Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"விருதுநகர் வார்டுகளில் உவர்ப்பு நீரை சுத்திகரிக்க இயந்திரம் பொருத்தப்படும்'

Posted: 23 Apr 2015 01:20 PM PDT

விருதுநகர் நகராட்சி வார்டுகளில் உவர்ப்பு நீரை சுத்திகரித்து குடிநீராக வழங்கும் இயந்திரங்கள் விரைவில் பொருத்தப்படும், என நகர்மன்றத் தலைவர் மா.சாந்தி வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஏற்றம் ஏற்படுத்துவாரா யெச்சூரி?

Posted: 23 Apr 2015 01:20 PM PDT

விசாகப்பட்டினத்தில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது தேசிய மாநாடு 62 வயதான சீதாராம் யெச்சூரியை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

கோயில் பொங்கல் திருவிழா

Posted: 23 Apr 2015 01:19 PM PDT

சிவகாசி வட்டம் வெற்றிலையூரணியில் மகாமாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

அருப்புக்கோட்டையில் இளைஞர் அடித்துக்கொலை?

Posted: 23 Apr 2015 01:18 PM PDT

அருப்புக்கோட்டையில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸார் வியாழக்கிழமை கைப்பற்றினர். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 45 ஆயிரம் தனிநபர் கழிப்பறைகள் கட்டப்படும்: திட்ட அலுவலர்

Posted: 23 Apr 2015 01:17 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் தூய்மைத் திட்டம் சார்பில் 45 ஆயிரம் தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட உள்ளதாக, திட்ட அலுவலர் பிரபாகர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்

Posted: 23 Apr 2015 01:16 PM PDT

சிவகாசி சென்ட்ரல் ரோட்டரி சங்கம், அழகன் சேவா சங்கம் ஆகியவை இணைந்து  மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாமை புதன்கிழமை நடத்தின. அழகன் காப்பக வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட உதவி ஆளுநர் பாஸ்கர்ராஜ் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் ராகேஷ்போரா வரவேற்றார்.

ராஜபாளையம் மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

Posted: 23 Apr 2015 01:15 PM PDT

ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரைப்    பூக்குழித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காவிரி பிரச்னை: உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல் புதிய அணையைக் கட்ட மாட்டோம்

Posted: 23 Apr 2015 01:14 PM PDT

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல் புதிய அணைகள் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம் என்று கர்நாடகம் உறுதியளித்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Apr 2015 01:14 PM PDT

தேர்வுக் கூடத்தில் மாணவர்கள் காப்பி அடித்தால் மேற்பார்வை செய்யும் மற்றும் தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ராஜபாளையத்தில் பட்டதாரி      ஆசிரியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரி பிரச்னை: மக்களவையில் தமிழக - கர்நாடக எம்.பி.க்கள் கடும் அமளி

Posted: 23 Apr 2015 01:14 PM PDT

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய அதிமுக எம்.பி.க்களுக்கு கர்நாடக எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.

விதிகளை மீறி  வாகனம் ஓட்டிய 62பேர் மீது வழக்கு

Posted: 23 Apr 2015 01:13 PM PDT

சிவகாசி காவல் கோட்டத்தில் விதிகளை மீறிவாகனம் ஓட்டிய 62 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குரூப் 1 பிரதான தேர்வு: ஜூன் மாதத்துக்கு மாற்றம்

Posted: 23 Apr 2015 01:12 PM PDT

தமிழகத்தில் அடுத்த மாதம் (மே) நடைபெறவிருந்த குரூப் 1 பிரதானத் தேர்வு ஜூன் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

நிலம் கையக அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு

Posted: 23 Apr 2015 01:12 PM PDT

நிலம் கையக அவசரச் சட்டத்தை கொண்டு வந்ததற்கான காரணங்களை விளக்கி, மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க மறுத்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

கூலித்தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற 4 பேர் கைது

Posted: 23 Apr 2015 01:12 PM PDT

திருத்தங்கலில் கூலித்தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி    மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாக நான்கு பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

ஆதார்: தமிழகத்தில் 55% பேரின் விவரங்கள் சேகரிப்பு

Posted: 23 Apr 2015 01:11 PM PDT

ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் திட்டத்துக்காக, தமிழகத்தில் 55 சதவீதம் பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா (படம்) தெரிவித்தார்.

வங்கி முன்பு ரூ.4 லட்சம் திருடியதாக 2 பேர் கைது

Posted: 23 Apr 2015 01:10 PM PDT

அருப்புக்கோட்டையில் நான்கு மாதங்களுக்கு முன்பு, வங்கி முன்பு    ரூ.4 லட்சம் பணத்தை திருடிய வழக்கில் 2 பேரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

தனியார் பேருந்து மோதியதில் முதியவர் சாவு

Posted: 23 Apr 2015 01:08 PM PDT

பழனி அருகே தனியார் பேருந்து மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.

விவசாயியை தற்கொலைக்குத் தூண்டியது ஆம் ஆத்மி: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு

Posted: 23 Apr 2015 01:08 PM PDT

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி பொதுக்கூட்டத்தில் பார்வையாளராக வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திர சிங்கை தற்கொலைக்குத் தூண்டியதாக பெயர் குறிப்பிடாத ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்டோர் மீது தில்லி காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

பெரியகுளத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 23 Apr 2015 01:07 PM PDT

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையில் நடக்கவிருந்த குழந்தைத் திருமணத்துக்கான ஏற்பாட்டை, சைல்டு-லைன் அமைப்பினர் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினர்.

ஓய்வு பெற்ற உறுப்பினர் ராஜீவை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்

Posted: 23 Apr 2015 01:07 PM PDT

மாநிலங்களவையில், ஓய்வு பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பி.ராஜீவை மீண்டும் அவைக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சி பேதமின்றி, அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தனர்.

பைக் மோதியதில் நடந்து சென்ற இளைஞர் சாவு

Posted: 23 Apr 2015 01:06 PM PDT

தேனி அருகே கோடாங்கிபட்டியில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில், நடந்து சென்றவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

நிலக்கோட்டையில் குளிர்பதன கிட்டங்கி அமைக்கப்படுமா

Posted: 23 Apr 2015 01:06 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வாசனைத் திரவிய தொழிற்சாலை அல்லது குளிர் பதன கிட்டங்கி அமைக்கவேண்டும் என பூ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மே முதல் வாரத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம்

Posted: 23 Apr 2015 01:05 PM PDT

பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே மாதம் முதல் வாரத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் "எய்ம்ஸ்': 2 வாரங்களில்  மத்திய அரசிடம் அறிக்கை

Posted: 23 Apr 2015 01:05 PM PDT

தமிழகத்தில் "எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய உள்ள இடம் குறித்த ஆய்வு அறிக்கை இரண்டு வாரங்களில் மத்திய அரசிடம் அளிக்கப்படும் என மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை இணைச் செயலர் தாய்த்ரி பாண்டா கூறினார்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள்: ஏப்.26 இல் சிறப்பு முகாம்

Posted: 23 Apr 2015 01:04 PM PDT

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகளுக்கான சிறப்பு முகாம் ஏப்ரல் 26, மே 10 மற்றும் மே 24ஆம் தேதிகளில் நடைபெறும் என, மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கடலை ஆலை மேலாளரைத் தாக்கி ரூ.12 லட்சம் வழிப்பறி

Posted: 23 Apr 2015 01:03 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே, வியாழக்கிழமை மாலை கடலை ஆலை மேலாளரைத் தாக்கி, ரூ. 12 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர்.

திண்டுக்கல்லில் மதுக் கடைக்கு பூட்டு: எம்எல்ஏ உள்பட 98 பேர் கைது

Posted: 23 Apr 2015 01:02 PM PDT

திண்டுக்கல்லில் வியாழக்கிழமை மதுபானக் கடைக்கு பூட்டுப்போடும் போராட்டத்தில் ஈடுபட்ட கே. பாலபாரதி எம்.எல்.ஏ. உள்பட 98 பேர் கைது செய்யப்பட்டனர்.

கம்பத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் லாரியுடன் பறிமுதல்

Posted: 23 Apr 2015 01:02 PM PDT

தடைசெய்யப்பட்ட புகையிலை பண்டல்களை, கம்பம் தனிப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

வைகை அணை அருகே லாரி-பைக் மோதல்: ஒருவர் சாவு

Posted: 23 Apr 2015 01:00 PM PDT

தேனி மாவட்டம், வைகை அணை அருகே லாரியும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒருவர் உயிரிழந்தார்.

பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் திருப்பணிகள்:  தமிழக முதல்வர் பார்வையிட்டார்

Posted: 23 Apr 2015 01:00 PM PDT

பெரியகுளம் பகுதியில் பழமையும் பிரசித்தியும் பெற்ற அருள்மிகு பாலசுப்பிரணிய சுவாமி திருக்கோயிலில் ரூ. 4 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

கண்ணகி கோயில் விழாவில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்க தடை

Posted: 23 Apr 2015 12:59 PM PDT

தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி விழாவில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்ய, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தடை விதித்துள்ளார்.

கேரளத்துக்கு கடத்திய 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

Posted: 23 Apr 2015 12:58 PM PDT

தேனி மாவட்டம் கூடலூர் அருகே வியாழக்கிழமை கேரளத்துக்கு 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆண்டிபட்டியில் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

Posted: 23 Apr 2015 12:57 PM PDT

சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஆண்டிபட்டி ஊர்காத்த மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

செக் மோசடி செய்தவருக்கு சிறை

Posted: 23 Apr 2015 12:56 PM PDT

தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த மாயாண்டி. இவரிடம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த முகமதுகனி மகன் ஜாபர் சாதிக் என்பவர் ரூ.  3 லட்சம் கடனாகப் பெற்றாராம். அதனை, மாயாண்டி திரும்ப கேட்டுள்ளார். அதற்கு, ஜாபர் சாதிக் ரூ. 3 லட்சத்துக்கான காசோலை கொடுத்துள்ளார்.

பேருந்து மோதி ஒருவர் சாவு

Posted: 23 Apr 2015 12:56 PM PDT

ஆண்டிபட்டியில் வியாழக்கிழமை மாலை பேருந்து மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆண்டிபட்டியில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை

Posted: 23 Apr 2015 12:55 PM PDT

ஆண்டிபட்டியில் வாங்கிய பணத்தை திருப்பித் தராததால், வியாழக்கிழமை இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 23 Apr 2015 12:54 PM PDT

கொடைக்கானலில் தீத்தொண்டு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு செய்முறை நிகழ்ச்சி கீழ்பூமியில் நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். தீப்பிடித்தால் எவ்வாறு தடுப்பது, தீத் தடுப்பு கருவிகளை பயன்படுத்துதல் குறித்து செய்முறைகளை தீயணைப்புத் துறையினர் செய்து காட்டினர்.

முத்துலாபுரம் மகா காளியம்மன் ஆலய குடமுழுக்கு விழா

Posted: 23 Apr 2015 12:53 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள முத்துலாபுரம் ஸ்ரீமகா காளியம்மன், பகவதி அம்மன் ஆலய குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

Posted: 23 Apr 2015 12:53 PM PDT

ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டியில் இடைநின்ற பள்ளி மாணவர்களை புதன்கிழமை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொடைக்கானல் ஏரிக்குள் விழுந்த மரங்களை அகற்றக் கோரிக்கை

Posted: 23 Apr 2015 12:52 PM PDT

கொடைக்கானல் ஏரிக்குள் விழுந்த மரங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"கரியமில வாயுவின் தாக்கத்திலிருந்து பூமியை பாதுகாக்க மரங்கள் தேவை'

Posted: 23 Apr 2015 12:51 PM PDT

கரியமில வாயுவின் தாக்கத்திலிருந்து பூமியை பாதுகாக்க அதிகமான மரங்களை வளர்க்க வேண்டும் என புவி அறிவியல் மையத் தலைவர் பா.குருஞானம் தெரிவித்தார்.

அடிப்படை வசதி ஏற்படுத்தி தராததால் தேங்கி நிற்கும் கழிவு நீரில் நாற்று நடும் போராட்டம்

Posted: 23 Apr 2015 12:50 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், மாலையகவுண்டன்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை என, அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை தேங்கி நிற்கும் கழிவு நீரில் நாற்று நடும் போராட்டத்தை நடத்தினர்.

இது யார் கவலை?

Posted: 23 Apr 2015 12:40 PM PDT

கேதார்நாத் கோயிலுக்கு ராகுல் நடைபயணம்

Posted: 23 Apr 2015 12:25 PM PDT

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மலைக் கோயிலுக்கு யாத்திரையைத் தொடங்கினார்.

"செம்மரக் கடத்தலில் தெலுங்கு நடிகைக்கு தொடர்பு'

Posted: 23 Apr 2015 12:23 PM PDT

செம்மரக் கடத்தலில் தெலுங்கு நடிகை ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து, அவரது தொடர்புகள் குறித்து ஆந்திர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஜேந்திர சிங்கின் இறுதிச் சடங்கில் பங்கேற்காத பாஜக, ஆம் ஆத்மி தலைவர்கள்

Posted: 23 Apr 2015 12:22 PM PDT

தில்லி ஜந்தர் மந்தரில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயி கஜேந்திர சங்கின் இறுதிச் சடங்கில் பாஜக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்கவில்லை.

பாதுகாப்பு அமைச்சர் வீட்டை சோதனையிடும் உத்தரவுக்கு தடை

Posted: 23 Apr 2015 12:22 PM PDT

மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரின் வீட்டில் சோதனையிடுமாறு பனாஜி கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு கோவா மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.

தூத்துக்குடி

Posted: 23 Apr 2015 12:20 PM PDT

நாகர்கோவில்

Posted: 23 Apr 2015 12:20 PM PDT

இன்று 4 இடங்களில் அம்மா திட்ட முகாம்

Posted: 23 Apr 2015 12:19 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஏப். 24) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தீர்ப்பு வரும் வரை நீதிபதிகளை ஆணையம் நியமிக்காது

Posted: 23 Apr 2015 12:19 PM PDT

நீதிபதிகள் நியமன தேசிய ஆணையமானது சட்டரீதியாக செல்லத்தக்கதா என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை, நீதிபதிகளை அந்த ஆணையம் நியமிக்காது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

சாத்தான்குளத்தில் மரம் வளர்ப்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

Posted: 23 Apr 2015 12:19 PM PDT

சாத்தான்குளம் வட்டத்தில், மரக்கன்று நட்டு சிறப்பாக வளர்த்த விவசாயிக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

அதிசயபுரம் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு

Posted: 23 Apr 2015 12:18 PM PDT

அதிசயபுரம் பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்தார்.

சத்தீஸ்கரில் நக்ஸல் இயக்க தலைவர் சுட்டுக் கொலை

Posted: 23 Apr 2015 12:18 PM PDT

சத்தீஸ்கர் மாநிலம், கொன்டாகாவ்ன் மாவட்டத்தில் நக்ஸல் தீவிரவாதிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே வியாழக்கிழமை காலை நடந்த சண்டையில் நக்ஸல் அமைப்பின் முக்கியத் தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

382 கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும்

Posted: 23 Apr 2015 12:17 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் 50 ஊராட்சிகளில் உள்ள 382 கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார் ஆட்சியர் ம. ரவிகுமார்.

கோடைக்கால பயிற்சி முகாம் தொடக்கம்

Posted: 23 Apr 2015 12:17 PM PDT

தூத்துக்குடியில் கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம் சிவன் கோயில்களில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

Posted: 23 Apr 2015 12:16 PM PDT

தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம் சிவன் கோயில்களில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

குடிமைப் பணி நேர்முகத் தேர்வு: இணையத்தில் அழைப்புக் கடிதம்

Posted: 23 Apr 2015 12:16 PM PDT

"2014-ஆம் ஆண்டின் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதத்தை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்; அவர்களுக்கு கடிதம் அனுப்பப்படாது' என்று மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 23 Apr 2015 12:15 PM PDT

நாலாட்டின்புத்தூர் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஐ.எஸ். பிடியிலுள்ள இந்தியர்களை மீட்பதற்கு உதவ கத்தார் அரசு உறுதி

Posted: 23 Apr 2015 12:15 PM PDT

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள இந்தியர்களை மீட்பதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக கத்தார் அரசு உறுதியளித்துள்ளது என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்தார்.

ஜம்மு சிறைக்கு மஸரத் ஆலம் மாற்றம்

Posted: 23 Apr 2015 12:14 PM PDT

பிரிவினைவாதத் தலைவர் மஸரத் ஆலம் மீது, பொது அமைதிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் பலியான உலமாக்கள் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதி

Posted: 23 Apr 2015 12:14 PM PDT

திண்டுக்கல் அருகே விபத்தில் இறந்த பள்ளப்பட்டி மார்க்க அறிஞர்கள் (உலமாக்கள்) குடும்பத்தினருக்கு காயல்பட்டினம் மக்கள் சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

மாவோயிஸ்ட் தலைவர் பாண்டா சிறையில் மீண்டும் உண்ணாவிரதம்

Posted: 23 Apr 2015 12:14 PM PDT

ஒடிஸா மாநிலம், பெர்ஹாம்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட் தலைவர் சப்யசாச்சி பாண்டா சிறையில் புதன்கிழமை முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

சமநிலை இணைய சேவை: ஏப்ரல் 27-இல் ஆலோசனைக் கூட்டம்

Posted: 23 Apr 2015 12:13 PM PDT

சமநிலை இணைய சேவை தொடர்பாக, பன்முக ஆலோசனைக் குழு (எம்ஏஜி) கூட்டம், வரும் 27ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய தொலைதொடர்புத் துறை அறிவித்துள்ளது.

சிக்கனத்தைக் கடைப்பிடியுங்கள்: முப்படைகளுக்கு பாரிக்கர் வலியுறுத்தல்

Posted: 23 Apr 2015 12:13 PM PDT

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளும் நிதி விவகாரத்தில் சிக்கனத்தையும் எச்சரிக்கை உணர்வையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் வலியுறுத்தினார்.

முதியவர் சாவு

Posted: 23 Apr 2015 12:12 PM PDT

கோவில்பட்டியையடுத்த வானரமுட்டியில் அதிக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற முதியவர் மருத்துவமனையில் இறந்தார்.

தொலைபேசியில் இரவு நேர அழைப்புகள் இலவசம்

Posted: 23 Apr 2015 12:12 PM PDT

பி.எஸ்.என்.எல். தொலைபேசி மூலம் நாடு முழுவதிலுமுள்ள அனைத்துத் தொலைபேசி, செல்லிடப்பேசிகளுக்கும் இரவு நேரத்தில் இலவசமாகத் தொடர்பு கொண்டு பேசும் வசதியை அந்த நிறுவனம், வரும் மே 1ஆம் தேதி முதல் வழங்க உள்ளது.

கஞ்சா விற்பனை: ஒருவர் கைது

Posted: 23 Apr 2015 12:12 PM PDT

திருச்செந்தூரில் கஞ்சா விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

"உரிய பரிசீலனைக்குப் பிறகே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்'

Posted: 23 Apr 2015 12:11 PM PDT

"கவனத்துடன் கூடிய உரிய பரிசீலனைக்குப் பிறகே, மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்' என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கெளடா வியாழக்கிழமை தெரிவித்தார்.

உப்பளத் தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம்

Posted: 23 Apr 2015 12:11 PM PDT

தூத்துக்குடி அருகே உப்பளத் தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

காசநோயாளிகளின் உதவிக்காக விரைவில் இலவசத் தொலைபேசி சேவை

Posted: 23 Apr 2015 12:11 PM PDT

காசநோயாளிகளின் உதவிக்காக இலவசத் தொலைபேசி சேவையை மத்திய அரசு தொடங்க உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 23 Apr 2015 12:10 PM PDT

கயத்தாறு அருகே இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்: லாரி ஓட்டுநர் கைது

Posted: 23 Apr 2015 12:09 PM PDT

தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு செல்லிடப்பேசி கோபுரம் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

விளாத்திகுளம் அருகே வீட்டில் திருட்டு: இருவர் கைது

Posted: 23 Apr 2015 12:09 PM PDT

விளாத்திகுளம் அருகே வடக்குசெவல் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற இருவரை சூரன்குடி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

கோவில்பட்டியில் சர்வதேச புத்தக தின விழா

Posted: 23 Apr 2015 12:08 PM PDT

சர்வதேச புத்தக தின விழா கயத்தாறு மற்றும் கோவில்பட்டி கிளை நூலகத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பட்டதாரி ஆசிரியர் கழகக் கூட்டம்

Posted: 23 Apr 2015 12:07 PM PDT

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் குமரி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரம்மோத்ஸவம் கொடியேற்றம்

Posted: 23 Apr 2015 12:06 PM PDT

பிரம்மோத்ஸவத்தை ஒட்டி, வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

புலவர்விளை கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று தொடக்கம்

Posted: 23 Apr 2015 12:06 PM PDT

புலவர்விளை ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயிலில் 12 நாள் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை  (ஏப்.24) தொடங்குகிறது.

ஓய்வு பெற்ற அலுவலர் மீது தாக்குதல்:இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

Posted: 23 Apr 2015 12:06 PM PDT

வேலூர் அருகே ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியரைத் தாக்கிய வழக்கில், இருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

குடிநீர் கோரி சாலை மறியல்

Posted: 23 Apr 2015 12:05 PM PDT

குடிநீர் கோரி அரக்கோணம் அருகே முருங்கை கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினர்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நல உதவிகள்

Posted: 23 Apr 2015 12:05 PM PDT

கன்னியாகுமரியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மகிழ்ச்சி மாதா விசைப்படகு சங்கம் சார்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தற்கொலைத் தாக்குதல்: இராக்கில் 8 யாத்ரீகர்கள் பலி

Posted: 23 Apr 2015 12:05 PM PDT

இராக்கில் புனித யாத்திரை மேற்கொண்டவர்களைக் குறிவைத்து புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 8 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர்.

வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு

Posted: 23 Apr 2015 12:05 PM PDT

வேலூர் நகரில் பல ஆட்டோக்கள் சரியான உரிமம் இன்றி இயங்குவதாக வந்த புகாரின்பேரில், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டு, உரிய ஆவணங்கள் இல்லாத 6 ஆட்டோக்களைப் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் உடல்நிலையில் முன்னேற்றம்

Posted: 23 Apr 2015 12:05 PM PDT

உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு

Posted: 23 Apr 2015 12:04 PM PDT

நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தை கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.

புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு

Posted: 23 Apr 2015 12:04 PM PDT

வேலூர் சிஎம்சி அருகே காட்பாடி செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிக்னலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி வியாழக்கிழமை இயக்கி வைத்தார்.

கல்லூரி துணை முதல்வர் பொறுப்பேற்பு

Posted: 23 Apr 2015 12:04 PM PDT

வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியின் துணை முதல்வராக அமைப்பியல் துறைத் தலைவர் ஜே.ஸ்ரீராம்பாபு பொறுப்பேற்றார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அமெரிக்க அரசு தலைமை மருத்துவராக பதவியேற்பு

Posted: 23 Apr 2015 12:04 PM PDT

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி அமெரிக்க அரசின் தலைமை மருத்துவராக முறைப்படி புதன்கிழமை பதவியேற்றார்.

ஏப். 26-இல் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள்

Posted: 23 Apr 2015 12:04 PM PDT

வேலூர் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் அரக்கோணத்தில் வருகிற 26-ஆம் தேதி நடைபெற உள்ளன.

ஓய்வு பெற்ற பெண் உதவி ஆய்வாளரை கட்டிப் போட்டு 9 பவுன் நகை கொள்ளை

Posted: 23 Apr 2015 12:04 PM PDT

ஆம்பூரில் ஓய்வு பெற்ற பெண் உதவி ஆய்வாளரை பட்டப்பகலில் கட்டிப்போட்டு,

தக்கலையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Apr 2015 12:04 PM PDT

தக்கலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: பயணிகள் காயம்

Posted: 23 Apr 2015 12:03 PM PDT

குடியாத்தம் அருகே ரயில்வே மேம்பாலத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 ஓட்டுநர்கள் உள்பட 20 பயணிகள் காயமடைந்தனர்.

யேமன் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டால் மீண்டும் தாக்குதல்: சவூதி எச்சரிக்கை

Posted: 23 Apr 2015 12:03 PM PDT

யேமனில் கிளர்ச்சியாளர்கள் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அங்கு கூட்டுப் படையின் வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கும் என்று சவூதி அரசு எச்சரித்துள்ளது.

பூரண மது விலக்கை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்: காங்கிரஸ்

Posted: 23 Apr 2015 12:03 PM PDT

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் கிராமங்கள், ஒன்றியங்கள், நகரங்கள், மாநகரங்களில் கையெழுத்து இயக்கம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குமரியில் 3 நாள் புத்தகத் தேர் பவனி தொடக்கம்

Posted: 23 Apr 2015 12:03 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் புத்தகத் தேர்பவனியை வியாழக்கிழமை தொடங்கினர்.

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்

Posted: 23 Apr 2015 12:03 PM PDT

நியூஸிலாந்து தலைநகரம் வெலிங்டனில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாகிஸ்தான் பிரதமர் சவூதிக்கு திடீர் பயணம்

Posted: 23 Apr 2015 12:02 PM PDT

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், சவூதிக்கு வியாழக்கிழமை திடீர் பயணம் மேற்கொண்டார்.

வேளாண்மை வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 23 Apr 2015 12:02 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வேளாண்மை வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா.சவான் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஏ.டி.எம். மையத்தில் கண்ணாடி உடைப்பு

Posted: 23 Apr 2015 12:02 PM PDT

நாகர்கோவிலையடுத்த ஆரல்வாய்மொழி} குலசேகன்புதூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடிக் கதவுகளை உடைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Posted: 23 Apr 2015 12:01 PM PDT

நாகர்கோவில் நகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை சுகாதார அலுவலர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™