Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க ரூ.50 கோடி ஒதுக்க அரசுக்கு கோரிக்கை

Posted: 08 Apr 2015 01:31 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக தமிழக  அரசு ரூ.50 கோடி சிறப்புநிதி ஒதுக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகாசி காய்கறிச் சந்தையில் புதிதாக 20 சுமைதூக்கும் தொழிலாளர்களை நியமிக்க முடிவு

Posted: 08 Apr 2015 01:30 PM PDT

சிவகாசி நகராட்சி காய்கறிச்சந்தையில் ஏற்கனவே இருந்த சுமைதூக்கும் தொழிலாளர்களை நீக்கிவிட்டு, புதிதாக 20 தொழிலாளர்களை நியமிக்க காவல்துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் புதன்கிழமை முடிவு செய்யப்பட்டது.

புள்ளியல் துறை அலுவலர்கள் 25 ஆண்டுகளுக்குப்பின் சந்திப்பு

Posted: 08 Apr 2015 01:29 PM PDT

தமிழக புள்ளியல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலர்கள் 25 ஆண்டுகளுக்குப்பின் காரியாபட்டியில் புதன்கிழமை சந்தித்துக் கொண்டனர்.

பெண்களை கேலி செய்தவரை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்

Posted: 08 Apr 2015 01:28 PM PDT

நவாஸூக்கு மோடி நன்றி

Posted: 08 Apr 2015 01:27 PM PDT

உள்நாட்டு கலவரம் நடைபெற்று வரும் யேமனில் இருந்து 11 இந்தியர்களை பாகிஸ்தான் படைகள் மீட்டதற்காக, அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை நன்றி தெரிவித்தார்.

விருதுநகரில் தினமும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்க கோரிக்கை

Posted: 08 Apr 2015 01:27 PM PDT

விருதுநகர் நகராட்சிப் பகுதியில் குடிநீர் விநியோகத்திலுள்ள குளறுபடிகளை நீக்கி, தினமும் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய ஹிந்துத்துவ அமைப்பை தொடங்கினார் சுவாமி

Posted: 08 Apr 2015 01:26 PM PDT

பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி "விராட் ஹிந்துஸ்தான் சங்கம்' என்னும் புதிய ஹிந்துத்துவ அமைப்பை, புதன்கிழமை தொடங்கினார்.

வத்திராயிருப்பு பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட 10 பேர் கைது

Posted: 08 Apr 2015 01:26 PM PDT

வத்திராயிருப்பு பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக 10 பேர்  புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பாஜக பிரமுகர் மர்மச் சாவு

Posted: 08 Apr 2015 01:26 PM PDT

மேற்கு வங்க மாநிலம், துப்குரி நகர் அருகே காட்டுப் பகுதியில், பாஜக பிரமுகர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.

யேமனில் இருந்து பாகிஸ்தானால் மீட்கப்பட்ட 4 தமிழர்கள் தில்லி திரும்பினர்

Posted: 08 Apr 2015 01:25 PM PDT

யேமன் நாட்டிலிருந்து பாகிஸ்தானால் மீட்கப்பட்ட 4 தமிழர்கள் உள்பட 11 இந்தியர்கள் கராச்சியில் இருந்து புதன்கிழமை இரவு, விமானம் மூலம் தில்லிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.

எட்டு கிராமங்களில் பொதுவிநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம்

Posted: 08 Apr 2015 01:25 PM PDT

விருதுநகர் மாவட்டத்திலுள்ள எட்டு கிராமங்களில், பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

கீதைப் போட்டியில் வென்ற முஸ்லிம் மாணவிக்கு ஆளுநர் பாராட்டு

Posted: 08 Apr 2015 01:24 PM PDT

"பகவத் கீதை' போட்டியில் வெற்றி பெற்ற முஸ்லிம் மாணவியை, மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ், செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து கெளரவித்தார்.

யேமனில் இந்தியர் சிறைபிடிப்பு

Posted: 08 Apr 2015 01:24 PM PDT

உள்நாட்டு கலவரம் நடைபெற்று வரும் யேமன் நாட்டில் இருந்து ஏராளமான இந்தியர்கள் மீட்கப்படும் வரும் நிலையில், 6 பேர் கொண்ட ஆயுதக் கும்பலால் இந்தியர் ஒருவர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணல் திருட்டை தடுத்த வருவாய் ஆய்வாளரை டிராக்டர் ஏற்றி  கொல்ல முயற்சி: ஒருவர் கைது

Posted: 08 Apr 2015 01:24 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே கணவாய்பட்டி பகுதிகளில் நடைபெற்ற மணல் திருட்டை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை, டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.

ஒடிஸா: 8 நகராட்சிகளை கைப்பற்றியது பிஜேடி

Posted: 08 Apr 2015 01:24 PM PDT

ஒடிஸா மாநிலத்தில் 3 நகராட்சிகள், 5 ஏரியா கவுன்சில்களுக்கு நடந்த தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் பெருவாரியான வார்டுகளைக் கைப்பற்றி அனைத்திலும் வென்றுள்ளது.

விஹெச்பி நெருக்குதலால் வீட்டை விற்ற முஸ்லிம் வியாபாரி

Posted: 08 Apr 2015 01:23 PM PDT

குஜராத் மாநிலம், பாவ்நகரில் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பினரின் தொடர் நெருக்கடியால், முஸ்லிம் வியாபாரி ஒருவர் தனது வீட்டையே விற்றுள்ளார்.

நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ள இடம் அருகே கருவேல மரங்களை ஏலம் விட மீண்டும் எதிர்ப்பு

Posted: 08 Apr 2015 01:22 PM PDT

தேனி மாவட்டம், பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ள இடம் அருகே வளர்ந்துள்ள கருவேல மரங்களை ஏலம் விட, கிராம மக்கள் புதன்கிழமை மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஒப்பந்ததாரர்கள் திரும்பிச் சென்றனர். இதனால் ஏலத்தொகையை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொடைக்கானல் மலைச் சாலையில்  60 அடி பள்ளத்தில் வேன் உருண்டதில் 23 பேர் படுகாயம்

Posted: 08 Apr 2015 01:21 PM PDT

பழனி-கொடைக்கானல் மலைச் சாலையில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வேன், புதன்கிழமை இரவு பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டதில் 23 பேர் படுகாயமடைந்தனர்.

பெரியார் சிலைக்கு தீ வைப்பு: போலீஸார் விசாரணை

Posted: 08 Apr 2015 01:20 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தீ வைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை, போலீஸார் தேடி வருகின்றனர்.

கம்பீர், சூரியகுமார் விளாசல்: கொல்கத்தா வெற்றி

Posted: 08 Apr 2015 01:19 PM PDT

மும்பைக்கு எதிரான எட்டாவது ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் கெüதம் கம்பீர், சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த, நடப்பு சாம்பியனான கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

காந்திகிராம கிராமியப் பல்கலையில் முதன்முறையாக ஆன்-லைன் விண்ணப்பம்

Posted: 08 Apr 2015 01:19 PM PDT

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதல்முறையாக பாடப் பிரிவுக்கு தலா 4 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

சாலை விபத்து: ஒரே பைக்கில் வந்த 4 பேரில் ஒருவர் சாவு; 3 பேர் படுகாயம்

Posted: 08 Apr 2015 01:16 PM PDT

தேனி மாவட்டம், குச்சனூர் அருகே புலிக்குத்தியில் நடைபெற்ற திருவிழாவை பார்த்துவிட்டு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பெரியகுளம் பாதாள சாக்கடை நிதி விவகாரம்: நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு

Posted: 08 Apr 2015 01:15 PM PDT

பெரியகுளம் பாதாள சாக்கடைத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

 பழனி கோயில் உண்டியல் எண்ணும் பணி: முதல் நாளில் ரூ.1.48 கோடி வரவு

Posted: 08 Apr 2015 01:14 PM PDT

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் உண்டியல்கள் கடந்த 13 நாள்களில் நிறைந்ததைத் தொடர்ந்து, புதன்கிழமை அவை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், முதல் நாளில் ரூ.1.48 கோடி காணிக்கையாகக் கிடைத்துள்ளது.

ஆண்டிபட்டியில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

Posted: 08 Apr 2015 01:13 PM PDT

ஆந்திராவில் தமிழக தொழிலாளர்களை சுட்டுக்கொன்றதை கண்டித்து ஆண்டிபட்டியில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

ஒன்பதை வெட்டினால் ஒன்றையாவது நடு!

Posted: 08 Apr 2015 01:13 PM PDT

நம் முன்னோர் மொழிந்த "ஒன்றைப் பிடுங்கினால் ஒன்பதை நடு' என்கிற வாசகத்தை நாமெல்லாம் மறந்துவிட்ட காரணத்தால்தான் உலகம் இன்றைக்கு வெப்ப மிகுதியால் தாக்கப்பட்டு, ஆண்டுக்கு ஆண்டு கூடுதல் வெப்பத்தால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

பெரியகுளம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக இருவர் கைது

Posted: 08 Apr 2015 01:12 PM PDT

பெரியகுளம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக, இருவரை வனத் துறையினர் கைது செய்தனர்.

மாணவர் எதிர்காலம் யார் கையில்?

Posted: 08 Apr 2015 01:12 PM PDT

தமிழ்நாட்டில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது. இது உண்மையா? உண்மை போன்ற தோற்றமா? எங்கும் இதே பேச்சாக இருக்கிறது.

தடை அல்ல விடை!

Posted: 08 Apr 2015 01:11 PM PDT

இந்தியாவைப் பொருத்தவரை, ஏதாவது குற்றச்சாட்டோ அல்லது தவறோ நிகழ்ந்துவிட்டால் அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடவடிக்கையையே முடக்கிவிடுவது என்கிற தவறான அணுகுமுறை பல ஆண்டுகளாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.

டாஸ்மாக் மதுக் கடையில் மோதல்: அரசு ஊழியர் சாவு; 3 பேர் கைது

Posted: 08 Apr 2015 01:10 PM PDT

திண்டுக்கல் மாவ ட்டம், வத்தலகுண்டில் செவ்வாய்க்கிழமை இரவு டாஸ்மாக் மதுக் கடையில் ஏற்பட்ட மோதலில் அரசு ஊழியர் கொலை செய்யப்பட்டார். இதில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 மாதமாக செயல்படாத ரேஷன் கடை  ரயில்வே பண்டகசாலை தலைவரை பொதுமக்கள் முற்றுகை

Posted: 08 Apr 2015 01:10 PM PDT

நிலம் கையக மசோதா நிறைவேறினால் 30 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு

Posted: 08 Apr 2015 01:06 PM PDT

நிலம் கையகச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிலமில்லாத 30 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

தேசிய மகளிர் ஆணையத்துக்கு நீதிமன்ற அதிகாரம்: அமைச்சரவைக் குழு ஒப்புதல்

Posted: 08 Apr 2015 01:05 PM PDT

தேசிய மகளிர் ஆணையத்தை வலிமைப்படுத்தும் வகையில், அதற்கு சிவில் நீதிமன்ற அதிகாரம் வழங்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பொறியியல், தொழில்நுட்ப கல்லூரி அனுமதி புதுப்பிப்பு: 31 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

Posted: 08 Apr 2015 01:05 PM PDT

தமிழகத்திலிருந்து அனுமதியைப் புதுப்பிக்கவும், புதிய கல்லூரி தொடங்க அனுமதி கோரியும் விண்ணப்பிக்கப்பட்ட 31 விண்ணப்பங்களை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் நிராகரித்துள்ளது.

2ஜி: சிபிஐ நீதிமன்றத்தில் கலைஞர் டிவி நிர்வாகிகள் சாட்சியம்

Posted: 08 Apr 2015 01:04 PM PDT

தனியார் நிறுவனங்களுக்கும், கலைஞர் டிவிக்கும் இடையே நடைபெற்ற நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து அத்தொலைக்காட்சியின் துணைத் தலைவர் ஹுமாயுன் அலி அகமது (45), நிதிப் பிரிவு மேலாளர் உமா சங்கர் (40) ஆகியோர் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் புதன்கிழமை சாட்சியம் அளித்தனர்.

நேரு 125-ஆவது பிறந்த நாள்: புதிய 5 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

Posted: 08 Apr 2015 01:03 PM PDT

ஜவாஹர்லால் நேருவின் 125-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், புதிய 5 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் புழக்கத்தில் வெளியிடுகிறது.

போலியோவை ஒழிக்க சார்க் நாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவு: இந்தியா உறுதி

Posted: 08 Apr 2015 01:01 PM PDT

போலியோ நோயை ஒழிப்பதற்கு சார்க் நாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்று இந்தியா புதன்கிழமை தெரிவித்தது.

நிலக்கரிச் சுரங்க  முறைகேடு வழக்கு:  ஜூலை 15-ல் விசாரணை

Posted: 08 Apr 2015 01:00 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கு விசாரணையை ஜூலை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை காமராஜர் பல்கலை. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய குழு: தமிழக அரசு உத்தரவு

Posted: 08 Apr 2015 01:00 PM PDT

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தெரிவுக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித் துறைச் செயலர் அபூர்வா வெளியிட்ட உத்தரவு:

கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளில் ஜெர்மன் மொழியைக் கற்பிக்க வேண்டும்

Posted: 08 Apr 2015 12:57 PM PDT

"மத்திய அரசு பாடத்திட்டத்தின்படி செயல்படும் கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளில் ஜெர்மன் மொழியை விருப்பப் பாடமாக கற்பிப்பதை தொடர வேண்டும்' என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும் என இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் வேண்டுகோள் விடுத்தார்.

சத்யம் வழக்கில் இன்று தீர்ப்பு

Posted: 08 Apr 2015 12:56 PM PDT

பல கோடி ரூபாய் அளவுக்கு கணக்கு மோசடி செய்ததாகக் கூறப்படும் சத்யம் கணினி நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கில், வியாழக்கிழமை (ஏப்.9) தீர்ப்பு வழங்கப்படுகிறது.

காங்கிரஸை மீட்டெடுக்க போராட்ட அரசியல் தேவை: ஜெய்ராம் ரமேஷ்

Posted: 08 Apr 2015 12:56 PM PDT

காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க போராட்ட அரசியலை முன்னெடுப்பது அவசியம் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

சட்டவிரோத செல்லிடப்பேசி கோபுரங்கள் பறிமுதலாகும்: ஃபட்னவீஸ்

Posted: 08 Apr 2015 12:55 PM PDT

மகாராஷ்டிரத்தில் சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள செல்லிடப்பேசி கோபுரங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் எச்சரித்தார்.

காஷ்மீர் பேரவையிலிருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

Posted: 08 Apr 2015 12:54 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஷோபியானில், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட காவலரின் உடலை மீட்டு, விமானம் மூலம் அவரது சொந்த ஊருக்கு அனுப்பாததைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

ரூ.1 லட்சம் கோடி தொழில் முதலீடு திரட்ட இலக்கு: அமைச்சர் தங்கமணி

Posted: 08 Apr 2015 12:54 PM PDT

சென்னையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ. 1 லட்சம் கோடி தொழில் முதலீடு திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தமிழக தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

பிகார் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முறையாகச் செயல்படவில்லை: சி.ஏ.ஜி. அறிக்கை

Posted: 08 Apr 2015 12:52 PM PDT

பிகார் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முறையாகச் செயல்பட தவறிவிட்டவதாக தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம்: பிரதமர் உறுதி

Posted: 08 Apr 2015 12:51 PM PDT

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 50 சதவீதம் கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

ரகசிய கேமரா விவகாரம்: "ஃபேப் இந்தியா அதிகாரிகள் நாளை ஆஜர்'

Posted: 08 Apr 2015 12:42 PM PDT

கோவாவில் துணிக் கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 10) ஆஜராவதாக ஃபேப் இந்தியா நிறுவன அதிகாரிகள் பதில் அனுப்பியுள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

மனை வணிக மசோதா மக்களவையில் தாக்கல் ஆகிறது

Posted: 08 Apr 2015 12:42 PM PDT

மனை வணிகம் தொடர்பான திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து, அந்த மசோதாவை இம்மாதம் 20-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமர்வின்போது மக்களவையில் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

நிலக்கரிச் சுரங்க முறைகேடு: மது கோடாவிடம் விசாரணை

Posted: 08 Apr 2015 12:41 PM PDT

நிலக்கரிச் சுரங்க முறைகேடு தொடர்பாக ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவிடம், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

விமானத்தில் தீப்பெட்டி கொண்டு சென்ற விவகாரம்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை: அமைச்சர் ராஜு

Posted: 08 Apr 2015 12:41 PM PDT

விமான நிலைய பாதுகாவலர்களால் தான் சோதனைக்குள்ளாக்கப்படாததன் மூலம், எந்த வகையிலும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு புதன்கிழமை தெரிவித்தார்.

கட்ஜுவுக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி

Posted: 08 Apr 2015 12:40 PM PDT

தேசப்பிதா மகாத்மா காந்தியை விமர்சித்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவுக்கு எதிராக உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

கான்வென்ட் பள்ளி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: கோவா அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம்

Posted: 08 Apr 2015 12:40 PM PDT

கான்வென்ட் பள்ளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட கோவா மாநில தொழிற்சாலைகள் துறை அமைச்சர் தவால்கருக்கு, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை மேற்கோள்காட்டி காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏராளமான பாதுகாப்பு வாகனங்கள் தேவையில்லை: பாரிக்கர்

Posted: 08 Apr 2015 12:39 PM PDT

தனக்கு ஏராளமான பாதுகாப்பு வாகனங்கள் தேவையில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகிறார் நஸீம் ஜைதி

Posted: 08 Apr 2015 12:38 PM PDT

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நஸீம் ஜைதி நியமிக்கப்பட இருக்கிறார். இதற்கான நடவடிக்கைகளை மத்திய சட்ட அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

புகையிலை எச்சரிக்கைப் படங்களை 50% அதிகரிக்க "சார்க்' நாடுகள் உறுதி

Posted: 08 Apr 2015 12:36 PM PDT

இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் "சார்க்' கூட்டமைப்பு நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சர்களின் 5-ஆவது மாநாடு, தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது.

செம்மரக் கடத்தல்:14 பேர் கைது

Posted: 08 Apr 2015 12:36 PM PDT

ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சேஷாசலம் வனப் பகுதிகளில் புதன்கிழமை நீடித்த தீவிர தேடுதல் வேட்டையில், செம்மரக் கட்டைகளைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர சம்பவம்: நீதி விசாரணைக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 08 Apr 2015 12:35 PM PDT

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்றதாக 20 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொன்றது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

விஐடி பி.டெக். நுழைவுத் தேர்வு: 2.02 லட்சம் மாணவர்கள் எழுதினர்

Posted: 08 Apr 2015 12:25 PM PDT

விஐடி பல்கலைக்கழகத்தின் நிகழாண்டுக்கான பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்காக புதன்கிழமை தொடங்கிய நுழைவுத் தேர்வில் 2.02 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.

சான்றிதழ் கிடைப்பதில் தாமதம்

Posted: 08 Apr 2015 12:25 PM PDT

ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தில் சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

மேலும் இருவரைத் தூக்கிலிட்டது பாகிஸ்தான்

Posted: 08 Apr 2015 12:24 PM PDT

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மேலூம் 2 பேர் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டனர்.

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

Posted: 08 Apr 2015 12:24 PM PDT

திருப்பதி வனப் பகுதியில் தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்றதைக் கண்டித்து, இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணமங்கலம் காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

பயிர்ப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பயிற்சி

Posted: 08 Apr 2015 12:24 PM PDT

மேற்கு ஆரணி ஒன்றியம், குஞ்சாந்தாங்கல் கிராமத்தில் பயிர்ப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

கொள்ளை முயற்சி: அமெரிக்காவில் இரு இந்தியர்கள் சுட்டுக் கொலை

Posted: 08 Apr 2015 12:24 PM PDT

அமெரிக்காவில், வெவ்வேறு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நடைபெற்ற கொள்ளை முயற்சிகளில், அங்கு பணியாற்றிய இரு இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்

Posted: 08 Apr 2015 12:24 PM PDT

ஆந்திர மாநில போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து, போளூரில் ஆந்திர முதல்வரின் உருவ பொம்மையை எரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இரு சக்கர வாகனம் மோதியதில் சிறுமி சாவு

Posted: 08 Apr 2015 12:23 PM PDT

வந்தவாசி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் சிறுமி இறந்தார்.

மரத்தில் கார் மோதியதில் இளைஞர் சாவு; 5 பேர் காயம்

Posted: 08 Apr 2015 12:23 PM PDT

திருவண்ணாமலை அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில், இளைஞர் இறந்தார். 5 பேர் காயமடைந்தனர்.

செய்யாறில் அடுத்தடுத்து இரு கடைகளில் திருட்டு

Posted: 08 Apr 2015 12:23 PM PDT

செய்யாறில் அடுத்தடுத்து இரு கடைகளின் பூட்டுகளை உடைத்து ரூ. 1.50 லட்சம் பணம், காசோலை, பத்திரங்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

செய்யாறில் சாலையோரஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 08 Apr 2015 12:23 PM PDT

செய்யாறில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி காவல் துறையினரின் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கார்-ஆட்டோ மோதல்: 14 பேர் காயம்

Posted: 08 Apr 2015 12:22 PM PDT

திருவண்ணாமலை அருகே காரும், ஷேர் ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் நாடகக் கலைஞர்கள் உள்பட 14 பேர் பலத்த காயம் அடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வெளிநாட்டினர் பாதுகாப்புச் சட்டம்: தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு

Posted: 08 Apr 2015 12:22 PM PDT

உரிய ஆவணங்களின்றி அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டினரைப் பாதுகாக்கும் அதிபர் ஒபாமாவின் அவசர உத்தரவுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை நீக்க அந்த நாட்டு நீதிமன்றம் புதன்கிழமை மறுத்தது.

விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் சாவு

Posted: 08 Apr 2015 12:22 PM PDT

திருவண்ணாமலை அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் முன்னாள் ராணுவ வீரர் இறந்தார்.

முஷாரஃபை கைது செய்யும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

Posted: 08 Apr 2015 12:22 PM PDT

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷாரஃபுக்கு எதிராக இஸ்லாமாபாதிலுள்ள மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

ஆந்திர மாநிலப் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தம்

Posted: 08 Apr 2015 12:21 PM PDT

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பேருந்துகளின் போக்குவரத்து வேலூர் மாவட்டத்தில் புதன்கிழமையும் நிறுத்தப்பட்டது.

ருவாண்டா இனப் படுகொலை: ரகசிய ஆவணங்களை வெளியிட்டது பிரான்ஸ்

Posted: 08 Apr 2015 12:21 PM PDT

ருவாண்டாவில் கடந்த 1994-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலையில் பிரான்ஸ் நாட்டுக்குப் பங்கு இருப்பதாக ருவாண்டா அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில், இதுவரை ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்த ருவாண்டா படுகொலை தொடர்பான ஆவணங்களை பிரான்ஸ் வெளியிட்டது.

விடைத்தாள் திருத்தும் மையம் முன் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 08 Apr 2015 12:21 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆம்பூர் விடைத்தாள் திருத்தும் மையம் எதிரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

"ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க ரூ. 1.44 கோடி நிதி ஒதுக்கீடு'

Posted: 08 Apr 2015 12:20 PM PDT

ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.1.44 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என ஒன்றியக் குழுத் தலைவர் ரமேஷ் தெரிவித்தார்.

குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

Posted: 08 Apr 2015 12:20 PM PDT

சோளிங்கர் அருகே குடிநீர் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

Posted: 08 Apr 2015 12:20 PM PDT

வேலூர் மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பூடான் பிரதமர் இன்று இலங்கை பயணம்

Posted: 08 Apr 2015 12:20 PM PDT

பூடான் பிரதமர் லியோன்சின் ஷிரிங் தோப்கய் இலங்கையில் வியாழக்கிழமை (ஏப். 9) முதல் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

உதயேந்திரம் பேரூராட்சியில் 100 சதவீத வரி வசூல்

Posted: 08 Apr 2015 12:19 PM PDT

உதயேந்திரம் பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து 7ஆண்டுகளாக நூறு சதவீத வரிவசூல் செய்துள்ளது. உதயேந்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் ர.ஆனந்தன் தலைமையில், வரித்தண்டலர்

பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

Posted: 08 Apr 2015 12:19 PM PDT

வாலாஜாபேட்டை புதிய அம்பேத்கர் நகரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் 32 வீடுகளை இடிப்பதைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அகில இந்திய

எகிப்து ராணுவம் தாக்குதல்: 15 பயங்கரவாதிகள் சாவு

Posted: 08 Apr 2015 12:19 PM PDT

எகிப்து நாட்டின் சினாய்ப் பகுதியில் ராணுவத்தினர் புதன்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மனுநீதி நாள் முகாம்களில் நலத் திட்ட உதவிகள்

Posted: 08 Apr 2015 12:19 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்களில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தனி ஆளாக தர்னா செய்த மாற்றுத்திறனாளி

Posted: 08 Apr 2015 12:18 PM PDT

வீட்டுமனைப் பட்டா கோரி மாற்றுத்திறனாளி தனி ஆளாக கிராம நிர்வாக அலுவலகம் முன் புதன்கிழமை தர்னா நடத்தினார்.

ஓடும் பேருந்தில் குழந்தை, தந்தையை கத்தியால் குத்த முயற்சி: இளைஞர் கைது

Posted: 08 Apr 2015 12:18 PM PDT

ஓடும் பேருந்தில் தந்தை, குழந்தையைக் கத்தியால் குத்த முயன்ற இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

விவசாயிகள் கவனத்துக்கு.. சித்திரைப் பட்டத்தில் மிளகாய் விதைப்பு

Posted: 08 Apr 2015 12:18 PM PDT

சித்திரைப் பட்டத்தில் மிளகாய் விதைக்கும் விவசாயிகள் விதை பரிசோதனை செய்த பின்னர் விதைப்பதால் அதிக மகசூல் பெறலாம்.

விவசாயி கொலை வழக்கில் 3 பேர் கைது

Posted: 08 Apr 2015 12:18 PM PDT

கே.வி. குப்பம் அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய், மகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலையைக் கடக்க முயன்றவர் சாவு

Posted: 08 Apr 2015 12:18 PM PDT

ஜோலார்பேட்டை பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்றவர் இறந்தார். இவர் மீது ஜோலார்பேட்டையிலிருந்து திருப்பத்தூரை நோக்கிச் சென்ற மர்ம வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

"ரோஜா சாகுபடியில் கைமேல் பலன்'

Posted: 08 Apr 2015 12:17 PM PDT

உரிய ஆலோசனைகளுடன் நேர்த்தியான முறையில் எட்வர்ட் ரோஜா, ஆந்திர சிவப்பு ரோஜா ஆகியவற்றை சாகுபடி செய்தால் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்து காவலர்களுக்கான சிறப்பு அதிகாரம் குறைப்பு

Posted: 08 Apr 2015 12:17 PM PDT

சிறிய அளவிலான போக்குவரத்து விதிமீறல்களுக்காக வாகனங்களை பறிமுதல் செய்யும் போக்குவரத்து காவலர்களின் சிறப்பு அதிகாரத்தை ஆம் ஆத்மி அரசு குறைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கேஜரிவாலுக்கு பிரணாப் முகர்ஜி அன்பு உபசரிப்பு!

Posted: 08 Apr 2015 12:17 PM PDT

குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூடுதல் உணவு எடுத்துக்கொள்ளுமாறு கூறி உபசரித்தார்.

யேமனில் இருந்து பாகிஸ்தானால் மீட்கப்பட்ட 4 தமிழர்கள் தில்லி திரும்பினர்

Posted: 08 Apr 2015 12:16 PM PDT

யேமன் நாட்டிலிருந்து பாகிஸ்தானால் மீட்கப்பட்ட 4 தமிழர்கள் உள்பட 11 இந்தியர்கள் கராச்சியில் இருந்து புதன்கிழமை இரவு, விமானம் மூலம் தில்லிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.

பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக நியமனம்

Posted: 08 Apr 2015 12:16 PM PDT

தில்லி மாநில காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளராகவும், மாநில ஊடகப்பிரிவுப் பொறுப்பாளராகவும் ஷர்மிஸ்தா முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அளித்துள்ளார்.

"முத்ரா வங்கி' திட்ட நடைமுறையை எளிமைப்படுத்த நடவடிக்கை தேவை

Posted: 08 Apr 2015 12:15 PM PDT

"முத்ரா வங்கி' கடனுதவித் திட்டத்தின் மூலம் வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தினார்.

டிடிஇஏ பள்ளியில் கணினிப் பயிற்சி முகாம்

Posted: 08 Apr 2015 12:15 PM PDT

தெற்கு தில்லியில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளியில் கணினிப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துர்க்மான் கேட் சம்பவம்:மேலும் 3 பேர் கைது

Posted: 08 Apr 2015 12:14 PM PDT

தில்லி துர்க்மான் கேட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வாகன மோதல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மோட்டார்சைக்கிளில் சென்றவர் தாக்கப்பட்டு இறந்த சம்பவம் தொடர்பாக மேலும் மூவரை போலீஸார் கைது செய்தனர்.

"டிஎன்டி' சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய பாஜக ஆர்ப்பாட்டம்

Posted: 08 Apr 2015 12:14 PM PDT

தில்லி-நொய்டா-தில்லி (டிஎன்டி) பறக்கும் சாலையில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, பாஜகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தில்லி அரசு, துணைநிலை ஆளுநருக்கு நோட்டீஸ்

Posted: 08 Apr 2015 12:13 PM PDT

தில்லியின் மூன்று மாநகராட்சிகளின் செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில், அவற்றுக்கு போதுமான நிதியை வழங்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவுக்கு

தில்லி அரசு நிதி ஒதுக்கவில்லை: மேயர் பதிலடி

Posted: 08 Apr 2015 12:13 PM PDT

தில்லி மாநகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க தில்லி அரசு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் யோகேந்திர சந்தோலியா தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™