Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தயாரிப்பாளர் ஆகிறார் விஜயலெட்சுமி

Posted:

படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, பட தயாரிப்பாளர் ஆக திட்டமிட்டிருப்பதாக விஜயலெட்சுமி கூறியுள்ளார்.

தமிழ் திரைப்பட இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகளான விஜயலெட்சுமி, வெங்கட்பிரபுவின் அறிமுக படமான சென்னை -28லிலேயே இவரும் அறிமுகம் ஆனார். பின் அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் நடித்தார். வனயுத்தம் படத்தில் சந்தன கடத்தல் ...

நான் கடவுளை விட விதியை நம்புபவன் : அக்ஷய் குமார்

Posted:

நான் கடவுளை விட விதியை நம்புபவன். ஏனெனில், நான் திறமையினால் வளரவில்லை, எனது விதியின் காரணமாகவே இந்த நிலைக்கு வந்துள்ளதாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார்.

பேபி படத்தின் வெற்றியை தொடர்ந்து, அக்ஷய் குமார், கப்பார் இஸ் பேக் படத்தில் நடித்துள்ளார். கப்பார் இஸ் பேக், இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது. படத்தில் தனது ...

என் துறையில் பெண் ஆதிக்கம் அதிகம்! - ஆடை வடிவமைப்பாளர் சத்யா

Posted:

ஒரு ஹீரோவின் அடையாளம்... அவருக்கான கதாபாத்திரம்; அந்த கதாபாத்திரத்தின் அடையாளம்... அதன் 'கெட்டப்;' அந்த 'கெட்டப்'பின் அடையாளம்... அதற்கு 'கெத்து' ஏற்றும் உடைகள்! ஆக, ஒரு ஹீரோவின் கம்பீரத்திற்கான முக்கிய பொறுப்பை சுமப்பது ஆடை வடிவமைப்பு. இந்த சவாலான துறையில், தற்போது கலக்கிக் கொண்டிருப்பவர் சத்யா. கடந்த 2010ம் ஆண்டு, தமிழ் சினிமா ...

அச்சமின்றி படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய சமுத்திரக்கனி

Posted:

இயக்குநராக இருந்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ள சமுத்திரக்கனி, இன்று தனது 42வது பிறந்தநாளை, அச்சமின்றி படக்குழுவினருடன் கொண்டாடினார்.

அச்சமின்றி படயூனிட்டால், சமுத்திரகனியின் பிறந்தநாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. சமுத்திரகனிக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. கேக் வெட்டி பிறந்தநாளை, சமுத்திரகனி ...

விஜய் டி.வி விருது விழா: சிறந்த படம் வேலையில்லா பட்டதாரி, நடிகர் தனுஷ்

Posted:

விஜய் டி.வி. ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2014ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று (ஏப் 25) நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது. இதில் வேலையில்லா பட்டதாரிக்கு சிறந்த படம், நடிகர், நடிகை என மூன்று விருதுகள் கிடைத்தது. விருது பட்டியல் வருமாறு:

சிறந்த படம்: ...

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் போர் பற்றிய படம்

Posted:

ராணுவ யுத்தம் தொடர்பான படங்கள் ஹாலிவுட்டில் அடிக்கடி வெளிவரும். தமிழில் அத்தி பூத்த மாதிரி எப்போதாவதுதான் வரும். அப்படி வர இருக்கும் படம் மூன்றாம் உலகப்போர். 2025ம் ஆண்டில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடுமையான போர் மூண்டு அது மூன்றாவது உலகப்போராக மாறுகிறது. அந்த போர் எதனால் உருவானது. எப்படி நடந்தது. யார் வென்றார்கள். உலகம் என்ன ...

நாரதனுக்காக ஒரே நாளில் 10 கிலோ மீட்டர் ஓடிய நிகிஷா படேல்

Posted:

நகுல், நிகிஷா படேல், ஸ்ருதி ராமகிருஷ்ணன், பிரேம்ஜி நடிக்கும் படம் நாரதன். நாகா வெங்கடேஷ் இயக்குகிறார். சஞ்சய் லோகநாத் ஒளிபதிவு செய்கிறார், மணிசர்மா இசை அமைக்கிறார். இந்த படத்துக்காக சென்னை நகருக்குள் 10 நாட்கள் ரன்னிங் சேசிங் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் நாகா வெங்கடேஷ் கூறியதாவது: பொள்ளாச்சியை ...

என்னை நிராகரித்த ஹீரோயின்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

Posted:

ஆரம்ப காலத்தில் என்னை நிறைய ஹீரோயின்கள் நிராகரித்தார்கள் என்று வெளிப்படையாக கூறினார் சிவகார்த்திகேயன். அண்மையில் நடந்த ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறுகிறவர்களுக்கு ஹீரோயின்கள் கிடைப்பது ரொம்ப கஷ்டம். ஆரம்ப காலத்தில் என்னோடு நடிக்க ...

ரஜினிகாந்த் ஸ்டைலில் ரஜினி முருகன் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted:

காக்கி சட்டைக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ரஜினி முருகன். திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குனர் லிங்குசாமியும், அவரது தம்பி சுபாஸ் சந்திரபோசும் தயாரிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இமான் இசை அமைக்கிறார், பாலசுப்பிரமணியம் ...

தணிக்கை அதிகாரி பக்கிரிசாமி டிரான்ஸ்பர்

Posted:

சென்னை மத்திய திரைப்பட தணிக்கைத்துறையின் மண்டல அதிகாரியாக கடந்த 4 ஆண்டுகளான பணியாற்றி வந்த வி.பக்கிரிசாமி மும்பையில் உள்ள மத்திய திரைப்பட பிரிவு இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பக்கிரிசாமி ஏற்கெனவே மத்திய திரைப்பட பிரிவில் துணை இயக்குனராக பணியாற்றியவர். அங்கிருந்துதான் சென்னைக்கு தணிக்கை அதிகாரியாக வந்தார். ...

குழந்தை நட்சத்திரங்களுக்கு புதிய கட்டுப்பாடு: பாதுகாப்பு ஆணையர் தகவல்

Posted:

திரைப்படம், மற்றும் தொலைக்காட்சிகளில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருக்கிறது என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணைய தலைவர் சரஸ்வதி தெரிவித்தார்.
பொது ஊடகங்களில் குழந்தைகள் பயன்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று (ஏப் 25) நடந்தது. இதில் கலந்து கொண்டு ஆணையத்தின் தலைவர் ...

ராம்கோபால் வர்மாவின் தொடர் தாக்குதலுக்கு பதில் சொல்ல விரும்பாத துல்கர்..!

Posted:

பொதுவாக பலரும் குரைக்கிற நாயை முதலில் கல்லெடுத்து எறிவார்கள்.. அதன்பின்னர் தொடர்ந்து குறைத்தாலும், அது கடிக்காது என்பதால் அதை சட்டைசெய்யாமல் போய்விடுவார்கள்.. ராம்கோபால் வர்மாவின் ஒரிஜினல் குணத்தை புரிந்துகொண்ட துல்கரும் இப்படித்தான் ஒதுங்கிக்கொண்டு விட்டார். துல்கரை பாராட்டுகிறேன் என்கிற சாக்கில் மம்முட்டியை வர்மா ...

க்யா கூல் ஹைய் ஹம் 3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

ஏக்தா கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ள எக்ஸ் எக்ஸ் எக்ஸ் மற்றும் க்யா கூல் ஹைய் ஹம் 3 படத்தின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கென் கோஷ் இயக்கத்தில், செக்ஸை மையமாகக்கொண்டு, ஐந்து கதைகளின் தொகுப்பாக உருவாகியுள்ள எக்ஸ் எக்ஸ் எக்ஸ் படம், ஜூலை மாதம் 3ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிக்க ஷாகித் கபூர் அணுகப்பட்டதாக வந்த ...

சஞ்சய் தத் பெயரில் விளையாட்டு கோப்பை

Posted:

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பெயரில், அவர் படித்த பள்ளியில் விளையாட்டு கோப்பை வழங்கப்பட உள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் ஷனாவர் பகுதியில் உள்ள தி லாரன்ஸ் பள்ளியில், சஞ்சய் தத், பள்ளிப்படிப்பு படித்திருந்தார். திரையுலகில் முன்னணி இடத்தை பிடித்தபோதும், தான் படித்த பள்ளியுடனான தொடர்பை, சஞ்சய் தத் துண்டித்துக்கொள்ளவில்லை. ஒவ்வொரு முறை ...

ஆக்ஷன் படத்திற்கு தயாராகும் ஹிருத்திக்

Posted:

யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், தூம் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்திருந்த நிலையில், மீண்டும் ஒரு ஆக்ஷன் படத்தில், ஆதித்யா சோப்ராவும், ஹிருத்திக் ரோஷனும் இணைய உள்ளனர். ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், உருவாக உள்ள இந்த படத்தை, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்க உள்ளார். ஆக்ஷன் படம் என்பதால், வெளிநாட்டிலிருந்து பல்வேறு சண்டைக்கலை ...

ரீமேக் ஆகிறது சாரன்ஷ்

Posted:

1984ம் ஆண்டு வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த சாரன்ஷ் படத்தை, பெங்காலி அல்லது மராத்தி மொழியில் ரீமேக் செய்ய இயக்குநர் மகேஷ் பட் திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எதிர்பாராதவிதமாக மரணமடையும் தன் மகனை காண அவனது பெற்றோர் படும்பாட்டை தத்ரூபமாக படம் பிடித்துக்காட்டியிருந்தது சாரன்ஷ் படம். அந்தப் ...

காத்ரீனாவிற்கு இந்த ஆண்டு டும் டும்

Posted:

பாலிவுட் திரையுலகின் பார்பி கேர்ள் காத்ரீனா கைப்பிற்கு, இந்தாண்டிற்குள் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையி்ல நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காத்ரீனா, தனக்கும் - ரன்பீர் கபூருக்கும் இடையே, இந்தாண்டின் இறுதிக்குள் திருமணம் நடைபெற உள்ளதாக கூறினார். அந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை சோனம் கபூர் ...

இரண்டாவது வெற்றியை ருசிக்க தயங்கும் இயக்குநர்கள்...

Posted:

சினிமா என்பது ஒரு இயக்குனரின் கட்டுப்பாட்டில்தான் உருவாகிறது. ஒரு படத்தின் வெற்றிக்கும், தோல்விக்கும் அந்த இயக்குனர்தான் முழு பொறுப்பு. நடிப்பவர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் எல்லாருமே இயக்குனரின் கற்பனையைத்தான் நிழல் வடிவமாகக் கொண்டு வருகிறார்கள்.

நல்ல நடிகர்கள் கிடைத்து தோல்விப் படங்களைக் கொடுத்த இயக்குனர்களும் ...

ரசிகர்களை கவர கேத்ரின் தெரசா புதிய திட்டம்!

Posted:

மெட்ராஸ் படத்தில் கார்த்தியுடன் நடித்தவர் கேத்ரின் தெரசா. அந்த படத்தில் அவர் நடிப்பதற்கு பெரிதாக வேலை இல்லைதான் என்றாலும், வெற்றி பெற்ற படத்தின் நாயகி என்பதால் தற்போது அவர் கைவசம் கணிதன், வீர தீர சூரன் போன்ற படங்கள் உள்ளன.
இதில் கணிதன் படத்தில் அதர்வாவுடன் நடித்துள்ள கேத்ரின், வீர தீர சூரன் படத்தில் விஷ்ணுவுடன் நடிக்கிறார். ...

அப்பா இடத்தை பிடிக்க முயற்சிக்கும் கெளதம் கார்த்திக்!

Posted:

அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் கார்த்திக். அவரைப்போலவே ராதாவும் அந்த படத்தில்தான் அறிமுகமானார். பாரதிராஜாவின் மோதிரக்கையினால் குட்டுப்பட்ட அவர்கள் இருவருமே பின்னர் முன்னணி நடிகர் நடிகையாக வலம் வந்தனர்.
இதில் கார்த்திக் தனக்கென ஒரு பாணியில் நடித்து ஒரு இடத்தை பிடித்து வைத்திருந்தார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™