Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ரூபாய் 55 கோடிக்கு கரண்ட் பில்: அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்

Posted: 30 May 2015 10:38 PM PDT

ராஞ்சியில் வசிக்கும் கிருஷ்ணபிரசாத் என்பவர் திருமண விழா ஒன்றுக்கு சென்றுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பியபோது ஷாக்கடித்தது போல் மிரண்டார். 50 கோடி ரூபாய்க்கான கரண்ட் பில் அனுப்பப்பட்டதுதான், அவருக்கு ஷாக்கடிக்க காரணம். இந்த பில்லை பார்த்தவுடனேயே பிரசாத்தின் 55 வயதான தாய்க்கு

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் சதி முறியடிப்பு

Posted: 30 May 2015 10:33 PM PDT

காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளுடன் ராணுவம் துப்பாக்கி சண்டை நடத்தி முறியடித்தது. காஷ்மீரில் எல்லைப்பகுதி வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலில் ஈடுபட்டு இந்தியாவுக்குள் தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர்.

1300 அடி போர் போட்டும் தண்ணீர் இல்லை: ஆந்திராவில் நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்துக்கு சென்றது

Posted: 30 May 2015 10:32 PM PDT

ஆந்திராவில் இந்த ஆண்டு அக்னி வெயில் 116 டிகிரிவரை கொளுத்தியது. இதனால் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமானோர் பலியானார்கள். மழை இல்லாமல் அதிக வெயில் கொளுத்தியதில் ஆந்திராவில் நிலத்தடி நீர் மட்டம் அதள பாதாளத்துக்கு சென்று விட்டது.

தந்தை இறந்ததால் இடைத்தேர்தல்: கேரள முன்னாள் சபாநாயகர் மகன் காங். வேட்பாளராக போட்டி

Posted: 30 May 2015 09:44 PM PDT

கேரள சட்டசபை சபாநாயகராக இருந்தவர் கார்த்திகேயன். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இந்த நிலையில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வாக இருந்த திருவனந்தபுரம் மாவட்டம் அருவிக்கரை தொகுதிக்கு வருகிற 27–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

ஐதராபாத்தில் நகைக்கடை ஊழியரிடம் மிளகாய் பொடி தூவி 4 கிலோ நகை கொள்ளை

Posted: 30 May 2015 09:43 PM PDT

ஐதராபாத் சார்மினார் பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் தீபக் விஜய். இவர் தனது கடையில் இருந்து வேறு நகைக்கடைகளுக்கு நகை சப்ளை செய்வது வழக்கம். சம்பவத்தன்று தீபக்கின் கடையில் வேலை பார்க்கும் நரசிம்மரெட்டி என்பவர் 4 கிலோ தங்க நகைகளை எடுத்து வேறு கடைகளுக்கு சப்ளை செய்ய

கேரள மாநிலம் கொடுங்கலூரில் உள்ள பழமையான மசூதிக்கு பிரதமர் மோடி செல்கிறார்

Posted: 30 May 2015 09:39 PM PDT

கேரள மாநிலம் கொச்சியில் 1000 ஆண்டு பழமையான சேரமான் ஜூம்மா மசூதி உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பழமையான இந்த மசூதியை புனரமைக்கும் பணிகள் நடந்து வந்தது. கேரள சுற்றுலாத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு நடந்து வந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த மசூதியை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து ஜூலை

காவி உடை அணிந்து வனப்பகுதிக்குள் நுழைய முயன்றனர்: கைதான தமிழர்கள் பற்றி ஆந்திர போலீஸ் அதிகாரி தகவல்

Posted: 30 May 2015 08:16 PM PDT

பஸ்சில் கைதான 72 தமிழர்கள் காவி உடை அணிந்து கொண்டு திருமலை பக்தர்கள் போல் வனப்பகுதிக்குள் நுழைந்து செம்மரம் வெட்ட முயன்றனர் என்று போலீஸ் அதிகாரி கூறினார். ஆந்திராவில் தமிழர்கள் கைது செய்யப்பட்டது குறித்து கடப்பா மாவட்டம் புலிவெந்துலா கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு ராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தின் சேலத்தில் இருந்து தனியார் பஸ்சில் (எண் பி.என் 21 கே 4736) செம்மரக்கடத்தல்காரர்கள் ஆந்திராவுக்குள் நுழைய இருப்பதாக எங்களுக்கு

சேவை வரி உயர்வு: நாளை முதல் ரெயிலில் முதல் வகுப்பு, ஏ.சி. வகுப்பு பயணிகள் கட்டணம் அதிகரிப்பு

Posted: 30 May 2015 07:55 PM PDT

ரெயில்களில் முதல் வகுப்பு, ஏ.சி. வகுப்பு கட்டணங்கள், சரக்கு கட்டணம் ஆகியவை நாளை முதல் ½ சதவீதம் அதிகரிக்கிறது. சேவை வரி உயர்வு காரணமாக இந்த கட்டணம் உயர்கிறது. பயணிகள் ரெயில்களில் ஏ.சி. வகுப்பு, முதல் வகுப்பு கட்டணங்கள் மற்றும் சரக்கு கட்டணத்துக்கு 3.7 சதவீதம் சேவை வரி விதிக்கப்பட்டது. இந்த சேவை வரி மத்திய அரசின் பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டது. அதன் அடிப்படையில் ரெயில்களில் ஏ.சி. வகுப்பு மற்றும் முதல் வகுப்பு பயண கட்டணங்களுக்கும், அனைத்து சரக்கு கட்டணங்களுக்கும் இனி 4.2 சதவீதம் சேவை வரி விதிக்கப்படும்.

சென்னை ஐ.ஐ.டி. நடவடிக்கையை கண்டித்து டெல்லியில் ஆம் ஆத்மி போராட்டம்

Posted: 30 May 2015 07:24 PM PDT

சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள அம்பேத்கர் பெரியார் மாணவர் அமைப்பின் அங்கீகாரத்தை ஐ.ஐ.டி. நிர்வாகம் ரத்து செய்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தான் காரணம் என்று கூறி, டெல்லியில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தநிலையில் டெல்லி ஜந்தர்மந்தரில் ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பு சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது

சூட்கேசை விட சூட்-பூட் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்: ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி

Posted: 30 May 2015 04:34 PM PDT

மத்திய அரசு பணக்காரர்களுக்கான 'சூட்-பூட்' அரசு என்று கூறிய ராகுல் காந்திக்கு, சூட்கேசை விட 'சூட்-பூட்' ஏற்றுக்கொள்ளக் கூடியது தான் என்று பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

8.1 அடி உயரத்துடன் சாதனை புரிந்த இந்தியாவின் உயரமான மனிதர் அனுபவிக்கும் சோதனைகள்

Posted: 30 May 2015 04:03 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் வசித்து வரும் 32 வயதான தர்மேந்திர சிங், 8 அடி ஒரு அங்குல உயரத்துடன், இந்தியாவின் மிக உயரமான மனிதர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். இருந்தாலும் இந்த உயரத்தினால் அவர் அனுபவித்த சோதனைகளே அதிகம்.

அம்பேத்கர் 125-வது பிறந்த தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்: மத்திய அரசு தகவல்

Posted: 30 May 2015 03:22 PM PDT

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிற்பி என வர்ணிக்கப்படும் பாரத ரத்னா அம்பேத்கர், கடந்த 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி பிறந்தார். இந்த ஆண்டு அவரது 125-வது பிறந்த ஆண்டாகும். எனவே அம்பேத்கரின் 125-வது பிறந்த தினத்தை இந்த ஆண்டு முழுவதும் சிறந்த முறையில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

காந்தி உருவப்படம் இல்லாமல் 10 ரூபாய் நோட்டு அச்சடிப்பா? ரிசர்வ் வங்கி இணைய பக்கத்தில் வெளியானதால் பரபரப்பு

Posted: 30 May 2015 01:46 PM PDT

மகாத்மா காந்தியின் உருவப்படம் இல்லாத 10 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் தற்போது இடம் பெற்றுள்ளது. இதனால் குழப்பம் அடைந்த பொதுமக்கள் பத்திரிகை அலுவலகங்களுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டனர்.

கொளுத்தும் வெயிலுக்கு மேலும் 202 பேர் பலி: நாடு முழுவதும் பலியானவர்கள் எண்ணிக்கை 2207 ஆக உயர்வு

Posted: 30 May 2015 01:11 PM PDT

கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வரும் நிலையில் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 202 பேர் பலியானதையடுத்து நாடு முழுவதும் வெயிலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2207 ஆக உயர்ந்துள்ளது.

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்யப்படுமா? 4 நாளில் முடிவு அறிவிப்பதாக கர்நாடக சட்டமந்திரி பேட்டி

Posted: 30 May 2015 12:17 PM PDT

ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீடு செய்வது குறித்து 4 நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக சட்டத்துறை மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா தெரிவித்து உள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கடந்த 11-ந்

மேகி நூடுல்ஸ் விவகாரம்: நெஸ்ட்லே இந்தியா, அமிதாப் பச்சன், ப்ரீத்தி ஜிந்தா உட்பட 8 பேர் மீது வழக்கு

Posted: 30 May 2015 12:05 PM PDT

கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் நெஸ்ட்லே இந்தியா, அமிதாப் பச்சன், ப்ரீத்தி ஜிந்தா உட்பட 8 பேர் மீது உத்தரப்பிரதேச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவில் ஜூன் 24ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

Posted: 30 May 2015 10:41 AM PDT

அரசு வங்கி ஊழியர் சங்கத்திடம்(SSBEA) முன்வைத்துள்ள பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்த வலியுறுத்தி வருகிற ஜூன் 24-ம் தேதி தேசிய அளவில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்(AIBEA) இன்று அறிவித்துள்ளது.

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் 3–வது முறையாக பிறப்பிக்கும் முயற்சிக்கு ராகுல் கண்டனம்

Posted: 30 May 2015 10:32 AM PDT

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 'டுவிட்டர்' வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது:– பிரதமர் மோடி ஏழை விவசாயிகளின் நிலங்களை பறிப்பதில் மிகுந்த அவசரம் காட்டுகிறார். இதற்காக விவசாயிகளுக்கு விரோதமான நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை 3–வது முறையாக பிறப்பிக்க முயற்சி

ஏர் இந்தியா விமானத்தின் கழிப்பறைகளில் அனாதையாக கிடந்த 4 கிலோ தங்கம் ஐதராபாத்தில் சிக்கியது

Posted: 30 May 2015 09:13 AM PDT

வெளிநாடுகளில் இருந்து கள்ளத்தனமாக தங்கத்தை கடத்தி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்கத் துறையினர் சோதனை கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றனர்.

ஆந்திராவில் வெயிலுக்கு 24 மணி நேரத்தில் 146 பேர் சாவு- பலியானோர் எண்ணிக்கை 1636 ஆக உயர்ந்தது

Posted: 30 May 2015 08:55 AM PDT

விண்வெளியின் ஓஸோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள துளைகள் மற்றும் வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை போன்றவற்றால் பருவநிலையில் ஏற்படும் பெரும் மாற்றம் காரணமாக தற்போதெல்லாம், வெயில், மழை, பனி உள்ளிட்ட அனைத்து பருவக்காலங்களும் மிகவும் உக்கிரமாகவே உள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™