Tamil News | Online Tamil News |
- மெட்ரோ ரயில், அரசு திட்டங்கள் வரிசையில் ஆண்டவனும் காத்திருப்பு: திருப்பணி முடிந்தும் கும்பாபிஷேகம் நடப்பதற்கான அறிகுறியே இல்லை!
- 'எல்லாரையும் விட நாங்க தான் பெஸ்ட்...!': வெளுத்து வாங்கும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்
- விவசாயிகள் தற்கொலையை தடுக்க தகுந்த ஆலோசனை கூறுங்கள்: 'உயிரை விட எதுவும் முக்கியமில்லை' என பிரதமர் மோடி உருக்கம்
- தமிழகத்திற்கு கூடுதலாக 1,200 மெகாவாட் மின்சாரம்: என்.எல்.சி., தலைவர் தகவல்
- 'பயிர் கடன் வட்டி உயர்வால் விவசாயிகள் வேதனை'
- மாணவர்களை கண்டித்து திருத்த உரிமை வேண்டும்: அரசுக்கு தனியார் பள்ளிகள் வேண்டுகோள்
- பயணிகள் உயிருடன் விளையாடிய போதை ஓட்டுனர்: 'வாட்ஸ் அப்' வீடியோவால் பாயும் நடவடிக்கை
- கிராமங்களில் இணைய பயன்பாடு 2018ல் 28 கோடியாக உயரும்
- சிம்பன்சியை மனித இனத்தில் சேர்க்க கோரி நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு
- அமெரிக்க மருத்துவ துறை தலைவரானார் இந்திய வம்சாவளி விவேக் மூர்த்தி
| Posted: சென்னை: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து விலகிய பிறகு தமிழகத்தில் கட்டடங்கள் திறப்பு விழா, திட்டம் துவக்க விழா, அடிக்கல் நாட்டு விழா எதுவும் நடைபெறவில்லை. சென்னையில் மெட்ரோ ரயில் துவக்கமும் தள்ளி போடப்படுகிறது. ஜெயலலிதா மீண்டும் முதல்வரான பின்னரே இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியில் உள்ளவர்கள் நினைப்பதால் திருப்பணி முடிந்தும் 85 கோவில்கள் கும்பாபிஷேகத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் கடந்த செப்டம்பரில் ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து ... |
| 'எல்லாரையும் விட நாங்க தான் பெஸ்ட்...!': வெளுத்து வாங்கும் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் Posted: பார்லிமென்டின், மிக முக்கியமாக கருதப்படும் கேள்வி நேரத்தில், சொந்த மாநிலத்தின் தேவைகளை குறிப்பிட்டு கேள்வி எழுப்பி, பதில் பெறுவதற்கு பதிலாக, மற்ற மாநிலங்களின் நலன்களுக்காக, கேள்வி எழுப்பி, பதில் பெறுவதில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆர்வம் காட்டி ஆச்சரியப்படுத்துகின்றனர். லோக்சபாவில், கடந்த செவ்வாயன்று, விளையாட்டுத் துறை சம்பந்தப்பட்ட கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஒரு அ.தி.மு.க., - எம்.பி., எழுந்து, விளையாட்டுத் துறைக்கு, அம்மா செய்த சாதனைகளாக சிலவற்றை பட்டியலிட்டு, தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறப்பாக உள்ளதாக பெருமையடித்தார். பேச்சின் ... |
| Posted: புதுடில்லி: ''விவசாயிகள் தற்கொலை விவகாரத்திற்கு, என் ஆட்சிக் காலத்தில் கட்டாயம் முடிவு கட்டப்படும்; அதற்கான சரியான ஆலோசனைகளை, யாரேனும் கூறினால், அதை ஏற்கத் தயார்; இந்த பிரச்னைக்கு, அரசு மட்டுமின்றி, அனைவரும் சேர்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் அணி திரண்டுள்ள நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சியும், அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் நேற்று முன்தினம் பேரணி ... |
| தமிழகத்திற்கு கூடுதலாக 1,200 மெகாவாட் மின்சாரம்: என்.எல்.சி., தலைவர் தகவல் Posted: நெய்வேலி: ''புதிய தெர்மல்கள் வாயிலாக, தமிழகத்திற்கு, 2017ம் ஆண்டின் இறுதிக்குள், கூடுதலாக, 1,200 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும்,'' என, என்.எல்.சி., தலைவர் சுரேந்தர் மோகன் கூறினார். அறிவிப்பு: கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி., 2ம் தெர்மல் விரிவாக்கத்தின் இரண்டாவது யூனிட்டில், இரு தினங்களுக்கு முன் துவங்கிய 250 மெகாவாட் மின் உற்பத்தி, வர்த்தக ரீதியாக விற்பனைக்கு தகுதிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, என்.எல்.சி., தலைவர் சுரேந்தர்மோகன் கூறியதாவது: தொழில்நுட்ப தடைகளை நிவர்த்தி செய்து, 2ம் தெர்மல் விரிவாக்கத்தின், ... |
| 'பயிர் கடன் வட்டி உயர்வால் விவசாயிகள் வேதனை' Posted: சென்னை: 'பயிர் கடனுக்கு வட்டி உயர்த்தப்பட்டுள்ளதால், விவசாயிகளின் வேதனை பெருகுகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை: வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கிய, பயிர் கடன்களுக்கான வட்டி விகிதம், ஒன்பது சதவீதம் என்பதை, 11 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதுவரை மத்திய அரசு வழங்கி வந்த, வட்டி மானியத்தை அடியோடு ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக, இதுவரை நான்கு சதவீத வட்டிக்கு பயிர் கடன் பெற்று வந்த விவசாயிகள், இனிமேல், ஏழு சதவீத வட்டியை செலுத்த வேண்டும். இதுபற்றிய அறிவிப்பை, மத்திய அரசு வெளிப்படையாக ... |
| மாணவர்களை கண்டித்து திருத்த உரிமை வேண்டும்: அரசுக்கு தனியார் பள்ளிகள் வேண்டுகோள் Posted: சென்னை: 'மாணவர்களை கண்டித்து, திருத்தும் உரிமையை ஆசிரியர்களுக்கு, அரசு வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. சங்கத்தின், வெள்ளி விழா மாநாடு, சென்னை காமராஜர் அரங்கில், நேற்று நடந்தது; கவர்னர் ரோசையா சிறப்புரையாற்றினார். சங்க தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார்; பொதுச் செயலர் நந்தகுமார், துணைத் தலைவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர்.மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:* தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, ... |
| பயணிகள் உயிருடன் விளையாடிய போதை ஓட்டுனர்: 'வாட்ஸ் அப்' வீடியோவால் பாயும் நடவடிக்கை Posted: பிரபல தனியார் நிறுவன பஸ் ஓட்டுனர் ஒருவர், மது போதையில், பஸ்சை ஓட்டியதில், அதிர்ச்சி அடைந்த பயணிகள், அவரை திட்டி தீர்ப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 'வாட்ஸ் அப்'பில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவில், நிறுத்தப்பட்டிருக்கும் பஸ்சின் படிக்கட்டில், போதை ஓட்டுனர் அமர்ந்து உள்ளார்; அவரை பயணிகள் சூழ்ந்து திட்டி தீர்க்கின்றனர். பதிலுக்கு அவர் குடிக்க தண்ணீர் கேட்கிறார். கோபத்தின் உச்சிக்கு சென்ற பயணிகளால் வாக்குவாதம் முற்றுகிறது. வீடியோவில், பஸ்சின் முன்பகுதியில் ஓட்டுனர் இருக்கை அருகே, மது பாட்டில் இருப்பது ... |
| கிராமங்களில் இணைய பயன்பாடு 2018ல் 28 கோடியாக உயரும் Posted: மும்பை: கிராமப்புறங்களில், இணையத்தின் பயன்பாடு, வரும், 2018ம் ஆண்டு, ஐந்து மடங்கு உயர்ந்து, 28 கோடியாக அதிகரிக்கும் என, பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் (பி.சி.ஜி.,) தெரிவித்துள்ளது. இது குறித்து, இக்குழுமம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விவரம்: இந்தியாவில், வரும், 2018ம் ஆண்டு, 55 கோடி மக்கள், இணையத்தை பயன்படுத்துவர். அதில், 28 கோடி பேர், சிறிய நகரங்கள் மற்றும் சிற்றூர்களைச் சேர்ந்தவர்களாக இருப்பர். இவர்களின் எண்ணிக்கை, 2014ல், ஆறு கோடியாக இருந்தது. இந்தியாவில், கணினியை விட, மொபைல் போன் மூலம் இணையத்தை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இது, நகர்ப்புற மற்றும் கிராமப்புற ... |
| சிம்பன்சியை மனித இனத்தில் சேர்க்க கோரி நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு Posted: நியூயார்க்: 'சிம்பன்சி' குரங்கை மனித இனத்தில் சேர்க்கும்படி, விலங்குகள் உரிமை குழு, அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 'ஆதி மனிதன்' என்னும் அடிப்படையில் வன விலங்கான சிம்பன்சியை, மனித இனத்தில் சேர்க்கக் கோரி, விலங்குகள் உரிமை குழு, நீதிமன்றத்தை அணுகியுள்ளது. அமெரிக்காவின், நியூயார்க் நகர நீதிமன்றத்தில், இது குறித்து தொடரப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: நியூயார்க் பல்கலைக்கழக ஆய்வுக்காக, இரண்டு சிம்பன்சிகள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. எந்தவித குற்றச்சாட்டும் இன்றி, யாரையும் சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைக்கக் கூடாது. ... |
| அமெரிக்க மருத்துவ துறை தலைவரானார் இந்திய வம்சாவளி விவேக் மூர்த்தி Posted: விர்ஜீனியா: இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் மூர்த்தி, அமெரிக்க மருத்துவத் துறை தலைவராக பதவி ஏற்றார். விர்ஜீனியா மாகாணம், மையர் கோட்டை ராணுவ மைதானத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் பங்கேற்று, மூர்த்திக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பகவத்கீதையின் பேரில், மூர்த்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். இதன்மூலம், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அரசாங்கத்தில், மிக உயரிய பொறுப்பு வகிக்கும், இளம் வயது, இந்திய வம்சாவளி அமெரிக்கர் என்ற சிறப்பை மூர்த்தி பெற்றுள்ளார். இந்நிகழ்ச்சியில், மூர்த்தி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 24,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |