Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஐதராபாத்தில் 3 நாள் மாநாடு தொடங்கியது: தெலுங்கு தேசம் கட்சி தேசிய தலைவராக சந்திரபாபுநாயுடு தேர்வு

Posted: 26 May 2015 10:25 PM PDT

தெலுங்கு தேசம் கட்சியின் 34–வது ஆண்டு மாநாடு ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. 3 நாள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை சந்திரபாபுநாயுடுவின் மகன் லோகேஷ் முன்னின்று கவனித்தார். மாநாட்டுக்காக ஐதராபாத்தின் புறநகரான கண்டிப்பேட்டை என்ற இடத்தில் பிரமாண்ட பந்தலுடன் மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆந்திரா, தெலுங்கானா, ராயலசீமா, பகுதிகளில் புகழ் பெற்ற 34 வகையான சமையலுடன்

வரதட்சணை பிரச்சனையால் மனைவி மற்றும் மைத்துனர் மீது ஆசிட் வீசிய கணவரின் குடும்பத்தார்

Posted: 26 May 2015 10:00 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் மனைவி மற்றும் மைத்துனர் மீது கணவரும் அவரது சகோதரர்களும் சேர்ந்து ஆசிட் வீசி தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தினம் தினம் அந்தப் பெண்ணை கொடுமைப்படுத்தியதால் இரு குடும்பங்களுக்கும் இடையே

ஆந்திரா மற்றும் பஞ்சாபில் வால்மார்ட்டின் புதிய மொத்த விற்பனை நிலையம்

Posted: 26 May 2015 09:52 PM PDT

சர்வதேச அளவில் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவை சேர்ந்த வால்மார்ட் நிறுவனம், தற்போது இந்தியாவில் ஆந்திரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் புதிய மொத்த விற்பனை நிலையங்களை தொடங்கவுள்ளது. இது குறித்து வால்மார்ட் நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரி

நிலம் கையகப்படுத்தும் மசோதா பற்றி மோடி அரசு தவறான தகவல்களை பரப்புகிறது: ராகுல்காந்தி பேச்சு

Posted: 26 May 2015 09:40 PM PDT

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி 2 நாள் பயணமாக நேற்று கேரளா சென்றார். கோழிக்கோட்டில் நடந்த இளைஞர் காங்கிரஸ் பேரணியை தொடங்கி வைத்து ராகுல்காந்தி பேசியதாவது:–

சித்தராமையா அரசு நீண்ட நாள் நீடிக்காது: முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கணிப்பு

Posted: 26 May 2015 08:44 PM PDT

முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா தேசிய துணை தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா உப்பள்ளி அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு விட்டது. கர்நாடக

பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு விமான போக்குவரத்து: மந்திரி தேஷ்பாண்டே தகவல்

Posted: 26 May 2015 08:37 PM PDT

உயர்கல்வி மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி தேஷ்பாண்டே பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கர்நாடகத்தில் சுற்றுலா தலங்களுக்கு விரைவாக செல்ல போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் நன்றாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்தின்

மேற்கு வங்க மாநிலத்தில் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்ட திருநங்கை

Posted: 26 May 2015 08:17 PM PDT

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே முதன்முறையாக கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ள திருநங்கை மனாபி பந்தோபாத்யாய், தற்போது விவேகானந்தா சதோபர்ஷிகி மஹாவித்யாலயாவில் பெங்காலி மொழி பாடத்தின் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். வரும் ஜூன் 9

மன்மோகன்சிங் ஆட்சியில் ஒவ்வொரு மந்திரியும் தங்களை பிரதமர் என நினைத்து செயல்பட்டனர்: ரவிசங்கர் பிரசாத்

Posted: 26 May 2015 08:09 PM PDT

மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- முன்னாள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பிரதீப் பைஜல் எழுதியுள்ள புத்தகத்தில், 'தொலைத்தொடர்பு துறையின் பிரதமர்

மன்மோகன் மிரட்டியதாக டிராய் முன்னாள் தலைவரின் குற்றச்சாட்டு கற்பனையானது, ஆதாரமற்றது: காங்கிரஸ்

Posted: 26 May 2015 05:33 PM PDT

2ஜி ஊழலில் மந்திரி சொல்வதை கேள், இல்லையென்றால் தீங்கு நேரும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னை மிரட்டியதாக டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு கற்பனையானது, ஆதாரமற்றது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் 4 இந்தியர்கள்

Posted: 26 May 2015 05:26 PM PDT

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 4 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். ஆண்டுதோரும் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை போர்ப்ஸ்

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1100-ஐ தாண்டியது

Posted: 26 May 2015 05:22 PM PDT

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1100-க்கு மேல் உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு வெயிலின் உக்கிரம் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு தனி தொலைக்காட்சி சேனல்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Posted: 26 May 2015 02:08 PM PDT

விவசாயிகளுக்கான தனி தொலைக்காட்சி சேனலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி நேற்று டெல்லி விஞ்ஞான பவனில் 'கிஷான் சேனல்' என்னும் விவசாயிகளுக்கான தனி தொலைக்காட்சி சேனலை தொடங்கி வைத்தார்.

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: டெல்லி அரசின் செயல்பாடுகளில் தலையிடமாட்டோம் என மத்திய அரசு அறிவிப்பு

Posted: 26 May 2015 12:27 PM PDT

டெல்லி அரசிற்கு சாதகமான ஐகோர்ட்டு உத்தரவை அடுத்து அம்மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடமாட்டோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் அதிகாரிகள், போலீசாரை நிர்வகிக்கும் உரிமை யாருக்கு உள்ளது என்பதில் கவர்னர் நஜீப் ஜங்குக்கும், முதல்–மந்திரி

கருப்பு பணம்: யாஷ் பிர்லா உட்பட 5 இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டது சுவிஸ் வங்கி

Posted: 26 May 2015 12:00 PM PDT

சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிவைத்திருப்பதாக பிரபல தொழில் அதிபர் யாஷ் பிர்லா உட்பட 5 இந்தியர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது அந்நாட்டின் மத்திய வரி நிர்வாக அமைப்பு. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் சாம்பாதித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு

ஆந்திராவில் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 852 ஆக உயர்ந்தது

Posted: 26 May 2015 09:32 AM PDT

விண்வெளியின் ஓஸோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள துளைகள் மற்றும் வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை போன்றவற்றால் பருவநிலையில் ஏற்படும் பெரும் மாற்றம் காரணமாக தற்போதெல்லாம், வெயில், மழை, பனி உள்ளிட்ட அனைத்து பருவக்காலங்களும் உக்கிரமாகவே உள்ளது. இந்நிலையில், இந்த கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சகட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது. கடந்த மாதம் 15-ம் தேதியில்

வங்காளதேசத்தில் ஜூன் 6-ம்தேதி முதல் இரண்டு நாட்கள் மோடி சுற்றுப்பயணம்

Posted: 26 May 2015 09:29 AM PDT

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 6ம் தேதி முதல் இரண்டு நாட்கள் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கடந்த ஆண்டு மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவரை தங்கள் நாட்டிற்கு வருகை தரும்படி வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி முதல் முறையாக வங்காளதேசத்தில் மோடி ஜூன் 6-ம் தேதி முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு மேம்படவேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

Posted: 26 May 2015 08:40 AM PDT

மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார். மேற்கு வங்காளத்தில் கச்சா குண்டுகள் தயாரிப்பதாக வெளிவந்துள்ள தகவல் கவலை அளிப்பதாகக் கூறிய ராஜ்நாத் சிங், சட்டம் ஒழுங்கு நிலைமையை முன்னேற்றமடையச் செய்வதற்காக மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதேசமயம், தேசிய புலனாய்வு அமைப்பு தனது பணியை சரியாகச் செய்வதாக அவர் பாராட்டினார்.

அனைத்து வளர்ச்சிப் பணிகளும் 12 மாதங்களில் நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பதா?: காங். மீது மத்திய மந்திரி பாய்ச்சல்

Posted: 26 May 2015 08:09 AM PDT

கோவா மாநிலம் பனாஜியில் மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் நிருபர்களை சந்தித்தார். அப்போது மோடி தலைமையிலான மத்திய அரசின் ஓராண்டு நிறைவு குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளித்தார். அவர் கூறியதாவது:- 60 வருடங்களாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, மோடி தலைமையிலான அரசு மேம்பாட்டிற்குரிய அனைத்து விசயங்களையும் 12 மாதங்களில்

லாட்டரி ஊழல் வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க கர்நாடக முதல் மந்திரி சம்மதம்

Posted: 26 May 2015 06:30 AM PDT

லாட்டரி ஊழல் வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா சம்மதம் தெரிவித்துள்ளார். லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ள கர்நாடக மாநிலத்தில் போலியாக லாட்டரி சீட்டு அச்சடித்து, விற்பனை செய்து, குலுக்கல் நடத்தியதாக தினந்தோறும் முடிவும் வெளியிட்டுவந்த ஒரு கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் பணத்தை பறிகொடுத்த பலர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கவர்னருக்கு அதிக அதிகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

Posted: 26 May 2015 05:43 AM PDT

உயரதிகாரிகள் நியமன விவகாரத்தில் டெல்லி கவர்னருக்கு அதிக அதிகாரம் அளித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராகவும், மத்திய அரசு ஊழியர்கள் மீது டெல்லி போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற விதிகளுக்கு எதிராகவும் டெல்லி சட்டசபை அவசர கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்லி தலைமைச் செயலாளர் கே.கே.சர்மா தனிப்பட்ட பயணமாக விடுமுறையில் அமெரிக்கா சென்றதால், தற்காலிக தலைமைச்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™