Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சொத்து மதிப்பீட்டில் குளறுபடி - கூட்டுச்சதி என்பதற்கும் ஆதாரமில்லை: தீர்ப்புக்கு பின் ஜெ. வழக்கறிஞர்கள் பேட்டி

Posted: 10 May 2015 11:59 PM PDT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் உள்ளிட்ட நால்வரையும் விடுவித்து உத்தரவிட்டார். தீர்ப்பை தொடர்ந்து அதிமுக தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்ததாவது; ஜெயலலிதாவின் சொத்து மதிப்புகள் அதிகப்படுத்தி

கோவையில் பிடிபட்ட மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதம் சப்ளை செய்தவர் கைது

Posted: 10 May 2015 11:58 PM PDT

கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ரூபேஷ், அவரது மனைவி ஷைனா மற்றும் அனூப், கண்ணன், வீரமணி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

கங்கையில் தவறி விழுந்து உ.பி.மந்திரி மகள் பலி: உடலை தேடும் பணி தீவிரம்

Posted: 10 May 2015 11:58 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொழிலாளர் நிலத்துறை மந்திரியாக இருப்பவர் ஷாகித் மன்சூர். இவரது மகள் அபிதா ஹசன். மீரட்டில் மருத்துவக் கல்லூரி படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து சக மாணவ–மாணவிகளுடன் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசுக்கு சுற்றுலா சென்றார். அங்கு கங்கை நதியை பார்க்கச் சென்றனர். அனைவரும் நதிக்கரையில்

அன்பழகனின் 81 பக்க வாத முக்கிய அம்சங்கள்

Posted: 10 May 2015 11:58 PM PDT

தி.மு.க. தாக்கல் செய்துள்ள 81 பக்க வாதத்தின் முக்கிய அம்சங்கள் 1. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி நான்கு பேரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டு பல அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி இருக்கிறார்கள். இவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் ஆதாரத்தோடு நிரூபித்து இருக்கிறோம். அதை கீழ் நீதிமன்றமும் உறுதி

4 ஜனதா கட்சிகள் இணைவதில் சிக்கல்: முலாயம், நிதிஷ்குமார் தனியாக செல்ல முடிவு

Posted: 10 May 2015 11:58 PM PDT

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் கட்சியாகவும், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆளும் கட்சியாகவும் உள்ளது. பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குகிறது. இந்த 3 ஜனதா கட்சிகளின் தலைவர்களான சரத்யாதவ், நிதிஷ்குமார், முலாயம்சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் இடையே நெருக்கம் ஏற்பட்டது. முலாயம் சிங் பேரனுக்கும், லல்லு பிரசாத்

ரூ.5 ஆயிரம் தராமல் இழுத்தடித்ததால் நடிகை நீத்து அகர்வாலை டிராவல்ஸ் அதிபர் தாக்கினார்: போலீசில் புகார்

Posted: 10 May 2015 11:56 PM PDT

தெலுங்கு நடிகை நீத்து அகர்வால். இவர் செம்மரகட்டை கடத்தல்காரன் மஸ்தான்வலி தயாரித்த சினிமா படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நடிகை நீத்து அகர்வாலுக்கு

சொத்து குவிப்பு அப்பீல் வழக்கு: ஜெயலலிதா விடுதலை- கர்நாடக ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

Posted: 10 May 2015 11:33 PM PDT

ஜெயலலிதா, தமிழக முதல்–அமைச்சராக 1991–96ம் ஆண்டுகளில் இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்ததாக அவரது தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் மீதும் வழக்கு தொடரப்பட்டது. முதலில் சென்னையிலும் பெங்களூரிலும் கடந்த 18 ஆண்டுகளாக இந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடந்தது.

அரசு வக்கீல் ஆச்சார்யா கூறிய குற்றச்சாட்டுகள்

Posted: 10 May 2015 11:30 PM PDT

கர்நாடக அரசு, இந்த வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞராக ஆச்சார்யாவையும் அவருக்கு உதவியாக வழக்கறிஞர் சந்தோஷ் சவுட்டாவையும் நியமித்தது. கர்நாடக அரசின் சார்பாக ஆச்சார்யாவின் 18 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை அவரது உதவியாளர் சந்தோஷ் சவுட்டா, கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பாட்டீலிடம் சமர்ப்பித்தார்.

கர்நாடக நீதிமன்றத்திற்கு வந்தார் நீதிபதி குமாரசாமி: ஜெயலலிதா விடுதலையாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வழிபாடு

Posted: 10 May 2015 10:09 PM PDT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி, இவ்வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்காக இன்று காலை சரியாக 10 மணிக்கு பெங்களூர் உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வந்து சேர்ந்தார்.

கேரளாவில் கனமழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை

Posted: 10 May 2015 10:08 PM PDT

கேரளாவில் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நேற்று திருவனந்தபுரம், வயநாடு, கொல்லம், கொட்டாரகரா, மலப்புரம், பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இங்கு 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. திருவனந்தபுரத்தில் தம்பானூர் பகுதியில் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்

திருப்பதி மலையில் பயங்கர தீ விபத்து: 100 ஏக்கரில் மரங்கள் கருகியது

Posted: 10 May 2015 09:58 PM PDT

திருப்பதி சேஷாசலம் மலை பகுதியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. யானைகள் ஆர்ச்சில் தொடங்கிய தீ ரிசர்வ் வனப்பகுதி வரை பற்றி எரிந்தது. கோவில் ஊழியர்களும், தீயணைப்பு வீரர்களும் பெரும் முயற்சி எடுத்தும் தீ கட்டுக்குள் வரவில்லை. காற்று வேகமாக வீசியதால் தீ மேலும் பரவ

மருமகள் வளைகாப்புக்கு சென்ற மாமியார் விபத்தில் சிக்கி பலி: 8 பெண்கள் படுகாயம்

Posted: 10 May 2015 09:34 PM PDT

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தலஞ்சேரி அயலூரை சேர்ந்த வேலாயுதன் மனைவி மாலு (வயது 58). நேற்று மாலை மாலுவின் மருமகளுக்கு அவரது பெற்றோர் வீட்டில் வளைக்காப்பு நடக்க இருந்தது. மருமகளின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உறவினர்களுடன் காரில் புறப்பட்டார். நெம்மாறையில் உள்ள கல்லூரி அருகே வந்தபோது

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 14-ந் தேதி திறப்பு

Posted: 10 May 2015 09:26 PM PDT

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இதனால் மேற்கூறிய நாட்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவது வழக்க

நண்பர் வாங்கிய கடனை செலுத்தும்படி வங்கி வற்புறுத்தியதால் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

Posted: 10 May 2015 08:14 PM PDT

பெங்களூரு யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் கங்காதரய்யா (வயது 57). இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். ஜாலஹள்ளி அருகே எச்.எம்.டி லே-அவுட்டில் கங்காதரய்யா தனது

மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் ஆலோசனை மையங்கள் அமைக்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு

Posted: 10 May 2015 07:57 PM PDT

பாடச்சுமை, தேர்வு நேரங்களில் பெற்றோர் தருகிற அழுத்தம், காதல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுக்கு போகிறார்கள். இதே போன்று வெளியூரில் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படிப்பதற்காக சேர்க்கப்படுகிற

தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.1 கோடி நன்கொடை செலுத்துபவர்கள் பிரதமர் மோடியிடம் நேரில் வழங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

Posted: 10 May 2015 05:12 PM PDT

தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேலான நன்கொடை தொகையை பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக வழங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு தூய்மை இந்தியா திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. அதன்படி

இன்று தேர்தல் நடத்தினாலும் டெல்லியில் ஆம் ஆத்மி அமோக வெற்றிபெறும்: கெஜ்ரிவால்

Posted: 10 May 2015 05:06 PM PDT

டெல்லி அரசை விமர்சித்து தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு எதிராக முதன்மை செயலாளரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். பின்னர் வழக்கு தொடர வேண்டும் என்று மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதற்கிடையே ஊடகங்கள் குறித்து கவலைப்பட

பாராளுமன்ற பொது கணக்கு குழு தலைவராக கே.வி. தாமஸ் மீண்டும் நியமனம்

Posted: 10 May 2015 04:53 PM PDT

பாராளுமன்ற பொது கணக்கு குழு தலைவராக கே.வி.தாமஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை அவர் இந்த பதவியை வகிப்பார். பாராளுமன்றத்தில் நிதி குழுக்களாக பொது கணக்கு குழு, மதிப்பீட்டு குழு,

போலீசார் சல்யூட் அடிக்க வேண்டாம்: மராட்டிய முதல்வர் பட்நவிஸ்

Posted: 10 May 2015 04:15 PM PDT

நான் ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு போலீசாரை கடந்து செல்லும்போது அவர்கள் எனக்கு சல்யூட் அடிக்க தேவையில்லை என்று மராட்டிய முதல்வர் பட்நவிஸ் கேட்டுகொண்டுள்ளார். இதுகுறித்து பட்நவிஸ் கூறியதாவது:-

ராமர் கோவில் கட்டும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது: ராஜ்நாத் சிங் பேட்டி

Posted: 10 May 2015 03:33 PM PDT

டெல்லி மேல்-சபையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் ராமர் கோவில் கட்டும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், அயோத்தியில் ராமர் கோவில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™