மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சந்திரகிரகண தரிசனம்: திருப்பதி கோவிலில் நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் காயம்
- புகையிலை தயாரிப்பவர்களுக்கு ஆதரவு: பாராளுமன்ற நிலைக்குழு எம்.பி.க்கள் நீக்கம்?- மோடி நடவடிக்கை
- வீட்டில் அடைத்து வைத்து 14 வயது சிறுமியை 3 நாள் கற்பழித்த வாலிபர் கைது
- மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ற வகையில் நீதித்துறை சக்தி வாயந்ததாகவும், மன நிறைவளிப்பதாகவும் இருக்கவேண்டும்: மோடி பேச்சு
- தொழிற்சாலைகளில் இரவில் வேலை செய்ய ஆந்திர பெண்களுக்கு மாநில அரசு அனுமதி
- அரியானா முன்னாள் முதல்–மந்திரி சவுதாலாவுக்கு 1 மாதம் பரோல்
- மராட்டியத்தில் 55 மாணவிகள் மானபங்கம்: 3 ஆசிரியர்கள் கைது
- அரியானாவில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண்ணை 3 நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்த 5 பேர் கும்பல்
- சந்திர கிரகணத்தின் போது, ரத்தச் சிகப்பு வண்ணத்திற்கு மாறிய நிலா: வீடியோ இணைப்பு
- துணை விமானிக்கு திடீர் உடல் நலக் குறைவு: பயணிகளின் பொறுமையை சோதித்த ஏர் இந்தியா விமானம்
- 11 நாட்களுக்கு முன் மாயமான பிரபல இந்திய மலையேற்ற வீரர் : சடலமாக மீட்கப்பட்ட சோகம்
- வெல்டிங் பயிற்சியின்போது சிலிண்டர்கள் வெடித்தன: 2 பாலிடெக்னிக் மாணவர்கள்-பயிற்சியாளர் பலி
- ஒரே பிரசவத்தில் பிறந்து- ஒரே நாளில் திருமணம் செய்து அசத்திய மூன்று சகோதரிகள்
- கள்ளக்காதலியை கொலை செய்த வாலிபர் போலீசில் சரண்
- 4 வயது குழந்தையை பலாத்காரம் செய்த 7-ம் வகுப்பு மாணவன்
- ஏமனில் இருந்து 1350 இந்தியர்கள் வெளியேறினர்- இன்னும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோரை வெளியேற்றும் முயற்சிகள் தீவிரம்
- உள்ளாடைக்குள் மறைத்து ரூ.1.32 கோடி தங்கம் கடத்தல்: மும்பை விமான நிலையத்தில் தாய்-மகள் கைது
- ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிச்சரிவு: 4 ராணுவ வீரர்கள் பலி
- எங்கள் ஷோரூம்களில் ரகசிய கேமராக்கள் கிடையாது: பேப் இந்தியா விளக்கம்
- இன்று முழு சந்திர கிரகணம்: சென்னையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்
| சந்திரகிரகண தரிசனம்: திருப்பதி கோவிலில் நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் காயம் Posted: 04 Apr 2015 11:37 PM PDT சந்திரகிரகணத்தை முன்னிட்டு நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை காலை 9 மணி முதல் 11 மணி நேரம் மூடப்பட்டது. இரவு 8 மணிக்கு மேல்தான் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதாலும் தொடர் விடுமுறை என்பதாலும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் நேற்று கட்டுக் கடங்காமல் இருந்தது. |
| புகையிலை தயாரிப்பவர்களுக்கு ஆதரவு: பாராளுமன்ற நிலைக்குழு எம்.பி.க்கள் நீக்கம்?- மோடி நடவடிக்கை Posted: 04 Apr 2015 11:07 PM PDT புகை பிடிப்பதால் ஏற்படும் உடல்நலக்கேடு குறித்த படம் சிகரெட் பாக்கெட்டுகளின் மீது தற்போது சிறிய அளவில் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 1–ந் தேதி முதல் 85 சதவீத அளவுக்கு பெரிதுபடுத்தப்படும் என்று மத்திய சுகாதார துறை மந்திரி கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார். இதற்கிடையே சிகரெட் மற்றும் இதர புகையிலை தயாரிப்புகள் சட்டம் 2003 |
| வீட்டில் அடைத்து வைத்து 14 வயது சிறுமியை 3 நாள் கற்பழித்த வாலிபர் கைது Posted: 04 Apr 2015 10:58 PM PDT ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பூஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பெற்றோர் ஐதராபாத்தில் உள்ளனர். துனியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவர் திருப்பதியில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு துனி திரும்பினார். வேதனையில் இருந்த அவர் வீட்டுக்கு செல்லாமல் ரெயில் நிலையத்தில் |
| Posted: 04 Apr 2015 10:58 PM PDT நாட்டின் தலைநகர் டெல்லியில் மாநில முதலமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் மாநாடு பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது; "மக்களிடம் நீதித்துறை மீது எதிர்பார்ப்பு உள்ளது. கடவுளை மக்கள் அணுக முடிவதில்லை. அதனால் தான் நீதிமன்றத்தை அணுகுகிறார்கள். சாதாரண குடிமகன் நீதித்துறையிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கின்றான். எனவே அதற்கேற்ற வகையில் நீதித்துறை சக்தி வாய்ந்ததாகவும், மன |
| தொழிற்சாலைகளில் இரவில் வேலை செய்ய ஆந்திர பெண்களுக்கு மாநில அரசு அனுமதி Posted: 04 Apr 2015 10:56 PM PDT தொழிற்சாலைகளில் இரவு நேரத்தில் பெண்கள் வேலை செய்ய இருந்த தடையை நீக்கி ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்த முன்னணி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், நேற்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பெண்கள் இரவில் வேலை பார்க்க இருந்து வரும் தடையை நீக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து மாநில தொழிற்சாலைகள் இயக்குனரகத்தை தொடர்பு கொண்டு தடையை நீக்க உத்தரவிட்ட அவர் தகுந்த பாதுகப்பு |
| அரியானா முன்னாள் முதல்–மந்திரி சவுதாலாவுக்கு 1 மாதம் பரோல் Posted: 04 Apr 2015 10:32 PM PDT அரியானா முதல்–மந்திரியாக ஓம் பிரகாஷ் சவுதாலா இருந்த போது 2000–ம் ஆண்டு 3206 இடைநிலை ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய் சவுதாலா ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா உள்பட பலரை கைது |
| மராட்டியத்தில் 55 மாணவிகள் மானபங்கம்: 3 ஆசிரியர்கள் கைது Posted: 04 Apr 2015 10:30 PM PDT மராட்டிய மாநிலம் அகோலா மாவட்டம் பாபில்கவ் என்ற இடத்தில் தனியார் உறைவிட பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் மானபங்கப்படுத்துவதாக மாநில பெண்கள் ஆணையத்துக்கு கடந்த 27–ந்தேதி ஒரு கடிதம் வந்தது. கையெழுத்து இல்லாமல் வந்த இந்த கடிதத்தை வைத்து மாநில பெண்கள் குழு உறுப்பினர்கள் ஆஷா மிர்கே அங்கு சென்று மாணவிகளிடம் பேசினார். |
| அரியானாவில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண்ணை 3 நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்த 5 பேர் கும்பல் Posted: 04 Apr 2015 10:03 PM PDT அரியானாவில் உள்ள குர்கோனில் வசித்து வந்த மேற்கு வங்க மாநில பெண் ஒருவரை கடத்தி சென்ற 5 பேர் கும்பல், உணவு கூட தராமல் அவரை 3 நாட்கள் அடைத்து வைத்து மாறி மாறி கற்பழித்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து குர்கோன் துணை காவல் ஆணையர்(குற்றப்பிரிவு) ராஜேஷ் குமார் கூறுகையில், வாசிராபாத் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டில் இப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசியில் தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது அது வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்தது. ஆனால் உள்ளேயிருந்து ஒரு பெண்ணின் முனகல் சத்தம் கேட்டது. |
| சந்திர கிரகணத்தின் போது, ரத்தச் சிகப்பு வண்ணத்திற்கு மாறிய நிலா: வீடியோ இணைப்பு Posted: 04 Apr 2015 04:31 PM PDT இயற்கையின் பேரதிசயங்களில் ஒன்றான சந்திர கிரகணம் நேற்று நிகழ்ந்தது. சூரியன் - பூமி - சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து அது முழுமையாக மறைக்கப்படும் அற்புத நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். நேற்று நிகழ்ந்தது |
| துணை விமானிக்கு திடீர் உடல் நலக் குறைவு: பயணிகளின் பொறுமையை சோதித்த ஏர் இந்தியா விமானம் Posted: 04 Apr 2015 01:28 PM PDT கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும் ஏர் இந்தியா விமானத்தின் துணை விமானிக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கிட்டத்தட்ட 5 மணி நேரம் காக்க வைத்து பயணிகளின் பொறுமையை சோதித்துள்ளது. |
| 11 நாட்களுக்கு முன் மாயமான பிரபல இந்திய மலையேற்ற வீரர் : சடலமாக மீட்கப்பட்ட சோகம் Posted: 04 Apr 2015 11:22 AM PDT உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களை 172 நாட்களில் ஏறியவர் என்ற சாதனையைப் படைத்த, இந்தியாவின் முன்னணி மலையேறும் வீரர்களில் ஒருவரான மல்லி மஸ்தான் பாபு அர்ஜென்டினாவின் ஆண்டிஸ் மலைத்தொடரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். |
| வெல்டிங் பயிற்சியின்போது சிலிண்டர்கள் வெடித்தன: 2 பாலிடெக்னிக் மாணவர்கள்-பயிற்சியாளர் பலி Posted: 04 Apr 2015 09:19 AM PDT அரியானா மாநிலம் குருஷேத்ரா அருகில் அபாயகரமான வாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் பாலிடெக்னிக் மாணவர்கள் உள்பட 3 பேர் பலியாகினர். குருஷேத்ரா அருகில் உள்ள ஹிங்காகேரி கிராமத்தில் உள்ள தனியார் |
| ஒரே பிரசவத்தில் பிறந்து- ஒரே நாளில் திருமணம் செய்து அசத்திய மூன்று சகோதரிகள் Posted: 04 Apr 2015 08:52 AM PDT ஒரே பிரசவத்தில் பிறந்த மும்மை பிறவிகளான 3 சகோதரிகள் தங்களது சிறுவயது ஆசையை நிறைவேற்றும் வகையில் ஒரே நாளில், ஒரே மேடையில் தங்கள் மணமகன்களை கரம் பிடித்து இந்த திருமண(ங்களுக்கு)த்துக்கு வந்த விருந்தினர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். தெற்கு பிரேசில் நாட்டில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தை சேர்ந்த பெட்ரோ என்பவரின் மனைவிக்கு கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் மூவருக்கும் ரபேலா, ரோச்சேலி, டாகியேன் பினி என பெயர் சூட்டிய |
| கள்ளக்காதலியை கொலை செய்த வாலிபர் போலீசில் சரண் Posted: 04 Apr 2015 08:13 AM PDT மேற்கு வங்காளத்தில் கள்ளக்காதலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த வாலிபர் போலீசில் சரண் அடைந்தார். ஹவுரா மாவட்டம் நசிர்கஞ்ச் காவல் சரகத்திற்குட்பட்ட லேபுகாலி பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு |
| 4 வயது குழந்தையை பலாத்காரம் செய்த 7-ம் வகுப்பு மாணவன் Posted: 04 Apr 2015 07:53 AM PDT உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் 4 வயது குழந்தையை 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கான்பூர் நகரைச் சேர்ந்த அந்த குழந்தை, நேற்று முன்தினம் அறுவடைக்காக வயலுக்குச் சென்ற தன் தாயுடன் சென்றிருந்தாள். தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, குழந்தை தனியாக இருந்திருக்கிறாள். இதைக் கவனித்த அதே பகுதியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன், அந்தக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு |
| Posted: 04 Apr 2015 07:30 AM PDT உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள ஏமன் நாட்டில் இருந்து 1350 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர். ஏமனில் அரசுக்கு ஆதரவாக உள்ள சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கம் இடையே உச்சகட்ட போர் நிலவி |
| உள்ளாடைக்குள் மறைத்து ரூ.1.32 கோடி தங்கம் கடத்தல்: மும்பை விமான நிலையத்தில் தாய்-மகள் கைது Posted: 04 Apr 2015 07:14 AM PDT சவுதியில் இருந்து மும்பைக்கு ரூ.1.32 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். சவுதி அரேபியாவில் இருந்து மும்பை வரும் ஒரு விமானத்தில் அதிகளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் |
| ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிச்சரிவு: 4 ராணுவ வீரர்கள் பலி Posted: 04 Apr 2015 06:42 AM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பிராந்தியத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். ஜம்மு காஷ்மீரின் லே மாவட்டத்தில் உள்ள சங் லா கிராமம் அருகே ராணுவ வீரர்கள் நேற்று ரோந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென |
| எங்கள் ஷோரூம்களில் ரகசிய கேமராக்கள் கிடையாது: பேப் இந்தியா விளக்கம் Posted: 04 Apr 2015 06:35 AM PDT மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய காட்சியை ரகசிய கேமரா மூலம் படம் பிடித்ததாக சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள பேப் இந்தியா நிறுவனம் எங்கள் ஷோரூம்களில் ரகசிய கேமராக்கள் கிடையாது என தெரிவித்துள்ளது. |
| இன்று முழு சந்திர கிரகணம்: சென்னையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர் Posted: 04 Apr 2015 06:34 AM PDT சூரியன் மற்றும் சந்திரனுக்கு மத்தியில் பூமிப்பந்து நகர்ந்து வரும் வேளையில் சூரியன் மற்றும் சந்திரனின் மீது பூமியின் நிழல் படிந்து, அவற்றின் ஒளிக்கதிர்கள் பூமியின் மீது விழாமல் மறைக்கப்படும் நிகழ்வு சூரிய கிரகணம் என்றும் சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகின்றது. சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைக்கும் வேளையில் அந்த நிகழ்வு முழு சந்திர கிரகணம் எனப்படுகின்றது. இத்தகைய முழு சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்தது. சந்திரனின் நுனிப்பகுதியை பூமி மறைக்கும் நிகழ்வு இன்று மாலை 3 மணி |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |