Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உத்தம வில்லன்

Posted:

சுருக்கமாக சொன்னால் ‘ஒரு நடிகனின் கதை!

புகழ் வெளிச்சத்தில் புழங்கும் ஒரு ஹீரோவின் அந்தரங்கம், எவ்வளவு புழுக்கமானது என்பதுதான் முழுக்கதை! மதுரை தமிழ், சென்னை தமிழ், கோவை தமிழ் என்பதை போல ‘கமல் தமிழ்’ என்ற ஒன்றும் இருப்பதால், அதே தமிழில் ஆரம்பிக்கிறார் படத்தை. அதற்கப்புறம் டச் பை டச் கமல் டச்! நடு நடுவே ‘பச்சக் பச்சக்’ என்று அவர் மேயும் ஸ்பாட்டுகள் இதற்கு முன் வந்த கமல் படங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல! எல்லாவற்றையும் தாண்டி இந்த படத்தின் சென்ட்டிமென்ட்டுக்கு யாரும் தப்ப முடியாது. கல் நெஞ்சர்களுக்கு இரு சொட்டு கண்ணீரும், இளகிய நெஞ்சர்களுக்கு அது இன்னும் பெருகி ஆறாகி வழிவதும் நடக்கிறது.


Read more ...

ஆந்திர மாவோயிஸ்ட் தலைவர் பந்தாலா போலீசாரிடம் சரண்

Posted:

ஆந்திர மாவோயிஸ்ட்களின் தலைவர் பந்தாலா விசாகப்பட்டினம் டிஜிபியிடம் சரண் அடைந்துள்ளார். மாவோயிஸ்ட்கள் சரண் அடைந்தால் அவர்களுக்கு திருந்தி வாழத் தேவையான அடிப்படை உதவிகள் செய்துத் தரப்படும் என்று, மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகமுள்ள மாநில அரசுகள் அறிவித்து இருந்தன.


Read more ...

தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம்!

Posted:

தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று காலை 6 மணிக்குத் தொடங்கி நாளைக் காலை 6 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.


Read more ...

இன்று உலகெங்கும் உத்தமவில்லன் படம் திரையிடப்படும்:கலைப்புலி தாணு

Posted:

இன்று உலகெங்கும் உத்தம வில்லன் படம் திரையிடப்படும் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.


Read more ...

வடக்கு மாகாண சபைக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும்: ரணில் விக்ரமசிங்க

Posted:

வடக்கு மாகாண சபைக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கி, தமது சொந்த இடங்களை இழந்து அநாதரவான அப்பாவி தமிழ் மக்களின் காணிகளை மீளக் கையளிப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்தவைச் சந்திப்பதற்கு மைத்திரி இணக்கம்; திகதியும் ஒதுக்கினார்!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சந்திப்பிற்கான திகதியையும் ஒதுக்கியுள்ளார். 


Read more ...

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இலங்கையை வந்தடைந்தார்!

Posted:

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்று முன்னர் (இன்று சனிக்கிழமை, காலை 08.00 மணி) இலங்கையை வந்தடைந்தார். 


Read more ...

ஊழல் மோசடி விசாரணைகளை மூடிமறைக்க ஒருபோதும் இடமளியோம்: ஜே.வி.பி

Posted:

கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான விசாரணைகளை மூடிமறைப்பதற்கு எவர் முயற்சித்தாலும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. 


Read more ...

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 100 நாட்களில் நிறைவேற்றியுள்ளோம்: ரணில் விக்ரமசிங்க

Posted:

ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 100 நாட்களில் நிறைவேற்றியுள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

மக்களின் இறைமை, சுதந்திரம், மனித உரிமைகள் பாதுகாக்கப்படும்: மைத்திரிபால சிறிசேன

Posted:

நாட்டு மக்களின் இறைமை, சுதந்திரம், மனித உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரித்துள்ளார். 


Read more ...

பசுபிக் கடலில் புதிதாக உருவான தீவு தோன்றிய வேகத்திலேயே மறைகிறது!

Posted:

டொங்கோவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பசுபிக் சமுத்திரத்தில் உலகில் புதியதொரு தீவு உருவாகியிருந்தது.


Read more ...

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய சுமார் 1000க்கு மேற்பட்ட ஐரோப்பியர்களை காணவில்லை?!

Posted:

நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 1000க்கு மேற்பட்ட ஐரோப்பியர்கள் காணாமல் போயிருக்கலாம் என ஐரோப்பிய யூனியனுக்கான தலைமைக் குழுவொன்று நேபாளத்தில் வைத்து தெரிவித்துள்ளது.


Read more ...

கிங்ஸ் லெவன்ஸ் பஞ்சாப்பை இலகுவாக வீழ்த்தியது டெல்லி

Posted:

பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையில் இன்று மாலை இடம்பெற்ற போட்டியில் டெல்லி அணி 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 118 ஓட்டங்களை எடுத்தது.


Read more ...

புதன் கிரகத்துடன் மோதி மிஷனை முடித்துக் கொண்டது நாசாவின் மெசேஞ்சர் விண்கலம்

Posted:

2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் செலுத்தப் பட்டு, மார்ச் 2011 ஆம் ஆண்டு புதன் கிரகத்தின் ஒழுக்கில் இணைந்து கடந்த 4 வருடங்களாக புதன் கிரகத்தைப் பற்றிய விலை மதிப்பில்லாத தகவல்களையும் ஆயிரக் கணக்கான புகைப் படங்களையும் அனுப்பி வைத்த நாசாவின் மெசேஞ்சர் விண்கலம் தன்னில் கொண்டிருந்த சக்தி தீர்ந்து போனதால் நேற்று வியாழக்கிழமை புதன் கிரகத்துடன் மோதித் தனது பணியை முடித்துக் கொண்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

புருண்டி கலவரத்தில் 7 பேர் பலி, 66 பேர் படுகாயம்

Posted:

சிறிய மத்திய ஆப்பிரிக்க நாடான புருண்டியில் கடந்த ஒரு வாரமாகக் கடும் ஆர்ப்பாட்டங்களும் கலவரமும் நிகழ்ந்து வருகின்றது. இக்கலவரங்களில் இதுவரை 7 பேர் கொல்லப் பட்டும் 66 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தும் இருப்பதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.


Read more ...

பப்புவா நியூ கினியாவைத் தாக்கிய 6.8 ரிக்டர் நிலநடுக்கம்!: பாரிய சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை

Posted:

இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பப்புவா நியூ கினியாவின் தலைநகர் போர்ட் மொரேஸ்பை இலிருந்து வடகிழக்கே 693 Km தொலைவில் கொக்கோப்போ நகருக்கு அண்மையில் 6.8 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து 7.1 ரிக்டர் அளவுடைய தொடர் அதிர்வும் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.


Read more ...

ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க உண்ணாவிரதப் போராட்டம்!

Posted:

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 


Read more ...

பஞ்ச பூதத் தலங்களுள் ஒன்றாகச் சிறந்து விளங்கும் நடராஜர் கோயில் கும்பாபிஷேகம்!

Posted:

பஞ்ச பூதத் தலங்களுள் ஒன்றாகச் சிறந்து விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது.


Read more ...

ராஜஸ்தானில் பத்து வயதுச் சிறுவன் ஒருநாள் காவல்துறை ஆணையர்!

Posted:

ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் கிருஷ் என்கிற 10 வயதுச் சிறுவன் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனையால் சிகிச்சைப் பெற்று வருகிறான்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™