மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஐதராபாத்தில் தங்கியிருந்து செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட சீனப்பெண்: கூட்டாளி சிக்கியதால் தப்பி ஓட்டம்
- என்.டி.ராமராவ் கிருஷ்ணர் வேட சிலை அமெரிக்கா செல்கிறது
- பால்ய விவாகத்தை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி: 16 லட்ச ரூபாய் அபராதம் விதித்து அதிர்ச்சி அளித்த பஞ்சாயத்து
- ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு: மேல் முறையீடு பற்றி முடிவு செய்யவில்லை- சித்தராமையா பேட்டி
- கர்நாடகாவில் 2 பெண்கள் – குழந்தை உள்பட 5 பேர் கொலை: போலீசார் விசாரணை
- கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்
- திருவனந்தபுரத்தில் 2 பெண்களை கற்பழித்த வியாபாரி கைது
- கொல்கத்தா மின்சார ரெயிலில் குண்டுவெடிப்பு: 17 பேர் படுகாயம்
- சொத்து குவிப்பு வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்டது நிரூபணமாகியுள்ளது: வக்கீல் குமார் பேட்டி
- ஜெயலலிதா விடுதலைக்கு காரணம் என்ன?: நீதிபதி தீர்ப்பு முழு விவரம்
- மைசூருவில் 75 குட்டிகளை ஈன்ற அரிய வகை மலைபாம்பு
- மோடியின் புதிய முழக்கம்: ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்பதை தொடர்ந்து ஜெய் விஞ்ஞான்
- இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க தடை- வெளிநாட்டு படகுகளுக்கு அனுமதி: ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு
- சிவில் நீதிபதிகள் தேர்வு விவகாரம்: சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை
- நிதின் கட்காரி பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் அமளியால் டெல்லி மேல்-சபை ஒத்திவைப்பு
- போக்குவரத்து காவலர் பெண்ணை செங்கல்லால் தாக்கிய சம்பவம் மன்னிக்க முடியாத குற்றம் - முன்னாள் போலீஸ் ஆணையர்
- பாகிஸ்தானில் இருக்கும் தாவூத் இப்ராகிமை இந்தியா கொண்டு வரும் வரை ஓய மாட்டோம்: ராஜ்நாத் சிங் உறுதி
- குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கும் கருப்பு பண மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
- வி.ஐ.பி நம்பருக்காக 50 ஆயிரம் ரூபாய் வண்டிக்கு 8.1 லட்சம் கொடுத்த நபர்
- சத்யம் ஊழல் வழக்கில் ராமலிங்க ராஜூ உட்பட 10 பேருக்கும் ஜாமீன்
| ஐதராபாத்தில் தங்கியிருந்து செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட சீனப்பெண்: கூட்டாளி சிக்கியதால் தப்பி ஓட்டம் Posted: 11 May 2015 11:28 PM PDT செம்மரக்கடத்தல் தொடர்பாக ஆந்திர போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பலர் சிக்கி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் சீனாவைச் சேர்ந்த யாங்பிங் என்ற சர்வதேச செம்மரக் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டான். |
| என்.டி.ராமராவ் கிருஷ்ணர் வேட சிலை அமெரிக்கா செல்கிறது Posted: 11 May 2015 11:19 PM PDT கிருஷ்ணர் வேடம் என்றால் அனைவருக்கும் நடிகர் என்.டி.ராமராவ் முகம்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பல படங்களில் கிருஷ்ணர் வேடமிட்டு என்.டி.ராமராவ் நடித்து உள்ளார். அவரை கிருஷ்ணராகவே தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். கிருஷ்ணர் வேடத்துக்கு அவரை விட்டால் யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு வேடப்பொருத்தம் கனகச்சிதமாக |
| Posted: 11 May 2015 11:00 PM PDT ராஜஸ்தானின், லூனி தாலுகாவில் உள்ள ரோசிச்சான் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தனது பால்ய விவாகத்தை ஏற்க மறுத்ததால், 16 லட்ச ரூபாய் அபராதம் விதித்து கிராம பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது கல்லூரி படிப்பு படித்து வரும் சாந்தாதேவி என்ற அம்மாணவிக்கு |
| ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு: மேல் முறையீடு பற்றி முடிவு செய்யவில்லை- சித்தராமையா பேட்டி Posted: 11 May 2015 10:10 PM PDT சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி நேற்று தீர்ப்பளித்தார். ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத் தொகையையும் அவர் ரத்து செய்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து அசையும், அசையா சொத்துக்களை திருப்பி |
| கர்நாடகாவில் 2 பெண்கள் – குழந்தை உள்பட 5 பேர் கொலை: போலீசார் விசாரணை Posted: 11 May 2015 10:08 PM PDT தர்மபுரி மாவட்டம் இண்டூர் மற்றும் மற்றும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அந்தியூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 50–க்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநிலத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். |
| கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் Posted: 11 May 2015 09:48 PM PDT கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காசர்கோட்டை சேர்ந்த பஷீர் என்ற பயணியிடம் ரூ.22 லட்சம் மதிப்பிலான 816 கிராம் தங்க கட்டிகள் இருந்தது. |
| திருவனந்தபுரத்தில் 2 பெண்களை கற்பழித்த வியாபாரி கைது Posted: 11 May 2015 09:31 PM PDT திருவனந்தபுரம் அருகே உள்ள பெருவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் சையது (வயது 38). இவர் கோவில் திருவிழாக்களில் கடைகள் போட்டு வியாபாரம் செய்பவர். இவருக்கும் பெருவிளையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. |
| கொல்கத்தா மின்சார ரெயிலில் குண்டுவெடிப்பு: 17 பேர் படுகாயம் Posted: 11 May 2015 08:35 PM PDT மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் இன்று அதிகாலை மின்சார ரெயிலில் குண்டு வெடித்ததால் 17 பேர் படுகாயமடைந்தனர். இன்று காலை 3:55 மணியளவில் அங்குள்ள சியல்டா ரெயில் நிலையத்திலிருந்து கிருஷ்ணா நகர் நோக்கி சென்ற அந்த மின்சார ரெயில், |
| Posted: 11 May 2015 08:14 PM PDT சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி வாதாடி வந்த மூத்த வக்கீல் குமார் நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் |
| ஜெயலலிதா விடுதலைக்கு காரணம் என்ன?: நீதிபதி தீர்ப்பு முழு விவரம் Posted: 11 May 2015 07:50 PM PDT ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்களை நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் விரிவாக தெரிவித்துள்ளார். சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை |
| மைசூருவில் 75 குட்டிகளை ஈன்ற அரிய வகை மலைபாம்பு Posted: 11 May 2015 07:48 PM PDT மைசூரு மாநகராட்சி கவுன்சிலராக இருப்பவர் 'ஸ்நேக்' ஷியாம். இவர் சிறந்த பாம்பு வீரர் ஆவார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு மைசூரு டவுனில் உன்சூரு- எச்.டி.கோட்டை ரிங் ரோட்டில் காரில் சென்ற சிலர் சிறுநீர் கழிக்க காரை நிறுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் சாலையோர |
| மோடியின் புதிய முழக்கம்: ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்பதை தொடர்ந்து ஜெய் விஞ்ஞான் Posted: 11 May 2015 05:20 PM PDT ராணுவ வீரர்களையும், விவசாயிகளையும் போற்றும் வகையில் முன்பு ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற முழக்கம் இருந்தது. பிரதமர் மோடி இதில் விஞ்ஞானத்தையும் சேர்த்து ஜெய் விஞ்ஞான் என்ற முழக்கத்தையும் எழுப்பி இருக்கிறார். தேசிய தொழில் நுட்ப தினத்தையொட்டி அவர் நேற்று |
| Posted: 11 May 2015 04:42 PM PDT இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதித்துள்ள மத்திய அரசு, வெளிநாட்டு படகுகளுக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்கியுள்ளது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. |
| சிவில் நீதிபதிகள் தேர்வு விவகாரம்: சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கர்ணன் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை Posted: 11 May 2015 04:24 PM PDT சிவில் நீதிபதிகளை தேர்வு செய்வது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவின் மீது சுப்ரீம் கோர்ட்டு நேற்று இடைக்கால தடை விதித்தது. தமிழ்நாட்டில் சிவில் நீதிபதிகளை தேர்வு செய்வதற்காக தேர்வுக்குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் |
| நிதின் கட்காரி பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் அமளியால் டெல்லி மேல்-சபை ஒத்திவைப்பு Posted: 11 May 2015 02:21 PM PDT மத்திய மந்திரி நிதின் கட்காரி பதவி விலக வலியுறுத்தி டெல்லி மேல்-சபையில் எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக அமளியில் ஈடுபட்டதால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரியை பங்குதாரராக கொண்டு இயங்கி வரும் புர்த்தி சாகர் நிறுவனம், மானிய |
| Posted: 11 May 2015 01:53 PM PDT சாலையில் பைக்கில் வந்த பெண்ணை போக்குவரத்து காவலர் ஒருவர் செங்கல்லால் தாக்கிய சம்பவம் மன்னிக்க முடியாத குற்றம் என முன்னாள் டெல்லி போலீஸ் ஆணையர் டி.ஆர் கக்கார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் குற்றம் இழைத்த போக்குவரத்து காவலர் மீது சரியான நடவடிக்கை எடுத்த காவல்த்துறை ஆணையருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். |
| பாகிஸ்தானில் இருக்கும் தாவூத் இப்ராகிமை இந்தியா கொண்டு வரும் வரை ஓய மாட்டோம்: ராஜ்நாத் சிங் உறுதி Posted: 11 May 2015 12:31 PM PDT பாகிஸ்தானில் இருக்கும் தாவூத் இப்ராகிமை இந்தியா கொண்டு வரும் வரை ஓய மாட்டோம் என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உறுதியாக கூறினார். மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை கைது |
| குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கும் கருப்பு பண மசோதா: மக்களவையில் நிறைவேற்றம் Posted: 11 May 2015 09:16 AM PDT வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்குவோருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யும் கருப்பு பண மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. வெளியிடப்படாத வெளிநாட்டு சொத்து மற்றும் வருமான மசோதா(Undisclosed Foreign Income and Assets bill ) எனப்படும் கருப்பு பண |
| வி.ஐ.பி நம்பருக்காக 50 ஆயிரம் ரூபாய் வண்டிக்கு 8.1 லட்சம் கொடுத்த நபர் Posted: 11 May 2015 08:31 AM PDT அரசு வாகன உரிம (license) அதிகாரிகளின் முன்னிலையில் CH01BC என்ற வரிசையில் 0001 முதல் 9999 வரையிலான வி.ஐ.பி எண்களுக்கான ஏலம் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| சத்யம் ஊழல் வழக்கில் ராமலிங்க ராஜூ உட்பட 10 பேருக்கும் ஜாமீன் Posted: 11 May 2015 07:30 AM PDT சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன வரவு-செலவு கணக்கில் ரூ.7,000 கோடிக்கு முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் அதன் நிறுவனர் பி.ராமலிங்க ராஜு (60), அவரது 2 சகோதரர்கள் உட்பட 10 பேருக்கு ஜாமீன் வழங்கி ஐதராபாத் மாநகர செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |