Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மகாராஷ்டிரா இடைத்தேர்தல்: தோல்வி முகத்தில் நாராயண் ரானே- வெற்றி பெறும் நிலையில் சிவசேனா

Posted: 14 Apr 2015 11:37 PM PDT

மகாராஷ்டிராவில் காலியாக உள்ள பாந்த்ரா கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான நாராயண் ரானேவை தோற்கடித்து சிவசேனா வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற்ற மற்றொரு தொகுதியான டஸ்கோன்-கவ்தே மஹங்கல் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரான சுமன் பாட்டீல் 56000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இலங்கை பயணிகளுக்கு இந்தியா விசா சலுகை: விமான நிலையத்தில் இறங்கியதும் பெற்றுக் கொள்ளலாம்

Posted: 14 Apr 2015 11:01 PM PDT

இலங்கை பயணிகளுக்கு இந்தியா விசா சலுகை அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த போது இலங்கை பயணிகளுக்கு இந்தியா வருவதற்கான 'ஒன் அரைவர் விசா' சலுகை அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

இணைய சமத்துவம் என்றால் என்ன?: ஏர்டெல் ஜீரோ திட்டம் இணைய சமத்துவத்துக்கு எதிரானதா? இல்லையா?

Posted: 14 Apr 2015 10:20 PM PDT

இணைய வழி தொடர்பில் இணைய தளங்கள் மற்றும் ஆப்புகள் ஆகியவற்றை பயன்படுத்தி இதுவரை அறிவுசார் விஷயங்களையும், ஆன்லைன் வர்த்தகங்களையும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் நடுநிலைமையோடு நாம் அணுகி வருகிறோம். நமக்கு என்ன தேவையோ அதை நாமே தேர்வு செய்து பயன்படுத்திவருகிறோம்.

காதலிக்க மறுத்த பெண் மீது காரை ஏற்றிய காதலன்: காதலி உள்பட 6 பெண்கள் படுகாயம்

Posted: 14 Apr 2015 10:03 PM PDT

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள அரிங்கூர் பகுதியை சேர்ந்தவர் சிபின்(வயது21). இவரும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். கடந்த ஒரு வருடமாக பல்வேறு இடங்களில் தனிமையில் சந்தித்து இவர்கள் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அந்த பெண் சிபினை சந்திப்பதை தவிர்த்தார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் சித்திரை விஷு தரிசனம்: பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

Posted: 14 Apr 2015 09:31 PM PDT

பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளுக்கு பிறகு சித்திரை விஷு பூஜை மிகவும் சிறப்பு பெற்றதாகும். இந்த ஆண்டு சித்திரை விஷுக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 10–ந்தேதி மாலையில் திறக்கப்பட்டது. அன்று தீபாராதனை மட்டும் நடத்தப்பட்டது. மறு நாளில் இருந்து சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள்

ஐ.ஏ.எஸ். அதிகாரி மர்மச்சாவு: சி.பி.ஐ. விசாரணை மூலம் உண்மை வெளிவரும் - பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தகவல்

Posted: 14 Apr 2015 08:23 PM PDT

ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இதுகுறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாநிலத்தில் தீவிர போராட்டங்கள் நடைபெற்றன.

பெங்களூரு மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்ள தயார்: தேவேகவுடா பேட்டி

Posted: 14 Apr 2015 08:15 PM PDT

பெங்களூருவில் நடைபெற்ற அம்பேத்கர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட பிறகு தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கான மாற்றி அமைக்கப்பட்ட வார்டு இட ஒதுக்கீடு பட்டியலை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. இதில் குறைபாடுகள்

மத்திய மந்திரி கல்ராஜ் மிஸ்ராவுக்கு கைது வாரண்டு: உத்தரபிரதேச கோர்ட்டு பிறப்பித்தது

Posted: 14 Apr 2015 08:09 PM PDT

உத்தரபிரதேசத்தில் கடந்த 2009-ம் ஆண்டு, வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான வருண்காந்தி கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பிலிபிட் நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

புதிய கட்சி பற்றி ஜனதா பரிவார் தலைவர்கள் டெல்லியில் இன்று ஆலோசனை

Posted: 14 Apr 2015 07:57 PM PDT

காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக வலுவான கட்சி ஒன்றை உருவாக்க சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்ட முன்னாள் ஜனதா பரிவார் தலைவர்கள் தீர்மானித்து உள்ளனர். இதுபற்றி கடந்த 5-ந்தேதி

சோனியாகாந்தியே காங்கிரஸ் தலைவராக நீடிக்கவேண்டும்: ஷீலா தீட்சித் சொல்கிறார்

Posted: 14 Apr 2015 05:12 PM PDT

சோனியாகாந்தியே காங்கிரஸ் தலைவராக நீடிக்கவேண்டும் என்று ஷீலா தீட்சித் கூறினார். டெல்லி மாநில முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஷீலாதீட்சித் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

டெல்லி தனிக்கோர்ட்டில் விசாரணை: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று இறுதிவாதம் தொடங்குகிறது

Posted: 14 Apr 2015 04:57 PM PDT

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில முக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டு இது தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதி ஓ.பி.ஷைனி இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.

அத்வானியை காணவில்லை என காந்திநகர் தொகுதியில் பரபரப்பு ஏற்படுத்திய சுவரொட்டி

Posted: 14 Apr 2015 04:47 PM PDT

பாரதீய ஜனதா மூத்த தலைவரான அத்வானி கடந்த பாராளுமன்ற தேர்தலில், காந்திநகர் தொகுதியில் இருந்து 6-வது முறையாக எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த நிலையில் காந்திநகரில் சில இடங்களில், ''கடந்த சில ஆண்டுகளாக அத்வானியை காணவில்லை தொகுதி

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீனாவை விட அதிகமாக இருக்கும் என கணிப்பு

Posted: 14 Apr 2015 04:47 PM PDT

சீனாவை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி தெரிவித்து உள்ளன. இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 7.5 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேகமாக வளர்ந்து வரும் நாடு என்ற நிலையை இந்தியா அடையும். இதுவரை சீனாதான்

20 தமிழர்கள் சுட்டுக்கொலை: ஆந்திர அரசின் தலைமைச் செயலாளர் மத்திய அரசிடம் நேரில் விளக்கம்

Posted: 14 Apr 2015 04:43 PM PDT

திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரங்களை வெட்ட வந்ததாக கூறி 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது திட்டமிட்ட படுகொலை என்று கூறப்படுவதால், துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யுமாறு ஆந்திர அரசுக்கு ஐதராபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.

நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த மத்திய அரசு திட்டம்

Posted: 14 Apr 2015 04:29 PM PDT

நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த மத்திய அரசு, பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது. நதிநீர் இணைப்பு திட்டம் நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை நிறைவேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முனைப்புடன் உள்ளது. ஆனால், இந்த திட்டத்துக்கு சில மாநில அரசுகள்

ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் கைது

Posted: 14 Apr 2015 04:29 PM PDT

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சேஷாலம் வனப்பகுதியில், கடந்த 7-ந்தேதி செம்மரங்களை வெட்டி கடத்திச் செல்ல முயன்றதாக கூறி 20 தமிழர்களை அம்மாநில போலீசார் சுட்டுக்கொன்றனர். இது திட்டமிட்ட படுகொலை என்றும் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி கூலி தொழிலாளர்கள் என்றும் கூறி ஆந்திர அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நீட்டிக்கப்படுமா? சுப்ரீம் கோர்ட்டில் 17-ந் தேதி விசாரணை

Posted: 14 Apr 2015 04:17 PM PDT

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிப்பது குறித்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் 17-ந் தேதி நடைபெறுகிறது. பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை எதிர்த்து, அ.தி.முக.

ஆசிரியர் நியமன தேர்வு முறைக்கு எதிரான வழக்கில் 21-ந் தேதி இறுதி விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 14 Apr 2015 03:36 PM PDT

தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'வெயிட்டேஜ்' முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இறுதி விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 21-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்தி வைத்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள

விவசாயிகளின் நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தாரைவார்க்காது: அமித்ஷா பேச்சு

Posted: 14 Apr 2015 03:11 PM PDT

விவசாயிகளின் நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தாரைவார்க்காது என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறினார். மத்திய அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் அந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும்,

தமிழ் புத்தாண்டு: பிரதமர் மோடி வாழ்த்து

Posted: 14 Apr 2015 02:00 PM PDT

பிரதமர் நரேந்திரமோடி, 'டுவிட்டர்' வலைத்தளம் மூலமாக தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 'தமிழ் நண்பர்களுக்கு எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டில், தமிழ் மக்களின்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™