Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆந்திராவில் உருவாகும் புதிய தலைநகர் அமராவதி: வரைபடத்தை சந்திரபாபுவிடம் வழங்கினார் சிங்கப்பூர் மந்திரி

Posted: 25 May 2015 11:02 PM PDT

தெலுங்கானா பிரிவினையைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகர் உருவாக்கப்படுகிறது. இதற்கு அமராவதி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நகரை உலக அளவில் மிக உயர்ந்த நிலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய நகரமாக உருவாக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.

பீகாரில் பார்சலில் அனுப்பிய குண்டு வெடித்து ஒருவர் பலி

Posted: 25 May 2015 10:38 PM PDT

பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் அரசுக்கு எதிராக 2 நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதை மீறி அங்கு ஓடிய வாகனங்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். கயா மாவட்டத்தில் நடந்த வன்முறையில் 32 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த நிலையில் கயாவில் உள்ளுர் ஐக்கிய ஜனதா தளம்

திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் செம்மரம் பதுக்கலா?: வனத்துறை தீவிர வேட்டை

Posted: 25 May 2015 10:35 PM PDT

ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாச்சல வனப்பகுதியில் கடந்த மாதம் சில நாட்களுக்கு முன்பு 20 தமிழக கூலித் தொழிலாளர்கள் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக அம்மாநில போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து

ஐதராபாத் விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்

Posted: 25 May 2015 09:56 PM PDT

ஐதராபாத் விமான நிலையத்தில் துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் வந்து இறங்கியது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது, ஒரு பயணி சூட்கேசில் 8 கிலோ தங்க பிஸ்கட்டுகள் சிக்கியது. உரிய தஸ்தாவேஜூகள் இல்லாமல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு: நாட்டு மக்களுக்கு மோடி கடிதம்

Posted: 25 May 2015 09:53 PM PDT

பா.ஜ.க. ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில் அனைவரும் கூட்டாக இணைந்து உங்கள் கனவு இந்தியாவை கட்டமைப்போம் என கூறியுள்ளார்.

கேரளாவுக்கு இன்று ராகுல்காந்தி வருகை: இளைஞர் காங்கிரஸ் பேரணியை தொடங்கி வைக்கிறார்

Posted: 25 May 2015 09:45 PM PDT

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல்காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரளா வருகிறார். டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் விமானம் மூலம் கேரளா வரும் அவர், கோழிக்கோட்டில் இன்று மாலை நடைபெறும் இளைஞர் காங்கிரஸ்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்: காங்கிரஸ் தலைவர்கள் 2 பேர் கொலை

Posted: 25 May 2015 09:17 PM PDT

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள கேசப்பூர் கிராமத்தில் உள்ளூர் காங்கிரஸ் தலைவரான சுகு ஓயாமி என்பவரின் வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த மாவோயிஸ்டுகள் சிலர், வீட்டுக்குள் இருந்த சுகு ஓயாமியை வெளியே அழைத்தனர். பின்னர் அவரை அவரது குடும்பத்தினர் முன்னிலையிலேயே கழுத்தை அறுத்து கொன்று விட்டு தப்பி ஓடினர்.

கருப்பு பணத்தை ஒழிக்க மேலும் பல நடவடிக்கைகள் வரும்: அருண் ஜெட்லி தகவல்

Posted: 25 May 2015 09:11 PM PDT

கருப்பு பணத்தை ஒழிக்க மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். இருப்பினும், நேர்மையாக வரி செலுத்துபவர்கள் பயப்பட தேவை இல்லை என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார். டெல்லியில், மத்திய நேரடி வரிகள் வாரிய உயர் அதிகாரிகளின் கூட்டம்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: சுப்பிரமணியசாமி அறிவிப்பு

Posted: 25 May 2015 09:09 PM PDT

சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி அறிவித்து உள்ளார்.

பெண்களின் பாதுகாப்புக்காக டெல்லி பஸ்களில் பெண் பாதுகாவலர்கள்: முதல் கட்டமாக 2500 பேருக்கு பயிற்சி

Posted: 25 May 2015 08:17 PM PDT

டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க பஸ்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பெண் பாதுகாவலர்கள் (மார்ஷல்ஸ்) நியமிக்கப்பட உள்ளனர். இந்த தகவலை டெல்லி மாநில போக்குவரத்துறை மந்திரி

வேலை வாய்ப்பை உருவாக்குவதில் மோடி அரசுக்கு பூஜ்யம் மதிப்பெண்: ப.சிதம்பரம்

Posted: 25 May 2015 08:15 PM PDT

மோடி தலைமையிலான அரசு ஓராண்டை நிறைவு செய்திருப்பது குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி பா.சிதம்பரம் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த ஓராண்டில் மோடி அரசு சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் வாய்ப்பை நழுவ விட்டுள்ளது என்றே கூறவேண்டும். இத்தனைக்கும் பா.ஜனதாவுக்கு

வாக்காளர் பட்டியலில் குறைகளை போக்க நடவடிக்கை: தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தகவல்

Posted: 25 May 2015 08:09 PM PDT

வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி கூறினார். தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லி விவகாரம்: கெஜ்ரிவாலுக்கு, மம்தா பானர்ஜி ஆதரவு

Posted: 25 May 2015 07:19 PM PDT

டெல்லியில் உயர் அதிகாரிகள் பணி நியமனம் தொடர்பாக முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கும், துணைநிலை கவர்னர் நஜீப் ஜங்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதிகாரம் தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதல் உச்சகட்டத்தை அடைந்ததை தொடர்ந்து, டெல்லியில் அதிகாரிகளின் நியமனம், பணியிட மாற்றம் போன்றவற்றில் துணைநிலை கவர்னருக்கே அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு கூறியது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 700-ஐ தாண்டியது

Posted: 25 May 2015 04:32 PM PDT

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 700-க்கு மேல் உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு வெயிலின் உக்கிரம் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் 115.5 டிகிரி வெயில்

Posted: 25 May 2015 03:11 PM PDT

நாடு முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. தாங்க முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. டெல்லியில் அதிக அளவாக 115.5 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. டெல்லியைச் சுற்றியுள்ள இடங்களில் ஏறக்குறைய இதே அளவு

தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் ஒடுக்க வேண்டும் என்ற கருத்தை மனோகர் பாரிக்கர் திரும்ப பெற வேண்டும்: ப.சிதம்பரம்

Posted: 25 May 2015 01:23 PM PDT

தீவிரவாதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அண்மையில் சென்ற மனோகர் பாரிக்கர்,

கருப்பு பணம்: இரு இந்திய பெண்களின் பெயர்களை வெளியிட்டது சுவிஸ் வங்கி

Posted: 25 May 2015 11:07 AM PDT

சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிவைத்திருக்கும் இரு இந்திய பெண்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது அந்நாட்டின் மத்திய வரி நிர்வாக அமைப்பு. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் சாம்பாதித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு

கிராமப்புற அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை கட்டாயம்: சத்தீஸ்கர் அரசு அதிரடி உத்தரவு

Posted: 25 May 2015 09:30 AM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் சுத்தமான இந்தியா திட்டத்தை விரைவுபடுத்தும் விதமாகவும், கிராமப் பகுதிகளில் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை பரப்பும் வகையிலும் அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் கட்டாயம் கழிப்பறை அமைக்க வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில தலைமை செயலாளர் விவேக் தாண்ட் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மத்திய அரசுடன் இணைந்து செயல்படவே விரும்புகிறேன்; சண்டையிட அல்ல: கெஜ்ரிவால் பேச்சு

Posted: 25 May 2015 09:29 AM PDT

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்து 100 நாட்கள் ஆனதையொட்டி, நகரின் மத்திய பகுதியில் உள்ள கன்னாட் பிளேஸ் பூங்காவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். அரசின் 100 நாள் சாதனைகள் குறித்து இந்த கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:- டெல்லியில் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆன நிலையில் இதுவரை 80 சதவீதம் அளவில் ஊழல் குறைந்து உள்ளது. அதிகாரிகளின் உழைப்பால் தான் ஊழல் குறைந்துள்ளது. மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் வகுப்பில் முதலிடம் பிடித்த பார்வையற்ற மாணவர்

Posted: 25 May 2015 09:24 AM PDT

பார்வையின்மை என்ற மிகப்பெரிய குறைபாட்டை பின்னுக்குத்தள்ளியதன் மூலம் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் பார்வையிழந்த மாணவரான டபஸ் பரத்வாஜ்(18) தனது வகுப்புத் தோழர்கள் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி 91.6 சதவீதம் மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். டெல்லியில் உள்ள ஆர்.கே.புரம் பகுதியை சேர்ந்த டபஸ், உதவியாளர் ஒருவரின் ஒத்துழைப்புடன் இந்த தேர்வை எழுதி 500-க்கு 457 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™