மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- செம்மரக்கட்டை கடத்தலை தடுத்த சோதனை சாவடி ஊழியர் லாரி ஏற்றிக் கொலை
- கணவர் மீதான ஆத்திரத்தில் குழந்தையை கொன்று விட்டேன்: 8 மாத மகனை கொன்ற கொடூர தாய் வாக்குமூலம்
- கேரளாவில் தொடரும் மழை: விவசாயிகள்–பொதுமக்கள் அவதி
- கேரள அரசை கண்டித்து பா.ஜனதா 24 மணி நேர போராட்டம்: அமித்ஷா பங்கேற்பு
- ஆந்திர புதிய தலைநகருக்கு ஜுன் 6–ந்தேதி அடிக்கல்: சந்திரபாபு நாயுடு முடிவுக்கு ஜோதிடர்கள் எதிர்ப்பு
- திருப்பதி அருகே ஓயாமல் அழுத குழந்தையை அடித்துக் கொன்ற தாய்
- உள்துறை செயலாளருடன் டெல்லி மாநில தலைமைச் செயலாளர் சந்திப்பு
- ஊடுருவல் தீவிரவாதிகள் உதவியுடன் கார்கில் போரில் இந்தியாவை தோற்கடித்தோம்: முஷரப் உளறலுக்கு இந்தியா கண்டனம்
- ரூ.9 லட்சம் கைக்கடிகாரம் அணிந்துள்ள மத்திய மந்திரி: விவசாயிகள் கூட்டத்தில் பெருமையாக காட்டினார்
- மும்பை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 29 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்: வெளிநாட்டு பெண் கைது
- ஹாசன் கோவிலில் திருடப்பட்ட ரூ.1½ கோடி பஞ்சலோக சாமி சிலைகள் மீட்பு: 3 பேர் கைது
- கர்நாடகத்தில் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்துவேன்: எடியூரப்பா சூளுரை
- கவர்னருக்கு ஆதரவாக செயல்பட்ட முதன்மைச் செயலாளர் அறைக்கு பூட்டு: கெஜ்ரிவால் அரசு திடீர் நடவடிக்கை
- சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு: கர்நாடக சட்ட மந்திரிக்கு அட்வகேட் ஜெனரல் கடிதம்
- உ.பி.யில் தொடர் கொடூரம்: டெல்லி பல்கலைகழக மாணவி பாலியல் பலாத்காரம்
- நிலம் கையகப்படுத்தும் மசோதா: நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அலுவாலியா தலைமை
- கூடங்குளத்தில் 2-வது அணுஉலை இந்த ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும்: ரஷிய அணுமின்கழக அதிகாரி தகவல்
- மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வில் முறைகேடு நடந்ததாக வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு
- குழந்தைகள் பாதுகாப்பிற்காக கூகுள் 5 லட்சம் டாலர் நிதி: துளிர் உட்பட 3 இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு உதவி
- மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் ஜார்க்கண்டில் இன்று பதவி ஏற்பு
| செம்மரக்கட்டை கடத்தலை தடுத்த சோதனை சாவடி ஊழியர் லாரி ஏற்றிக் கொலை Posted: 18 May 2015 11:16 PM PDT ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தலை தடுக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ரேணுகுண்டா ராம கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சாம்பசிவா (41). ஆர்.டி.ஓ. |
| கணவர் மீதான ஆத்திரத்தில் குழந்தையை கொன்று விட்டேன்: 8 மாத மகனை கொன்ற கொடூர தாய் வாக்குமூலம் Posted: 18 May 2015 11:03 PM PDT பிறந்த குழந்தையின் அழுகையை பார்த்து சிரிக்கும் தாய்மார்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் திருப்பதியில் அழுது அடம் பிடித்த குழந்தையை அடித்தே கொன்றிருக்கிறார் ஒரு கொடூர தாய். கல் மனம் படைத்த அந்த பெண்ணின் பெயர் கரிஷ்மா. திருப்பதி வித்யா நகர் |
| கேரளாவில் தொடரும் மழை: விவசாயிகள்–பொதுமக்கள் அவதி Posted: 18 May 2015 10:49 PM PDT கேரளாவில் கடந்த 2 வாரங்களாக கோடை மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், பத்தினம் திட்டா பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ஏராளமான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. |
| கேரள அரசை கண்டித்து பா.ஜனதா 24 மணி நேர போராட்டம்: அமித்ஷா பங்கேற்பு Posted: 18 May 2015 10:24 PM PDT கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 5–வது ஆண்டு துவக்க விழாவை காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாகவும், பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருவதாகவும் மாநில பா.ஜனதா கட்சி கருத்து |
| ஆந்திர புதிய தலைநகருக்கு ஜுன் 6–ந்தேதி அடிக்கல்: சந்திரபாபு நாயுடு முடிவுக்கு ஜோதிடர்கள் எதிர்ப்பு Posted: 18 May 2015 10:22 PM PDT ஆந்திராவின் புதிய தலைநகர் விஜயவாடா – குண்டூர் இடையே துளூர் பகுதியில் அமைக்கப்படுகிறது. சிங்கப்பூர் தொழில் நுட்ப வடிவமைப்புடன் புதிய தலைநகர் அமைக்கப்படும் என்று முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார். இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. புதிய |
| திருப்பதி அருகே ஓயாமல் அழுத குழந்தையை அடித்துக் கொன்ற தாய் Posted: 18 May 2015 10:04 PM PDT திருப்பதி அருகே உள்ள போரூர் வித்யா நகரைச் சேர்ந்தவர் மோகன் குமார். இவரது மனைவி கரிஷ்மா. இவர்களுக்கு 1½ வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரபாஸ் என்ற 8 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்த குழந்தை உருண்டு விழுந்தது. இதனால் ஏற்பட்ட வலியால் குழந்தை வீறிட்டு அழுதது. |
| உள்துறை செயலாளருடன் டெல்லி மாநில தலைமைச் செயலாளர் சந்திப்பு Posted: 18 May 2015 09:37 PM PDT டெல்லி மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட சகுந்தலா கேம்லின் நேற்று மத்திய உள்துறை செயலாளர் கோயலை சந்தித்துப் பேசினார். இவரது நியமனத்துக்கு கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த பிரச்சினை பற்றி இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது. |
| Posted: 18 May 2015 08:51 PM PDT கடந்த 1999-ம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு தெரியாமல், கார்கில் போரை முன்னின்று நடத்தியவர், அப்போதைய ராணுவ தளபதி முஷரப். பின்னர் அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். |
| ரூ.9 லட்சம் கைக்கடிகாரம் அணிந்துள்ள மத்திய மந்திரி: விவசாயிகள் கூட்டத்தில் பெருமையாக காட்டினார் Posted: 18 May 2015 08:49 PM PDT மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை மந்திரி சவுத்ரி பிரேந்திர சிங், ரூ.9 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம் அணிந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகாவில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் பேசியபோது, அதை அவர் பெருமையாக கூறினார். முதலில், தனது கைக்கடிகாரத்தை காண்பித்து, இதன் மதிப்பு ரூ.9 லட்சம் என்றார். பிறகு, |
| மும்பை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 29 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்: வெளிநாட்டு பெண் கைது Posted: 18 May 2015 08:41 PM PDT மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அதிகாலை தென்ஆப்பிரிக்கா செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணிப்பதற்காக விமான நிலையத்திற்கு வெளிநாட்டு பெண் ஒருவர் வந்தார். அவர் கையில் பெரிய பை வைத்திருந்தார். அப்போது, |
| ஹாசன் கோவிலில் திருடப்பட்ட ரூ.1½ கோடி பஞ்சலோக சாமி சிலைகள் மீட்பு: 3 பேர் கைது Posted: 18 May 2015 08:25 PM PDT பெங்களூரு காமாட்சி பாளையா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்தனர். அதில், பஞ்சலோக சாமி சிலைகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். |
| கர்நாடகத்தில் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்துவேன்: எடியூரப்பா சூளுரை Posted: 18 May 2015 08:10 PM PDT பா.ஜனதா தேசிய துணைத்தலைவர் எடியூரப்பா எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "கர்நாடகத்தில் கட்சியை மேலும் பலப்படுத்தி மாநிலத்தில் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்துவேன். இதற்காக வரும் நாட்களில் எனது |
| கவர்னருக்கு ஆதரவாக செயல்பட்ட முதன்மைச் செயலாளர் அறைக்கு பூட்டு: கெஜ்ரிவால் அரசு திடீர் நடவடிக்கை Posted: 18 May 2015 07:51 PM PDT டெல்லியில் கவர்னர் நஜீப் ஜங்கிற்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் உச்சக் கட்டத்தை எட்டி உள்ளது. கவர்னருக்கு ஆதரவாக செயல்பட்ட முதன்மை செயலாளரின் அறையை ஆம் ஆத்மி அரசு பூட்டு போட்டு பூட்டியது. டெல்லி மாநில அரசின் தலைமை செயலாளராக பதவி வகித்து வரும் |
| Posted: 18 May 2015 07:34 PM PDT சொத்து குவிப்பு வழக்கில் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து கர்நாடக சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திராவுக்கு அட்வகேட் ஜெனரல் கடிதம் எழுதியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்பட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு |
| உ.பி.யில் தொடர் கொடூரம்: டெல்லி பல்கலைகழக மாணவி பாலியல் பலாத்காரம் Posted: 18 May 2015 04:03 PM PDT பாலியல் பலாத்கார சம்பவங்கள் தினசரி செய்திகளாக உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று மேலும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி பல்கலைகழகத்தில் பி.காம் படித்து வரும் மாணவி நேற்று காலை 10 மணியளவில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரில் உள்ள |
| நிலம் கையகப்படுத்தும் மசோதா: நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அலுவாலியா தலைமை Posted: 18 May 2015 02:29 PM PDT நிலம் கையகப்படுத்தும் மசோதாவில், திருத்தங்கள் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு, பா.ஜ.க மூத்த எம்.பி..யான எஸ்.எஸ்.அலுவாலியா தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவை பேச்சாளர் சுமித்ரா மகாஜன் அவரை நியமித்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| கூடங்குளத்தில் 2-வது அணுஉலை இந்த ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும்: ரஷிய அணுமின்கழக அதிகாரி தகவல் Posted: 18 May 2015 02:11 PM PDT கூடங்குளத்தில் 2-வது அணுஉலை இந்த ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என்று ரஷிய அணு மின்கழக அதிகாரி தெரிவித்தார். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டுக்கு சொந்தமான ரோஸ்டம் அணுமின் கழகத்தின் உதவியுடன் அணுமின்நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நிறுவப்பட்ட முதல் அணு உலை கடந்த ஆண்டு டிசம்பர் |
| Posted: 18 May 2015 12:37 PM PDT மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசும், சி.பி.எஸ்.இ. நிறுவனமும் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்பியது. மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. நிறுவனம் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வை கடந்த மே 3-ந் தேதி நாடு |
| Posted: 18 May 2015 11:08 AM PDT இணைய ஜாம்பவானான கூகுள் நிறுவனம் இந்தியாவில் குழந்தைகள் பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்லும் 3 தொண்டு நிறுவனங்களுக்கு 5 லட்சம் டாலர் நிதி உதவி செய்யவுள்ளது. மேலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஸ்மார்ட் அப்ளிகேஷன்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் கூகுள் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. |
| மாநிலத்தின் முதல் பெண் கவர்னர் ஜார்க்கண்டில் இன்று பதவி ஏற்பு Posted: 18 May 2015 10:39 AM PDT ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் முறையாக பெண் கவர்னர் திரவுபதி முர்மு இன்று ராஞ்சியில் பதவி ஏற்றார். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஜார்க்கண்ட் உயர்நீமன்ற தலைமை நீதிபதி வீரேந்திர சிங் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரகுபர் தாஸ், மத்திய அமைச்சர் சுதர்சன் பகத் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |