PM PDT

ஆந்திரா, தெலுங்கானாவில் நேற்று தாங்க முடியாத வகையில் வெயில் கொளுத்தியது. கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அக்னி நட்சத்திரம் கடந்த 4–ந்தேதி தொடங்கியது. என்றாலும் வெப்ப சலனம் காரணமாக பெய்த பலத்த மழை காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம்

கோஷ்டி பூசலை உருவாக்கினால் அச்சுதானந்தன் மீது நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் எச்சரிக்கை

Posted: 21 May 2015 09:29 PM PDT

கேரள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவராக அச்சுதானந்தன் இருந்து வருகிறார். இவர் கேரள மாநில முதல்வராக இருந்தவர். தற்போது கேரள சட்டசபை எதிர்கட்சி தலைவராக செயலாற்றி வருகிறார். தன் மனதில் பட்ட கருத்தை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர் அச்சுதானந்தன். இதனால் அவர் தான் இருக்கும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு

மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வில் முறைகேடு: இறுதி வாய்ப்பாகத் தான் மறுதேர்வு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 21 May 2015 07:29 PM PDT

அகில இந்திய அளவில் நடந்த மருத்துவ கல்லூரி நுழைவுத் தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணை நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, யு.யு.லலித் ஆகியோர் முன்னிலையான அமர்வு முன்பு நடைபெற்றது.

அதிகாரிகள் நியமனத்தில் பண பரிமாற்றத்தை தடுக்க ஆம் ஆத்மி அரசு நடவடிக்கை: டெல்லி துணை முதல்-மந்திரி பேட்டி

Posted: 21 May 2015 07:16 PM PDT

டெல்லியில் உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை கவர்னர் நஜீப் ஜங்கிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை இருவரும் தனித்தனியாக சந்தித்து பேசினர்.

மூட நம்பிக்கையின் உச்சம்: பிறந்து 2 நாளே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்தைப் பிடித்து நடக்க வைத்த சூனியக்காரி

Posted: 21 May 2015 05:26 PM PDT

பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் காய்ச்சலை குணப்படுத்த சூனியக்காரி ஒருத்தியிடம் ஒரு பெண் கூட்டிப் போவதும், துளியும் மனிதத்தன்மையற்ற அந்த சூனியக்காரி அந்தக் குழந்தையை எல்லோர் முன்னும் கொடுமைப்படுத்துவதும் இந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மூட நம்பிக்கையின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும். அசாம் மாநிலத்தில் உள்ள மோரிகன் மாவட்டத்தில், பிறந்து இரண்டு

காஷ்மீரில் பயங்கர வன்முறை: போலீசார் கண்ணீர் புகை குண்டுவீச்சு

Posted: 21 May 2015 04:56 PM PDT

காஷ்மீரில் மறைந்த ஹூரியத் அமைப்பு தலைவர்களின் நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து முழுஅடைப்புக்கு அழைப்பு விடப்பட்டதால் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். சில இடங்களில் தடை உத்தரவும் போடப்பட்டு இருந்தது.

ஆந்திராவில் சென்னை ரெயிலில் கொள்ளையர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

Posted: 21 May 2015 04:16 PM PDT

ஆந்திராவில் நடுவழியில் சென்னை ரெயிலை நிறுத்தி கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு விரட்டி அடித்தனர். ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சென்னையை நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று, நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சுராரெட்டிபாலத்துக்கும், தங்குதுரு கிராமத்துக்கும் இடையே ரெயில் வந்து கொண்டிருந்தபோது, அந்த ரெயிலை கொள்ளையர்கள் தடுத்து நிறுத்தினர்.

8 மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபத்தில் பலி

Posted: 21 May 2015 03:42 PM PDT

குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் 8 மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சூரத் தேசிய நெடுஞ்சாலையில்(NH 8) காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சூரத்தின் புறநகர் பகுதியான காம்ரெஜ் பகுதியில் மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் தளர்வு: மத்திய மந்திரிசபை முடிவு

Posted: 21 May 2015 03:30 PM PDT

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்காக, அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டது. அன்னிய முதலீட்டை பெருக்குவதற்காக, பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கமிட்டி கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

பீகார் மக்களுக்கு எதிரான பேச்சு: ராஜ்தாக்கரே மீதான வழக்கு விசாரணைக்கு தடை - டெல்லி ஐகோர்ட் உத்தரவு

Posted: 21 May 2015 02:15 PM PDT

மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே பீகார் மக்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாக, அவர் மீது கடந்த 2008-ம் ஆண்டு டெல்லி, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றும்படி ராஜ்தாக்கரே சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். இதைத் தொடர்ந்து வழக்குகள் அனைத்தும் டெல்லி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

ஜன் அவ்ஷாதி மருந்துக்கடைகளில் 60 சதவீதம் குறைந்த விலையில் அத்தியாவசிய மருந்துகள்- மத்திய மந்திரி

Posted: 21 May 2015 01:09 PM PDT

நாடு முழுவதும் அரசின் 'ஜன் அவ்ஷாதி' மருந்துகடைகள் மூலம், அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளை 20 முதல் 60 சதவீத விலைக் குறைப்புடன் ஏழை, எளிய மக்களுக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் தெரிவித்தார். இதுகுறித்து, டெல்லியில் நடந்த விழா ஒன்றில் அவர் பேசுகையில் "கடந்த வருடம் புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களுக்கு பயன்படுத்தப்படும்

சுற்றுச்சூழலைக் காக்கும் க்ரீன்பீஸ்: ஒரு மாதம் சம்பளமின்றி வேலை பார்க்க இந்திய ஊழியர்கள் முடிவு

Posted: 21 May 2015 11:22 AM PDT

சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் இயற்கையை பாதுகாக்கும்படி மக்களை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ள சர்வதேச சுதந்திர பிரச்சார நிறுவனம் க்ரீன்பீஸ். இந்திய அரசால் தாங்கள் குறிவைக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள சுற்றுச்சூழல் தன்னார்வக்குழுவான, க்ரீன்பீஸ், இந்தியாவில் தனது செயல்பாடுகளை தான் ஒரு மாதத்துக்குள் நிறுத்தவேண்டியிருக்கும் என்று

ஏ.டி.எம் மையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய கொள்ளையன் கூட்டாளிகளுடன் கைது

Posted: 21 May 2015 10:42 AM PDT

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஏ.டி.எம் மையத்திற்குள் துப்பாக்கியால் சுட்டு, பெண்ணிடம் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் இன்று கைது செய்தனர். ஐதராபாத்தின் மதுரா நகரில் உள்ள விடுதி ஒன்றில் சாப்ட்வேர் துறையில் பணிபுரியும் ஸ்ரீ லதா(25) தங்கியிருந்தார். நேற்று காலை அருகிலுள்ள எ.டி.எம்மிற்கு பணம் எடுப்பதற்காக சென்ற அவரை பின் தொடர்ந்து

முஸ்லிம் என்பதால் வாலிபருக்கு வேலை தர மறுத்த மும்பை நிறுவனம் மீது எப்.ஐ.ஆர் பதிவு

Posted: 21 May 2015 08:57 AM PDT

முஸ்லிம் என்பதால் வாலிபருக்கு வேலை தர மறுத்த மும்பை நிறுவனம் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 23 வயதான எம்.பி.ஏ. பட்டதாரி ஜேஷான் அலி கான். பன்னாட்டு நகை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் வேலைக்கு ஆள் தேவை என்ற

பீகார் தேர்தல் பா.ஜனதாவின் சவப்பெட்டியின் மூன்றாவது ஆணியாக இருக்கும்- ஜெய்ராம் ரமேஷ்

Posted: 21 May 2015 06:23 AM PDT

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ், வரும் பீகார் தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடையும். இந்த தேர்தலின் முடிவு பா.ஜனதாவின் சவப்பெட்டியில் மூன்றாவது ஆணியாகும் என்று தெரிவித்தார்.

ஜெயலலிதா பதவி ஏற்க தடை கோரிய பொது நல வழக்கு: கர்நாடக கோர்ட்டில் தள்ளுபடி

Posted: 21 May 2015 05:47 AM PDT

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்கக் கூடாது என்றும் அதற்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆர்.

முஸ்லிம் என்பதால் எம்.பி.ஏ. பட்டதாரிக்கு வேலை தர மறுத்த மும்பை நிறுவனம்

Posted: 21 May 2015 05:30 AM PDT

மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று முஸ்லிம் என்பதால் எம்.பி.ஏ. பட்டதாரி ஒருவருக்கு வேலை தர மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 23 வயதான எம்.பி.ஏ. பட்டதாரி ஜேஷான் அலி கான். பன்னாட்டு நகை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் வேலைக்கு ஆள் தேவை என்ற


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™