Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சத்தீஸ்கரில் 500 பேரை மாவோயிஸ்டுகள் சிறைபிடித்தனர்

Posted: 08 May 2015 11:26 PM PDT

மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் சமூக-பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கு மாவோயிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மோடி பங்கேற்கும்

கேரள காங்கிரஸ் கூட்டணி அரசின் ஒரே பெண் மந்திரி ஜெயலட்சுமிக்கு விவசாயியுடன் நாளை திருமணம்

Posted: 08 May 2015 10:57 PM PDT

கேரள மாநில காங்கிரஸ் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் மந்திரி ஜெயலட்சுமி. மானந்தவாடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ஆதிவாசி நலத்துறை மந்திரியாக உள்ளார். மேலும் இவர் ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர் என்பதால் இவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் ஆதரவாக

திருப்பதி கோவில் அருகே 12அடி நீள விஷபாம்பு: பக்தர்கள் பீதியில் ஓட்டம்

Posted: 08 May 2015 10:50 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் வழக்கம் போல் இருந்தது. ஏராளமான பக்தர்கள் மலைபாதையில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். பக்தர்கள் செல்லும் பாதையில் 12 அடி நீள விஷபாம்பு சுற்றித்திரிந்தது. இதை பார்த்த பக்தர்கள் பீதியில் அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர்.

தெலுங்கானாவில் ராகுல் காந்தி யாத்திரை 15–ந்தேதிக்கு தள்ளி வைப்பு

Posted: 08 May 2015 10:24 PM PDT

அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக மாநிலம் வாரியாக பாதயாத்திரை செய்து வருகிறார். ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் யாத்திரை சென்ற அவர் வருகிற 11–ந்தேதி தெலுங்கானாவில் விவசாயிகளுடன் யாத்திரை செல்ல திட்டமிட்டு இருந்தார். இப்போது அவரது யாத்திரை 15–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

கையை வெட்டியவர்களுக்கு 8 ஆண்டு ஜெயில்: தண்டனை அறிவிப்பால் மீண்டும் தாக்கப்படலாம் - பேராசிரியர் அச்சம்

Posted: 08 May 2015 10:00 PM PDT

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டி.ஜே. ஜோசப். கடந்த 2010–ம் ஆண்டு இவர் தேர்வுக்கு வினாத்தாள் தயாரித்தபோது முஸ்லீம் மதத்தினரை புண்படுத்தும் வகையில் கேள்வி தயாரித்ததாக புகார் எழுந்தது.

கேரளாவில் வீராங்கனை தற்கொலை: 8 சீனியர் வீராங்கனைகளிடம் போலீசார் விசாரணை

Posted: 08 May 2015 09:55 PM PDT

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் (சாய்) பயிற்சி பெற்ற அபர்ணா உள்பட 4 வீராங்கனைகள் விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றனர். இதில் அபர்ணா உயிரிழந்தார். மேலும் 3 வீராங்கனைகள் ஆலப்புழா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த

சல்மான்கான் வக்கீலுக்கு ரூ.25 லட்சம் சம்பளம்

Posted: 08 May 2015 09:53 PM PDT

நடிகர் சல்மான்கான் கார் விபத்து வழக்கில் 5 ஆண்டு தண்டனை பெற்றதும் அவருக்கு இடைக்கால ஜாமீன் பெறவும், பின்னர் நிரந்தர ஜாமீனும், தண்டனை நிறுத்தி வைக்கவும், சக்தி வாய்ந்த வக்கீல்கள் குழு செயல்பட்டது. மும்பையை சேர்ந்த பிரபல வக்கீல்கள் குழுவான ஆனந்த் தேசாய், நிரவ் ஷா

குஜராத் மாநிலத்தில் லேசான நில அதிர்வு

Posted: 08 May 2015 09:35 PM PDT

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த லேசான நில

சத்தீஸ்கரில் மேடை சரிந்து 50 பேர் காயம்: மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி ரத்து

Posted: 08 May 2015 09:20 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை சரிந்ததில், 50 பேர் காயமடைந்தனர். இதையடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதியான தன்டேவாடா பகுதியில், பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது

பெங்களூருவில் நாயை கொன்று சமைத்து சாப்பிட முயற்சி: மணிப்பூரை சேர்ந்த 3 பேர் கைது

Posted: 08 May 2015 07:25 PM PDT

பெங்களூரு கே.ஆர்.புரம் சுபாஷ்நகர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ரோவின், டோல்கித், மைக்கெல் ஆகிய 3 பேரும் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது.

தாவூத் இப்ராகிம் இருப்பிடம் பற்றி 11-ந் தேதி அறிக்கை தாக்கல்: பாராளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் பதில்

Posted: 08 May 2015 07:16 PM PDT

மும்பை வெடிகுண்டு வழக்கில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி தாவூத் இப்ராகிம் எங்கே இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிரதித்யா சிந்தியா பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். மேலும் இது குறித்து அவர் பேசுகையில், நிழல் உலக தாதாவான தாவூத் எங்கே

நிதின் கட்கரி பதவி விலகக்கோரி டெல்லி மேல்-சபையில் அமளி: தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டதாக தகவல்

Posted: 08 May 2015 05:22 PM PDT

தணிக்கை அறிக்கையில் நிதின் கட்கரி மீது குற்றம் சாட்டப்பட்டு இருப்பதாக கூறி, அவர் பதவி விலகக்கோரி டெல்லி மேல்-சபையில் அமளி ஏற்பட்டது. இதனால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி மேல்-சபை நேற்று கூடியவுடன், காங்கிரஸ் உறுப்பினர் சாந்தாராம் நாயக் ஒரு பிரச்சினையை எழுப்பினார். மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரியின் பெயரை குறிப்பிடாமல் அவர் குற்றம் சாட்டினார்.

சத்தீஸ்காருக்கு இன்று பயணம்: பிரதமர் மோடி வருகைக்கு மாவோயிஸ்டுகள் எதிர்ப்பு

Posted: 08 May 2015 04:39 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சத்தீஸ்காரில் மாவோயிஸ்டுகள் சாலையில் மரங்களை வெட்டிப் போட்டு தடைகளை ஏற்படுத்தினார்கள். மேலும் முழுஅடைப்புக்கும் அழைப்பு விடுத்து உள்ளனர். சத்தீஸ்கார் மாநிலத்தில் பஸ்தார் பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளது. அங்கு பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொலை: 2 புதிய குழுக்கள் மீண்டும் விசாரணை

Posted: 08 May 2015 03:55 PM PDT

தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மீண்டும் விசாரணை நடத்துவதற்காக ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் 2 குழுக்களை அமைத்து தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 7-4-2015 அன்று ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக மேலும் விரிவான விசாரணை நடத்துவதற்காக 2 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் வெற்றி: டேவிட் கேமரூனுக்கு மோடி வாழ்த்து

Posted: 08 May 2015 02:19 PM PDT

இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான பழமைவாத கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. தேர்தலில் வெற்றி பெற்ற கேமரூனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் டுவிட்டர் வலைத்தளத்தில், 'மறுபடியும் நீங்கள்

சென்னை ஐகோர்ட்டில், வழக்காடு மொழியாக தமிழை பயன்படுத்தாதது ஏன்?: சட்ட மந்திரி பதில்

Posted: 08 May 2015 01:40 PM PDT

ஐகோர்ட்டுகளில் இந்தி, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை வழக்காடு மொழியாக பயன்படுத்துவது குறித்த மத்திய அரசின் கோரிக்கை சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில் இருப்பதாக சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி சதானந்த கவுடா நேற்று டெல்லி மேல்-சபையில் தெரிவித்தார். சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்புகளை எழுதவும், வழக்காடு மொழியாகவும் தமிழை ஏன் பயன்படுத்துவதில்லை? என்றும், ஐகோர்ட்டின்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல் முறையீடு மனு மீது 11-ந் தேதி தீர்ப்பு

Posted: 08 May 2015 12:33 PM PDT

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தனிக்கோர்ட்டு நீதிபதி டி.குன்கா தீர்ப்பு வழங்கினார். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது

அசாமில் 17 ஆண்டுகளாக நடந்த கொலை வழக்கில் 32 பேருக்கு ஆயுள் தண்டனை

Posted: 08 May 2015 08:34 AM PDT

அசாம் மாநிலத்தில் 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கொலை வழக்கில் 32 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பார்பேடா மாவட்டம், பாக்பர் காவல் சரகத்திற்குட்பட்ட தர்மாபூர் சார் என்ற ஊரைச் சேர்ந்த ஒகாப் அலிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இந்த தகராறு

சத்யம் ஊழல்: தண்டனைக்கு தடை கோரிய வழக்கில் 11ம் தேதி தீர்ப்பு

Posted: 08 May 2015 08:02 AM PDT

சத்யம் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் சார்பில் இடைக்கால தடை கோரிய வழக்கில் தீர்ப்பு 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் நிதி மோசடி வழக்கில் நிறுவனர் ராமலிங்க ராஜூ உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு

சுப்ரதா ராய் ஜாமினுக்காக சஹாரா நிறுவனம் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த சம்மதம்

Posted: 08 May 2015 06:39 AM PDT

சகாரா நிறுவனத் தலைவர் சுப்ரதா ராய் ஜாமின் பெறுவதற்காக அந்த நிறுவனம் 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்த முன்வந்துள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வந்த சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய், அவரது நிறுவனங்களில் முதலீடு செய்த சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பி கொடுக்க மறுத்ததால் அவர் மீது வழக்கு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™