Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


செம்மரக்கடத்தல் வழக்கில் கைதான தெலுங்கு படதயாரிப்பாளருக்கு 4 நாள் போலீஸ் காவல்

Posted: 27 Apr 2015 11:15 PM PDT

செம்மரக்கடத்தல் வழக்கில் கர்னூலை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், தெலுங்கு பட தயாரிப்பாளருமான மஸ்தான் வலி கைது செய்யப்பட்டார். செம்மரக்கடத்தல் தொழிலில் கிடைத்த கோடிக் கணக்கான பணத்தின் மூலம் 2013–ம் ஆண்டு அவர் பிரேம பிராயணம் என்ற தெலுங்கு படத்தை தயாரித்தார். இதில் கதாநாயகியாக நடிகை நீத்து அகர்வால் நடித்தார்.

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல்: கொல்கத்தா மேயர் பதவியை கைப்பற்றியது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி

Posted: 27 Apr 2015 11:13 PM PDT

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் கொல்கத்தா மாநகராட்சி மேயர் பதவியை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட சோவன் சாட்டர்ஜி, அம்மாநில சட்டமன்ற

மாட்டு இறைச்சி சாப்பிட்டு ராகுல் கேதார்நாத் கோவிலுக்கு சென்றதால் பூகம்பம் ஏற்பட்டது: பாஜக எம்.பி. கிண்டல்

Posted: 27 Apr 2015 11:11 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் சாக்‌ஷி மகராஜ். இவர் உன்னாவ் தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அடிக்கடி மத தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கேதார்நாத் பயணம் குறித்து தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிப்பு: ஐ.நா.சபை தகவல்

Posted: 27 Apr 2015 10:42 PM PDT

பூகம்பத்தால் சின்னா பின்னமான நேபாளத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பூகம்ப சேதம் குறித்து ஐ.நா.சபை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இந்த பூகம்பத்தில் 39 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 11 மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சுமார் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு அதிரடி: வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் 9,000 என்.ஜி.ஓ.க்களின் உரிமம் ரத்து

Posted: 27 Apr 2015 10:36 PM PDT

என்.ஜி.ஓ (Non Governmental Organisations) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று, இந்தியாவில் சேவை உள்ளிட்ட பல காரியங்களுக்காக அந்த நிதியை பயன்படுத்துகின்றன. தற்போது வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை (Foreign Contribution Regulation Act) மீறியதற்காக சுமார் 9 ஆயிரம் என்.ஜி.ஓ.க்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் 20 அணுகுண்டு வெடித்ததற்கு சமம்: நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

Posted: 27 Apr 2015 10:33 PM PDT

இமயமலை பகுதியில் உள்ள நேபாளத்தில் கடந்த 25–ந்தேதி (சனிக்கிழமை) 7.9 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் காத்மாண்டு, போக்ரா, தீர்த்திநகர் உள்ளிட்ட பெரும் பாலான இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள், ஓட்டல்கள் இடிந்து தரை மட்டமாயின.

உரிமை மீறல் நோட்டீசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஷோபா டே வழக்கு

Posted: 27 Apr 2015 10:31 PM PDT

மகாராஷ்டிராவில் மராத்தி மொழி திரைப்படங்களை திரையிட வேண்டும் என்ற உத்தரவை கேலி செய்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த ஷோபா டேவுக்கு அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நோட்டீசுக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றத்தில் ஷோபா டே வழக்கு தொடர்ந்துள்ளார்.

நிலத்தை அபகரித்ததாக பெண் வழக்கு: முகேஷ் அம்பானிக்கு ஆந்திர ஐகோர்ட்டு நோட்டீஸ்

Posted: 27 Apr 2015 10:30 PM PDT

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் சக்கா துர்கம்பா. இவருக்கு காக்கிநாடாவில் 8.23 ஏக்கர் நிலம் உள்ளது. சக்கா துர்கம்பா ஆந்திர ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியதாவது:– எனக்கு சொந்தமாக காக்கிநாடாவில் உள்ள நிலத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவன பிரதிநிதிகள் தவறான தஸ்தாவேஜுகள் தயாரித்து

நிலநடுக்கத்தால் காத்மாண்டு நகரம் 10 அடி தூரம் தெற்காக நகர்ந்துள்ளது: வல்லுனர்கள் தகவல்

Posted: 27 Apr 2015 09:46 PM PDT

நேபாளத்தை புரட்டி போட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டு 10 அடி தூரம் தெற்காக நகர்ந்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் இமயமலையின் உயரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால்

திருப்பதி கோவிலுக்கு 18 பேர் அறங்காவலர்களாக நியமனம்: தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு பதவி

Posted: 27 Apr 2015 09:45 PM PDT

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் புதிய ஆட்சி பதவி ஏற்றதும் திருப்பதி கோவில் அறங்காவலர் குழு கலைக்கப்பட்டது. அறங்காவலர் குழு பதவியை பிடிக்க தெலுங்கு தேசம் கட்சியில் கடும் போட்டி நிலவியது. இதனால் 1 ஆண்டு காலமாக அறங்காவலர் குழு

கேரளாவுக்கு கோழி கடத்தலை தடுத்த அதிகாரிகளை கொல்ல முயற்சி: வாலிபர் கைது

Posted: 27 Apr 2015 09:41 PM PDT

குமரி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு ரேசன் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுகிறது. இதை தடுப்பதற்காக குமரி–கேரள எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசாரும், அதிகாரிகளும் கண்காணித்து வருகிறார்கள். பாறசாலை சோதனை சாவடியில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது குமரி மாவட்டத்தில் இருந்து

நேபாள பூகம்ப மீட்பு பணிக்காக அனுப்பப்பட்ட இந்தியா-பிரான்ஸ் நாட்டு மோப்ப நாய்கள்

Posted: 27 Apr 2015 08:44 PM PDT

நேபாளத்தில் நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் குவியல், குவியலாக கிடக்கும் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டு 3 நாட்களுக்கும் மேலாகி உள்ளதால், இந்த இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை விரைவில் மீட்க வேண்டியுள்ளது.

பூகம்ப மீட்பு நடவடிக்கையில் மாநிலங்களின் ஒத்துழைப்புக்கு பிரதமர் பாராட்டு

Posted: 27 Apr 2015 08:05 PM PDT

நேபாளம் மற்றும் இந்தியாவின் வடமாநிலங்களில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை இந்திய ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

பத்மநாபசாமி கோவில் குளத்தில் கிடந்த பைப் வெடிகுண்டுகள் குறித்து ராஜ குடும்ப பிரதிநிதி ஆதித்ய வர்மா தகவல்

Posted: 27 Apr 2015 07:56 PM PDT

திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் ரகசிய அறைகளில் அரிய வகை பொற்குவியல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் தற்போது துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில்

கர்நாடக அனைத்து கட்சி குழு 30-ந் தேதி பிரதமரை சந்திக்கிறது: சித்தராமையா பேட்டி

Posted: 27 Apr 2015 07:21 PM PDT

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையொட்டி தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் தமிழக எம்.பி.க்கள் டெல்லியில்

தமிழக பிரச்சினைகளுக்காக ஒன்றிணைந்தது நல்ல தொடக்கம்: கட்சி பிரதிநிதிகள் பேட்டி

Posted: 27 Apr 2015 07:07 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியை விஜயகாந்த் தலைமையிலான தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகள் சந்தித்த பின்னர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வீட்டில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது விஜயகாந்த், 'தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து பிரதமர் பரிவுடன் கேட்டார். அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் ஆவன

நிலநடுக்கத்தால் பாதித்தவர்களுக்கு உதவி: பிரதமர் மோடி, ஒரு மாத சம்பளம் நன்கொடை

Posted: 27 Apr 2015 05:09 PM PDT

இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பில் இருந்தும் நிதியுதவிகள் குவிகிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி, நேற்று தனது ஒரு மாத சம்பளத்தை, பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு, நன்கொடையாக

எனது மகள் சினிமாவில் நடிப்பதாக வெளியான தகவல் ஆதாரமற்றது: சச்சின் தெண்டுல்கர் தகவல்

Posted: 27 Apr 2015 04:21 PM PDT

சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா இந்தி சினிமாவில் நடிக்கிறார் என்று வெளியான தகவலை மறுத்துள்ள தெண்டுல்கர், அது அடிப்படை ஆதாரமற்றது என்றும் கூறியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் விலகிவிட்டாலும், அவரது பெயர் இன்னும் புகழின் உச்சியிலேயே

டெல்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் 1000 இடங்களில் வை-பை வசதி

Posted: 27 Apr 2015 12:49 PM PDT

டெல்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் 1000 இடங்களில் வை-பை வசதி செய்யப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது டெல்லியை டிஜிட்டல் நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. அதற்கு செயல்வடிவம் கொடுப்பதின் ஒரு பகுதியாக 2016-ம் ஆண்டு பிப்ரவரி

நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் எங்கள் நாட்டு மக்களை மீட்டுத் தாருங்கள்: இந்தியாவிடம் ஸ்பெயின் வேண்டுகோள்

Posted: 27 Apr 2015 09:34 AM PDT

நேபாளத்தில் 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், மீட்புப் பணியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மீட்புக்குழுவினருடன் நிவாரணப் பொருட்களையும் தாராளமாக அனுப்பியுள்ளது. அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பத்திரமாக மீட்டு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் ஸ்பெயின் நாட்டு மக்களை மீட்பதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று அந்நாட்டு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™