Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காஷ்மீரில் குண்டு வெடித்து 14 பேர் காயம்

Posted: 09 May 2015 07:33 PM PDT

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து 52 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, ஷோபியன்நகர். அங்குள்ள மக்கள் நெரிசல் மிகுந்த மார்க்கெட் அருகே நேற்று பகல் போலீசார் வாகன போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு வாகனத்தில் சென்ற தீவிரவாதிகள், திடீரென்று போலீசார் மீது கையெறி குண்டை வீசிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். ஆனால் அந்த குண்டு, குறி தவறி மக்கள் மீது விழுந்தது.

ஐ.டி. பெண் ஊழியர் கற்பழித்து கொலை: 2 பேரின் மரண தண்டனை உறுதி -சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 09 May 2015 03:44 PM PDT

மராட்டிய மாநிலம் புனே ஜேவாடியில் அமைந்துள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி, இரவு பணிக்காக அவரை அழைத்து செல்ல கம்பெனியால் ஏற்பாடு செய்யப்பட்ட வாடகை வாகனம் வந்தது. இதில் ஏறிய

அரசியல் செல்வாக்கு பெற்றவர்களுக்கே பத்ம விருதுகள் கிடைக்கிறது: பாபா ராம்தேவ் குற்றச்சாட்டு

Posted: 09 May 2015 03:00 PM PDT

அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கே 'பத்ம' விருதுகள் கிடைக்கிறது என்று பாபா ராம்தேவ் குற்றம் சாட்டினார். இந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்த பத்மவிபூஷண் விருது பெறுவோர் பட்டியலில் பிரபல யோகா குரு, பாபா ராம்தேவ் பெயரும் இடம் பெற்றிருந்தது. எனினும் இந்த விருதை ஏற்றுக் கொள்ள அவர்

நேதாஜி பற்றிய 41 கோப்புகள் அரசிடம் இருப்பதாக பிரதமர் அலுவலகம் ஒப்புதல்

Posted: 09 May 2015 02:42 PM PDT

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக 41 கோப்புகள் அரசிடம் இருப்பதாக பிரதமர் அலுவலகம் ஒப்புக்கொண்டுள்ளது. அவற்றை வெளியிட்டால், வெளிநாடுகளுடனான உறவு பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்த சர்ச்சை அவர் மாயமாகி 70 ஆண்டுகளாகியும் முடிவுக்கு வரவில்லை. அவர் தைவான் நாட்டில் 1945-ம்

அரியானா மாநிலத்தில் புனித நதியான சரஸ்வதி ஓடியதற்கான அடையாளம் கண்டுபிடிப்பு

Posted: 09 May 2015 01:48 PM PDT

வேத காலத்தில் புனித நதியாக கருதப்பட்ட சரஸ்வதி நதி, காலப்போக்கில் மறைந்து விட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஓடிய இந்த நதியை கண்டுபிடிக்க புவி அறிவியல் வல்லுனர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். செயற்கை கோள் வரைபடத்தை கொண்டு வல்லுனர்கள் ஆய்வு செய்த போது சரஸ்வதி நதி அரியானா மாநிலத்தில் ஓடியதற்கான ஆதாரம் கிடைத்தது.

மலையோர விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து மத்திய வனத்துறை மந்திரியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

Posted: 09 May 2015 12:53 PM PDT

மத்திய வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரை மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, கன்னியாகுமரி மலையோர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க கோரிக்கை விடுத்தார். மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை

ராஷ்டீரிய ஜனதா தள கட்சியில் இருந்து நீக்கியது சட்டப்படி தவறு: பப்பு யாதவ்

Posted: 09 May 2015 11:20 AM PDT

லாலு கட்சியான ராஷ்டீரிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.பி.ஆக இருப்பவர் பப்பு யாதவ். இவர் கட்சிக்கு எதிராக செயல்படுவாக குற்றம்சாட்டப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து பப்பு யாதவ் கருத்து கூறுகையில் என்னை லாலு கட்சியில் இருந்த நீக்கியது சட்டப்படி தவறு என்று கூறினார்.

மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட கிராம மக்களில் ஒருவர் கொலை: மற்றவர்கள் விடுவிப்பு

Posted: 09 May 2015 10:24 AM PDT

மாவோயிஸ்டு நடமாட்டம் அதிகமுள்ள சத்தீஸ்கர் மாவட்டத்தில் பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுக்மா மாவட்ட அப்பாவி மக்கள் 500 பேரை நக்சலைட்டுகள் கடத்திச் சென்றனர். இதில் ஒருவரை அவர்கள் கொலை செய்துள்ளனர். மற்றவர்களை விடுவித்துள்ளனர்.

இந்தியாவில் புல்லட் ரெயில் சேவை நடைமுறைக்கு வர நீண்ட காலமாகும்: ஏ.கே.மிட்டல்

Posted: 09 May 2015 10:13 AM PDT

இந்தியாவில் புல்லட் ரெயில் சேவை நடைமுறைக்கு வர நீண்ட காலமாகும். இதற்கான வேலைகளை தொடங்கி முடிப்பதற்கு 6 முதல் 8 ஆண்டுகள் வரை ஆகும் என்று இந்திய ரெயில்வே துறை சேர்மன் ஏ.கே. மிட்டல் தெரிவித்துள்ளார்.

மும்பையில் 4 மாடிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து

Posted: 09 May 2015 08:38 AM PDT

தெற்கு மும்பையில் உள்ள கல்பா தேவி பகுதியில் உள்ள 4 அடுக்கு மாடிக் கட்டிடம் இன்று மாலை இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த ஒரு மணி நேரத்திற்குள் அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தோள்களில் கலப்பையை ஏந்துங்கள், துப்பாக்கியை அல்ல: மாவோயிஸ்ட்களுக்கு மோடி அறிவுரை

Posted: 09 May 2015 05:34 AM PDT

நாட்டின் வளர்ச்சிக்காக தோள்களில் கலப்பையை ஏந்துங்கள் துப்பாக்கியை ஏந்தாதீர்கள் என மாவோயிஸ்ட்டுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் இரண்டு முக்கிய வளர்ச்சித்

கணக்கு பார்த்து ஒருநாளும் வேலை செய்ததில்லை: மாணவர்களுடன் கலந்துரையாடிய மோடி பேச்சு

Posted: 09 May 2015 03:55 AM PDT

பிரதமராக பதவியேற்றதில் இருந்து தினசரி எத்தனை மணி நேரம் வேலை செய்கிறேன் என்பதை ஒரு நாளும் கணக்கிட்டதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கச் சென்ற பிரதமர் அங்கு பழங்குடி சிறுவர்களின் கல்விக்காக

வன்முறைக்கு எதிர்காலம் இல்லை; அமைதிக்கு உண்டு: மாவோயிஸ்ட்கள் குறித்து மோடி பேச்சு

Posted: 09 May 2015 03:26 AM PDT

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் உள்ள திலிமிலி கிராமத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான உருக்கு ஆலை திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி நக்சல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பேசிய பிரதமர் மோடி வன்முறைக்கு எதிர்காலம் இல்லை, ஆனால் அமைதிக்கு நிச்சயம் எதிர்காலம் உண்டு என்றார்.

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு: பெங்களூர் உயர்நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு

Posted: 09 May 2015 03:04 AM PDT

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் பெங்களூர் ஐகோர்ட்டு திங்கட்கிழமை தீர்ப்பு வழங்க உள்ளது. இதையொட்டி கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு: பெங்களூர் கோர்ட்டில் பலத்த பாதுகாப்பு

Posted: 09 May 2015 01:16 AM PDT

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் பெங்களூர் ஐகோர்ட்டு வருகிற 11–ந் தேதி (திங்கட்கிழமை) தீர்ப்பு அளிக்கிறது. பொதுவாக இது போன்ற பரபரப்பான தீர்ப்புகள் வார இறுதி தினங்களில் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு திங்கட்கிழமை அளிக்கப்படுகிறது.

பென்சன், விபத்து, ஆயுள் காப்பீடு புதிய திட்டங்கள்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

Posted: 09 May 2015 01:01 AM PDT

பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் பிரதமர் மோடி 'அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பென்சன் திட்டம், காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதன் முதல்படியாக ஏழைகளும் பயன்பெறும் வகையில் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதில் கோடிக்கணக்கானோர் சேர்ந்தனர்.

சல்மான்கான் ஜாமீனுக்கு காரணமான பாடகர் கமால்கான்: கீழ்கோர்ட்டு விசாரிக்காததால் தண்டனை நிறுத்தி வைப்பு

Posted: 08 May 2015 11:45 PM PDT

மும்பையில் கடந்த 2002–ம் ஆண்டு நடந்த நடிகர் சல்மான்கான் கார் விபத்து வழக்கில் மும்பை செசன்ஸ் கோர்ட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய சல்மானுக்கு 48 மணி நேர இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து சல்மான்கான் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் தண்டனை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க கோரும் மனுவும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™