மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 2 ஜி வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவேன்: ஆ.ராசா பேட்டி
- பஞ்சாப் பத்திண்டா மத்திய சிறையில் கைதிகள் குழு மோதல்: துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து கைதி காயம்
- கேரளாவில் எம்.எல்.ஏ.க்களை போலீசார் உளவு பார்க்கிறார்களா?: உம்மன்சாண்டி மறுப்பு
- தெலுங்கானாவில் பரவும் பறவை காய்ச்சல்: கறிக்கோழி, முட்டை சாப்பிட வேண்டாம் - அரசு எச்சரிக்கை
- ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் சார்பில் கொலை மிரட்டல் இ-மெயில்
- 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடுகள்: அரியானாவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டன
- மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டம்: மாயாவதி அறிவிப்பு
- 2 நாள் சுற்றுப்பயணம்: காஷ்மீரில் ராணுவ தளபதி ஆய்வு
- காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு
- மதமாற்ற தடை சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை: மத்திய சட்ட அமைச்சகம் கருத்து
- இணைய சமத்துவத்திற்கு ஆதரவாக பிளிப்கார்ட்டை தொடர்ந்து கிளியர்டிரிப், என்.டி.டி.வி, டையம்ஸ் குழு நடவடிக்கை
- காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் போராட்டம்: மசாரத் ஆலம் கைது செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்
- ஆன்ராய்டு போன்களுக்கு புதிய வடிவமைப்பில் வாட்ஸ் அப்: தரவிறக்கம் செய்யும் முறை
- பிரசாந்த் பூஷண், யோகேந்திரா மீது விரைவில் நடவடிக்கை: ஆம் ஆத்மி அறிவிப்பு
- நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.ஆர். தவே விலகல்
- ஜெயலலிதா மேல்முறையீடு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகல் வந்த பிறகு முடிவு செய்யப்படும்- கர்நாடக ஐகோர்ட்டு பதிவாளர் தகவல்
- மின்சார ரெயில்களில் சட்டவிரோதமாக பெண்கள் பெட்டியில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு
- இந்தியாவிற்கு யுரேனியம் விநியோகிக்க கனடா சம்மதம்: முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது
- முகநூலில் முதல்-மந்திரியின் படத்திற்கு அவமதிப்பு: மைசூரில் பரபரப்பு
- டெல்லி சட்டசபையில் ஜூன் மாதம் ஜன் லோக்பால் மசோதா தாக்கல்: கெஜ்ரிவால்
| 2 ஜி வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவேன்: ஆ.ராசா பேட்டி Posted: 15 Apr 2015 10:14 PM PDT 2 ஜி வழக்கு தொடர்பாக ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு ஆ.ராசா அளித்துள்ள பேட்டி வருமாறு:– 1997 முதல் 2007–ம் ஆண்டு வரை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 10 மெகா கெட்ஸ் அளவுக்கு செல்போன் சேவை அலைக்கற்றை வசதியை இலவசமாக பெற்று வந்தன. நான் மத்திய மந்திரியாக இருந்த கால கட்டத்தில் பார்தி ஏர்டேல் நிறுவனர் சுனில் பார்தி |
| பஞ்சாப் பத்திண்டா மத்திய சிறையில் கைதிகள் குழு மோதல்: துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து கைதி காயம் Posted: 15 Apr 2015 10:09 PM PDT பஞ்சாப் மாநிலத்தின் பத்திண்டா மத்திய சிறையில் கைதிகள் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டதில் கைதி ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். பத்திண்டா சிறையில் உள்ள கொடூர குற்றவாளியான குல்பீர் சிங் நருவானா இன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் மற்றொரு கொடூர குற்றவாளியான |
| கேரளாவில் எம்.எல்.ஏ.க்களை போலீசார் உளவு பார்க்கிறார்களா?: உம்மன்சாண்டி மறுப்பு Posted: 15 Apr 2015 10:09 PM PDT கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு நடக்கிறது. காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பாளராக தங்கச்சன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில் பேசும் போது, மாநில போலீசார் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இது உளவு பிரிவு போலீசாரின் |
| தெலுங்கானாவில் பரவும் பறவை காய்ச்சல்: கறிக்கோழி, முட்டை சாப்பிட வேண்டாம் - அரசு எச்சரிக்கை Posted: 15 Apr 2015 09:40 PM PDT தெலுங்கானா, ஆந்திராவில் பன்றி காய்ச்சலால் 500–க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். |
| ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் சார்பில் கொலை மிரட்டல் இ-மெயில் Posted: 15 Apr 2015 09:19 PM PDT இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக உள்ள ரகுராம் ராஜனுக்கு, ஐ.எஸ். தீவிரவாதிகள் சார்பில் கொலை மிரட்டல் இ-மெயில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் isis583847@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலிருந்து ராஜனுக்கு இந்த கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த இ-மெயிலில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது |
| Posted: 15 Apr 2015 08:08 PM PDT அரியானா மாநிலம் சார் நகரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் ராக்கி கார்கி. இந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பண்டைய காலத்தில் ஹரப்பா நாகரிகம் சிறந்து விளங்கியதாக கருதப்படுகிறது. இதைத்தொடர்ந்து அதுபற்றிய விவரங்களை அறிவதற்காக |
| மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டம்: மாயாவதி அறிவிப்பு Posted: 15 Apr 2015 07:55 PM PDT மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடுமையாக விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- |
| 2 நாள் சுற்றுப்பயணம்: காஷ்மீரில் ராணுவ தளபதி ஆய்வு Posted: 15 Apr 2015 04:59 PM PDT ராணுவ தளபதி தல்பீர் சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று காஷ்மீர் மாநிலத்துக்கு சென்றார். ஜம்மு விமான நிலையத்தில் இறங்கிய அவர், அங்கிருந்து வட பிராந்திய கட்டுப்பாட்டு தளமான உதம்பூருக்கு சென்றார். அங்கு அவரை ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ஹூடா வரவேற்றார். |
| காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு Posted: 15 Apr 2015 04:30 PM PDT போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காஷ்மீரில் ஜாதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த |
| மதமாற்ற தடை சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை: மத்திய சட்ட அமைச்சகம் கருத்து Posted: 15 Apr 2015 04:30 PM PDT சில மாதங்களுக்கு முன்பு, இந்து அமைப்புகள், 'தாய் மதம் திரும்புதல்' என்ற பெயரில், மத மாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டபோது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது, எதிர்க்கட்சிகள் ஆதரித்தால், மதமாற்ற தடை சட்டம் கொண்டுவரத் தயார் என்று மத்திய மந்திரிகள் உள்பட பா.ஜனதா தலைவர்கள் பலர் கூறினர். இதையடுத்து, இதுபற்றி |
| Posted: 15 Apr 2015 03:44 PM PDT இணைய சமத்துவத்திற்கு ஆதரவு தெரிவித்த பிளிப்கார்ட்டை தொடர்ந்து கிளியர்டிரிப், என்.டி.டி.வி, டையம்ஸ் குழு நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இதன்படி இந்த மூன்று நிறுவனங்களும், இண்டர்நெட்.ஆர் திட்டத்தில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ளன. பேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் |
| Posted: 15 Apr 2015 03:07 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியுடன் பேரணியாக சென்று இந்திய இறையாண்மைக்கு எதிராக முழக்கமிட்ட குற்றத்துக்காக பிரிவினைவாதி மசாரத் ஆலம் உடனடியாக கைது செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| ஆன்ராய்டு போன்களுக்கு புதிய வடிவமைப்பில் வாட்ஸ் அப்: தரவிறக்கம் செய்யும் முறை Posted: 15 Apr 2015 02:18 PM PDT மேம்படுத்தப்பட்ட புதிய வடிவமைப்பில் வாட்ஸ் அப் வெளிவந்துள்ளது. ஆனால் இது தற்போதைக்கு ஆன்ராய்டு போன்கள் மட்டுமே அப்டேட் செய்துகொள்ள முடியும். தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வதில் பிரபலமாக உள்ள 'வாட்ஸ்–அப்' புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகிறது. சமீபத்தில் |
| பிரசாந்த் பூஷண், யோகேந்திரா மீது விரைவில் நடவடிக்கை: ஆம் ஆத்மி அறிவிப்பு Posted: 15 Apr 2015 01:37 PM PDT கட்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதால் பிரசாந்த் பூஷண், யோகேந்திரா விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்து அரவிந்த் கெஜ்ரிவால் முதல்– மந்திரியாக பதவி ஏற்றதும் அவருக்கும், அக்கட்சியின் முன்னணி |
| Posted: 15 Apr 2015 01:15 PM PDT நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் இருந்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.ஆர். தவே விலகினார். சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மூத்த |
| Posted: 15 Apr 2015 12:31 PM PDT ஜெயலலிதா மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வெளியாவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகல் வந்த பிறகு முடிவு செய்யப்படும் என்று கர்நாடக ஐகோர்ட்டு பதிவாளர் பட்டீல் கூறினார். ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு |
| மின்சார ரெயில்களில் சட்டவிரோதமாக பெண்கள் பெட்டியில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு Posted: 15 Apr 2015 11:25 AM PDT மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் விரார், தகானு வரையிலும் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் தினசரி 34 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இவர்களில் 8 லட்சம் பேர் பெண் பயணிகள் ஆவர். பெண் பயணிகளுக்கு மின்சார ரெயில்களில் தனி பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
| இந்தியாவிற்கு யுரேனியம் விநியோகிக்க கனடா சம்மதம்: முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது Posted: 15 Apr 2015 11:05 AM PDT இந்த ஆண்டு முதல் இந்தியாவிற்கு யுரேனியம் விநியோகிக்க கனடா சம்மதம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள முக்கிய முன்னேற்றமாக இது கருதப்படுகிறது. கனடாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்த நாட்டு |
| முகநூலில் முதல்-மந்திரியின் படத்திற்கு அவமதிப்பு: மைசூரில் பரபரப்பு Posted: 15 Apr 2015 10:26 AM PDT முகநூலில் சித்தராமையாவின் உருவப்படத்திற்கு அவமதிப்பு செய்த மைசூருவை சேர்ந்த வாலிபரின் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க முயன்றதாக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் தேடி வருகிறார்கள். |
| டெல்லி சட்டசபையில் ஜூன் மாதம் ஜன் லோக்பால் மசோதா தாக்கல்: கெஜ்ரிவால் Posted: 15 Apr 2015 09:03 AM PDT டெல்லி சட்டமன்றத்தில் வரும் ஜூன் மாதம் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டு ஆம் ஆத்மி ஆட்சியமைத்தபோது ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டதால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பதவியேற்ற 49-வது நாளில் ராஜினாமா செய்தார். பா.ஜனதாவும், காங்கிரசும் இந்த மசோதாவை கொண்டு வர |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |