மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- குறுகிய தொலைவு பாயும் திறன் கொண்ட ஆகாஷ் ஏவுகணை 32 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவத்தில் சேர்ப்பு
- பதவி ஏற்பு உறுதிமொழியின்போது சொல்லப்படும் ஈஸ்வரர் என்பவர் யார்? தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் திடுக் கேள்வி
- மே 14-ந் தேதி சீனா உள்ளிட்ட மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
- அல்கொய்தா மிரட்டல் எதிரொலி: பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு - மத்திய அரசு உத்தரவு
- சட்டப்படிப்பு தேர்வில் காப்பி அடித்த போலீஸ் ஐ.ஜி.க்கு கட்டாய விடுப்பு: அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை மந்திரி உத்தரவு
- செம்மரக்கடத்தலை தடுக்க சேஷாசலம் வனப்பகுதியை சுற்றிலும் பள்ளம் தோண்டும் பணி தீவிரம்
- திருப்பதியில் சித்ரா பவுர்ணமியையொட்டி தங்க கருட வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா
- அமெரிக்க பத்திரிகையாளர் நெல்லி ப்ளையின் 151-வது பிறந்த நாளை இசை டூடுல் மூலம் கொண்டாடிய கூகுள்
- ஒபாமா, இந்திய சுற்றுப்பயண செலவை வெளியிட மத்திய அரசு மறுப்பு
- நேபாள நில நடுக்கத்தின்போது பனிச்சரிவில் உயிருடன் புதைந்த 100 பேரின் உடல்கள் மீட்பு
- வியாபாரியிடம் ரூ.27½ லட்சம் கொள்ளையடித்த ஆந்திர போலீசார் 3 பேர் கைது
- சீன பயணத்தை முன்னிட்டு சீனாவின் சமூக வலைத்தளத்தில் இணைந்தார், மோடி
- நிதி மசோதாவில் திருத்தம் எதிரொலி: சமையல் கியாஸ் மானியத்துக்கு வருமான வரி?
- தேர்வில் முறைகேடு: கேரள போலீஸ் ஐ.ஜி. பிடிபட்டார்
- அல்கொய்தா தீவிரவாதிகள் பிரதமர் மோடிக்கு மிரட்டல்: விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு
- 4 மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த கேரள மாவோயிஸ்ட் தலைவர் கோவை அருகே கைது
- துப்பட்டாவின் இரு முனைகளால் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி
- டெல்லி சட்டமன்றத்தில் ஒதுக்கீடு செய்த அறையை ஏற்க எதிர்க்கட்சி தலைவர் மறுப்பு
- ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அமைச்சரவை கூட்டம் நடத்த முதலமைச்சர் வசுந்தரா ராஜே முடிவு
- நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் ஆன்மா அமைதி பெற மகாபோதி புத்தர் கோவிலில் நிதிஷ் குமார் சிறப்பு வழிபாடு
| குறுகிய தொலைவு பாயும் திறன் கொண்ட ஆகாஷ் ஏவுகணை 32 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவத்தில் சேர்ப்பு Posted: 04 May 2015 11:19 PM PDT இந்தியாவின் பாதுகாப்புக்காக மத்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு சோதனைக் கூடம் பல்வேறு வகையான ஏவுகணைகளை தயாரித்து பரிசோதித்து வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 1983–ம் ஆண்டு ஆகாஷ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. பல தடவை அந்த ஏவுகணைகள் விண்ணில் செலுத்தி சோதிக்கப்பட்டன. |
| Posted: 04 May 2015 11:15 PM PDT எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு உறுதிமொழியும் ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொள்ளும்போது, ''ஈஸ்வரர்'' பெயரால் உறுதிமொழி ஏற்பதாக சொல்வார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து, மக்கள் பிரதிநிதிகள் இப்படி உறுதிமொழி ஏற்பது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. |
| மே 14-ந் தேதி சீனா உள்ளிட்ட மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி Posted: 04 May 2015 10:36 PM PDT அரசு முறை பயணமாக சீனா, மங்கோலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு செல்லும் பாரத பிரதமர் மோடியின் சுற்றுப்பயண திட்டத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. வரும் மே 14-ந் தேதி துவங்கும் அவரது பயணம் மே 19-ந் தேதி நிறைவடையும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 14-ந் தேதி |
| அல்கொய்தா மிரட்டல் எதிரொலி: பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு - மத்திய அரசு உத்தரவு Posted: 04 May 2015 10:25 PM PDT பிரதமர் நரேந்திர மோடிக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ''யுடியூப்'' இணையத்தளத்தில் சுமார் 9 நிமிடம் ஓடும் வீடியோவில் ஆசிம் உமர் என்பவன் இந்த அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளான். |
| Posted: 04 May 2015 09:58 PM PDT கேரள மாநிலத்தில் மகாத்மாகாந்தி பல்கலைக் கழகம் சார்பில் முதுகலை சட்டப்படிப்புக்கான தேர்வுகள் நடந்து வருகிறது. கொச்சி கலமச்சேரியில் உள்ள செயின்ட்பால் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் நேற்று தேர்வு எழுதினர். |
| செம்மரக்கடத்தலை தடுக்க சேஷாசலம் வனப்பகுதியை சுற்றிலும் பள்ளம் தோண்டும் பணி தீவிரம் Posted: 04 May 2015 09:30 PM PDT சேஷாசலம் வனப்பகுதியில் செம்மர கட்டைகள் கடத்தப்படுகின்றன. எனவே செம்மர கடத்தலை தடுக்கவும், வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகள் தண்ணீர், உணவை தேடி காட்டை விட்டு வெளியே வராமல் தடுப்பதற்காகவும் சேஷாசலம் வனப்பகுதியை சுற்றிலும் சுமார் 90 கிலோ |
| திருப்பதியில் சித்ரா பவுர்ணமியையொட்டி தங்க கருட வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா Posted: 04 May 2015 09:25 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை நேரத்தில் தங்க கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். |
| அமெரிக்க பத்திரிகையாளர் நெல்லி ப்ளையின் 151-வது பிறந்த நாளை இசை டூடுல் மூலம் கொண்டாடிய கூகுள் Posted: 04 May 2015 09:08 PM PDT அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளர் நெல்லி ப்ளையின் 151-வது பிறந்த நாளை, தனது முகப்பு பக்கத்தில் இசை டூடுல் ஒன்றை வெளியீட்டு கொண்டாடி வருகிறது கூகுள். நெல்லி ப்ளை 1865-ம் ஆண்டு மே 5-ல் அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் பிறந்தார். பத்திரிகையாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய நெல்லி அத்துறையில் மாபெரும் சாதனைகளை செய்தார். இவர் புலனாய்வு |
| ஒபாமா, இந்திய சுற்றுப்பயண செலவை வெளியிட மத்திய அரசு மறுப்பு Posted: 04 May 2015 07:58 PM PDT அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தார். அவருடன் அந்நாட்டு பாதுகாப்பு குழுவினரும் வந்தனர். அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் செலவிடப்பட்ட தொகையை தெரியப்படுத்துமாறு மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்த் கல்கலி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பித்தார். |
| நேபாள நில நடுக்கத்தின்போது பனிச்சரிவில் உயிருடன் புதைந்த 100 பேரின் உடல்கள் மீட்பு Posted: 04 May 2015 07:32 PM PDT கடந்த மாதம் 25-ந்தேதி நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்திற்கு இதுவரை 7,276 பேர் பலியாகி உள்ளதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. சிந்துபால்சவுக் மாவட்டத்தில் அதிக பட்சமாக 2,829 பேரும், காட்மாண்டு மாவட்டத்தில் 1,202 பேரும் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்து 90 ஆயிரத்து 664 வீடுகள் அடியோடு இடிந்தன. |
| வியாபாரியிடம் ரூ.27½ லட்சம் கொள்ளையடித்த ஆந்திர போலீசார் 3 பேர் கைது Posted: 04 May 2015 07:32 PM PDT ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், யெம்மிகனூரில் இருந்து தங்க நகை வியாபாரி ஒருவர் நகைகள் வாங்குவதற்காக ரூ.27½ லட்சத்துடன் பெங்களூருவுக்கு கடந்த மார்ச் மாதம் பஸ்சில் வந்தார். அவர் பஸ்சை விட்டு இறங்கியபோது வருமானவரி இலாகா அதிகாரிகள் என்று 3 பேர் |
| சீன பயணத்தை முன்னிட்டு சீனாவின் சமூக வலைத்தளத்தில் இணைந்தார், மோடி Posted: 04 May 2015 05:05 PM PDT பிரதமர் நரேந்திர மோடி, இம்மாதம் 14-ந் தேதி சீனாவுக்கு செல்கிறார். குஜராத் முதல்-மந்திரியாக அங்கு சென்றுள்ள போதிலும், பிரதமராக அவர் செல்வது இதுவே முதல்முறை ஆகும். இதையொட்டி, சமூக வலைத்தளங்களில் ஆர்வம் கொண்டவரான பிரதமர் மோடி, நேற்று சீன சமூக வலைத்தளத்தில் இணைந்தார். சீனாவில், |
| நிதி மசோதாவில் திருத்தம் எதிரொலி: சமையல் கியாஸ் மானியத்துக்கு வருமான வரி? Posted: 04 May 2015 04:49 PM PDT வீட்டு உபயோக சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் மானியத்தை செலுத்தும் திட்டம், கடந்த ஜனவரி 1-ந்தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. |
| தேர்வில் முறைகேடு: கேரள போலீஸ் ஐ.ஜி. பிடிபட்டார் Posted: 04 May 2015 03:04 PM PDT கேரள மாநிலம் கலமசேரியில் உள்ள செயின்ட் பால் கல்லூரியில் முதுகலை சட்டப்படிப்புக்கான (எல்எல்.எம்.) தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வு எழுதிக்கொண்டிருந்த ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டதை தேர்வுக்கூட கண்காணிப்பாளர் கண்டுபிடித்தார். அந்த நபரை தேர்வுக்கூடத்தில் இருந்து வெளியேற்றினார். |
| அல்கொய்தா தீவிரவாதிகள் பிரதமர் மோடிக்கு மிரட்டல்: விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு Posted: 04 May 2015 02:05 PM PDT பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அல்கொய்தா தீவிரவாத இயக்கம் அல்-ஜவாரியின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய துணைக் கண்டத்தில் செயல்படுவதற்காக ஆசிம் உமர் தலைமையில் தனி பிரிவு ஒன்றை அல்கொய்தா ஏற்கனவே தொடங்கி |
| 4 மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த கேரள மாவோயிஸ்ட் தலைவர் கோவை அருகே கைது Posted: 04 May 2015 01:33 PM PDT நான்கு மாநில போலீசாரால் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த, 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய மாவோயிஸ்ட் தலைவர் தனது மனைவி உட்பட 4 பேருடன் கோவையில் கைது செய்யப்பட்டார். கடந்த 2 மாதங்களாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டு |
| துப்பட்டாவின் இரு முனைகளால் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி Posted: 04 May 2015 10:21 AM PDT உத்தர பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரைச் சேர்ந்தவர் ரஜனீஷ்(22). இவரும் அதே பகுதியில் வசிக்கும் இம்ரானாவும்(18) கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் இம்ரானாவின் காதல் அவரது குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. உடனே ரஜனீஷ் அவரது குடும்பத்தாரிடம் |
| டெல்லி சட்டமன்றத்தில் ஒதுக்கீடு செய்த அறையை ஏற்க எதிர்க்கட்சி தலைவர் மறுப்பு Posted: 04 May 2015 09:38 AM PDT டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கான அறையை ஒதுக்கீடு செய்ததில் ஆம் ஆத்மி அரசு விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டதாக பா.ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் அரசு ஒதுக்கிய அந்த அறை இடவசதி குறைவாக உள்ளதாக கூறி அதனை ஏற்க எதிர்க்கட்சி தலைவரும் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான விஜேந்தர் குப்தா |
| ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அமைச்சரவை கூட்டம் நடத்த முதலமைச்சர் வசுந்தரா ராஜே முடிவு Posted: 04 May 2015 07:43 AM PDT ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதை துரிதப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த முதலமைச்சர் வசுந்தரா ராஜே முடிவு செய்துள்ளார். முதலமைச்சர் வசுந்தரா ராஜே தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், மக்கள் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, நலத்திட்டப் பணிகளை |
| நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் ஆன்மா அமைதி பெற மகாபோதி புத்தர் கோவிலில் நிதிஷ் குமார் சிறப்பு வழிபாடு Posted: 04 May 2015 07:08 AM PDT நேபாளம் மற்றும் பீகாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று கயாவில் உள்ள புத்தர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். உலகப் புகழ்பெற்ற மகாபோதி கோவிலில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட நிதிஷ் குமார், பின்னர் மகாபோதி மரத்தின் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |