Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள்
- ஓவியர் காலேப் காலமானார்
- ராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர்கூட்டம்
- நேரடி உதவித் தொகை திட்டம்: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
- சாயல்குடியில் பனைமரம் ஏறும் போட்டி ஏப்.19-இல் நடக்கிறது
- திருப்புவனம் பகுதியில் ஏப்ரல் மின்தடை
- ஆந்திரத்தில் காணாமல் போன 40 தமிழர்கள்: மனித உரிமை ஆணையம் விசாரிக்க உத்தரவு
- மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளி கொலை: நண்பர் கைது
- தில்லியில் சாட்சியம் அளித்தவர் குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
- திராவிடர் கழகம், சிவசேனை மோதல்: மேலும் 9 பேர் கைது
- ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவம்: அரசநத்தத்தில் உண்மை கண்டறியும் குழு விசாரணை
- சென்னை
- சர்க்கரை இறக்குமதிக்குத் தடை விதிக்க வேண்டும்
- அழகப்பா பல்கலை.யில் காசோலை மூலம் பணம் கையாடல்: அலுவலக உதவியாளர் கைது
- விஷம் குடித்து விவசாயி தற்கொலை
- கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு
- ராமநாதபுரத்தில் பெரியார் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
- அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
- உடல்நலக்குறைவால் ஆயுள் தண்டனைக் கைதி சாவு
- சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலர் பதவிக்கு மனு தாக்கல்
- ரூ.80 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்கு
- பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
- ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தேர்தல்
- பாம்பன் பகுதியில் தீப்பிடித்து எரிந்த மீனவர் குடிசை
- வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் திருட்டு
- இளையான்குடியில் கடைகள் அடைப்பு: சாலை மறியல் செய்ய முயன்ற 185 பேர் கைது
- சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- சிவகாசியில் பள்ளி அருகே குவாரி வழக்குரைஞர் ஆணையர் ஆய்வுக்கு உத்தரவு
- குடிசையில் தீ விபத்து: தாய், குழந்தை காயம்
- சாத்தூர் அருகே பட்டாசு ஆலை பேருந்து கவிழ்ந்து 13 தொழிலாளர்கள் காயம்
- திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய இளைஞரை கைது செய்யக் கோரி கிராமத்தினர் சாலை மறியல்
- ராஜபாளையம் இளைஞர் கொலை: 2 பேர் சரண்
- திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றியவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
- தாலி அகற்றல் புரட்சி அல்ல, சிந்தனை வறட்சி!
- விருதுநகர் மாவட்டத்தில் நாளை "அம்மா' திட்ட முகாம்
- சூடு ஏறினால் நாடு தாங்குமா?
- விருதுநகரில் தனியார் பொறியியல் கல்லூரி அறைகளுக்கு "சீல்'
- உண்மை கசக்கும்!
- விருதுநகர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்க ஆட்சியர் நடவடிக்கை
- தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு
- சாலை விபத்தில் முதியவர் சாவு
- சாத்தூர் அருகே தனியார் பேருந்திலிருந்து குதித்து பெண் சாவு
- நரிக்குடி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
- ராஜபாளையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
- ரஷிய சிறையில் நேதாஜி சித்ரவதை? வெளிச்சத்துக்கு வருகிறது உண்மை
- பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்
- பெண் மாயம்: கணவர் புகார்
- ராஜபாளையத்தில் தனியார் பள்ளி பேருந்து சுவற்றில் மோதி 2 பேர் காயம்: பொதுமக்கள் மறியல்
- அம்பேத்கர் பிறந்தநாள் விழா
- நாளை "அம்மா' திட்ட குறைதீர் முகாம்
- நேதாஜி ஆவணங்களை பகிரங்கப்படுத்தும் கோரிக்கை: சட்ட விதிகளை ஆராய மூவர் குழு
- மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ரூ.11 லட்சம் தீர்வுத் தொகை
- ரத்த தான முகாம்
- கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை
- போடி பரமசிவன் மலைக்கோயில் சித்திரைத் திருவிழா
- 6 முன்னாள் ஜனதா கட்சிகள் இணைந்தன: தலைவரானார் முலாயம் சிங்
- திருவிழாவுக்கு இயக்கப்படும் திம்மரசநாயக்கனூர் பேருந்துகள்
- குழந்தைகளுக்கு சத்துணவு: ஊராட்சித் தலைவர்கள் வழங்கினர்
- பள்ளி மாணவியின் திருமணம் நிறுத்தம்
- ஏகபோகவாதிகளை ஒழிக்க முயன்றதால் பழிவாங்கப்படுகிறேன்
- பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற பட்டதாரி இளைஞர் சாவு
- இந்தியா - கனடா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு: பிரதமர் மோடி
- மணல் கடத்தலில் ஈடுபட்ட நகராட்சி ஒப்பந்ததாரர் கைது
- 4 மகளிர் எஸ்.ஐ.களுக்கு பதவி உயர்வு
- கண்டமனூர் பகுதியில் ஏப்ரல் 17 மின்தடை
- அடிப்படை வசதி கோரி கிராமத்தினர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
- திண்டுக்கல் அதிமுக செயலர் பதவி: அமைச்சர் உள்ளிட்ட 5 பேர் போட்டி
- திண்டுக்கல், தேனியில் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தால் பாதிப்பில்லை
- ராஜஸ்தானை கட்டுப்படுத்துமா ஹைதராபாத்? இன்று மோதல்
- இளம் வீராங்கனைகளுக்கு முன்னுதாரணம்: சானியா பெருமை
- சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ ஆட்டம் டிரா
- நிதி திரட்டி குவைத்தில் சேலஞ்ச் கோப்பை தொடரில் பங்கேற்கிறது ஐஸ் ஹாக்கி அணி
- ஸ்மித் அதிரடி: ராஜஸ்தான் வெற்றி
- பந்துவீச்சில் மிரட்டியது தில்லி: பஞ்சாப் 165 ரன்கள்
- ஒரு நாள் தரவரிசை: இந்தியா இரண்டாவது இடத்தில் நீடிப்பு
- தாலி அகற்றும் நிகழ்ச்சி..!
- பெல் நிறுவன ஊழியர் வீட்டில் 30 பவுன் திருட்டு
- கிராம சேவை மைய கட்டுமானப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் ஆட்சியர் அறிவுறுத்தல்
- இந்திர தனுஷ் திட்ட 2-ம் கட்ட முகாம் மே 7-ல் தொடக்கம்
- "கலவரப் பகுதிகள் மசோதா'வை உருவாக்கும் மிஸோரம் அரசு
- வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
- துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம்: ஜம்மு-காஷ்மீரில் முழு அடைப்பு
- சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- ஆவினில் 13 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை
- நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: விசாரணையிலிருந்து நீதிபதி தவே விலகல்
- "போராட்டத்தால் பாதிப்பில்லை'
- இறுதிச் சடங்குக்கு செலவான பணத்தை திருப்பிக் கேட்ட சத்தீஸ்கர் காவல் துறை
- அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களுக்கு "சீல்'
- மின் வாரியச் செயற்பொறியாளர் அலுவலகம் இடம் மாற்றம்
- ரயில் பாதையில் திடீர் விரிசல்
- குட்டையில் மூழ்கிய மாணவரின் சடலம் மீட்பு
- காதல் திருமணம் செய்ததால் ஊரைவிட்டு தள்ளிவைப்பு: குடும்பத்தினர் தர்னா
- சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம்
- நாகர்கோவில்
- தண்ணீர் தேடி வந்த இரு மான்கள் சாவு
- நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- பரமன்குறிச்சியில் மனுநீதி நாள் முகாம்
- ரயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்
- சிறந்த சுற்றுச்சூழல் மன்றம்: ஆழ்வார்திருநகரி பள்ளி சிறப்பிடம்
| சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் Posted: 15 Apr 2015 01:31 PM PDT சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: |
| Posted: 15 Apr 2015 01:31 PM PDT ஓவியரும், எழுத்தாளருமான காலேப் என்கிற கண்ணன் (67) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் கடந்த திங்கள்கிழமை காலமானார். |
| ராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர்கூட்டம் Posted: 15 Apr 2015 01:31 PM PDT ராமநாதபுரத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. |
| நேரடி உதவித் தொகை திட்டம்: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல் Posted: 15 Apr 2015 01:30 PM PDT மானியம், கல்வி உதவித் தொகைகளை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையிலான பொது நிதி மேலாண்மைத் திட்டத்தில் இணைப்பு பெற்றுள்ளதை பல்கலைக்கழகங்கள் உறுதிப்படுத்துமாறு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. |
| சாயல்குடியில் பனைமரம் ஏறும் போட்டி ஏப்.19-இல் நடக்கிறது Posted: 15 Apr 2015 01:30 PM PDT ராமநாதபுரம் உள்பட 5 மாவட்ட பனைத் தொழிலாளர்களுக்கான பனைமரம் ஏறும் போட்டி சாயல்குடியில், ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. |
| திருப்புவனம் பகுதியில் ஏப்ரல் மின்தடை Posted: 15 Apr 2015 01:29 PM PDT திருப்புவனம் பகுதியில் வியாழக்கிழமை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஆந்திரத்தில் காணாமல் போன 40 தமிழர்கள்: மனித உரிமை ஆணையம் விசாரிக்க உத்தரவு Posted: 15 Apr 2015 01:29 PM PDT ஆந்திரத்தில் காணாமல் போன தமிழர்களை மீட்கக் கோரும் மனுவை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. |
| மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளி கொலை: நண்பர் கைது Posted: 15 Apr 2015 01:29 PM PDT சென்னை தரமணியில் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளியை கொலை செய்தது தொடர்பாக அவரது நண்பரை போலீஸார் கைது செய்தனர். |
| தில்லியில் சாட்சியம் அளித்தவர் குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு Posted: 15 Apr 2015 01:29 PM PDT ஆந்திர வனப் பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் சாட்சியம் அளித்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. |
| திராவிடர் கழகம், சிவசேனை மோதல்: மேலும் 9 பேர் கைது Posted: 15 Apr 2015 01:29 PM PDT சென்னை வேப்பேரியில் திராவிடர் கழகத்தினர், சிவசேனை கட்சியினர் மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பாக மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர். |
| ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவம்: அரசநத்தத்தில் உண்மை கண்டறியும் குழு விசாரணை Posted: 15 Apr 2015 01:28 PM PDT ஆந்திர துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தமிழகத் தொழிலார்களின் குடும்பத்தினரிடம் உண்மை கண்டறியும் குழுவினர் புதன்கிழமை விசாரணை நடத்தினர். |
| Posted: 15 Apr 2015 01:28 PM PDT |
| சர்க்கரை இறக்குமதிக்குத் தடை விதிக்க வேண்டும் Posted: 15 Apr 2015 01:27 PM PDT நாட்டில் சர்க்கரை உற்பத்தி உபரியாக இருப்பதால், சர்க்கரை இறக்குமதிக்கு முற்றிலும் தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர். |
| அழகப்பா பல்கலை.யில் காசோலை மூலம் பணம் கையாடல்: அலுவலக உதவியாளர் கைது Posted: 15 Apr 2015 01:26 PM PDT காரைக்குடி அழகப்பா பல்கலை.யில் காசோலையை திருடி போலியாக கையெழுத்திட்டு ரூ.72 ஆயிரத்தை கையாடல் செய்த அலுவலக உதவியாளரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| விஷம் குடித்து விவசாயி தற்கொலை Posted: 15 Apr 2015 01:26 PM PDT பரமக்குடி அருகே விவசாயி விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு Posted: 15 Apr 2015 01:25 PM PDT சிவகங்கையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு மாணவருக்கு புதன்கிழமை அரிவாள் வெட்டு விழுந்தது. |
| ராமநாதபுரத்தில் பெரியார் பேரவையினர் ஆர்ப்பாட்டம் Posted: 15 Apr 2015 01:25 PM PDT ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ராமநாதபுரம் அரண்மனை முன் பெரியார் பேரவை சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. |
| அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் Posted: 15 Apr 2015 01:24 PM PDT கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை கீழக்கரை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். |
| உடல்நலக்குறைவால் ஆயுள் தண்டனைக் கைதி சாவு Posted: 15 Apr 2015 01:23 PM PDT மதுரை மத்திய சிறையில் இருந்த ஆயுள் தண்டனைக் கைதி உடல் நலக்குறைவால் புதன்கிழமை உயிரிழந்தார். |
| சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலர் பதவிக்கு மனு தாக்கல் Posted: 15 Apr 2015 01:23 PM PDT சிவகங்கை மாவட்ட அதிமுக செயலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தனர். |
| ரூ.80 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்கு Posted: 15 Apr 2015 01:22 PM PDT காரைக்குடியில் வீட்டை விற்பதாகக் கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது புதன்கிழமை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். |
| பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை Posted: 15 Apr 2015 01:20 PM PDT சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், பெரியநரிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் மீது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கிராமத்தினர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் புதன்கிழமை புகார் அளித்தனர். |
| ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தேர்தல் Posted: 15 Apr 2015 01:20 PM PDT ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தேர்தல் பொறுப்பாளர்களிடம் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனர். |
| பாம்பன் பகுதியில் தீப்பிடித்து எரிந்த மீனவர் குடிசை Posted: 15 Apr 2015 01:19 PM PDT பாம்பன் பகுதியில் மீனவர் குடிசை திடீர் என தீப்பிடித்து எரிந்ததில் பணம், நகை உள்பட ரூ.2 லட்சம் பொருள்கள் புதன்கிழமை எரிந்து சேதமடைந்தன. |
| வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் திருட்டு Posted: 15 Apr 2015 01:18 PM PDT கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் புதன்கிழமை வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் திருடிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| இளையான்குடியில் கடைகள் அடைப்பு: சாலை மறியல் செய்ய முயன்ற 185 பேர் கைது Posted: 15 Apr 2015 01:16 PM PDT சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் அடிப்படை வசதிகள் கேட்டு புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சாலை மறியல் செய்ய முயன்ற த.மு.மு.க.வைச் சேர்ந்த 185 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 15 Apr 2015 01:15 PM PDT சிவகங்கையில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| சிவகாசியில் பள்ளி அருகே குவாரி வழக்குரைஞர் ஆணையர் ஆய்வுக்கு உத்தரவு Posted: 15 Apr 2015 01:14 PM PDT சிவகாசியில் பள்ளி அருகே கிரானைட் குவாரி நடத்த தடை கோரும் வழக்கில் வழக்குரைஞர் ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. |
| குடிசையில் தீ விபத்து: தாய், குழந்தை காயம் Posted: 15 Apr 2015 01:13 PM PDT சாத்தூர் அருகே ஓலைக் குடிசையில் புதன்கிழமை மாலை தீப்பிடித்ததில், தாய் மற்றும் இரண்டரை வயது குழந்தை காயமடைந்தனர். |
| சாத்தூர் அருகே பட்டாசு ஆலை பேருந்து கவிழ்ந்து 13 தொழிலாளர்கள் காயம் Posted: 15 Apr 2015 01:12 PM PDT விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலை பேருந்து புதன்கிழமை மாலை கவிழ்ந்ததில், அதில் பயணித்த தொழிலாளர்கள் 13 பேர் காயம் அடைந்தனர். |
| திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய இளைஞரை கைது செய்யக் கோரி கிராமத்தினர் சாலை மறியல் Posted: 15 Apr 2015 01:11 PM PDT விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞரைக் கைது செய்யக் கோரி, கிராமத்தினர் புதன்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| ராஜபாளையம் இளைஞர் கொலை: 2 பேர் சரண் Posted: 15 Apr 2015 01:10 PM PDT ராஜபாளையத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் புதன்கிழமை இருவர் சரணடைந்தனர். |
| திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றியவர் உள்பட 5 பேர் மீது வழக்கு Posted: 15 Apr 2015 01:10 PM PDT விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம்பெண்ணை திருமண ஆசை காட்டி ஏமாற்றியவர் உள்பட 5 பேர் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| தாலி அகற்றல் புரட்சி அல்ல, சிந்தனை வறட்சி! Posted: 15 Apr 2015 01:09 PM PDT தமிழர்களின் மரபுச் சின்னமான தாலியை, பெண்களின் அடிமைச் சின்னம் என்று கூறி, அதனை அகற்றும் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம் அறைகூவல் விடுத்தது. |
| விருதுநகர் மாவட்டத்தில் நாளை "அம்மா' திட்ட முகாம் Posted: 15 Apr 2015 01:09 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் பொதுமக்கள் பயனடையும் வகையில், வரும் 17 ஆம் தேதி அம்மா திட்ட முகாம் நடைபெற இருக்கிறது. |
| Posted: 15 Apr 2015 01:08 PM PDT அரசியலில் இலங்கைப் பேச்சுவார்த்தை, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை என்று எவ்வளவோ உண்டு. இப்படிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கடுகளவு முன்னேற்றம், மிளகளவு முன்னேற்றம் என்றெல்லாம் தலைவர்கள் திருப்தி அடைவதுண்டு. |
| விருதுநகரில் தனியார் பொறியியல் கல்லூரி அறைகளுக்கு "சீல்' Posted: 15 Apr 2015 01:08 PM PDT விருதுநகரில் தனியார் பொறியியல் கல்லூரியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள அறைகளுக்கு புதன்கிழமை சீல் வைத்து, மதுரை மண்டல நகர ஊரமைப்புத் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர். |
| Posted: 15 Apr 2015 01:07 PM PDT ஆந்திர மாநிலம், சேஷாசலம் வனப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் இறந்தது தொடர்பாக, தற்போது ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப் படை மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| விருதுநகர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்க ஆட்சியர் நடவடிக்கை Posted: 15 Apr 2015 01:07 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஊராட்சித் தலைவர்கள் மற்றும் மகளிர் குழுக்கள் ஆகியோரைப் பயன்படுத்தி மதிய உணவு தயார் செய்து மாணவ, மாணவிகளுக்கு வழங்க, ஆட்சியர் வே. ராஜாராமன் நடவடிக்கை எடுத்துள்ளார். |
| தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு Posted: 15 Apr 2015 01:06 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு, தனித் தேர்வர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சீ. மோகன்ராம் கேட்டுக்கொண்டுள்ளார். |
| Posted: 15 Apr 2015 01:06 PM PDT சாத்தூர் அருகே சாலை விபத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதியவர் உயிரிழந்தார். |
| சாத்தூர் அருகே தனியார் பேருந்திலிருந்து குதித்து பெண் சாவு Posted: 15 Apr 2015 01:03 PM PDT சாத்தூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக, தனியார் பேருந்திலிருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். |
| நரிக்குடி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு Posted: 15 Apr 2015 01:02 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் நரிக்குடி ஒன்றியம் சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. |
| ராஜபாளையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா Posted: 15 Apr 2015 01:01 PM PDT ராஜபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| ரஷிய சிறையில் நேதாஜி சித்ரவதை? வெளிச்சத்துக்கு வருகிறது உண்மை Posted: 15 Apr 2015 01:01 PM PDT நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், ரஷியாவின் உளவு அமைப்புகளான கேஜிபி, ஸ்மெர்ஷ், ஜிஆர்யூ ஆகியவற்றிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 8 லட்சம் ரகசிய ஆவணங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றன. |
| பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம் Posted: 15 Apr 2015 01:00 PM PDT சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரியின் செஞ்சிலுவை சங்கம், சிவகாசி அரசு மருத்துவமனை ஆகியன இணைந்து, புதன்கிழமை ரத்த தான முகாமை நடத்தின. |
| Posted: 15 Apr 2015 12:59 PM PDT விருதுநகரில் 2 குழந்தைகளை விட்டுவிட்டு பெண் மாயமானதாக, கணவர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் செய்தார். |
| ராஜபாளையத்தில் தனியார் பள்ளி பேருந்து சுவற்றில் மோதி 2 பேர் காயம்: பொதுமக்கள் மறியல் Posted: 15 Apr 2015 12:58 PM PDT விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே முடங்கியார் சாலையில் தனியார் பள்ளி பேருந்து புதன்கிழமை சுவற்றில் மோதியதில், இருவர் காயமடைந்தனர். அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| Posted: 15 Apr 2015 12:56 PM PDT திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| நாளை "அம்மா' திட்ட குறைதீர் முகாம் Posted: 15 Apr 2015 12:56 PM PDT தேனி மாவட்டத்தில் ஏப்ரல் 17-ஆம் தேதி அம்மா திட்டத்தின் கீழ், 3 இடங்களில் குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன. |
| நேதாஜி ஆவணங்களை பகிரங்கப்படுத்தும் கோரிக்கை: சட்ட விதிகளை ஆராய மூவர் குழு Posted: 15 Apr 2015 12:55 PM PDT நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த ரகசிய ஆவணங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அதற்கேற்ப தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும், அரசு ரகசிய சட்டத்தையும் ஆய்வு செய்ய மூன்று நபர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு புதன்கிழமை அமைத்தது. |
| மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ரூ.11 லட்சம் தீர்வுத் தொகை Posted: 15 Apr 2015 12:55 PM PDT வேடசந்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், மாதாந்திர மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 15 Apr 2015 12:53 PM PDT கொடைக்கானலில் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ வாலிப கூட்டமைப்பின் சார்பில், ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை Posted: 15 Apr 2015 12:53 PM PDT தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு , செவ்வாய்க்கிழமை பட்டிவீரன்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. |
| போடி பரமசிவன் மலைக்கோயில் சித்திரைத் திருவிழா Posted: 15 Apr 2015 12:52 PM PDT போடி பரமசிவன் மலைக்கோயில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. |
| 6 முன்னாள் ஜனதா கட்சிகள் இணைந்தன: தலைவரானார் முலாயம் சிங் Posted: 15 Apr 2015 12:51 PM PDT முந்தைய ஜனதா கட்சியைச் சேர்ந்த சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம், மதச் சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட 6 கட்சிகள் இணைந்து புதிய ஜனதா கட்சியாக உருவெடுத்துள்ளது. |
| திருவிழாவுக்கு இயக்கப்படும் திம்மரசநாயக்கனூர் பேருந்துகள் Posted: 15 Apr 2015 12:51 PM PDT திம்மரசநாயக்கனூருக்கான பேருந்துகளை திருவிழாக்காலங்களில் வேறு வழித்தடங்களில் மாற்றி இயக்குவதால், இக்கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். |
| குழந்தைகளுக்கு சத்துணவு: ஊராட்சித் தலைவர்கள் வழங்கினர் Posted: 15 Apr 2015 12:50 PM PDT சத்துணவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஆண்டிபட்டி பகுதியிலுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு, பேரூராட்சி மற்றும் ஊராட்சித் தலைவர்கள் புதன்கிழமை சத்துணவு வழங்கினர். |
| பள்ளி மாணவியின் திருமணம் நிறுத்தம் Posted: 15 Apr 2015 12:49 PM PDT ஆண்டிபட்டி அருகே 15 வயது மாணவிக்கு 40 வயது நபருடன் நடைபெற இருந்த திருமணத்தை குழந்தை பாதுகாப்பு அமைப்பினர் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர். |
| ஏகபோகவாதிகளை ஒழிக்க முயன்றதால் பழிவாங்கப்படுகிறேன் Posted: 15 Apr 2015 12:49 PM PDT "ஏகபோகவாதிகளை ஒழிக்க முயன்றதால் பழிவாங்கப்படுகிறேன்' என்று மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா தெரிவித்தார். |
| பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற பட்டதாரி இளைஞர் சாவு Posted: 15 Apr 2015 12:48 PM PDT போடி அருகே பேருந்து மோதிய விபத்தில் பைக்கில் சென்ற பட்டதாரி இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| இந்தியா - கனடா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு: பிரதமர் மோடி Posted: 15 Apr 2015 12:48 PM PDT அணு சக்தித் துறையில் இந்தியா - கனடா நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு புதுப்பிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். |
| மணல் கடத்தலில் ஈடுபட்ட நகராட்சி ஒப்பந்ததாரர் கைது Posted: 15 Apr 2015 12:47 PM PDT பழனியில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக, நகராட்சி ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 2 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| 4 மகளிர் எஸ்.ஐ.களுக்கு பதவி உயர்வு Posted: 15 Apr 2015 12:45 PM PDT தேனி மாவட்டத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றும் 4 பேர், புதன்கிழமை காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். |
| கண்டமனூர் பகுதியில் ஏப்ரல் 17 மின்தடை Posted: 15 Apr 2015 12:44 PM PDT ராசிங்காபுரம், கண்டமனூர் ஆகிய துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. |
| அடிப்படை வசதி கோரி கிராமத்தினர் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை Posted: 15 Apr 2015 12:42 PM PDT நிலக்கோட்டை பேருராட்சி அலுவலகத்தை அடிப்படை வசதி கோரி புதுப்பட்டி கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர். |
| திண்டுக்கல் அதிமுக செயலர் பதவி: அமைச்சர் உள்ளிட்ட 5 பேர் போட்டி Posted: 15 Apr 2015 12:41 PM PDT திண்டுக்கல் மாவ ட்ட அதிமுக செயலர் பதவிக்கு, மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் உள்பட 5 பேர் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனர். |
| திண்டுக்கல், தேனியில் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தால் பாதிப்பில்லை Posted: 15 Apr 2015 12:41 PM PDT மாணவர்களுக்கு தாற்காலிக ஊழியர்கள் மூலம் சத்துணவு வழங்கப்பட்டதால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் புதன்கிழமை பாதிப்பு ஏற்படவில்லை. |
| ராஜஸ்தானை கட்டுப்படுத்துமா ஹைதராபாத்? இன்று மோதல் Posted: 15 Apr 2015 12:31 PM PDT ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வரும் ராஜஸ்தான், ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. |
| இளம் வீராங்கனைகளுக்கு முன்னுதாரணம்: சானியா பெருமை Posted: 15 Apr 2015 12:29 PM PDT தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய தன்னுடைய இந்த சாதனையைப் பார்த்து, எதிர் காலத்தில் இளம் வீராங்கனைகள் பலர், விளையாட்டை தங்கள் வாழ்க்கையாக கருதுவர் என்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ ஆட்டம் டிரா Posted: 15 Apr 2015 12:29 PM PDT சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அட்லெடிகோ மாட்ரிட், ரியல் மாட்ரிட் மோதிய முதற் கட்ட காலிறுதி ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. இதனால் ரியல் மாட்ரிட் அணிக்குச் சொந்தமான சான்டியாகோ பெர்னபே மைதானத்தில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாவது கட்ட காலிறுதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| நிதி திரட்டி குவைத்தில் சேலஞ்ச் கோப்பை தொடரில் பங்கேற்கிறது ஐஸ் ஹாக்கி அணி Posted: 15 Apr 2015 12:28 PM PDT இந்திய ஐஸ் ஹாக்கி அணி பொது மக்களிடம் இருந்து நிதி திரட்டி, குவைத்தில் நடைபெறவுள்ள சேலஞ்ச் கோப்பைத் தொடரில் பங்கேற்கிறது. |
| ஸ்மித் அதிரடி: ராஜஸ்தான் வெற்றி Posted: 15 Apr 2015 12:26 PM PDT ஆமதாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டின் 9-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பொல்லார்டு 70 ரன்களும் (34 பந்து), கோரி ஆண்டர்சன் 50 ரன்களும் (38 பந்து) எடுத்தனர். |
| பந்துவீச்சில் மிரட்டியது தில்லி: பஞ்சாப் 165 ரன்கள் Posted: 15 Apr 2015 12:25 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தில்லி டேர் டெவில்ஸூக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. |
| ஒரு நாள் தரவரிசை: இந்தியா இரண்டாவது இடத்தில் நீடிப்பு Posted: 15 Apr 2015 12:15 PM PDT ஒரு நாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. |
| Posted: 15 Apr 2015 12:08 PM PDT |
| பெல் நிறுவன ஊழியர் வீட்டில் 30 பவுன் திருட்டு Posted: 15 Apr 2015 12:02 PM PDT திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| கிராம சேவை மைய கட்டுமானப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் ஆட்சியர் அறிவுறுத்தல் Posted: 15 Apr 2015 12:02 PM PDT கிராம சேவை மையங்களின் கட்டுமானப் பணிகளை அலுவலர்கள் விரைவுப்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி. |
| இந்திர தனுஷ் திட்ட 2-ம் கட்ட முகாம் மே 7-ல் தொடக்கம் Posted: 15 Apr 2015 12:01 PM PDT திருச்சி மாவட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், இந்திர தனுஷ் திட்ட 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்தும் முகாம் மே 7-ம் தேதி தொடங்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் : |
| "கலவரப் பகுதிகள் மசோதா'வை உருவாக்கும் மிஸோரம் அரசு Posted: 15 Apr 2015 12:01 PM PDT மிஸோரம் மாநிலத்தில், போராளிக் குழுக்களால் பாதிக்கப்பட்ட இடங்களை கலவரப் பகுதிகள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையிலான "மிஸோரம் கலவரப் பகுதிகள் மசோதா, 2015'-ஐ அரசு உருவாக்கி வருவதாக, மாநில உள்துறை கூடுதல் செயலாளர் லால்பியாக்ஸாமா தெரிவித்தார். |
| வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை Posted: 15 Apr 2015 12:01 PM PDT வேலூர் மாவட்டத்தில் புதன்கிழமையும் பரவலாக மழை பெய்தது. பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் கோடை வெயிலின் வெப்பத் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. |
| துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம்: ஜம்மு-காஷ்மீரில் முழு அடைப்பு Posted: 15 Apr 2015 12:00 PM PDT ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து அங்கு புதன்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. |
| சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 15 Apr 2015 12:00 PM PDT முழுநேர அரசு ஊழியர்களாக்க வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்கள், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஆவினில் 13 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை Posted: 15 Apr 2015 12:00 PM PDT வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் 13 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை "ஆவின்' பெருந்தலைவர் த.வேலழகன் வழங்கினார். |
| நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: விசாரணையிலிருந்து நீதிபதி தவே விலகல் Posted: 15 Apr 2015 11:59 AM PDT நீதிபதிகள் நியமன தேசிய ஆணையச் சட்டத்துக்கு எதிரான வழக்கின் விசாரணையிலிருந்து நீதிபதி ஏ.ஆர்.தவே புதன்கிழமை விலகினார். |
| Posted: 15 Apr 2015 11:59 AM PDT சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தினால் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு உணவளிக்கும் பணிகள் பாதிக்கப்படவில்லை. |
| இறுதிச் சடங்குக்கு செலவான பணத்தை திருப்பிக் கேட்ட சத்தீஸ்கர் காவல் துறை Posted: 15 Apr 2015 11:59 AM PDT சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் பலியான காவல் துறை அதிகாரியின் இறுதிச் சடங்கு நிகழ்வுக்காக செலவிடப்பட்ட ரூ.10,000 பணத்தை திருப்பித் தருமாறு, அவரது குடும்பத்தினருக்கு மாநில காவல் துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது |
| அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களுக்கு "சீல்' Posted: 15 Apr 2015 11:59 AM PDT வேலூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களுக்கு "சீல்' வைக்கப்படும் என வேலூர் உள்ளூர் திட்டக் குழுமத் தலைவராக உள்ள மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் எச்சரிக்கை விடுத்தார். |
| மின் வாரியச் செயற்பொறியாளர் அலுவலகம் இடம் மாற்றம் Posted: 15 Apr 2015 11:58 AM PDT குடியாத்தம் மின் வாரியச் செயற்பொறியாளர் அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மின் வாரியச் செயற்பொறியாளர் ர. குமரேசன் வெளியிட்ட அறிக்கை: |
| Posted: 15 Apr 2015 11:58 AM PDT ஜோலார்பேட்டை அருகே ரயில் பாதையில் திடீர் விரிசல் ஏற்பட்டதையடுத்து, ரயில் போக்குவரத்து ஒருமணி நேரம் பாதிக்கப்பட்டது. |
| குட்டையில் மூழ்கிய மாணவரின் சடலம் மீட்பு Posted: 15 Apr 2015 11:58 AM PDT கல் குவாரியில் மூழ்கி இறந்த மேல்விஷாரம் கல்லூரி மாணவரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. |
| காதல் திருமணம் செய்ததால் ஊரைவிட்டு தள்ளிவைப்பு: குடும்பத்தினர் தர்னா Posted: 15 Apr 2015 11:57 AM PDT காதல் திருமணம் செய்து கொண்டதால் ஊர்ப் பஞ்சாயத்தாரால் தள்ளிவைக்கப்பட்ட காதல் தம்பதி, தங்களை ஊருக்குள் சேர்த்துக் கொள்ளக் கோரி தங்கள் வீட்டு முன் தரையில் அமர்ந்து புதன்கிழமை தர்னா போராட்டம் நடத்தினர். |
| Posted: 15 Apr 2015 11:57 AM PDT ஆற்காடு நகரில் பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 15 Apr 2015 11:56 AM PDT ஆம்பூரின் அனைத்துப் பகுதி மக்களுக்கு 50 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தினந்தோறும் நகராட்சி சார்பில் இலவசமாக வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| Posted: 15 Apr 2015 11:56 AM PDT |
| தண்ணீர் தேடி வந்த இரு மான்கள் சாவு Posted: 15 Apr 2015 11:56 AM PDT நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டைப் பகுதியில் தண்ணீர் தேடி கிராமத்துக்குள் நுழைந்த இரண்டு மான்கள் இறந்தன. |
| நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 15 Apr 2015 11:56 AM PDT தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குக் காரணமான ஆந்திர மாநில காவல் துறையைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| பரமன்குறிச்சியில் மனுநீதி நாள் முகாம் Posted: 15 Apr 2015 11:56 AM PDT மாவட்ட வருவாய் அலுவலரின் மனுநீதி நாள் முகாம் பரமன்குறிச்சியில் புதன்கிழமை நடைபெற்றது. |
| ரயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 15 Apr 2015 11:56 AM PDT ரயிலில் கடத்தப்பட்ட நியாய விலைக் கடை அரிசி ஆம்பூர் ரயில் நிலையத்தில் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. |
| சிறந்த சுற்றுச்சூழல் மன்றம்: ஆழ்வார்திருநகரி பள்ளி சிறப்பிடம் Posted: 15 Apr 2015 11:55 AM PDT சிறந்த சுற்றுச்சூழல் மன்றத்துக்கான மாவட்ட அளவிலான முதல் பரிசை ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப் பள்ளி பெற்றுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |