ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பாறைகள் போர்த்திய பூமி
- உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு
- ஜெயலலிதா விடுதலை பெற கண்ணகிக்கு முதல் மரியாதை செய்த தமிழக அமைச்சர்கள்
- நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள்
- தேசியச் செய்திகள்
- உலகச் செய்திகள்!
- நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
- பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்
- மனச்சூடு கண்டவர்களுக்கு நம் வைத்தியம்!
- குரங்கிலிருந்து மனிதன் மீண்டும் குரங்கானான்
- நேர்மை வேண்டும்!
- இன்னா செய்தாரை மறத்தல்!
- படித்ததில் பிடித்தது :) --அடையாள அட்டை!
- ஆபாசங்கள்..!! -Mano Red
- கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!
- ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு
- ஆ...இது யாரு - என திகைப்பதன் சுருக்கமே ஆதார்...!
- அக்னி நக்ஷத்திரம் !
- இன்னும் அறிவை அளப்பதற்கு கருவி கண்டு பிடிக்கப்படவில்லை!
- நகைச்சுவை
- செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள்
- ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !
- சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பிறந்த தினம்: மே 4- 1767
- நகைச்சுவை
- வார்த்தை வித்தகர் ஐயாவை வாழ்த்தலாம் வாங்க...!
- இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!
- தொடத் தொடத் தொல்காப்பியம்(369)
- திப்பு சுல்தான் இறந்த தினம்: மே 4 -1799
- துவையல்கள் - பருப்பு துவையல் 2
- நிதர்சனம் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
- ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!
- தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்
- பாமரர் தேவாரம்
| Posted: 04 May 2015 01:21 PM PDT பூமியின் மேற்பகுதி ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களையும், கடல் படுகைகளையும் கொண்டது. இது பாறைகளால் ஆனது. இதனை பாறைக்கோளம் என்று அழைக்கிறார்கள். கண்டங்களில் உள்ள நிலம் சராசரியாக 40 கி.மீ. தடிமனுடையது. கடலில் இருக்கும் நிலமோ 10 முதல் 12 கி.மீ. தடிமன் கொண்டதாக உள்ளது. இந்த பாறைகள் தூளாகி பொடியாகி, வானிலை, காலநிலை, ஈரப்பதம், பாறைகளின் இடுக்குகளில் வேர் நுழைத்துப் பரவும் தாவரங்களின் வளர்ச்சி போன்ற பல காரணங்களால் மணலாக மாறுகிறது. கோடை வெயிலில் சூடான பாறைகள் திடீர் மழையில் ... |
| உலகையே அசர வைத்த உயர்நிலைப் பள்ளிக் கணக்கு Posted: 04 May 2015 01:18 PM PDT 15 மற்றும் 16 வயதிலான பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு கணக்குப் பரீட்சையில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, உலகையே அசர வைத்துவிட்டது. அந்தக் கேள்வி, பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றுகிறது. ஆனால், அந்த கணக்குக்கான விடையை கண்டுபிடிக்க மூளையை கசக்கிப் பிழிய வேண்டியதாகிவிடுகிறது. இதனால், அந்த கணக்குப்பாட கேள்வி, இணையதளம் மூலம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. சிங்கப்பூர் மற்றும் ஆசிய பள்ளி கணக்கு ஒலிம்பியாட் சார்பாக சிங்கப்பூரில் நடைபெற்ற பரீட்சையில் இடம் பெற்ற அந்த வியப்பூட்டும் ... |
| ஜெயலலிதா விடுதலை பெற கண்ணகிக்கு முதல் மரியாதை செய்த தமிழக அமைச்சர்கள் Posted: 04 May 2015 12:57 PM PDT சிலப்பதிகார போராளி என வர்ணிக்கப்படும், கண்ணகி சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் கண்ணகி சிலையை அதிமுக தரப்பினர் கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததாகவும், தற்போது கண்ணகி சிலைக்கு அமைச்சர்களே நேரில் சென்று அஞ்சலி செலுத்தி மரியாதை செய்வது தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது. கற்புக்கரசி கண்ணகியை வணங்கினால், பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வாய்ப்பு உள்ளதாக ... |
| நேபாளத்தில் இந்திய ஊடகங்கள் மீது கடுமையான டுவிட்டர் விமர்சனங்கள் Posted: 04 May 2015 12:53 PM PDT நிலநடுக்கத்தில் நிலைகுலைந்துபோயுள்ள நேபாளத்தில் செய்தி சேகரிக்கும் இந்திய ஊடகங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்வதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இந்திய ஊடகங்கள் வெளியேறவேண்டும் (#GoHomeIndianMedia) என்ற தொனியில் டுவிட்டர் தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரசாரம் இணையத்தில் முக்கிய பேசுபொருளாக உள்ளது. நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியா முன்னணி பாத்திரம் வகிக்கிறது. இந்தியா தான் முதல்நாடாக தங்களின் மீட்பு அணிகளை அங்கு ... |
| Posted: 04 May 2015 12:49 PM PDT பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம் பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் ... |
| Posted: 04 May 2015 12:26 PM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது Posted: 04 May 2015 12:22 PM PDT புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது. சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. - - |
| பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம் Posted: 04 May 2015 12:17 PM PDT பிறந்த நாள் விமந்தனியை வாழ்த்துவோம்[/color] இன்னும் 11 மணி நேரத்தில் பிறந்த நாள் காணும் , ஈகரையின் சுற்றுலா மந்திரி விமந்தனியை முன்னதாகவே வாழ்த்துவோம்[/color] மதி தன்னை பெயரில் கொண்டு , நன்மதி வளர்க்கும் பதிவினை செய்பவளே , வளர்மதி என வளர்ந்து , நிறைமதியாக வாழ வாழ்த்துக்கள் ! பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் , விமந்தனி ரமணியன் |
| மனச்சூடு கண்டவர்களுக்கு நம் வைத்தியம்! Posted: 04 May 2015 10:51 AM PDT இங்கு மனச்சூடு என குறிப்பிடுவது, நம் மீது கோபப்படுகிறவர்களைப் பற்றி! ஒருவர் என் மீது கோபப்பட்டால், அவர், என்னிடம் வகையாகச் சிக்கிக் கொண்டார் என்றும், அவருடனான வார்த்தைப் போரில் அப்போதே என் வெற்றி உறுதி என, நினைப்பேன். பந்தை எதிராளி விட்டெறிந்தால், நாம் கடினமான சுவர்ப்பகுதியாக இருந்தால் தானே, பந்து அவருக்கு திரும்பும்... இவ்விஷயத்தில், நான் கெட்டிக் குழம்பு போல் ஆகி, 'பச்சக்' என்று பந்தைத் தக்க வைத்துக் கொள்வேன். 'துணிகடையில், வெள்ளை பேன்ட்டுக்கு, 'டிரயல்' (போட்டுப் பார்க்கும் அனுமதி) கிடையாது. ... |
| குரங்கிலிருந்து மனிதன் மீண்டும் குரங்கானான் Posted: 04 May 2015 10:48 AM PDT சிந்திக்க வைக்கும் படம். இந்த படம் மனதனின் உடல் அமைப்பு மாறி வருவதை மட்டும் சொல்ல வில்லை. நாகரிகம் இல்லாமல் காட்டு மிராண்டியாக வாழ்ந்த மனிதன் திருந்தி வாழ்ந்த காலத்தில் இந்த விஞ்ஞான வளர்ச்சியால் மீண்டும் காட்டுமிராண்டிகளாக மாறுவதையே கட்டுகிறது. விஞ்ஞானம் - அது சொர்கத்தின் திறவுகோலாக இருக்கவேண்டும், அதுவே நரகத்தின் அளவுகோலாக ஆக கூடாது - அறிஞர் அண்ணா |
| Posted: 04 May 2015 10:34 AM PDT அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய தாரிணி, லேப் - டாப்பும் கையுமாக அப்பா உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும், ''என்னப்பா... 'கேம்' விளையாடுறீங்களா,'' என்று கேட்டாள். ''ஏம்மா... கல்யாண வயசில பொண்ணை வச்சுக்கிட்டு, கேம்சா விளையாடத் தோணும்... எல்லாம் உன் கல்யாண விஷயம் தான்; மேட்ரி மோனில, உனக்கு வரன் தேடிக்கிட்டிருக்கேன்,'' என்றார். தாரிணிக்கு திக்கென்றது. 'கல்யாணமா... விக்ரமைப் பற்றி, சொல்லிடலாமா...' என்று நினைத்தாள். அதற்குள் அம்மா காபி கொண்டு வர, மவுனமானாள். தாரிணி வேலைக்கு சேர்ந்த புதிதில் ... |
| Posted: 04 May 2015 10:22 AM PDT வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற பழனி, வேலை முடிந்து கை, கால் அலம்ப, ஆற்றின் ஓரத்தில் இறங்கியவர், ஏதேச்சையாக ஆற்றுப் பாலத்தை நோக்க, அங்கே, 60 வயது மதிக்கத் தக்க பெரியவர் ஒருவர், பாலத்தின் கைபிடிச் சுவரின் மேல் நின்று, ஆற்றையே வெறித்து பார்த்தபடி இருந்தார். ஏதோ அசம்பாவிதம் நிகழப் போகிறது என்பதை உணர்ந்து, ''ஏய்... யாரப்பா அது... பாலத்துல நின்னுகிட்டு என்ன செய்றே...'' என்று பழனி கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அந்த மனிதர், சட்டென்று ஆற்றில் குதித்து விட்டார். ஆற்றின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு, ... |
| படித்ததில் பிடித்தது :) --அடையாள அட்டை! Posted: 04 May 2015 10:12 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 04 May 2015 09:56 AM PDT சீச்சீ என்று சொல்லப்படும் விஷயங்கள் தான் எதிர்பார்ப்பை அதிகம் தூண்டி மனதை ஆட்டுவிக்கின்றன..!! ஆபாசங்கள் தவறாக தெரியவில்லை, அதை ஆபாசமாக நினைப்பதன் பின்னணியே தவறாக தெரிகிறது ..!! ஆபாசங்களை விரும்பினாலும் விருப்பமில்லாதது போல, முகம் சுழித்தே ரசிக்கப்படுவது தான் அழகு..! ஆபாசங்களின் ஆசாபாசங்களுக்கு ஆணி வேராக ஆசைப்படுதலின் ஆர்வம் ஒளிந்திருக்கிறது..!! ஆபாசத்தில் அசிங்கமென ஏதுமில்லை, அசிங்கமாகி விடுமோ என்ற அபத்த எண்ணமே ஆபத்தாகி விடுகிறது ..!! ஆன்மீகத்தின் ... |
| கிருஷ் ணாம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய! Posted: 04 May 2015 09:54 AM PDT நம் தளத்தின் சமையல் அரசி கிருஷ்ணாம்மா, தனது ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் அடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார்கள். தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பயனடையுங்கள்! மறவாமல் தங்களின் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே! இங்குள்ள சுட்டிகளின் ஏதாவது ஒன்றை அழுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! http://goo.gl/RBNbnk http://eegarai.org/apps/Kitchen4All.apk http://eegarai.com/apps/Kitchen4All.apk http://goo.gl/mKFgVO |
| ஜெயலலிதா, என்ன தியாகம் செய்து சிறைக்குச் சென்றார்? – குஷ்பு Posted: 04 May 2015 09:48 AM PDT தமிழக காங்கிரஸ், சமீபத்தில் ஊழலுக்கு எதிராக நடத்திய பேரணியில், ஜெயலலிதா, தியாகம் செய்தா சிறைக்குச் சென்றார். அவர் ஊழல் செய்ததால் சிறை பிடிக்கப்பட்டார் என காங்கிரசின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பேசிய விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை ஆதாரங்களுடன் ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைமை, நேற்று முன்தினம் ஊழலுக்கு எதிராக பேரணியும் நடத்தியது. அந்த பேரணியில் பேசிய குஷ்பு, ஜெயலலிதா பற்றியும், தமிழக முதல்வர் பன்னீர் ... |
| ஆ...இது யாரு - என திகைப்பதன் சுருக்கமே ஆதார்...! Posted: 04 May 2015 09:25 AM PDT - காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்! - ---ஜி.கே.வாசன் ஓடிப்போன டீச்சர் இடத்தைச் சொல்றாரா..? - boopathymurugash - -------------------------------- - போற போக்க பார்த்தா எர்வாமேட்டின கொண்டாந்து ரேஷன் கடைலயும் விற்க ஆரம்பிச்சுவாங்க போல! - Totadaing - ---------------------------------------- - எது ஒன்று உங்களைத் தேடி வருகிறதோ அது உங்களை விட்டு சென்றதை விடவும் சிறந்ததாக இருக்கலாம்! - Writer Azar - ---------------------------------------- - நம் புகைப்படத்தைப் ... |
| Posted: 04 May 2015 09:21 AM PDT இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை… நல்ல கடுங்கோடைக் காலம் ஆரம்பிச்சாச்சு. எல்லாருமே வெயிலில் வெந்து கொண்டிருக்கோம். இன்னும் வெயில் அதிகமாய்த் தெரியும் அக்னி நக்ஷத்திரம் என்னும் நாட்கள் வேறே வரப் போகின்றது. சூரியன் பூமிக்கு மிக அருகே வரும் நாட்கள் தான் அவை என அறிவியல் கூறுகின்றது. ஆனால் நம் முன்னோர்கள் எதையும் மெய்ஞானத்தோடு சேர்த்தே பார்க்கிறவர்கள் ஆகையால் அவங்க சொல்லும் காரணத்தை இங்கே பார்ப்போமா? சுவேதகி என்ற மன்னன் ஒருவன் தொடர்ந்து பனிரண்டு வருஷங்கள் யாகம் செய்தான். யாகத் ... |
| இன்னும் அறிவை அளப்பதற்கு கருவி கண்டு பிடிக்கப்படவில்லை! Posted: 04 May 2015 09:20 AM PDT - நண்பர் வரும்போது கணவன், மனைவியை நிமிர்ந்து பார்த்தால் காபி கொண்டு வா என்று பொருள். அதற்கு மனைவி முறைத்தால், அவனுடன் வெளியே போய் குடி என்று பொருள் - -iam variable - ---------------------------------- - டேய் மச்சி ...நீ வாட்ச்ப்ல இருக்கியா,ஃபேஸ்புக்ல இருக்கியா? - மூடிட்டு போடா...நானே கஷ்டத்தல் இருக்கேன், வந்துட்டான்..! - sentghil win - ---------------------------------- - நாம நடப்பது நம்பிக்கையினால்தான், பார்வையால் அல்ல..! - paasakkari - ------------------------------------- - சில ... |
| Posted: 04 May 2015 09:19 AM PDT ![]() |
| செல்போன் பேட்டரியின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஐந்து எளிய வழிகள் Posted: 04 May 2015 08:12 AM PDT தற்போதய நவீன உலகில் செல்போன்கள் இல்லாத நபரை காண்பதே அரிதாக உள்ளது. சமூகத்தில் அனைத்து தரப்பினருக்கும் செல்போன்கள் இன்று இன்றியமையாததாகிவிட்டது. வெறுமனே தொலைத்தொடர்பு வசதிகளுக்காக மட்டும் பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் இன்று ஸ்மார்ட் போன்கள் என்ற நவீன போன்களில் வருகைக்கு பிறகு, இணையதளம், பொழுதுபோக்கு உள்ளிட்ட அம்சங்களுக்காக பயன்படுத்துவது பெருகிவிட்டது. சொல்லப்போனால், இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும் தங்களின் ஆறாம் விரலை போன்று செல்போன்களுடனே வலம் வருகின்றனர். பேருந்து, ரயில் போன்ற பயணங்களின் ... |
| ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! Posted: 04 May 2015 08:06 AM PDT "ஓட்ஸ்" சமீபகாலமாக நிறைய பேரின் காலை உணவாக மாறிவருகிறது. சக்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள், எடை குறைப்பவர்கள் , கர்பிணிகள் என அனைத்து தரப்பினரும் உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிடித்தோ பிடிக்காமலோ டாக்டரின் அறிவுரை இன் பேரில் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். நாம் அதையே ஏன் சுவையான உணவாக சாப்பிடக்கூடாது, என யோசித்தத்தான் விளைவு தான் இந்த திரி ஓட்ஸ் ஊத்தப்பம் : இது ஊத்தப்பம் வார்த்ததும் இது வார்த்ததுக்கு அப்புறம் இன்று ( 7-06-2013 எங்களின் காலை உணவு இது தான் ) |
| சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பிறந்த தினம்: மே 4- 1767 Posted: 04 May 2015 08:05 AM PDT தியாகராஜ சுவாமிகள் (1767 -1847) தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர் ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர். கி.பி. 18ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் திருவாரூரில் ராம பக்தரான ராமபிரம்மம் என்பவருக்கும் சீதாம்மாவுக்கும் மூன்றாவது புதல்வராக இவர் பிறந்தார். இவர் பிறந்த பின் இவரின் குடும்பத்தினர் தஞ்சாவூருக்கு அண்மையில் உள்ள திருவையாறில் குடியேறினர். திருவையாறில் இவர் சமஸ்கிருத மொழியில் பயிற்சி பெற்றார். இவருக்கு 8 வது ... |
| Posted: 04 May 2015 07:56 AM PDT 1. புதிதாக கல்யாணம் ஆன கணவன் ஒரு புத்தக கடைக்கு வருகிறான். அங்கே வேலைசெய்யும் பெண்ணிடம் : "கணவனே இல்லத்தின் தலைவன்" அப்பிடிங்கற புத்தகம் இருக்க? அந்த பெண்: Fiction மற்றும் காமிக்ஸ் புக்ஸ் எல்லாம் முதல் மடியில் இருக்கு சார், என்றாள். ------------------------------------------------------------------------- 2. ஒருவர்: சார் உங்களுக்கு கிட்ட தட்ட எழுவது வயசு இருக்கும் இல்ல? மற்றவர்: ஆமாம் எனக்கு வயசு எழுவத்தி ஒண்ணு. ஒருவர்: உங்க மனைவிய இன்னும் நீங்க எவ்ளோ அன்போட "டார்லிங், கண்ணே, ஸ்வீட்டி, ... |
| வார்த்தை வித்தகர் ஐயாவை வாழ்த்தலாம் வாங்க...! Posted: 04 May 2015 07:54 AM PDT 9௦௦௦ பதிவுகளை தாண்டி விட்ட நம் ஈகரையின் வார்த்தைகளின் வித்தகரான திரு. ரமணியன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் ஐயா....! |
| இந்தோனேசியா - பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்! Posted: 04 May 2015 07:21 AM PDT டோனி அபாட்டின் தொடர் கோரிக்கைகள், மயூரன் சுகுமாரனின் உருக வைக்கும் ஓவியங்கள், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நடத்திய பிரார்தனைகள் என எதுவும் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மனதை அசைத்துப் பார்க்கவில்லை. இந்தோனேசிய நேரப்படி சரியாக நள்ளிரவு 12.25 மணிக்கு மயூரன் சுகுமாரன், அண்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு பாலி நைன் கைதிகளுக்கும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பெண் கைதியான மேரி ஜேன் வேலோசோவிற்கு மட்டும் கருணை காட்டப்பட்டதாக நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(369) Posted: 04 May 2015 07:20 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| திப்பு சுல்தான் இறந்த தினம்: மே 4 -1799 Posted: 04 May 2015 07:14 AM PDT திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகல்லி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டனம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782-ம் ஆண்டிலிருந்து 1799-ம் ஆண்டு வரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான வாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில- மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில- மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் ... |
| துவையல்கள் - பருப்பு துவையல் 2 Posted: 04 May 2015 04:27 AM PDT நம் தென் இந்திய சமையலில் முக்கியமானது துவையல். இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், கூட்டு, ரசம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு தொட்டுக்கொள்ளவும் பயன் படுத்தலாம். தண்ணீர் மாட்டாக விட்டு அரைப்பதால் நிறைய நாள் ( ஃபிரிஜ் இல் வைக்காமலே ) வைத்து உபயோகிக்கலாம். சிலவற்றை இங்கு பார்க்கலாம் |
| நிதர்சனம் -கவிஞர் முஹம்மத் ஸர்பான் Posted: 03 May 2015 10:20 PM PDT தேகம் மறந்ததோர் நல்லாடை அகம் அணிந்தது திரைச்சேலை. புகழை விரும்புபவன் கல்வியிருந்தும் மிருகம் இகழ் உரைப்பவன் மனிதனில் மிருகம் விதி எனும் ஏட்டின் தலைவன் சதி நிறைந்த மாபெரும் எழுத்தாளன் மதி பாரினிலில் ஒன்று தான் பேதத்தின் கதி மானுடனை பல துண்டாக்கியது. பெண்ணின் உயிர் மானம் கண்ணின் மணியை கொடுத்து காத்திடுவாள். தண்ணிரில் தெரியாது நிழல் கண்ணீரில் தெரியும் வறுமையின் உதிரம். அந்தி சாய்ந்தால் நிலா வரும் பந்தி களைந்தால் சேரிச்சிறுமி வருவாள். காந்தி பிறந்த மண்ணில் தந்திரமாய் ... |
| ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!! Posted: 03 May 2015 09:27 PM PDT தும்பிகளாய்…!! * உனக்குமொரு எல்லையிருக்கிறது எனக்குமொரு எல்லையிருக்கிறது நாம் எப்பொழுது எல்லைக் கடந்து அன்பில் இணைந்து காதல் தும்பிகளாய் வாழப் போகிறோம்…!! * |
| Posted: 03 May 2015 07:45 PM PDT தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் ரமணி இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம். 01. Pantoum: பாண்டி Pantoum - Wikipedia, the free encyclopedia இந்த வடிவத்தைத் தமிழில் 'பாண்டி' என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் தம் 'சந்தவசந்தம்' மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w இந்த pantoum--'பாண்டி' வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்: Stanza ... |
| Posted: 03 May 2015 07:21 PM PDT பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
