Tamil News | Online Tamil News |
- கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெ., வழக்கில் தீர்ப்புக்கான தேதி நெருங்குகிறது: பவானி சிங் நியமனம் செல்லாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- நில நடுக்கத்தில் பாதித்தவர்கள் உதவி கிடைக்காமல் தவிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,000த்தை தொட்டது
- விவசாயிகள் நலனுக்காக ராகுல் பாதயாத்திரை
- தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி வெற்றி தமிழகத்தை காப்பாற்றும்: கருணாநிதி
- முதல் நாள் 'சென்சுரி' இரண்டாம் நாள் 'டக் அவுட்': விஜயகாந்த் சொதப்பலால் கட்சியில் சோகம்
- மன்மோகன் சிங் வெளிநாட்டு பயணம்: விமான செலவு ரூ.688.73 கோடி!
- நேபாளத்தில் சிக்கிய தமிழக மருத்துவ மாணவர்கள் உயிர் பயத்தில் தவிப்பு; வெட்ட வெளியில் தஞ்சம்
- கடத்தலில் ஈடுபடும் இந்திய மீனவர்கள்: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
- ஐ.எஸ்.ஐ.எஸ்., தலைவன் மரணம்
- நீதிபதிகள் நியமன கமிட்டியில் பங்கேற்க தத்து மறுப்பு
| Posted: புதுடில்லி: 'ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின், மேல் முறையீட்டு மனு விசாரணையில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லாது; அவரின் வாதங்களை கர்நாடக ஐகோர்ட் ஏற்கக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், அன்பழகன் தரப்பு எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. அதனால், ஜெ., வழக்கில், கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு வழங்கும் தேதி நெருங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட, நான்கு பேருக்கு எதிரான, சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞராக ... |
| நில நடுக்கத்தில் பாதித்தவர்கள் உதவி கிடைக்காமல் தவிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,000த்தை தொட்டது Posted: காத்மாண்டு: நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கூடாரங்கள், மருந்து, உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை, 4,000 ஆக அதிகரித்துள்ளது. ஏராளமான கிராமங்கள், மண்ணோடு மண்ணாக புதைந்திருப்பதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாள நாட்டில், சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், அந்த நாட்டை உலுக்கி விட்டது. வீடுகள், கட்டடங்கள், கோவில்கள், புராதன சின்னங்கள் என அனைத்துமே உருக்குலைந்து, கற்குவியல்களாகி ... |
| விவசாயிகள் நலனுக்காக ராகுல் பாதயாத்திரை Posted: புதுடில்லி: பருவம் தவறி பெய்த மழை யால், பல மாநிலங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக, பாத யாத்திரை மேற்கொள்ள, காங்., துணைத் தலைவர் ராகுல் திட்டமிட்டு உள்ளார். |
| தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி வெற்றி தமிழகத்தை காப்பாற்றும்: கருணாநிதி Posted: ''தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி தமிழகத்துக்கு தேவை; இந்த கூட்டணியின் வெற்றி, எதிர்கால தமிழகத்தைக் காப்பாற்றும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி:விஜயகாந்த் என்னை சந்தித்ததை வைத்து, கூட்டணிக்கான அச்சாரமா என, கேட்கின்றனர். அது, ஒவ்வொருவரும் தங்களுக்குள் எடுத்துக் கொள்வதை பொறுத்தது.எங்களை பொறுத்தவரையில், நாங்கள் இப்போதே, அது பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஆனால், இப்போது தமிழகத்தில் உள்ள நிலையில், கூட்டணி தேவை என்பதையும், அந்த கூட்டணியின் வெற்றி ஒன்று தான் எதிர்கால தமிழகத்தைக் காப்பாற்றும்.ஜனநாயகத்தில், தமிழக ... |
| முதல் நாள் 'சென்சுரி' இரண்டாம் நாள் 'டக் அவுட்': விஜயகாந்த் சொதப்பலால் கட்சியில் சோகம் Posted: மேகதாது அணை விவகாரத்தில், தமிழக எதிர்கட்சிகளை ஒன்று திரட்டி, பரபரப்பை ஏற்படுத்திய விஜயகாந்த், டில்லியில் சொதப்பியதால், தே.மு.தி.க., வினர் அதிருப்தி அடைந்துள் ளனர்.லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு, கடும் பின்னடைவில் இருக்கும் விஜயகாந்த், சட்டசபை தேர்தலுக்கு வலுவான கூட்டணியை அமைக்கும் நெருக்கடியில் உள்ளார்.இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் நடவடிக்கைகளை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் செய்து வருகிறார்.அதற்காகவே, மேகதாது அணை பிரச்னையை விஜயகாந்த் கையில் எடுத்தார்.கர்நாடகா அணை கட்டுவதை தடுப்பதற்காக, அனைத்து ... |
| மன்மோகன் சிங் வெளிநாட்டு பயணம்: விமான செலவு ரூ.688.73 கோடி! Posted: கோவை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஒன்பது ஆண்டுகளில், அரசு சார்பில், 65 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இதற்காக, 688.73 கோடி ரூபாய் செலவிடப்பட்டது, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனு மூலம் தெரியவந்துள்ளது. கடந்த, 2004 முதல், 2014 வரை, 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார்.அவர், வெளிநாட்டு சுற்றுப்பயணத்துக்கு செலவிட்ட தொகை விவரம் குறித்து, கோவை மாவட்டம், வெள்ளலூரைச் சேர்ந்த டேனியல் ஏசுதாஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோரியிருந்தார். அதற்கு, மத்திய அரசு சார்பு செயலர் சர்மா ... |
| நேபாளத்தில் சிக்கிய தமிழக மருத்துவ மாணவர்கள் உயிர் பயத்தில் தவிப்பு; வெட்ட வெளியில் தஞ்சம் Posted: மதுரை: மதுரை உட்பட தமிழகத்தை சேர்ந்த நேபாளத்தில் எம்.பி.பி.எஸ்., படிக்கும் நான்கு மாணவர்கள் நிலநடுக்கம் பாதித்த பகுதியில் சிக்கி தவிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை பத்திரமாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மதுரை சூர்யாநகரை சேர்ந்தவர் அப்துல் கரீம். சித்தா டாக்டர். இவரது மனைவி சமீமா. இவர்களின் ஒரே மகள் அனிஷ் பாத்திமா. இவர் நேபாளம் பாங்கோ மாவட்டத்திலுள்ள நேபாள் கன்ஞ்ச் மெடிக்கல் கல்லூரியில் 2ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிக்கிறார்.நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது இவர் உட்பட 300 ... |
| கடத்தலில் ஈடுபடும் இந்திய மீனவர்கள்: உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் Posted: மதுரை: 'இந்திய மீனவர்கள் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இலங்கை கடற்பகுதிக்கு செல்வதால் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது' என, இந்திய கடலோர காவல்படை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. சிவகாசி வழக்கறிஞர் ஆனந்தமுருகன் தாக்கல் செய்த மனு: முக்கிய கடற்பகுதிகளில், இந்திய கடற்படை கப்பல்களை நிறுத்தி, தமிழக மீனவர்களுக்கு உதவி செய்யக் கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். |
| Posted: புதுடில்லி: ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபுபக்கர் அல் - பக்தாதி, இறந்து விட்டதாக, ஈரான் வானொலி அறிவித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு ஆக்கிரமித்து, இஸ்லாமிய நாடு என்ற பெயரில் ஆட்சி செய்து வருகிறது. அல் - குவைதாவில் இருந்து பிரிந்த இந்த அமைப்பின் தலைவனாக, 2010ல் அல் - பக்தாதி பொறுப்பேற்றான். அது முதல், பிணைக்கைதிகளை கழுத்தறுத்து கொல்வது உள்ளிட்ட படு பயங்கர வாத நடவடிக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.,ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவன் அல் - பக்தாதியின் தலைக்கு, 60 கோடி ரூபாய் பரிசு தருவதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது. ... |
| நீதிபதிகள் நியமன கமிட்டியில் பங்கேற்க தத்து மறுப்பு Posted: புதுடில்லி: 'தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்திற்கு, இரு பிரபலமான நபர்களை தேர்வு செய்வதற்கான, மூன்று பேர் கமிட்டியில் பங்கேற்க, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மறுத்து விட்டார்' என, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மத்திய அரசு தெரிவித்தது. நீதிபதிகள் நியமன ஆணையம்: சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை தேர்வு செய்வதற்காக, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் 4ம் தேதி முதல், செயல்பட உள்ள இந்த ஆணையத்தில், ஆறு உறுப்பினர்கள் இடம் பெறுவர்; அவர்களில் இருவர், பிரபலமான நபர்கள். இந்த இரு பிரபலமான நபர்களை, பிரதமர், சுப்ரீம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 28,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |