Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கூகுள் தேடல்கள் தொகுப்பு

Posted: 26 Apr 2015 03:05 PM PDT

இணையத்தில், கூகுள் தேடல் வழியாக நாம் எதையாவது தேடி, தகவல்களைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். சில வேளைகளில், "இருபது நாட்களுக்கு முன்பு இதனைத் தேடினேன்; ஆனால், தற்போது எப்படி தேடி, என்ன பார்த்தேன் என நினைவில் இல்லை" என்று சில நேரங்களில் நினைவைக் கசக்கிப் பார்க்கிறோம். எப்படித் தேடியும் கிடைக்கவில்லை. இது போன்ற தருணங்களில் உதவிட, நம் தேடல்கள் அனைத்தையும் பட்டியலாக, கூகுள் நமக்குத் தருகிறது. இந்த தொகுப்பினைப் பெற முதலில் https://history.google.com/ என்ற தளம் செல்லவும். நீங்கள் ஜிமெயில் பார்த்துக் ...

மருத்துவ சிரிப்பு வெடி

Posted: 26 Apr 2015 02:47 PM PDT

டாக்டர்

உங்கள் கணவர் பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். தூக்க மாத்திரைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

மனைவி

அவருக்கு எத்தனை மாத்திரை தரவேண்டும்?

டாக்டர்

மாத்திரை அவருக்கல்ல, உங்களுக்கு.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Posted: 26 Apr 2015 02:41 PM PDT

நீதிபதி: பார்த்தா அப்பாவியா தெரியறே ? நீயா பிக்பாக்கெட் ? நம்பவே முடியலையே ? குற்றவாளி: உங்களை மாதிரிதாங்க எல்லோரும் ஏமாந்துடறாங்க. சார், பேங்க் கொள்ளை பற்றி ஒரு துப்பு கிடைச்சிருக்கு, கொள்ளை அடிச்சவன் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ளவன். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவன். எப்படிச் சொல்றீங்க ? ஒவ்வொரு அக்கவுண்ட்ல இருந்தும் ஆயிரம் ரூபா கரெக்டா எடுத்து அதை அக்கவுண்ட்ல கழிச்சு சரியா கணக்கு டாலி பண்ணிட்டு போயிருக்கான். என் வழில குறுக்கிட்டதாலதாங்க போலீஸை அடிச்சேன். எப்படி ...

சிலேடை சிரிப்புகள்

Posted: 26 Apr 2015 02:38 PM PDT

எங்கே விழுது? கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன. இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர். பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் ...

நகைச்சுவை துணுக்குகள்

Posted: 26 Apr 2015 02:34 PM PDT

நகைச்சுவை துணுக்குகள் (புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...) "நர்ஸ், ஒரு மொபைல் இருந்தா கொடுங்க." "எதுக்குடா செல்லம்?" "நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!" குறிப்பு; இவை அனைத்தும் முகநூலில் இருந்து பகிரபட்டவை

நடுங்க வைக்கும் நிலநடுக்கம்!

Posted: 26 Apr 2015 02:28 PM PDT

நேபாளம் சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நேர்கொண்டிருக்கும் மிகப்பெரும் நிலநடுக்கத்தால் 2,350-க்கும் மேற்பட்டோர் பலியாகிருப்பதும், 6,000-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்திருப்பதும், லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழிடம் இல்லாது வீதிக்கு வந்திருப்பதும் உலக மக்கள் அனைவருக்கும் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் மட்டுமன்றி, வட இந்தியாவில் பிகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 55-க்கும் மேற்பட்டோர் ...

விஜயகாந்த் முயற்சி: தலைவர்கள் ஆதரவு

Posted: 26 Apr 2015 02:25 PM PDT

தமிழகத்தின் 5 முக்கிய பிரச்னைகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுத்துள்ள முயற்சிக்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இளங்கோவன் (காங்கிரஸ்): முதல்வர் செய்ய வேண்டிய வேலையை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் செய்துகொண்டிருக்கிறார். காங்கிரஸ் சார்பில் நாசே ராமச்சந்திரனும், கோபண்ணாவும் அவருடன் செல்கின்றனர். தமிழர் நலனில் அக்கறை உள்ள யாரும் இந்த முயற்சிக்கு ஆதரவு அளிப்பர். விஜயகாந்துடனான சந்திப்புக்கும் தேர்தல் கூட்டணிக்கும் எந்தத் ...

விண்டோஸ் 10க்கு மாற பத்து காரணங்கள்

Posted: 26 Apr 2015 02:20 PM PDT

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் விரைவில் மக்களுக்குக் கிடைக்க இருக்கிறது. இந்த தகவலைக் காட்டிலும், அது முற்றிலும் இலவசமாய்க் கிடைக்க உள்ளது என்ற தகவலே பலரை இது குறித்து சிந்திக்க வைத்துள்ளது. கம்ப்யூட்டர் மலர் இதழ்ப் பிரிவிற்குக் கிடைக்கும் கடிதங்கள் மற்றும் தொலைபேசி விசாரிப்புகளில், விண்டோஸ் 10க்கு மாறுவது பற்றியே உள்ளன. ஆனால், ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. யார் வேண்டாம் எனச் சொன்னாலும், இலவசமாகக் கிடைப்பதால், அது என்ன என்றுதான் பார்த்துவிடுவோம் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. மைக்ரோசாப்ட், ...

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!

Posted: 26 Apr 2015 02:11 PM PDT

அவளுக்கு 35 வயது. கணவருக்கு 40 வயது. இரண்டு குழந்தைகளுடன் சொந்த வீட்டில் வசித்துவந்தார்கள். அவர் அதிக அளவில் மக்களோடு தொடர்புகொள்ளக்கூடிய பணி ஒன்றில் இருந்து வருகிறார். எப்போதும் போன் 'பிசி'யாக ஒலித்துக்கொண்டே இருக்கும். பணியில் எவ்வளவு பரபரப்பாக இருந்துகொண்டிருந்தாலும் மனைவியோடு அதிக நேரத்தை செலவிடுவார். குழந்தைகளோடும் பிரியமாக இருப்பார். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்தது. அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. அதன் பின்பு குணாதிசயம் மாறத் தொடங்கியது. வீட்டிலும் பெரும்பாலான நேரத்தை ...

மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ போப் ஆண்டவர் வழங்கும் பத்து அன்புக் கட்டளைகள்...

Posted: 26 Apr 2015 02:05 PM PDT

1. வாழுங்கள், வாழ அனுமதியுங்கள்: நிம்மதியும், சந்தோஷமும்தான் வாழ்க்கையின் முதல் படி. வாழவேண்டும், மற்றவர்களை வாழ அனுமதிக்கவும் வேண்டும். 2. உதவுங்கள்: உங்களுடைய பணத்தையும், நேரத்தையும் தேவைப்படுகிறவர்களுக்காக செலவிடுங்கள். தேங்கிக்கிடக்கும் நீரைப்போன்று பணமும், நேரமும் அமைந்துவிடக்கூடாது. நம்மிடம் இருப்பதை எல்லாம் மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும். 3. அமைதி தவழட்டும்: பிரபல எழுத்தாளர் ஒருவர் சொன்னதுபோல், இளம் வயது ஆர்ப்பரிக்கும் அருவி போன்றது. முதுமைப் பருவம் அமைதியாக தவழ்ந்து செல்லும் ...

நீங்கள் வாங்கும் தங்கம், சுத்தத் தங்கமா? ஓர் எச்சரிக்கை கைடு

Posted: 26 Apr 2015 01:57 PM PDT

''ஆயிரங்கள், லட்சங்கள் என்று கொடுத்து தங்க நகைகளை வாங்கிக் குவிக்கும் மக்களே, நீங்கள் கொடுக்கும் பணத்துக் கேற்ற எடை மற்றும் தரத்தில் அந்தத் தங்கம் இருக்கிறதா என்று ஒரு நாளாவது யோசித் திருக்கிறீர்களா? நீங்கள் வாங்கும் தங்க நகை களில் பெரும்பாலானவை கலப்பட தங்கத்தில் தயாரானவையே!" - இப்படிச் சொல்லி நம்மை திடுக்கிட வைக்கிறார், `கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பின் முன்னாள் தலைவர் தேசிகன். ஆண்டு முழுக்கவே தங்கம் வாங்கிக் கொண்டிருந்தாலும், அதற்கும் ஒரு சீஸனாக, அட்சய திருதியை என்பது ...

நடுரோட்டில் ஃபுட்பால் ஆடப்பட்ட தலை! குற்ற விழுப்புண்ணில் துடிக்கும் விழுப்புரம்!

Posted: 26 Apr 2015 01:40 PM PDT

அதிகாலையில் பூங்கா ஒன்றில் ஷட்டில் காக் விளையாடிக்கொண்டிருந்த ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து, அவரது தலையைத் துண்டித்து, விழுப்புரம் காந்தி சிலை முன்பாக அந்தத் தலையை வைத்து ஃபுட்பால் ஆடியிருக்கிறது ஒரு கும்பல். பட்டப்பகலில் காந்தி சிலைக்கு முன்னால் ஓடிய ரத்தவெறியை ஊர்கூடிப் பார்த்து பதைபதைத்துப் போனது. இரண்டு ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் சண்டைகளும் பழிக்குப்பழி வாங்க நடக்கும் கொலைகளும் தொடருவதால் அமைதி இழந்து கிடக்கிறது விழுப்புரம். விழுப்புரத்தில் இரு சமூகங்களைச் சேர்ந்த ரவுடி ...

ஒரு நிமிடக் கதைகள்

Posted: 26 Apr 2015 01:29 PM PDT

ஜனனம்! "பேரன் பிறந்ததை மகிழ்வோடு பதிவுசெய்ய வந்திருக்கேன்" என்று சொல்லியும், எனக்குப் பழக்கமான அந்த அலுவலர், "கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. இவர் வேலை முடிஞ்சு போனப்புறம் உள்ளே வாங்க!" என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னைத் துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார். 'சரிதான்... என் முன்னாடி லஞ்சம் வாங்கக்கூச்சம் போல!' என்று நினைத்தபடி வெளியே வந்தேன். வெளியே நின்றிருந்த ஒருவர், "என்ன சார், டெத் கேஸைப் பதிவு பண்ணப் போனவர் இன்னும் உள்ளேதான் இருக்காரா?" என்று கேட்டதும், என் நெஞ்சில் சாட்டை அடி விழுந்தது. மகிழ்ச்சி ...

இந்திய ராணுவத்தின் 'ஆப்பரேஷன் மைத்ரி' தீவிரம்

Posted: 26 Apr 2015 01:27 PM PDT

'ஆப்பரேஷன் மைத்ரி (நட்பு) எனப் பெயரிட்டுள்ள இந்திய ராணுவத்தின் நேபாள நிலநடுக்க மீட்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக தொடர்ந்தது. இதனிடையே, நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டமானதில் சிக்கியும், மண்ணில் புதைந்துமாக உயிரிழந்தோர் எண்ணி்கைக 2,000 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பிஹார் உள்ளிட்ட ...

சர்.பி.தியாகராய செட்டி பிறந்த தினம் : ஏப்ரல் 27, 1852

Posted: 26 Apr 2015 01:23 PM PDT

வெள்ளுடை வேந்தர் சர் பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வந்த அய்யப்ப செட்டியார், வள்ளி அம்மாள் தம்பதியருக்கு 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் ஆண்டு மூன்றாவது மகனாகப் பிறந்தார். அவர், 1876 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். தியாகராயர் மனைவியின் பெயர் சின்னவள்ளி அம்மாள். அவருக்கு ஒரு புதல்வரும் ஏழு மகள்களும் பிறந்தனர். தியாகராயர் நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராவார். திராவிட இயக்கத்தில் மூத்த ...

நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோரின் எண்ணிக்கை, 2,500 ஆக அதிகரித்துள்ளது

Posted: 26 Apr 2015 01:17 PM PDT

புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது. சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. - -

நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள்

Posted: 26 Apr 2015 01:13 PM PDT

நேபாளத்தில் கடந்த 80 வருடங்களில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கத்தினால் காத்மண்டு பள்ளத்தாக்கு மற்றம் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் பல்வேறு இந்து கோவில்கள் அழிந்து விட்டன. நிலநடுக்கத்தினால், கஸ்தமண்டபம், பாஞ்சிடேல் கோவில், 9 அடுக்கு பசந்தபூர் தர்பார், தசவதார கோவில், கிருஷ்ண மந்திர் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் அழிந்து விட்டன. காத்மண்டு என்ற பெயர் ஏற்பட காரணமான கஸ்தமண்டபம் கடந்த 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மர சிற்பங்கள் கொண்ட கோவில் ஆகும். வரலாற்று ஆய்வாளரான புருஷோத்தம லோசன ...

உங்களிடம் பழைய நாணயங்கள் பழங்காழ பொருட்கள் இருந்தால் பத்திரமாக வைத்திருங்கள்

Posted: 26 Apr 2015 11:14 AM PDT

உங்களிடம் பழையநாணயங்கள் பழங்காழபொருட்கள் இருந்தால் பத்திரமாக வைத்திருங்கள்.

ஏனெனில் 1935 ஆம் காலக்கட்டதில் புழக்கத்தில் இருந்த ஓட்ட நாணையகளின் மதிப்பு இப்பொழுது இரண்டு லட்சத்திற்கு மேல் .
இதே போல் 1985 ஆம் ஆண்டுகளில் புழக்கத்தில் இருந்த ஐந்துரூபை நோட் பின் பக்கம் மான் படம் போட்டது விலை இருபதாயிறதிற்கு மேல்.

கருடபுராணம் - மின்னூலாகத் தரவிறக்கம் செய்ய:

Posted: 26 Apr 2015 10:51 AM PDT

ஈகரையில் கருடபுராணத்தை பதிவாக எழுதி வந்த விமந்தனி, அதனை மிக அழகாக மின்னூலாகவும் வடிவமைத்துத் தந்துள்ளார்கள். மின்னூல் தரவிறக்கம் செய்ய: http://eegarai.com/ebook/Karuda_puranam.pdf http://eegarai.org/ebook/Karuda_puranam.pdf

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Posted: 26 Apr 2015 10:41 AM PDT

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்



மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.

Mobile App

Posted: 26 Apr 2015 10:22 AM PDT

பெருகி வரும் தொலைபேசி app ,ஈகரை ஏதேனும் app அறிமுகம் செய்ய உள்ளதா ..நிச்சியமாக இது மிகவும் நெருக்கமான உறவை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
உங்களது கருத்துகள் ....

அஞ்சல் வழியில் இந்தி மொழி ரூ.50 ல் கற்கலாம். (தமிழ் வழி)

Posted: 26 Apr 2015 10:07 AM PDT

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை வாயிலாக இந்தி வெறும் ரூ.50 செலவில் தமிழ், ஆங்கிலம், வங்காளம் மற்றும் மலையாள வழியில் அஞ்சல் வழியில் நடத்தப்படுகிறது. சான்றிதழ், டிப்ளமோ படிப்புகள் உள்ளன். 22 வகையான பாடங்கள், அகராதி, உச்சரிப்பு கையேடு, பிரவேசிகா என பாடங்கள் வெகு சிறப்பு. அஞ்சலகத்தில் ரூ.50 க்கான ipo உடன் விண்ணப்பம் இணைத்து அனுப்ப வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு Department of Higher Education Ministry of Human Resource Development West Block - 7, R. K. Puram New Delhi - 110066 Telegram ...

நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி

Posted: 26 Apr 2015 09:26 AM PDT

அன்பு ஈகரை உறவுகளுக்கு, ஏற்கனவே சொல்லியிருந்தேன் இல்லையா? இதோ நானும் பறக்கப்போகிறேன். எங்கேயா.....? அ..... அது சஸ்பென்ஸ். அதை போய்வந்து சொல்கிறேன்.  ஒரு சின்ன க்ளு...! அது மிக, மிக அழகான இடமாம். லோக்கல் தான். சுற்றுலா ஸ்தலம். எங்கே என்று யூகியுங்கள் பார்ப்போம்...? அங்கே நம்ம ஆளுங்க யாரும் இல்லை என்று நினைக்கிறேன். சென்று வருகிறேன். பை....! நாளை காலை 9.50-க்கு flight - நிறைய வேலை இருக்கிறது. மறுபடியும் திங்களன்று சந்திப்போம். . . . . . . . . . . . . . . . . . அதுவரை, ...

மம்முட்டியின் தேசிய விருது ஆசை!

Posted: 26 Apr 2015 09:04 AM PDT

- கடந்த 2006ல், மீனா மற்றும் பத்மபிரியாவுடன் இணைந்து மம்முட்டி நடித்த மலையாள படம், கருத்த பட்சிகள். - இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, தேசிய விருதும் பெற்றது. ஆனால், மம்முட்டியின் நடிப்புக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அது நடக்கவில்லை. - விளைவு, அப்படத்தின் இயக்குனரான கமல் இயக்கத்தில் மீண்டும் நடித்து, தேசிய விருதை பெற்று விட வேண்டும் என்று ஆசைப்பட்ட மம்முட்டி, மீண்டும் அவரிடம் ஒரு கதை தயார் செய்யச் சொல்லி, தற்போது அதில் நடித்து வருகிறார். - இதில், சிற்பியாக ...

மென்மையாய் ஒரு வன்முறை - ராஜேஷ்குமார்

Posted: 26 Apr 2015 08:56 AM PDT

http://www.mediafire.com/download/iusp29szfhuo72l/Menmayai+Oru+Vanmurai.pdf என்றும் அன்புடன் செல்லா

தமிழ்நாட்டில் தாவரங்கள் (110)

Posted: 26 Apr 2015 07:08 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

சாமிக்கு மொட்டை போடறதா வேண்டுதலுங்க..!

Posted: 26 Apr 2015 06:07 AM PDT

- சாமி தலையில இருந்த கிரீடத்தை திருடினியா? - சாமிக்கு மொட்டை போடறதா வேண்டுதலுங்க..! - -------------------------------------- - உனக்கு பூ வாசம் பிடிக்குமா ? சந்தன வாசம் பிடிக்குமா ? - பக்கத்துக்கு வீட்டு சீனிவாசன்தான் பிடிக்கும்..!! - . --------------------------------- - நீதிபதியை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நடுவராக அழைத்தது தப்பாப்போச்சா...ஏன்? - முடிவு சொல்லாமல் தீர்ப்பை தள்ளி வைச்சுட்டாரே...! - ---------------------------------- - காக்கா ஏன் கருப்பா இருக்குது? ...

பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய்,

Posted: 26 Apr 2015 05:57 AM PDT

பீட்ரூட்,கேரட்,முருங்கக்காய், பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பிய பீட்ரூட், 2 ஆயிரம் வருடங்களாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. பீட்ரூட்டில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை தரும். ரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்சனைகளைத் தீர்க்கும். புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. சருமத்தில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்பட்டால், அப்போது அதனை சரிசெய்ய பீட்ரூட்டை பொடியாக்கி, ...

நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் தரும் கணக்கு

Posted: 26 Apr 2015 05:43 AM PDT

பழங்காலத்தில் இருந்தே மிக நுணுக்கமான எண்கள் மற்றும் அளவைகள் தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளன. அணுவை விட மிகச் சிறிய அளவுக்கும் தமிழில் பெயர் குறித்து இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் ஒன்றுக்கு பின் 14 பூஜ்யங்கள் வரையிலான எண்களுக்கு மட்டுமே பெயர்கள் உள்ள நிலையில், தமிழக முன்னோர்கள் ஒன்றுக்கு பின் 22 பூஜ்யங்களைக் கொண்ட மிக, மிகப்பெரிய எண்களுக்கு பெயர் வைத்து இருக்கிறார்கள். எடை அளவிலும் மிகச் சிறிய எடையான 'குன்றிமணி' என்பதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். 320-ல் ஒரு பங்கு என்பது, ஒரு ...

ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Posted: 26 Apr 2015 04:58 AM PDT

மனிதன் ------------ கருவில் சதையாகி தெருவில் ஊர்போயி கல்லறையில் தூங்கும் மண்புழு பயணம் ------------ 1.கருவில் தவழ்ந்து மண்ணில் நடந்து மண்ணறையில் தூங்கும் வரை....., 2.கருவிலிருந்து உலகிலும் உலகிலிருந்து கல்லறைக்குமான நடை பாதை. சிகரெட் ----------- தனக்குத்தானே ஊதி ரசிக்கும் சாவுமணி சிகரெட் புகை. இணையம் ----------------- தீயதை நல்லதாய்க் காட்டும் கண்களின் மாயாஜால வித்தை. கவிஞன் --------------- சாலையில் கிடக்கும் கல்லைக்கூட வரியாக்கி புகழாக்குபவன். கோபம் ----------- வானமே ...

தப்பித்தால் தப்பில்லை - சுஜாதா

Posted: 26 Apr 2015 04:23 AM PDT

'தப்பித்தால் தப்பில்லை', 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் திட்டமிடுகிறான். ஒரு குற்றம் இழைத்துவிட்டு அதிலிருந்து தப்பிவிட்டால், செய்தது குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா? http://www.mediafire.com/download/cfeadyv0h1y38r2/Thapithaal+Thappillai.படப் என்றும் அன்புடன் செல்லா.

மியான்மர் போலீசிடம் சிக்கிய தமிழ்ப்படக் குழு!

Posted: 26 Apr 2015 03:27 AM PDT

- கடல் கவுதம் தற்போது நடித்து வரும் படம், ரங்கூன். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் மியான்மரில் நடைபெற்றது. அப்போது, முறையான அனுமதி பெறாமலேயே பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தியதால், தகவல் அறிந்த அந்நாட்டு போலீஸார் யூனிட்டில் வேலை செய்த அனைவரையும் பிடித்துச் சென்று, சிறையில் அடைத்து விட்டனர். விஷயம், முருகதாசுக்கு சென்ற போது, உடனடியாக தன் ஆட்களை அனுப்பி, அபராதம் கட்டி, அவர்களை வெளியில் கொண்டு வந்தார். – ———————————— — சினிமா ...

நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா??

Posted: 26 Apr 2015 01:26 AM PDT

நிதித் திட்டமிடுதலில் தடுமாற்றமா? இதை படிங்க போதும்... : மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து      சம்பாதிப்பது  பெரிய  விஷயமில்லை.  சம்பாதித்த  பணத்தை பாதுக்கா பான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்து வருமானத்தை           பெருக்குவதே முக்கியம். இப்பணியில் நிதி திட்டமிடலுக்கு மிகப்பெரிய   பங்கு உண்டு.   நிதியை திட்டமிடுவதில் பணத்தை கையாளும் முறை  பெரும் பங்கு வகிக்கிறது. இக்காலத்தில் மக்கள் பாதுகாப்பான நிதியை   எதிர்காலத்திற்கு திட்டமிடுவது இல்லை. சிறப்பான நிதி திட்டமிடலுக்கு தேவையான 10 டிப்ஸ் ...

எல்லாம் வாய்க்கிறது..

Posted: 26 Apr 2015 01:04 AM PDT

- எதிர்வீட்டுக் குழந்தையுடன் குலாவல்… படி கூட்டும் பெண்ணிடம் விசாரணை.. பேரம் பேசிக் காய்கறி… காக்காய்க்குச் சுடுசோறு.. – தொலைபேசியில் தாய்வீட்டில் கொஞ்சல்… தோழிகளிடம் அளவளாவல்.. அலுவலில் இருக்கும் கணவரிடம் குறுந்தகவலில் குறும்பு.. – மிச்சம் கிடக்கும் நொறுக்குத்தீனி… பாதி படித்து மறந்த புத்தகம்.. ஆர அமரக் குளியலுடன் ஒரு பாட்டு.. தென்னங் காற்று.. – தெருமுக்கு அம்மன் கோயில்.. பூத்துக் கிடக்கும் தோட்டம்.. எல்லாம் வாய்க்கிறது.. – கணனியும் ., தொலைக்காட்சியும் சீவனற்று சடமான மின் ...

20 ‘இன்ச்’ இடுப்பழகி !

Posted: 26 Apr 2015 12:57 AM PDT

- வெனிசுலாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான, அலைரா அவென்டானா, 25, இப்போது அந்த நாட்டில் மிகவும் பிரபலமாகி விட்டார். இவரின் குறுகிய இடை தான் அதற்கு காரணம். குறுகிய இடை அழகை பெறுவதற்காக, ஆறு ஆண்டுகளாகவே, இடுப்பில் இறுக்கமான கச்சையை அணியத் துவங்கினார் இவர். தினமும், 23 மணி நேரமும் இந்த கச்சையுடன் இருப்பார். – அதனால் ஏற்பட்ட கடுமையான வலிகளையும் பொறுத்துக் கொண்ட அவருக்கு, இப்போது பலன் கிடைத்துள்ளது. – இப்போது, அவரின் இடையின் சுற்றளவு, வெறும், 20 அங்குலம். இதுகுறித்து அலைரா கூறுகையில், ...

---இந்தியாவில் வைபர் ---

Posted: 26 Apr 2015 12:13 AM PDT

---இந்தியாவில் வைபர் --- இலவச குறுந்தகவல் மற்றும் அழைப்புகளை வழங்கும் செயலியான வைபர் 4 கோடி பதிவு செய்யப்பட்ட பயனாளிகளை கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 4 கோடி பயனாளிகளை பெற்றதாக வைபர் இருந்தும் தினசரி பயனாளிகளின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கலாம்.வைபர்செய்லி தற்சமயம் 193 நாடுகளில் சுமார் 516 மில்லியன் பயனாளிகளை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. வைபர் செயலியில் பலஅம்சங்கள்இந்திய பயனாளிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சிறப்பம்சம் தான் பப்ளிக் சாட், ...

சினி துளிகள்!

Posted: 25 Apr 2015 11:43 PM PDT

- - * அமர காவியம் படத்தில் நடித்த மியா ஜார்ஜ், மலையாளத்தில் நடித்த ஐந்து படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகியுள்ளன. – * பட வாய்ப்புகள் குறைந்து வருவதால், சம்பளத்தையும் படிப்படியாக குறைத்து வருகிறார் ஹன்சிகா. * தன் அடுத்த பட கதாநாயகன் யார் என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளார் இயக்குனர் ஷங்கர். – —————————————- வாரமலர்

மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி: ஸ்ரீதரனுக்கு பாராட்டு

Posted: 25 Apr 2015 11:41 PM PDT

- – புதுடில்லி: டில்லியில் துவாரகா பகுதியில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற, பிரதமர் நரேந்திர மோடி, முதன் முறையாக டில்லி மெட்ரோ ரயிலில் பயணித்தார். தவுலாகான் ரயில் நிலையத்தில் இருந்து துவாரகா வரை சென்றார்.டில்லியில் துவாரகா பகுதியில், தேசிய புலனாய்வு நிறுவனத்தின் பயிற்சி மையம் உள்ளது. இங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, நேற்று பிரதமர், காரில் செல்லாமல், மெட்ரோ ரயிலில் பயணித்தார். – மகிழ்ச்சிகரமான பயணம்: – பிரதமர் காரில் சென்றால், பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, ...

பேய் நடிகையாகும் ராய் லட்சுமி!

Posted: 25 Apr 2015 11:36 PM PDT

- - - அருந்ததி அனுஷ்கா போன்று, தற்போது ஸ்ரீகாந்துடன் நடிக்கும், சவுகார்பேட்டை படத்தில் அதிரடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ராய் லட்சுமி. அதோடு, சில காட்சிகளில் அவர் பேயாகவும் நடிக்கிறார். – அதேபோல், மலையாளத்தில் ஜெயராம் நடிக்கும் மாந்திரீக கதையில் நடிக்கும் ராய் லட்சுமி, இனிமேல், கவர்ச்சி வேடங்களை தவிர்த்து, அதிரடி கதாபாத்திரங்களுக்கே முதலிடம் கொடுக்கப் போவதாக கூறுகிறார். – அவ்வகையில், சவுகார்பேட்டை படம் திரைக்கு வந்ததும், அப்படத்தின் கேசட்டை கையில் வைத்து, தெலுங்கு மற்றும் ...

கட்சி உறுப்பினர்களை கம்பி வழியா சந்திச்சு பேசுறாரு…!!

Posted: 25 Apr 2015 11:21 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™