Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கவுகாத்தி – டாக்கா இடையே பயணிகள் பஸ் போக்குவரத்து பிரதமர் மோடி அடுத்தமாதம் தொடங்கி வைக்கிறார்

Posted: 24 May 2015 10:33 PM PDT

பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் அடுத்த மாதம் வெளிநாட்டு பயணத்தைத் தொடங்கவுள்ளார். முதலில் வங்கதேசத்துக்கு செல்கிறார். பிறகு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடி வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு ஜூன் 6–ந் தேதி (சனிக்கிழமை) செல்கிறார். அங்கு அவருக்கு வங்கதேச அரசு சிறப்பான

இன்போசிஸ் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை: ஒரே வருடத்தில் 18லிருந்து 113 ஆக உயர்வு

Posted: 24 May 2015 10:33 PM PDT

தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒரே வருடத்தில் 113 ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் 2013-14 நிதி ஆண்டில் 18 நிர்வாகிகள்(executives) மட்டுமே 1 கோடி ரூபாய்க்கு மேல் ஊதியம் பெறும் பட்டியலில் இருந்தனர்.

பீகாரில் 30 லாரிகள் தீ வைத்து எரிப்பு: நக்சலைட்டுகள் அட்டகாசம்

Posted: 24 May 2015 09:56 PM PDT

பீகார் மாநிலத்தில் கடந்த வாரம் நக்சலைட் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலில் நக்சலைட் இயக்கத்தின் பெண் தளபதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தம்பி இறந்த நாளில் பிரியாணி விருந்து: இறைச்சி தொண்டையில் சிக்கி அக்காள் சாவு

Posted: 24 May 2015 09:55 PM PDT

கேரள மாநிலம் திருச்சூர் குன்னங்குளம் தெற்கே அங்காடியை சேர்ந்த உதுப்பின் மனைவி மார்த்தா (வயது 62). நேற்று மார்த்தாவின் தம்பிக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் பிரியாணி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரியாணியை மார்த்தாவின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அமர்ந்து சாப்பிட்டனர்

திருப்பதி கோவிலில் 2 நாளில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்

Posted: 24 May 2015 09:54 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 4 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கோடை விடுமுறை என்பதால், பள்ளி தேர்வு முடிவுகள் வெளியானதாலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திருமலையில் குவிந்தனர்.

நட்சத்திர ஓட்டலில் பெண்களுடன் இரவு நடனம்: 7 பேர் கைது

Posted: 24 May 2015 09:52 PM PDT

கேரள மாநிலம் கொச்சி எம்.ஜி.ரோடு நகரின் முக்கிய பகுதியாகும். இங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு பெண்கள் உள்பட 200–க்கும் மேற்பட்டவர்கள் நடனமாடினர். இதில் ரஷ்யா நாட்டு வாஸ்லி மாஸ்கோ (வயது 28) என்ற கித்தார் கலைஞர் கலந்து கொண்டார். நடன நிகழ்ச்சியில் சிலர் தடைசெய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்துவதாக எர்ணாகுளம் போலீஸ் கமிஷனர் ஹரிசங்கருக்கு

தாதரில் இருந்து புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து

Posted: 24 May 2015 09:51 PM PDT

மராட்டிய மாநிலம் தாதரில் இருந்து சென்னைக்கு வரும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை புறப்பட்டது. இந்த ரெயில் நேற்று இரவு 7.05 மணிக்கு ஆந்திரா– கர்நாடகா எல்லையான யாதகிரி வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ரெயிலின் பி–2 ஏ.சி.

மஸ்தான்வலியால் எனது உயிருக்கு ஆபத்து இல்லை: நடிகை நீத்து அகர்வால் திடீர் பல்டி

Posted: 24 May 2015 09:51 PM PDT

செம்மரக் கடத்தல் வழக்கில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் மஸ்தான்வலி, அவரது காதலியும் நடிகையுமான நீத்து அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் நடிகை நீத்து அகர்வால்

ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்றது மகிழ்ச்சி அளிக்கிறது: பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளி முதல்வர் பேட்டி

Posted: 24 May 2015 09:10 PM PDT

5-வது முறையாக, தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் படித்த பள்ளியின் முதல்வர் லாவண்யா மித்ரன் கூறினார். 5-வது முறையாக தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றுள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவில் ஜெயலலிதா விருப்பப்படி அவர்

மத்திய பிரதேச மாநிலத்தில் அம்பேத்கார் பிறந்த ஊருக்கு 2–ந்தேதி ராகுல் செல்கிறார்

Posted: 24 May 2015 09:08 PM PDT

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி மாநிலம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது விவசாயிகள் மற்றும் ஏழை மக்களை சந்திப்பதை அவர் வழக்கத்தில் வைத்துள்ளார். பஞ்சாப், மராட்டியம் மாநிலங்களுக்கு சமீபத்தில் ராகுல் பாதயாத்திரை சென்ற

டெல்லியில் ரூ.5 ஆயிரம் கோடியில் 16 வழிச்சாலை அமைக்க திட்டம்: மத்திய அரசு நடவடிக்கை

Posted: 24 May 2015 08:26 PM PDT

தலைநகர் டெல்லி போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கிறது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஆண்டு டெல்லி எம்.பி.க்கள் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்காரியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

தீவிரவாதத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

Posted: 24 May 2015 08:00 PM PDT

இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் தீவிரவாத செயல்பாடுகள் குறித்து கடந்த வாரம் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கூறும்போது, தீவிரவாதிகளை, தீவிரவாதிகள் மூலமே வேரறுக்க வேண்டும் என கூறியிருந்தார். மனோகர் பாரிக்கரின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து

மோடி அரசுக்கு பூஜ்யம் மார்க் போடுவதா?: ராகுல் காந்தி மீது வெங்கையா நாயுடு தாக்கு

Posted: 24 May 2015 07:57 PM PDT

மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பூஜ்யம் மதிப்பெண் வழங்கிய ராகுல் காந்தியை, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கடுமையாக தாக்கி பேசியுள்ளார். மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்று விட்டது. இந்த

பா.ஜனதா அரசு பதவி ஏற்று ஓராண்டு நிறைவு: மதுரா பொதுக் கூட்டத்தில் மோடி இன்று பேசுகிறார்

Posted: 24 May 2015 07:39 PM PDT

மத்தியில் பா.ஜனதா அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி மதுராவில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதை சிறப்பாக கொண்டாடும்

தியாகிகளுக்கு மேலும் 19 வங்கிகள் மூலம் ஓய்வூதியம்: மத்திய அரசு அனுமதி

Posted: 24 May 2015 07:12 PM PDT

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கி வருகிறது. சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி மூலம் மட்டுமே இதுவரை ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இறந்து பல ஆண்டுகள் ஆன பின்பும் தொடர்ந்து

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்வு

Posted: 24 May 2015 04:56 PM PDT

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. இந்த கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது. இந்த வெயிலுக்கு நேற்று மட்டும் இவ்விரு

நேபாளத்தில் நிலச்சரிவு: பீகாரின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Posted: 24 May 2015 04:15 PM PDT

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து பீகாரின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராம்சே கிராமத்தில் சமீபத்தில் திடீரென நிலச்சரிவு

ரபேல் போர் விமானங்கள் கொள்முதல்: மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

Posted: 24 May 2015 03:33 PM PDT

ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை சேர்த்துக்கொள்ளாததற்கு, மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம், பிரான்ஸ் நாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டபோது, அந்த நாட்டின் அதிபர் பிராங்கோயிஸ்

அரசியல் காரணங்களுக்காக அப்சல் குரு தூக்கில் போடப்பட்டார்: உமர் அப்துல்லா

Posted: 24 May 2015 03:04 PM PDT

பாராளுமன்ற கட்டிட தாக்குதலில் தொடர்புடைய அப்சல் குரு கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந்தேதி தூக்கில் போடப்பட்டார். காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அப்சல் குரு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் தூக்கிலிடப்பட்டது குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்-

12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. முடிவுகள் நாளை வெளியாகிறது

Posted: 24 May 2015 09:10 AM PDT

மத்திய பாட திட்டமான சி.பி.எஸ்.இ. முறையில் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதியாண்டு தேர்வுகளை எழுதிய மாணவ- மாணவியருக்கான முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நன்பகல் 12 மணிக்கு வெளியாகும் இந்த முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in மற்றும் www.cbse.nic.in உள்ளிட்ட இணையதளங்களில் சென்று அறிந்து கொள்ளலாம். மேலும், டெல்லியில் இருப்பவர்கள் 24300699 என்ற எண்ணுக்கும், நாட்டின் பிறபகுதியில் வசிப்பவர்கள் 011-24300699 என்ற எண்ணுக்கும் போன் செய்து ஐ.வி.ஆர்.எஸ். (IVRS) முறையில் முடிவுகளை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™