மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக மத்திய மந்திரிகள் பெயரில் மோசடி: கேரள தம்பதி கைது
- அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு: ரஞ்சித் சின்காவிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
- குற்றமற்றவள் என்று நிரூபித்து உயிரை விட தயார்: நடிகை நீத்து அகர்வால் கண்ணீர் பேட்டி
- ஜெயலலிதா விடுதலை: சித்தராமையாவுடன் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, வக்கீல் சந்திப்பு
- சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு: 17–ந்தேதி லட்சார்ச்சனை நடக்கிறது
- கேரள கோவில்களில் பக்தர்களிடம் நகை திருடிய தூத்துக்குடி பெண்கள் 2 பேர் கைது
- ஜெயலலிதா அப்பீல் வழக்கில் தீர்ப்பு: ஆச்சார்யா கருத்தை அரசு ஆராயும்- சித்தராமையா பேட்டி
- கருக்கலைப்பு செய்யும் 15 வயதுக்கு குறைவான பெண்களின் எண்ணிக்கை 67 சதவீதம் உயர்வு: மும்பையில் அதிர்ச்சி
- மைசூருவில் 3 மாத குழந்தையின் காலில் திரிசூல ரேகை
- கர்நாடகாவில் நடந்த 5 பேர் கொலை வழக்கில் தொழிலாளி கைது
- லாட்டரி விற்பனையில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு தொடர்பு: சி.ஐ.டி. விசாரணைக்கு சித்தராமையா உத்தரவு
- முதுமக்கள் தாழி காணாமல் போனது பற்றி விசாரணை நடத்த வேண்டும்: எம்.பி. தருண் விஜய் வற்புறுத்தல்
- பெண் வீட்டில் எவ்வளவு வரதட்சணை கொடுப்பார்கள் என தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த இணையதளம் உதவுகிறது
- இரண்டாவது நேபாள நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்வு
- பூகம்பத்தால் பாதிப்பு: நேபாள பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு
- டெல்லியில் புதிய தேர்தல் கமிஷனராக அச்சல் குமார் ஜோதி பொறுப்பு ஏற்றார்
- பாராளுமன்றத்தை தொடர்ந்து டெல்லி மேல்-சபையிலும் கருப்பு பண மசோதா நிறைவேறியது
- தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரை நியமிக்க தடை நீக்கம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் மாற்றம் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு
- மதம் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? இந்திய குழந்தைகளின் அதிர்ச்சி தரும் கற்பனை: யூ-டியூப் வீடியோ
| என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக மத்திய மந்திரிகள் பெயரில் மோசடி: கேரள தம்பதி கைது Posted: 13 May 2015 11:12 PM PDT கேரளாவில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு இடம் எடுத்து தருவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக பணத்தை இழந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் |
| Posted: 13 May 2015 10:49 PM PDT சி.பி.ஐ. முன்னாள் இயக்குனரான ரஞ்சித் சின்கா தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்தார். |
| குற்றமற்றவள் என்று நிரூபித்து உயிரை விட தயார்: நடிகை நீத்து அகர்வால் கண்ணீர் பேட்டி Posted: 13 May 2015 10:36 PM PDT ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்கில் தெலுங்கு பட தயாரிப்பாளர் மஸ்தான்வலி, அவரது காதலியும் நடிகையுமான நீத்து அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான நடிகை நீத்து அகர்வால் ஜாமீனில் வெளியே வந்தார். |
| ஜெயலலிதா விடுதலை: சித்தராமையாவுடன் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, வக்கீல் சந்திப்பு Posted: 13 May 2015 09:51 PM PDT பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வக்கீல் பாலு ஆகியோர் நேற்று பெங்களூர் சென்று முதல்–மந்திரி சித்தராமையாவை சந்தித்தார்கள். அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்து பிறப்பித்த தீர்ப்பில் குறைபாடுகள் இருப்பதாகவும் எனவே கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் எழுதிய கடிதத்தை வழங்கினார்கள். |
| சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு: 17–ந்தேதி லட்சார்ச்சனை நடக்கிறது Posted: 13 May 2015 09:50 PM PDT கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். நாளை வைகாசி மாத பிறப்பையொட்டி இன்று மாலை 5.30 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக் |
| கேரள கோவில்களில் பக்தர்களிடம் நகை திருடிய தூத்துக்குடி பெண்கள் 2 பேர் கைது Posted: 13 May 2015 09:50 PM PDT கேரள மாநிலம் கல்லம்பலா பகுதியில் சங்கர நாராயணசாமி கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்ச்சியை |
| ஜெயலலிதா அப்பீல் வழக்கில் தீர்ப்பு: ஆச்சார்யா கருத்தை அரசு ஆராயும்- சித்தராமையா பேட்டி Posted: 13 May 2015 09:47 PM PDT ஜெயலலிதா அப்பீல் வழக்கு தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:– இந்த தீர்ப்பின் அதிகாரப்பூர்வ நகல் இன்னும் அரசுக்கு கிடைக்கவில்லை. |
| Posted: 13 May 2015 09:02 PM PDT மும்பையில் கருக்கலைப்பு செய்யும் 15 வயதுக்கு குறைவான பெண்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் 67 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு 15 வயதுக்கும் குறைவான பெண்களில் 111 பேர் கருக்கலைப்பு செய்துள்ள நிலையில், 2014-15 ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் |
| மைசூருவில் 3 மாத குழந்தையின் காலில் திரிசூல ரேகை Posted: 13 May 2015 08:02 PM PDT மைசூரு ரமாபாய் நகராவில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மனைவி தேவி. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் மைசூருவில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 3 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையின் கால் பாதத்தில் திரிசூலம் |
| கர்நாடகாவில் நடந்த 5 பேர் கொலை வழக்கில் தொழிலாளி கைது Posted: 13 May 2015 07:56 PM PDT சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலுக்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா பாலுகுட்டை பகுதியை சேர்ந்த காசி(வயது 35), அவரது மனைவி சிவம்மா(28), அதே பகுதியை சேர்ந்த ராஜம்மா(35), அவரது மகள் ரோஜா(10) உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் கரும்பு |
| லாட்டரி விற்பனையில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு தொடர்பு: சி.ஐ.டி. விசாரணைக்கு சித்தராமையா உத்தரவு Posted: 13 May 2015 07:45 PM PDT கர்நாடகத்தில் லாட்டரி விற்பனை செய்ய அரசு தடை விதித்து உள்ளது. ஆனால் மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு, மைசூரு, உப்பள்ளி, தார்வார், பெலகாவி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. |
| முதுமக்கள் தாழி காணாமல் போனது பற்றி விசாரணை நடத்த வேண்டும்: எம்.பி. தருண் விஜய் வற்புறுத்தல் Posted: 13 May 2015 07:22 PM PDT டெல்லி மேல்-சபையில் உறுப்பினர் தருண் விஜய் பேசுகையில் கூறியதாவது:- ஏறத்தாழ 150 ஆண்டுக்கால போராட்டத்துக்குப் பிறகு தங்களுடைய தாய்மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை 2007-ம் ஆண்டில் தமிழர்கள் பெற்றனர். மே 5-ந் தேதியன்று ஒரு பத்திரிகையில் வெளியான செய்தியில், இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் டைரக்டர் ஜெனரல் பதவிக்கு |
| பெண் வீட்டில் எவ்வளவு வரதட்சணை கொடுப்பார்கள் என தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த இணையதளம் உதவுகிறது Posted: 13 May 2015 05:17 PM PDT உங்களுக்கு பெண் வீட்டில் எவ்வளவு வரதட்சணை கொடுப்பார்கள் என தெரிந்து கொள்ள ஒரு இணையதளம் உதவுகிறது. உங்களை பற்றி சரியான தகவல்களை கொடுத்தால் வரதட்சணை மதிப்பை கணக்கீட்டு சொல்கிறது அந்த இணையதளம். |
| இரண்டாவது நேபாள நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்வு Posted: 13 May 2015 05:17 PM PDT நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8230 பேரை இழந்து, அதன் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில் மீண்டும் செவ்வாய் கிழமை அன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் சுமார் 12.30 மணியளவில் தலைநகர் காத்மாண்டில் இருந்து 80 |
| பூகம்பத்தால் பாதிப்பு: நேபாள பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு Posted: 13 May 2015 04:24 PM PDT இமயமலை நாடான நேபாளத்தில் நேற்று முன்தினம் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 65 பேர் பலியாகினர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில், அந்நாட்டு பிரதமர் சுசில் கொய்ராலாவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். |
| டெல்லியில் புதிய தேர்தல் கமிஷனராக அச்சல் குமார் ஜோதி பொறுப்பு ஏற்றார் Posted: 13 May 2015 02:55 PM PDT இந்திய தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் 2 தேர்தல் கமிஷனர்கள் என 3 உறுப்பினர்களை கொண்டதாகும். தற்போது தலைமை தேர்தல் கமிஷனராக நசீம் ஜைதி பதவி வகித்து வருகிறார். மற்ற 2 தேர்தல் கமிஷனர்களுக்கான பணியிடம் காலியாக இருந்தது. |
| பாராளுமன்றத்தை தொடர்ந்து டெல்லி மேல்-சபையிலும் கருப்பு பண மசோதா நிறைவேறியது Posted: 13 May 2015 01:20 PM PDT கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக, 'கருப்பு பணம் (கணக்கு காட்டப்படாத வெளிநாட்டு வருவாய், சொத்துகள்) மற்றும் வரி விதிப்பு மசோதா-2015' என்ற புதிய மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. கணக்கு காட்டப்படாத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகள் மீது வரி விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. கருப்பு பணம் |
| தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரை நியமிக்க தடை நீக்கம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 13 May 2015 12:15 PM PDT தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர், ஊழல் கண்காணிப்பு ஆணையர் பணி இடங்களை நிரப்ப விதித்திருந்த தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கி உத்தரவிட்டது. தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் இருந்த பிரதீப் குமார் கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 28-ந் தேதி ஓய்வு பெற்றார். அவருக்கு |
| சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் மாற்றம் இல்லை: மத்திய அரசு அறிவிப்பு Posted: 13 May 2015 10:52 AM PDT சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முறையில் மாற்றம் இல்லை என்றும், திறனறி தேர்வு தொடர்ந்து நீடிக்கும் என்றும் மத்திய ஊழியர் நலம் மற்றும் பயிற்சி துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது. பொதுப்பாடம் 2-வது தாளில் ஆங்கில மொழி திறன் பாடப்பகுதி நீக்கம் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது. |
| மதம் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? இந்திய குழந்தைகளின் அதிர்ச்சி தரும் கற்பனை: யூ-டியூப் வீடியோ Posted: 13 May 2015 10:08 AM PDT வழிபாட்டுத் தலங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று கடவுளை வழிபடச் சொல்கிறோம். எந்த எதிர்ப்பும் காட்டாமல் குழந்தைகளும் வழிபடுகின்றனர். உண்மையில் குழந்தைகளின் உலகத்தில் கடவுள், மதம் என்பதற்கான வரையறை என்ன? |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |