Tamil News | Online Tamil News |
- ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட் வேகம்: 3 நீதிபதி அமர்வுக்கு பெயர்கள் அறிவிப்பு
- மோடி கனடா பயணத்தால் ரூ.8,000 கோடி வர்த்தக வாய்ப்பு
- விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்க உறுதியான போராட்டம்: காங்., துணை தலைவர் ராகுல் அறிவிப்பு
- பல வங்கிகளில் கணக்குகள் வைத்திருந்தால் தெரிவிப்பது கட்டாயம்: வெளிநாட்டு பயண விவரமும் தர வரிகள் வாரியம் உத்தரவு
- சிறப்பு பொருளாதார மண்டலங்கள் நிலை தள்ளாட்டம்: தோல்வியை நோக்கி செல்லும் பரிதாபம்
- 24 மணி நேரத்தில் உச்ச நீதிமன்ற அமர்வா?கருணாநிதி கேள்வி
- அ.தி.மு.க., முகாமில் அமைதி நிலவ என்ன காரணம்? அடுத்த கட்டம் பற்றி அடுக்கடுக்கான கேள்விகள்
- மின் வாரியத்தின் கடன் ரூ.1 லட்சம் கோடி : அதிக விலை கொள்முதலால் நிலைமை மோசம்
- சி.பி.சி.ஐ.டி., போலீசார் உண்மைகளை மறைக்கின்றனர்: கனிமொழியிடம் முறையிட்ட முத்துக்குமாரசாமி குடும்பம்
- கூலிப்படைகளை அடக்க சிறப்பு போலீஸ் படை தயார்: தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அமைகிறது
- அமைச்சர்களுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை 'கட்'
| ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட் வேகம்: 3 நீதிபதி அமர்வுக்கு பெயர்கள் அறிவிப்பு Posted: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமனம் குறித்த வழக்கு வேகம் பிடித்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்க, மூன்று நீதிபதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்கள், வரும், 21ம் தேதி, விசாரணையை துவக்குகின்றனர். சொத்து குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் லோகூர், பானுமதி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.'அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமனம் செல்லாது' என, ... |
| மோடி கனடா பயணத்தால் ரூ.8,000 கோடி வர்த்தக வாய்ப்பு Posted: புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கனடா பயணத்தால், இரு நாடுகளுக்கும் இடையே, 8,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு வர்த்தகம் நடக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. |
| விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்க உறுதியான போராட்டம்: காங்., துணை தலைவர் ராகுல் அறிவிப்பு Posted: புதுடில்லி: இரண்டு மாத வெளிநாட்டுப் பயணத்திற்குப் பின், டில்லி திரும்பியுள்ள, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், நேற்று பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார். டில்லியில் இன்று நடக்கும் பிரமாண்ட விவசாயிகள் பேரணியிலும் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். பார்லிமென்டின் முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் கூட பங்கேற்காமல், பிப்ரவரி, 16ம் தேதியே வெளிநாட்டிற்குச் சென்று விட்ட காங்., துணைத் தலைவர் ராகுல், கடந்த, 17ம் தேதி தான் டில்லி திரும்பி வந்தார். இதையடுத்து, நேற்று முதல் தன் அரசியல் பணிகளைத் துவக்கினார். மத்திய அரசின் நிலம் ... |
| Posted: புதுடில்லி: வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை மீட்க, பல நடவடிக்கைகளை எடுத்துள்ள மத்திய அரசு, உள்நாட்டில் கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும், வியூகங்களை வகுத்து வருகிறது. அவற்றில் ஒன்றாக, 'ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்போர், பல வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அவை குறித்த விவரங்களை வருமான வரித் துறைக்கு தெரிவிக்க வேண்டும். இது, கட்டாயம்' என, மத்திய நேர்முக வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. நடப்பு, 2015 - 16ம் நிதியாண்டிற்காக, புதிய வருமான வரி தாக்கல் படிவத்தை, மத்திய நேர்முக வரிகள் வாரியம் ... |
| சிறப்பு பொருளாதார மண்டலங்கள் நிலை தள்ளாட்டம்: தோல்வியை நோக்கி செல்லும் பரிதாபம் Posted: வரி சலுகைகள் நிறுத்தப்படுவது முதல், விதிமுறை சிக்கல்கள் வரை, பல காரணங்களால், தமிழகத்திலும், நாடு முழுவதும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தோல்வியை நோக்கி தள்ளப்பட்டு வருகின்றன.ஏற்றுமதியை ஊக்குவித்து, அன்னிய செலாவணியை ஈட்டவும், வேலை வாய்ப்பை பெருக்கவும் குறிப்பிட்ட இடங்களில் உலக தரம் வாய்ந்த தொழில் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதையே,சிறப்பு பொருளாதாரமண்டலங்கள் (ஸ்பெஷல்எகனாமிக் ஸோன்ஸ்- - எஸ்.இ.இசட்.,) என்கின்றனர்.உலகில் பல நாடுகளில்,சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தாராளமான சட்டங்கள் மற்றும் சலுகைகளை பெற்று வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ... |
| 24 மணி நேரத்தில் உச்ச நீதிமன்ற அமர்வா?கருணாநிதி கேள்வி Posted: சென்னை : 'பெரிய அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கையில், ஜெயலலிதா வழக்கில் மட்டும், 24 மணி நேரத்தில், உச்ச நீதிமன்றம், பெரிய அமர்வை அமைத்தது எப்படி?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவது குறித்து, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வேறுபட்ட கருத்து தெரிவித்ததால் வழக்கு, அதைவிட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுபோல், பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்ட பல வழக்குகளுக்கு, இதுவரை பெரிய அமர்வு ... |
| அ.தி.மு.க., முகாமில் அமைதி நிலவ என்ன காரணம்? அடுத்த கட்டம் பற்றி அடுக்கடுக்கான கேள்விகள் Posted: ஜெயலலிதாவின், 'அப்பீல்' வழக்கில், எந்த நேரத்திலும் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்த்த வேளையில், உச்ச நீதிமன்ற உத்தரவுகள் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. இவ்விவகாரத்தில், அடுத்த கட்டங்கள் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளதால், ஆளும் கட்சி வட்டாரம் அமைதியில் மூழ்கி உள்ளது. |
| மின் வாரியத்தின் கடன் ரூ.1 லட்சம் கோடி : அதிக விலை கொள்முதலால் நிலைமை மோசம் Posted: தனியாரிடம், அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால், தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன், ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டும் என, தெரிகிறது. தமிழ்நாடு மின் வாரியம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்; மின் தொடரமைப்பு கழகம் என்ற நிறுவனங்களாக செயல்படுகிறது. மின் கட்டணம் வசூலித்தல், அரசு மானியம் போன்றவற்றின் மூலம், மின் வாரியத்திற்கு வருவாய் கிடைக்கிறது. மின் கொள்முதல், எரிபொருள், மின் தொடரமைப்பு, பழுது மற்றும் பராமரிப்பு, ஊழியர் சம்பளம் உள்ளிட்டவைக்கு, மின் வாரியம் செலவு செய்கிறது. வருவாயை விட செலவு அதிகம் இருப்பதால், பற்றாக்குறையை சமாளிக்க, மின் ... |
| சி.பி.சி.ஐ.டி., போலீசார் உண்மைகளை மறைக்கின்றனர்: கனிமொழியிடம் முறையிட்ட முத்துக்குமாரசாமி குடும்பம் Posted: நெல்லை வேளாண் அதிகாரி, முத்துக்குமாரசாமி தற்கொலை செய்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார், உண்மைகளை மூடி மறைக்கப் பார்ப்பதாக, அதிகாரி குடும்பத்தினர், தி.மு.க., - எம்.பி., கனிமொழியிடம் முறையிட்டுள்ளனர். இதுகுறித்து, முத்துக்குமாரசாமி குடும்பத்தினர் கூறியதாவது: |
| கூலிப்படைகளை அடக்க சிறப்பு போலீஸ் படை தயார்: தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அமைகிறது Posted: கூலிப்படைகளின் கொட்டத்தை அடக்க, முதற்கட்டமாக, தமிழகத்தில், 20 மாவட்டங்களில், சிறப்பு போலீஸ் படை உருவாக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்து விட்டு, வெளிமாநிலங்களுக்கு தப்பி செல்பவர்கள், வெளி மாநிலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட, தமிழகத்தில் இருந்து கூலிப்படையாக செயல்படுபவர்களை தடுப்பது தான், இந்த படையின் நோக்கம்.தமிழகத்தில் தினசரி, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. சில சமயம், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகளை, பணயத் தொகை கேட்டு கடத்துதல், இளம் பெண்களை கடத்தி கற்பழித்து கொலை செய்தல், திட்டமிட்டு அரசியல் தலைவர்களை கொலை செய்தல் போன்ற ... |
| அமைச்சர்களுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை 'கட்' Posted: மும்பை:மாநில முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் போலீஸ் அணிவகுப்பு மரியாதைக்கு தடை விதிக்க, மகாராஷ்டிர மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.மகாராஷ்டிராவில், பா.ஜ., முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான கூட்டணி அரசு உள்ளது. வி.ஐ.பி., கலாசாரத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் பட்னாவிஸ், அவர்களுக்கு வழங்கப்படும் அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற உத்தரவிட்டார். இதன் மூலம், 'சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில், போலீசார் திறம்படச் செயல்பட முடியும்' என்றார். இந்நிலையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல், இன்று வரை அமலில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஏப்ரல் 19,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |