Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மூணாறு அருகே 200 அடி பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி- 17 பேர் படுகாயம்

Posted: 17 May 2015 11:06 PM PDT

சேலத்தை சேர்ந்த 19 பேர் ஒரு பஸ்சில் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்த பின்னர் இன்று காலை குருவாயூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

மும்பை மருத்துவமனையில் 42 வருடமாக கோமாவில் இருந்த நர்சு அருணா ஷான்பாக் இன்று காலமானார்

Posted: 17 May 2015 10:43 PM PDT

மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனையில் 42 வருடம் கோமாவில் இருந்த நர்ஸ் அருணா ஷான்பாக் இன்று காலமானார். கடந்த 1973 ஆம் ஆண்டு, நவம்பர் 27-ந் தேதியன்று மருத்துவமனையில் பணி செய்து கொண்டிருந்தபோது, வார்டு பாய் ஒருவரால் கற்பழிக்கப்பட்ட அருணா கடுமையாக தாக்கப்பட்டார். இதனால் அவரது மூளை

சொந்த மாவட்டத்தை புறக்கணிக்கிறார்: சந்திரபாபுநாயுடு மீது தெலுங்குதேசம் எம்.பி. குற்றச்சாட்டு

Posted: 17 May 2015 10:22 PM PDT

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. ஆனால் சித்தூர் மாவட்டத்தை சந்திரபாபு நாயுடு புறக்கணிப்பதாக அவரது கட்சி எம்.பி.யே குற்றம் சாட்டி உள்ளார்.

வெளிநாடு பயணத்துக்காக வேட்டியை துறந்தார் வெங்கய்யா நாயுடு: பேண்ட்–சட்டைக்கு மாறினார்

Posted: 17 May 2015 10:19 PM PDT

எப்போதும் வேட்டி, சட்டையுடன் காணப்படும் மத்திய நகர்புற வளர்ச்சி துறை மந்திரி வெங்கய்யா நாயுடு தற்போது வேட்டியை துறந்தார். வெளிநாடு சுற்றுப்பயணத்துக்காக அவர் தனது உடை அலங்காரத்தை மாற்றி கொண்டதாக கூறப்படுகிறது.

திருப்பதியில் ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் தரிசனம்

Posted: 17 May 2015 09:43 PM PDT

திருப்பதியில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. நேற்று காலை முதல் மாலை வரை 90 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை

செம்மரக்கடத்தல் வழக்கில் இருந்து விடுதலையாகாவிட்டால் தற்கொலை செய்வேன்: நடிகை நீத்து அகர்வால்

Posted: 17 May 2015 09:42 PM PDT

செம்மரக்கடத்தல் வழக்கில் ஐதராபாத்தில் கைதான தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இதன்படி அவர் கர்னூல் மாவட்டம் ருத்ரவரம் போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.

கேரளாவில் மேலும் 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்: வானிலை இலாகா அறிவிப்பு

Posted: 17 May 2015 09:12 PM PDT

கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. திருவனந்தபுரம், வலியதுறை, செறியதுறை, விழிஞ்சம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று முன் தினம் பெய்த மழையால் திருவனந்தபுரம் நகரம்

நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் பா.ஜனதா-சிவசேனா இடையே பிரச்சினை இல்லை: உத்தவ் தாக்கரே

Posted: 17 May 2015 08:39 PM PDT

மும்பை மராத்தி பத்ரகர் சங்கத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் பா.ஜனதா-சிவசேனா இடையே எந்த

மும்பையில் விமான பணிப்பெண் மானபங்கம்: ஊழியர் கைது

Posted: 17 May 2015 08:31 PM PDT

மும்பை அந்தேரியில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருபவர் உபைத்கான். இவர் தன்னுடன் பணிபுரியும் 24 வயது விமான பணிப்பெண் ஒருவரை அலுவலக லிப்டில் சென்றபோது மானபங்கம் செய்தார்.

ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம்: டெல்லி ராஜபாதையில் குழந்தைகளுடன் மோடி யோகாசனம் செய்கிறார்

Posted: 17 May 2015 08:25 PM PDT

சர்வதேச யோகா தினத்தையொட்டி, வருகிற ஜூன் 21-ந் தேதி டெல்லி ராஜபாதையில், குழந்தைகளுடன் பிரதமர் மோடி யோகாசனம் செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பேசும் போது, யோகாவின் பெருமைகள்

அரியானா மாநிலத்தில் சர்வதேச செம்மர கடத்தல்மன்னன் கைது: ரூ.20 கோடி செம்மரங்கள் பறிமுதல்

Posted: 17 May 2015 08:03 PM PDT

அரியானா மாநிலத்தில் சர்வதேச செம்மர கடத்தல் மன்னன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.20 கோடி மதிப்புள்ள செம்மர கட்டைகளை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள காடுகளில் செம்மரங்களை வெட்டி கடத்தி

ராகுல்காந்தி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று அமேதி செல்கிறார்

Posted: 17 May 2015 07:53 PM PDT

ராகுல் காந்தி இன்று தனது தொகுதியான அமேதிக்கு செல்கிறார். 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி 56 நாட்கள் அரசியல் ஓய்வுக்கு பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பாராளுமன்றத்தில் மத்திய

பா.ஜனதா குறித்து பேச்சு: சித்தராமையாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - சதானந்த கவுடா

Posted: 17 May 2015 07:46 PM PDT

தாவணகெரே மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் அரசின் 2 ஆண்டு சாதனை விழாவில் பேசிய முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும், பா.ஜனதா இல்லாத மாநிலமாக

மும்பையில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

Posted: 17 May 2015 07:44 PM PDT

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 8-வது தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தது. இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை வைத்து மும்பை நாக்பாடாவில் உள்ள பாம்பே இன்டர்நேசனல் ஓட்டலில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த

செல்போன் கோபுர கதிர்வீச்சு குறித்து அரசு கவனிக்க வேண்டும்: பாராளுமன்ற குழு கோரிக்கை

Posted: 17 May 2015 07:36 PM PDT

முன்னாள் மத்திய மந்திரி அஷ்வனிகுமார் தலைமையிலான பாராளுமன்ற மானியக்கோரிக்கை குழு சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த கதிர்வீச்சு

ஆம் ஆத்மி அரசின் செயல்பாட்டுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் முட்டுக்கட்டை: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Posted: 17 May 2015 07:35 PM PDT

டெல்லியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. எனினும் யூனியன் பிரதேசமான டெல்லி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்குள்ள துணை நிலை கவர்னருக்கு சிறப்பு

டெல்லியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 17 May 2015 07:27 PM PDT

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், மற்றும் தொண்டர்கள் உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து

பேஸ்புக் மூலமாக பழகி 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபன் கைது

Posted: 17 May 2015 05:34 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரில் போலீஸ் அதிகாரியின் மகன் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகானி கேட் பகுதியைச் சேர்ந்த மாணவிக்கு, சில வருடங்களுக்கு முன்பாக பேஸ்புக் மூலமாக அறிமுகமான அந்த வாலிபன்,

ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இன்றி ஓராண்டை நிறைவு செய்கிறோம்: மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பேட்டி

Posted: 17 May 2015 03:25 PM PDT

ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இன்றி ஓராண்டை நிறைவு செய்கிறோம் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார். மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொய் வழக்கு போடுவதை தடுக்க வரதட்சணை கொடுமை சட்டத்தில் திருத்தம்: மத்திய அரசு முடிவு

Posted: 17 May 2015 01:59 PM PDT

பொய் வழக்கு போடுவதை தடுக்க வரதட்சணை கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரதட்சணை கொடுமைக்காக பெண்ணின் புகாரின் பேரில் கணவர், மாமனார், மாமியார், மைத்துனர் உள்ளிட்ட கணவர் குடும்பத்தினர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 498-ஏ யின்படி வழக்கு பதிவு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™