Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் ஜீப் கவிழ்ந்தது: திருவண்ணாமலையை சேர்ந்த 4 பேர் காயம்

Posted: 07 May 2015 11:15 PM PDT

திருவண்ணாமலையைச் சேர்ந்த பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலை வந்தனர். நேற்று தரிசனம் முடிந்து ஊர் திரும்ப முடிவு செய்தனர். அரசு பஸ்கள் ஓடாததால் இவர்கள் தனியார் ஜீப்பை வாடகைக்கு எடுத்து திரும்பிக் கொண்டு இருந்தனர். ஜீப்பில் 10 பேர் பயணம் செய்தனர். 32–வது வளைவில் ஜீப் வேகமாக வந்தபோது திடீர் என கவிழ்ந்தது. இதில் ஜீப்பில் இருந்த ராஜ்கமல், தினேஷ், ரஞ்சித்குமார், கோபாலன்

கார் விபத்து வழக்கில் 5 ஆண்டு ஜெயில்: சல்மான்கான் ஜாமீன் மனு விசாரணை தொடங்கியது

Posted: 07 May 2015 10:40 PM PDT

2002–ம் ஆண்டு நடந்த கார் விபத்து வழக்கில் கடந்த 6–ந்தேதி நடிகர் சல்மான்கானுக்கு மும்பை செசன்ஸ் கோர்ட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. அன்றைய தினம் அவருக்கு முழு தீர்ப்பு நகல் வழங்கப்படாததால் அதை காரணம் காட்டி மும்பை ஐகோர்ட்டு அவருக்கு 2 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனால் சல்மான்கான் கைது செய்யப்படவில்லை. வீட்டுக்கு

சத்யம் ராமலிங்கம் ராஜூவுக்கு சிறையில் நூலக பொறுப்பு

Posted: 07 May 2015 10:33 PM PDT

இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமாக விளங்கிய சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் மோசடியில் சிக்கி வீழ்ந்தது. நிறுவனத்தின் கணக்குகளை முறைகேடு செய்து நிறுவனத்தின் லாபத்தை உயர்த்தி காட்டி மோசடி செய்ததாக நிறுவன தலைவர் பி.ராமலிங்கராஜூ, அவரது தம்பியும் நிர்வாக இயக்குனருமான ராமராஜூ ஆகியோர் சி.பி.ஐ.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: இன்று மாலை தீர்ப்பு தேதி அறிவிப்பு

Posted: 07 May 2015 10:21 PM PDT

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக கூறப்பட்ட வழக்கில் அவருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணை

களியக்காவிளை அருகே 15 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது

Posted: 07 May 2015 09:58 PM PDT

களியக்காவிளையை அடுத்த பாறசாலை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஆலயத்திற்கு சென்றார். அப்போது உதியன்குளக்கரையை சேர்ந்த வாலிபர் ரமேஷ் (வயது 27) என்பவர் சிறுமியை சந்தித்து பேசினார். முதல் சந்திப்பிலேயே இருவரும் நெருக்கமாக

தாவூத் இப்ராகிம் எங்கள் நாட்டில் இல்லை: பாகிஸ்தான் மறுப்பு

Posted: 07 May 2015 09:54 PM PDT

1993–ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் இந்தியாவில் இருந்து தப்பி விட்டான். அவனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து இருப்பதாகவும் அந்நாட்டு உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. இதை பாகிஸ்தானும் மறுத்து வருகிறது.

பெயிலா? ஜெயிலா?: மும்பை ஐகோர்ட்டில் சல்மான்கான் வழக்கு இன்று விசாரணை

Posted: 07 May 2015 08:43 PM PDT

குடித்துவிட்டு கார் ஓட்டி ஒருவரை கொன்ற வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் நீதிபதி தேஷ்பாண்டே நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இது தவிர லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதற்காக 2 மாத சிறை தண்டனையும், 500 ரூபாய்

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்ற கூட்டத்தொடர் 3 நாட்கள் நீட்டிப்பு

Posted: 07 May 2015 08:20 PM PDT

நிலம் கையகப்படுத்தும் மசோதா உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 3 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி, கடந்த மாதம்

மகளிர் ஆணையத்தில் ஆஜராகாத குமார் விஸ்வாஸ் மீது உள்துறை அமைச்சகத்தில் புகார்

Posted: 07 May 2015 08:10 PM PDT

ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ், அக்கட்சியின் பெண் உறுப்பினருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக வதந்தி பரவியது. இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், குமார் விஸ்வாஸ் மீது டெல்லி மகளிர் ஆணையத்தில் அந்த பெண் உறுப்பினர் புகார் செய்தார்.

தடகள வீராங்கனைகள் தற்கொலை சம்பவம்: குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை- மத்திய மந்திரி

Posted: 07 May 2015 05:21 PM PDT

கேரள மாநிலம், ஆலப்புழையில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) நீர் விளையாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெற்று வந்த 4 இளம் தடகள வீராங்கனைகள், நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு தாங்கள் தங்கி இருந்த விடுதியில் விஷப்பழங்களை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்று மயங்கி சரிந்தனர். அவர்கள் 7 மணிக்கு உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு

Posted: 07 May 2015 04:38 PM PDT

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டப் போவதாக கேரளா அரசு அறிவித்தது. இதற்காக 2007-ம் ஆண்டில் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டு, சர்வே பணி நடந்தது. அப்போது இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த பணி நிறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படும் அரிசியின் அளவு குறையாது: மத்திய மந்திரி

Posted: 07 May 2015 02:32 PM PDT

மாநிலங்களவையில் தி.மு.க. குழு தலைவர் கனிமொழி எம்.பி. எழுத்து பூர்வமாக கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதாவது, இந்திய உணவு கழகத்தை மறு சீரமைப்பதற்காக மத்திய அரசு அமைத்த சாந்தகுமார் கமிட்டியின் பரிந்துரைகளை அரசு

சிறார்கள் வயது வரம்பை 16 ஆக குறைக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது

Posted: 07 May 2015 12:01 PM PDT

சிறார்களின் வயது வரம்பு 18 ஆக உள்ளது. இந்நிலையில், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடிய குற்றங்களில் சிறார்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டும் கவலை தெரிவித்தது. இதையடுத்து, சிறார்கள் வயது வரம்பை 16 ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

திரிணாமுல் காங். எம்.பி.யின் டெல்லி வீட்டில் மூன்று முறை திருட்டு: நடவடிக்கை எடுப்பதாக அரசு உறுதி

Posted: 07 May 2015 11:08 AM PDT

பாராளுமன்ற எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு டெல்லியில் தங்குவதற்கு மத்திய அரசு சார்பில் டெல்லியில் வீடுகள் ஒதுக்கப்படும். இந்த வகையில் திரிணாமுல் காங்கிஸ் எம்.பி.யான சுதிப் பந்தோபாத்யாய் என்ற எம்.பி.க்கு மொளலானா ஆசாத் சாலையில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இவரது வீடு அருகேதான் சோனியா காந்தியின் வீடும் அமைந்துள்ளது.

இந்தியா- வங்காளதேச எல்லை வரையறை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: சோனியாவுக்கு மோடி நன்றி

Posted: 07 May 2015 09:15 AM PDT

இந்தியா - வங்காளதேச எல்லை வரையறை மசோதா மக்களவையில் இன்று ஒருமனதாக நிறைவேறியது. மசோதா நிறைவேறியதும் மோடி தனது இருக்கையில் இருந்து எழுந்து காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். கடந்த 1974-ல் ஏற்படுத்தப்பட்ட இந்தியா- வங்கதேச எல்லை வரையறையின்படி, இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பல பகுதிகள்,

பைலட்டுக்கு உடல் நலக்குறைவு: டெல்லியில் ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

Posted: 07 May 2015 09:09 AM PDT

பாங்காக்கில் இருந்து 121 பயணிகளுடன் வந்த ஜெட்ஏர்வேஸ் விமானத்தின் தலைமை விமானிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் துணை விமானி, டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை அவரசமாக தரையிறக்கினார். பாங்காக்கில் இருந்து டெல்லிக்கு 121 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. விமானம் லக்னோ வான்பகுதியில் நேற்று நள்ளிரவில் பறந்து கொண்டிருக்கும்போது தலைமை விமானிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே துணை விமானி விமானத்தை ஓட்டும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு விமானம் தரையிறங்குவதற்கு 40 நிமிடங்களுக்கு முன் தரையிறங்க அனுமதி கேட்டார்.

12 பேரை பலிகொண்ட பட்டாசு ஆலை விபத்து: சி.ஐ.டி. விசாரணை நடத்த மம்தா பானர்ஜி உத்தரவு

Posted: 07 May 2015 06:29 AM PDT

மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் பலியானது தொடர்பாக சிஐடி விசாரணைக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேற்கு மிட்னாபூர் மாவட்டம் பிங்லா என்ற இடத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேற்று இரவு திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. பெரும்பாலான பணியாளர்கள் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில், அங்கிருந்த சிலர் தீயில் சிக்கிக்கொண்டனர். இவர்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உ.பி. முன்னேற்றத்திற்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

Posted: 07 May 2015 05:50 AM PDT

மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியின் பெரும்பாலான எம்.பி.க்கள் உத்தர பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் உ.பி.யின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார்கள் என்று முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். உ.பி.யில் உள்ள அம்ராபூர் பகுதியில் 80 கோடி ரூபாயில் 10 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் மூன்று சோலார் பவர் திட்டத்தை அந்த மாநிலத்தின்

ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை

Posted: 07 May 2015 05:00 AM PDT

நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியரும், தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவருமான ரவீந்தரநாத் தாகூரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு இன்று மரியாதை செலுத்தினார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், "தாகூரின் உரைநடை மற்றும் கவிதை தலைமுறைகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் நவீன உரைநடை பண்டைய இந்தியாவின் சிறந்த அறிவுசார் சிந்தனையை குறிக்கிறது. அவரின் எழுச்சியூட்டும்

திருமண விழாவில் உற்சாக துப்பாக்கி சூட்டுக்கு சிறுவன் பலி

Posted: 07 May 2015 04:45 AM PDT

உத்தர பிரதேசத்தில் திருமண விழா கொண்டாட்டத்தின்போது மகிழ்ச்சி மிகுதியில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிறுவன் ஒருவன் பலியானான். உத்தர பிரதேச மாநிலத்தில் செல்வந்தர்களின் திருமண விழாவில் சிலர் உற்சாக மிகுதியில் தங்களுடைய துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அப்படி ஷரன்பூரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில் ஒரு சிறுவன் பலியாகி உள்ளான்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™