மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நேபாளத்தில் அமெரிக்க கடற்படை இன்று மீட்பு பணியை தொடங்கியது
- தாலிகட்டும் நேரத்தில் கணவரின் 2–வது திருமணத்தை தடுத்து நிறுத்திய பெண்
- திருப்பதியில் வருண யாகம் நடத்த சாரதா பீடாதிபதி எதிர்ப்பு
- காளஹஸ்தி அருகே பெற்ற மகனை நண்பர்கள் மூலம் கொன்ற பெற்றோர்
- வெளிமாநிலங்களுக்கு செல்லும் மலையாளிகளின் பயண திட்டத்தை பதிவு செய்ய புதிய வெப்சைட்: கேரள மந்திரி தகவல்
- பிணைத் தொகையில் கோவில்களுக்கு நன்கொடை கொடுத்த கடத்தல்காரர்கள்
- ராகுல்காந்தி இன்று பீகார் பயணம்: பூகம்பம் பாதித்த மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல்
- கேரள மந்திரிகள் மாணி, பாபுவை கவர்னர் பதவி நீக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பேச்சு
- கர்நாடகா தபசி கிராமத்தில் 7-ம் வகுப்புடன் குழந்தைகளின் படிப்பை நிறுத்தும் கிராம மக்கள்
- நண்பரை சுட்டுக்கொன்ற வழக்கில் டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது
- உள்ளாட்சி தேர்தலில் வெற்றி: மம்தா பானர்ஜிக்கு மத்திய மந்திரி பாராட்டு
- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- கார்வார் கடற்கரையில் காணாமல் போன டால்பின்கள்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
- செல்போன் ரோமிங் கட்டணம் குறைப்பு அமலுக்கு வந்தது
- டாக்டர் அம்பேத்கர் பிறந்த இடத்துக்கு ராகுல்காந்தி 29-ந்தேதி செல்கிறார்
- என்ன விலை கொடுத்தாவது மேகதாது அணையை கட்டியே தீருவோம்: முதல்-மந்திரி சித்தராமையா உறுதி
- நிதின்கட்காரி ராஜினாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை
- பாராளுமன்றத்தில் கருப்பு பண மசோதா மீது அடுத்த வாரம் விவாதம்: நிதி மந்திரி அருண் ஜெட்லி தகவல்
- ஆண் குழந்தை பெற உதவும் மருந்து தயாரித்து விற்பனையா?: யோகா குரு பாபா ராம்தேவ் மறுப்பு
- ஸ்னாப்டீல் தலைமை செயல் அதிகாரி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது
| நேபாளத்தில் அமெரிக்க கடற்படை இன்று மீட்பு பணியை தொடங்கியது Posted: 01 May 2015 10:36 PM PDT சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பம் நேபாளத்தை புரட்டிப் போட்டு விட்டது. தலைநகர் காத்மாண்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் அழிந்தன. அங்கு முழுவதும் இடிந்தும், பாதி இடிந்த நிலையிலும் 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் 10 ஆயிரத்து 400 அரசு கட்டிடங்கள் முழுவதுமாகவும், 13 |
| தாலிகட்டும் நேரத்தில் கணவரின் 2–வது திருமணத்தை தடுத்து நிறுத்திய பெண் Posted: 01 May 2015 10:30 PM PDT ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர மோகன். இவரது மனைவி மேகலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு குழந்தையும் உள்ளது. சுரேந்திர மோகன் ஆசிரியராக வேலை பார்த்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். |
| திருப்பதியில் வருண யாகம் நடத்த சாரதா பீடாதிபதி எதிர்ப்பு Posted: 01 May 2015 10:28 PM PDT மழை வேண்டி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 6 நாள் வருண யாகம் திருமலையில் நேற்று தொடங்கியது. திருமலை வேத பாட பள்ளியில் தொடங்கிய இந்த யாகத்தில் 32 பேர் பங்கேற்றனர். |
| காளஹஸ்தி அருகே பெற்ற மகனை நண்பர்கள் மூலம் கொன்ற பெற்றோர் Posted: 01 May 2015 10:13 PM PDT ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த சாம்பய்ய பாளையம் பகுதியில் உள்ள கல்குவாரி அருகே ஆட்டோ டிரைவர் ராம்பாபு (வயது 23) என்பவர் கடந்த 27–ந் தேதி இரவு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தொத்தம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். |
| Posted: 01 May 2015 10:11 PM PDT நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அங்கு சுற்றுலா சென்ற ஏராளமான பயணிகள் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் கேரள மாநிலத்தவர் இருந்தால் அவர்களை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர கேரள மந்திரி கே.சி. ஜோசப் தலைமையில் ஒரு குழு டெல்லி சென்றது. அங்கிருந்து நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய மலையாளிகளை மீட்க இக்குழுவினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். |
| பிணைத் தொகையில் கோவில்களுக்கு நன்கொடை கொடுத்த கடத்தல்காரர்கள் Posted: 01 May 2015 10:09 PM PDT மும்பையில் தொழிலதிபர் ஒருவரின் 21 வயது மகனை கடத்திய கும்பல், 2 கோடி ரூபாய் பிணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு ஒரு மாதத்திற்குப் பின்னர் விடுவித்தது. இது குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சமீபத்தில் முக்கிய குற்றவாளியான அஜித் அப்ராஜ், அவரது மனைவி உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்தனர். |
| ராகுல்காந்தி இன்று பீகார் பயணம்: பூகம்பம் பாதித்த மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் Posted: 01 May 2015 10:02 PM PDT ராகுல்காந்தி இன்று பீகார் மாநிலம் சென்று பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25–ந் தேதி 7.9 ரிக்டர் அளவு பூகம்பம் உருவாகி பேரழிவு ஏற்பட்டது. அப்போது இந்தியாவிலும் பீகார், உ.பி., மேற்கு வங்காள மாநிலங்களில் பூகம்பம் ஏற்பட்டு 85 பேர் பலியானார்கள். |
| கேரள மந்திரிகள் மாணி, பாபுவை கவர்னர் பதவி நீக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பேச்சு Posted: 01 May 2015 10:01 PM PDT கேரள மாநிலம் வடகரையில் மே தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரத்த சாட்சி தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நினைவு கூட்டத்தில் கட்சியின் கேரள மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் |
| கர்நாடகா தபசி கிராமத்தில் 7-ம் வகுப்புடன் குழந்தைகளின் படிப்பை நிறுத்தும் கிராம மக்கள் Posted: 01 May 2015 09:04 PM PDT பெலகாவி மாவட்டம் கோக்காக் தாலுகாவிற்கு உட்பட்டது தபசி கிராமம். இக்கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இதில் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் ஏராளமாக உள்ளனர். இக்கிராமத்திற்கு அருகே உள்ள பெரிய நகரங்கள் என்றால் அது உதாகட்டி, |
| நண்பரை சுட்டுக்கொன்ற வழக்கில் டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது Posted: 01 May 2015 09:00 PM PDT அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சீவ் குமார். இவர் தொடக்க கல்வி இயக்குனராக பணியாற்றியபோது, அங்கு ஆசிரியர்கள் பணி நியமன ஊழலில் சிக்கினார். இதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அந்த ஊழல் வழக்கில் அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதே வழக்கில்தான் அந்த மாநில முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலா உள்ளிட்டவர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. |
| உள்ளாட்சி தேர்தலில் வெற்றி: மம்தா பானர்ஜிக்கு மத்திய மந்திரி பாராட்டு Posted: 01 May 2015 08:44 PM PDT மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி ஹர்ஷவர்தன் 3 நாள் சுற்றுப்பயணமாக கொல்கத்தா வந்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, ''மம்தா பானர்ஜி போராட்ட குணம் கொண்டவர் என்பதை இந்த நாடே அறியும். அவர் இப்போதுள்ள நிலைமைக்கு கடுமையாக போராடி தான் வந்துள்ளார். நிச்சயமாக அவரிடம் சில நல்ல குணங்கள் |
| அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 01 May 2015 08:38 PM PDT டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் மத்திய மந்திரி கபில்சிபலின் மகன் அமித் சிபல் மற்றும் முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தின் முன்னாள் அரசியல் செயலாளர் பவன் கெரா ஆகியோர் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளுக்கு எதிராக கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். |
| கார்வார் கடற்கரையில் காணாமல் போன டால்பின்கள்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் Posted: 01 May 2015 08:36 PM PDT கார்வார் என்றாலே அங்கு நீலநிறத்தில் பரந்து விரிந்து கிடக்கும் அழகிய அரபிக்கடலும், அதில் துள்ளி குதிக்கும் டால்பின்களும் தான் நினைவுக்கு வரும். அங்குள்ள லைட் ஹவுஸ், கூர்மகடா, லேடி பீச் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றால் கடற்கரையோரம் டால்பின்கள் போடும் மகிழ்ச்சி |
| செல்போன் ரோமிங் கட்டணம் குறைப்பு அமலுக்கு வந்தது Posted: 01 May 2015 08:29 PM PDT செல்போன் நிறுவனங்கள் வசூலிக்கும் தேசிய ரோமிங் கட்டணம் மற்றும் எஸ்.எம்.எஸ். கட்டணத்தை குறைத்து புதிய அறிவிப்பு ஒன்றை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) கடந்த மாதம் வெளியிட்டது. இந்த புதிய அறிவிப்பு படி ரோமிங் கட்டணத்தில் 40 |
| டாக்டர் அம்பேத்கர் பிறந்த இடத்துக்கு ராகுல்காந்தி 29-ந்தேதி செல்கிறார் Posted: 01 May 2015 08:23 PM PDT அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத்தலைவரும் அமேதி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான ராகுல்காந்தி 56 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் கடந்த மாதம் டெல்லி திரும்பினார். அதன்பின்னர் அவர் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். |
| என்ன விலை கொடுத்தாவது மேகதாது அணையை கட்டியே தீருவோம்: முதல்-மந்திரி சித்தராமையா உறுதி Posted: 01 May 2015 08:22 PM PDT பெங்களூருவில் பீனியா- நாகசந்திரா இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ''எனது தலைமையில் கர்நாடக அனைத்துக்கட்சி குழுவினர் மேகதாது |
| நிதின்கட்காரி ராஜினாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை Posted: 01 May 2015 08:20 PM PDT அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது:- மத்திய மந்திரி நிதின்கட்காரி முன்பு இயக்குனராக இருந்த புர்தி குரூப்பின் கரும்பு சக்கையை மூலப்பொருளாக கொண்ட மின்உற்பத்தி நிலையம் |
| பாராளுமன்றத்தில் கருப்பு பண மசோதா மீது அடுத்த வாரம் விவாதம்: நிதி மந்திரி அருண் ஜெட்லி தகவல் Posted: 01 May 2015 08:16 PM PDT கருப்பு பண மசோதா மீது பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் விவாதம் நடைபெறும் என்று நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார். கருப்பு பணத்தை ஒழிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், வெளிநாட்டு வருமானம், சொத்துக்களை மறைத்தால் 10 ஆண்டு |
| ஆண் குழந்தை பெற உதவும் மருந்து தயாரித்து விற்பனையா?: யோகா குரு பாபா ராம்தேவ் மறுப்பு Posted: 01 May 2015 07:38 PM PDT ஆண் குழந்தை பெற்றுக்கொள்ள உதவும் மருந்து தயாரித்து விற்பனை செய்யப்படுவது தொடர்பாக எழுந்துள்ள புகாரை யோகா குரு பாபா ராம்தேவ் மறுத்தார். 'புத்ரஜீவக் பீஜ்' மருந்து பாலினத்தை தீர்மானிக்க உதவுவது இல்லை என்று அவர் கூறினார். யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தி வருகிற திவ்யா பார்மசி மருந்து |
| ஸ்னாப்டீல் தலைமை செயல் அதிகாரி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது Posted: 01 May 2015 05:24 PM PDT மருத்துவர்களின் வழிகாட்டுதல் படி விற்பனை செய்ய வேண்டிய மருந்துகளை, ஆன்லைன் மூலம் நேரடியாக விற்ற ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குனால் பல் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்ற 5 நிறுவனங்களின் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளது மராட்டிய மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை. இணையவழி வர்த்தகமான ஆன்லைன் வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தில் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கடந்த மாதம் 16-ந்தேதி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறையை மதிக்காமல் தள்ளுபடி விலையில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |