Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மாறன் சகோதரர்களின் ரூ.742 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

Posted:

புதுடில்லி: ஏர்செல் - மேக்சிஸ் நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, அவர் அண்ணன் கலாநிதி ஆகியோருக்கு சொந்தமான, 742 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, மத்திய அமலாக்கத் துறை, நேற்று முடக்கியுள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த தயாநிதி, 2006ல், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, அவரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ஏர்செல் - மேக்சிஸ் முறைகேட்டை மேற்கொண்டார் என்பது அவர் மீது, அமலாக்க இயக்குனரகம் கூறும் குற்றச்சாட்டு.

மறைமுக உதவி:
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனிடம் இருந்த, ...

பல்கலை மானிய குழு கலைப்பு?மத்திய அரசு அதிரடி திட்டம்

Posted:

புதுடில்லி : 'பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., தான் செய்ய வேண்டிய பணிகளை செய்யாமல் தோல்வி அடைந்து விட்டது; அதை கலைக்கலாம்' என, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்த ஆய்வு குழு பரிந்துரை செய்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செயல்பாடுகள்:
நாடு முழுவதும் உள்ள பல்கலை கழகங்கள், அவற்றின் கீழ் உள்ள கல்லூரிகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பது, அவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பது, அவற்றுக்கு தர நிர்ணயம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்வதற்காக, கடந்த 1956ல், பல்கலை மானிய குழு அமைக்கப்பட்டது. பல்கலை கழகங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, அரசு பல்கலை ...

ரயில்வே வாரியம், கார்ப்பரேட் நிறுவனங்களைப் போன்று செயல்பட வேண்டும்: தேப்ராய் கமிட்டி பரிந்துரை

Posted:

புதுடில்லி: ரயில்வே துறையில், பெரும் மாற்றங்களை கொண்டு வருவதற்கான பரிந்துரைகளை, பொருளாதார நிபுணர் விவேக் தேப்ராய் தலைமையிலான கமிட்டி, மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.பா.ஜ.,வின் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி பதவியேற்ற பின், அனைத்து துறைகளையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டது.ரயில்வே துறையை மேம்படுத்துவதற்காக, பொருளாதார நிபுணர் விவேக் தேப்ராய் தலைமையில், ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்த கமிட்டி சமர்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:*ரயில்வே துறையின் நிர்வாகத்தில் இருந்து, பள்ளி மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தை தனியாக பிரிக்க ...

வேலைவாய்ப்பு, ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு சுறுசுறுப்பு: ஐந்தாண்டுக்கான வெளிநாட்டு வர்த்தக கொள்கை வெளியீடு

Posted:

புதுடில்லி: நடப்பு, 2015 முதல் 2020 வரையிலான காலத்தில், நாட்டின் வெளிநாட்டு; வர்த்தகத்தை மேம்படுத்த, என்னென்ன திட்டங்கள் கையாளப்படும், எவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன, எந்தெந்த சட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன என்பதை தெளிவாக விளக்கும், வெளிநாட்டு வர்த்தக கொள்கை நேற்று வெளியிடப்பட்டது. அதை வெளியிட்டு பேசிய, மத்திய, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ''இந்த புதிய கொள்கை, நாட்டின் வளர்ச்சியை அபரிமிதமாக ஆக்கும்,'' என உறுதியளித்தார்.வெளிநாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட, ஏராளமான தொழில் ஆர்வலர்கள் ஆர்வமாக இருந்தாலும், ...

சீனா அச்சுறுத்தலால் இந்தியாவின் கோரிக்கையை ஏற்க பூடான் நடுக்கம்

Posted:

கவுகாத்தி : அசாம் மாநிலத்தையும், அருணாச்சல பிரதேச மாநிலத்தையும் இணைக்கும் வகையிலான சாலையை அமைக்கும்படி, பூடான் அரசிடம், மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தி உள்ளது. ஆனால், சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக, இந்த சாலையை அமைப்பதற்கு, பூடான் தயக்கம் தெரிவித்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களான அசாமின் கவுகாத்திக்கும், அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கிற்கும் இடையே, நீண்ட காலமாக வர்த்தக ரீதியான போக்குவரத்து உள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு, இந்த வர்த்தக போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆனால், தற்போது ...

சுரங்கங்களை ஏலம் விட்டு சேர்த்த நிதி எவ்வளவு? மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி கேள்வி

Posted:

ரூர்கேலா : ''இருபது நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டு, இரண்டு லட்சம் கோடி ரூபாயை, நாங்கள் திரட்டி உள்ளோம்; முந்தைய காங்., அரசு, 204 நிலக்கரி சுரங்கங்களை, தனியாருக்கு தாரை வார்த்து சேர்த்த நிதி எவ்வளவு... அந்த நிதி எங்கே போனது என்பதை தெரிவிக்க முடியுமா?'' என, பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.ஒடிசாவில், ரூர்கேலா ஸ்டீல் தொழிற்சாலையில், 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விரிவாக்கம் மற்றும் நவீனமய திட்டங்களை, பிரதமர் மோடி, நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஏற்கனவே, சிறப்பான முறையில் செயல்பட்டு வரும், அந்த ஸ்டீல் தொழிற்சாலையின் விரிவாக்க திட்டங்களை துவக்கி வைக்க, ...

அப்பாடா... தப்பித்தார் மன்மோகன்! சி.பி.ஐ., கோர்ட் சம்மனுக்கு தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

Posted:

புதுடில்லி: தனியார் நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கியதில், முறைகேடு நடந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, 82, 'குற்றம் சாட்டப்பட்டவர்' என தெரிவித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், கடந்த மாதம் அவருக்கு பிறப்பித்திருந்த சம்மனுக்கு, நேற்று தடை விதித்த சுப்ரீம் கோர்ட், மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது.காங்கிரசை சேர்ந்த மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரை, 10 ஆண்டு கள் பிரதமராக இருந்தார். 2005ல், நிலக்கரித் துறையை அவர் கவனித்து வந்த போது, பிரபல தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான, 'ஹிண்டால்கோ' நிறுவனத்திற்கு, ...

சோனியா கறுப்பா இருந்தா கட்சி தலைவர் ஆகியிருப்பாரா?

Posted:

புதுடில்லி : ''சோனியா, நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவராக இருந்து, கறுப்பு நிறத்தவராக இருந்திருந்தால், ராஜிவ் தான் அவரை திருமணம் செய்திருப்பாரா? காங்கிரசார் தான் அவரை தலைவராக தேர்ந்தெடுத்திருப்பரா?'' என, அதிரடியாக கேள்வி எழுப்பி, சர்ச்சைக்குள் தானாக சிக்கிக் கொண்டுள்ளார், மத்திய அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த கிரிராஜ் சிங், 63.டில்லியில் நேற்று நிருபர்களை சந்தித்த அவர் மேலும், ''மலேசிய விமானம் சமீபத்தில் காணாமல் போனது போல, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலையும் நீண்ட காலமாக காணவில்லை,'' என்று கூறி, காங்கிரசாரின் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்து ...

மானியங்களுக்கு ரூ.59,185 கோடி ஒதுக்கீடு ஏன்? முதல்வர் பன்னீர்செல்வம் விளக்கம்

Posted:

சென்னை : ''மானியங்களுக்கும், உதவித் தொகைகளுக்கும், 59,185 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதை குறை கூறுவோர், அதில் வறுமை ஒழிப்பு முதல், மக்கள் நல்வாழ்வு திட்டங்களும் அடங்கியுள்ளதை ஆராய்ந்து, அதன்பின் கருத்து சொல்ல வேண்டும்,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சட்டசபையில், அவர் கூறியதாவது:முதியோர் உதவித்தொகை வழங்க, பட்ஜெட்டில், 4,206 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் யாருக்கும், முதியோர் உதவித்தொகை மறுக்கப்படாது.முதியோர் உதவித்தொகை திட்டத்தில், தகுதியான நபர்கள் சேர்க்க வேண்டி இருந்தாலோ, விடுபட்டிருந்தாலோ, தகுதியிருந்தும் ...

பொய் செய்தி ஒளிபரப்புவதை நிறுத்துங்க: 'டிவி' சேனல்கள் மீது காஷ்மீர் மக்கள் காட்டம்

Posted:

ஸ்ரீநகர்: 'வெள்ளம் வடிந்த பின்னும், சில, 'டிவி' சேனல்கள் தொடர்ந்து பொய் செய்திகளை ஒளிபரப்புகின்றன. இதனால், சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை குறைந்து, எங்களின் பிழைப்பு பாதிக்கப்படுகிறது' என, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர் முப்தி முகமது சயீத் தலைமையிலான பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்தாண்டை போலவே இந்தாண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை, 17 பேர் இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிஉள்ளது. இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள், சுற்றுலா ...

அரசு பணம் ரூ.6.20 கோடி காலி

Posted:

பனாஜி: கோவாவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.,வின் நான்கு எம்.எல்.ஏ.,க்கள், வெளிநாடுகளில் உல்லாச சுற்றுப் பயணம் மேற்கொண்டதற்காக, கடந்த இரு ஆண்டுகளில் மட்டும், அரசு கஜானாவிலிருந்து, 6.20 கோடி ரூபாய் தாரை வார்க்கப்பட்டு உள்ளது. கோவா அமைச்சர்கள், மக்கள் பணத்தை, உரிய அனுமதியில்லாமல் கணக்கு வழக்கின்றி செலவழித்து வருவதாக, கோவா சட்டசபையின் சுயேச்சை உறுப்பினரான, விஜய் சர்தேசாய் குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், கோவா அரசு தெரிவித்துள்ளதாவது: சுற்றுலாத் துறை அமைச்சர் திலிப் பருலேக்கர், தொழில் துறை அமைச்சர் மாதேவ் நாசிக், துணை ...

சமாஜ்வாதி ஜனதாதளம்: ஜனதா பரிவாருக்கு புதிய பெயர்

Posted:

பாட்னா: பீகாரில் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள சட்ட சபை தேர்தலுக்காக, ஒன்றிணைய முடிவு செய்துள்ள, ஜனதா பரிவார் கட்சிகள், 'சமாஜ்வாதி ஜனதாதளம்' அல்லது 'சமாஜ்வாதி ஜனதா கட்சி' என்ற பெயரில் இயங்க உள்ளதாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தெரிவித்து உள்ளது.மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் டில்லி தவிர்த்து, பிற மூன்று மாநிலங்களையும், பா.ஜ., கைப்பற்றியது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகாரில், இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™