Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


உடை மாற்றும் அறையை நோக்கி கேமரா: தில்லாலங்கடி வேலை செய்த பேப் இந்தியா ஊழியரை கண்டுபிடித்தது கோவா போலீஸ்

Posted: 11 Apr 2015 10:40 PM PDT

கோவா மாநிலத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்ற சென்ற அறையை நோக்கி கேமரா வைக்கப்பட்டு இருந்த வழக்கில் பேப் இந்தியாவின் சபல கேஸ் ஊழியரை அடையாளம் கண்டது கோவா போலீஸ். கேமரா குறித்து ஸ்மிரிதி புகார் அளித்தவுடன், போலீசின் சந்தேக வலையில் இருந்த நபர் அவசர அவசரமாக கேமராவின் திசையை மாற்றியது தெரிய வந்துள்ளதால், அவர் தான் குற்றவாளி என்பது நிரூபணமானதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் அடையாளம்

நீதிபதிகள் நியமனத்தில் அரசு தலையிடக்கூடாது: ராம் ஜெத்மலானி நச் கருத்து

Posted: 11 Apr 2015 09:13 PM PDT

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குக்கு உள்ளாகும் நபர்களின் தலையீடு இல்லாத வகையில், நீதிபதிகள் நியமனத்தில் பிரத்யேகமான வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் 6 உறுப்பினர்களில் சட்ட மந்திரிக்கும் இடம் அளித்திருப்பதை வன்மையாக கண்டித்த ஜெத்மலானி, ஊழல் மற்றும் முறைகேடான நடவடிக்கைகளுக்காக குற்றஞ்சாட்டப்படுபவர்கள் எப்படி

நேர்மையற்றவர்கள் மற்றும் சமூகத்தின் உயர்நிலைகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே பத்ம விருதுகள்: சரத் யாதவ்

Posted: 11 Apr 2015 05:18 PM PDT

பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் நேர்மையற்றவர்கள் மற்றும் சமூகத்தின் உயர்நிலைகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுவதாக கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சரத் யாதவ். மும்பையில் நேற்று இரவு நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் இந்த ஆண்டு பத்ம விருது பெற்றவர்களில்

ஏர் பஸ் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு: பிரதமர் மோடியிடம் பிரான்ஸ் நிறுவனம் உறுதி

Posted: 11 Apr 2015 04:59 PM PDT

ஏர் பஸ் விமானங்களை இந்தியாவில் தயாரிப்போம் என பிரதமர் மோடியிடம் பிரான்ஸ் நிறுவனம் உறுதி அளித்தது. 'மேக் இன் இந்தியா' ('இந்தியாவில் தயாரிப்போம்') திட்டத்தின் கீழ் இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு, தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை பயன்படுத்துகிறார்.

ஊடகங்கள் பற்றிய கருத்து: வருத்தம் தெரிவித்த மத்திய மந்திரி வி.கே.சிங்

Posted: 11 Apr 2015 04:18 PM PDT

உள்நாட்டு போரின் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள ஏமனில் இருந்து இந்தியர்களை மீட்டு வரும் பணியை மேற்பார்வையிட ஜிபோட்டிக்கு சென்ற மத்திய மந்திரி வி.கே.சிங், அங்கு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் மீட்பு நடவடிக்கைகளை ஒப்பிட்டு பேசியது குறித்து ஊடகங்கள் கருத்து தெரிவித்தன. இதனால் ஊடகங்கள் பற்றி அவர் கடுமையாக விமர்சித்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

20 தமிழர்கள் படுகொலையில் விசாரணை: மனித உரிமை அமைப்புகள் மீது வெங்கையா நாயுடு பாய்ச்சல்

Posted: 11 Apr 2015 03:52 PM PDT

ஆந்திராவில் சேஷாசலம் வனப்பகுதியில் 20 தமிழர்கள், செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் கொன்று குவிக்கப்பட்ட விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், பல்வேறு மனித உரிமை அமைப்புகள், அந்த சம்பவத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி என்பது இந்தியாவின் உரிமை: மோடி காட்டம்

Posted: 11 Apr 2015 01:38 PM PDT

ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்திர உறுப்பினர் பதவி என்பது இந்தியாவின் உரிமை என்று பிரதமர் மோடி காட்டமாக தெரிவித்து உள்ளார். 3 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி முதல் கட்டமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். பாரிஸ் நகரில் நடந்த

டெல்லியில் ஆந்திரா-தெலுங்கானா என்கவுன்டர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 11 Apr 2015 01:29 PM PDT

ஆந்திராவில் திருப்பதி அருகே அண்மையில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதேபோல், தெலுங்கானாவில் விசாரணைக் கைதிகள் 5 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த 2 சம்பவங்களையும் கண்டித்து நேற்று மதியம் டெல்லியில் ஜன்ஹஸ்தாசர், ஆல் இந்தியா பீப்பிள்ஸ் போரம், பி.யு.சி.எல்.,

கிரேக்க நாட்டுக்கு புதிய தூதராக தமிழக பெண் ஐ.எப்.எஸ். அதிகாரி நியமனம்

Posted: 11 Apr 2015 12:22 PM PDT

கிரேக்க நாட்டுக்கான இந்திய தூதராக மணிமேகலை முருகேசன் (வயது 57) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பிரான்ஸில் இருந்து விமானம் வாங்கினால் நீதிமன்றத்திற்கு செல்வேன்: சுப்ரமணியன் சுவாமி எச்சரிக்கை

Posted: 11 Apr 2015 10:59 AM PDT

பிரதமர் மோடி 3 நாடுகளின் சுற்றுப்பயணமாக பிரான்ஸூக்கு சென்றுள்ளார். நேற்று பிரான்ஸிடமிருந்து 36 ரபேல் ஃபைட்டர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், பிரான்ஸிடமிருந்து விமானம் வாங்கினால் கோர்ட்டுக்கு செல்ல வேண்டியிருக்கும் என பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியன் சுவாமி

மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி உடை மாற்றிய அறையில் கேமரா: குற்றவாளி அடையாளம் தெரிந்தது

Posted: 11 Apr 2015 10:13 AM PDT

கோவா மாநிலத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி உடை மாற்றிய அறையை நோக்கி கேமரா இருந்தது தொடர்பான வழக்கில் பேப் இண்டியாவின் குற்றவாளி அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய

மத்திய அரசின் உளவு கண்காணிப்பில் இருந்து பகத் சிங் குடும்பமும் தப்பவில்லை: புதிதாய் கிளம்பும் புகார் பூதம்

Posted: 11 Apr 2015 08:41 AM PDT

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் குடும்பத்தை ஜவஹர்லால் நேருவின் தலைமையிலான மத்திய அரசு உளவு பார்த்ததாக எழும்பியுள்ள குற்றச்சாட்டுகள் தேசிய அரசியலில் சூட்டை கிளப்பியுள்ள வேளையில் மத்திய அரசின் உளவு கண்காணிப்பில் இருந்து பகத் சிங் குடும்பமும் தப்பவில்லை என மற்றொரு புகார் பூதம் கிளம்பியுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட டெல்லி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு: கெஜ்ரிவால் உத்தரவு

Posted: 11 Apr 2015 07:25 AM PDT

நாட்டின் தலைநகரான டெல்லியில் பருவமற்ற காலத்தில் பெய்த பெருமழையால் ஏராளமான ஏக்கர் விளைநிலத்தில் வளர்ந்திருந்த உணவுப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமடைந்தன. இதில் அதிக பாதிப்புக்குள்ளான பகுதிளுக்கு இன்று அதிரடி சுற்றுப்பயணம் மேற்கொண்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பாதிக்கப்பட்ட

நக்சலைட்கள் தாக்குதலில் பலியான 7 போலீசாரின் குடும்பங்களுக்கு சோனியா ஆறுதல்

Posted: 11 Apr 2015 07:15 AM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தை சேர்ந்த பிட்மெல் கிராமத்தில் நக்சல் ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டிருந்த 7 சிறப்பு படை போலீசார் இன்று நக்சலைட்களின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

விவசாய நிலங்களை அபகரித்தது யார்? காங்கிரஸ் மீது அமித் ஷா பாய்ச்சல்

Posted: 11 Apr 2015 07:01 AM PDT

நிலம் கையகப்படுத்தும் மசோதா மூலம் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு பா.ஜனதா அரசு உதவி செய்வதாக குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சிக்கு அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து ராஞ்சியில் நடைபெற்ற பா.ஜனதா கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பேசுகையில், "நிலம் கையகப்படுத்துதல்

நகராட்சி அலுவலகத்தில் அன்னை தெரசாவின் உருவப்படம் நீக்கம்

Posted: 11 Apr 2015 06:08 AM PDT

அசாம் மாநிலம் சச்சார் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னை தெரசா புகைப்படத்தை அகற்றிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சில்சார் நகராட்சி தலைவரின் அலுவலகத்தில் ரவீந்திரநாத் தாகூர், காஜி நஸ்ருல் இஸ்லாம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின்

சத்தீஸ்கரில் நக்சலைட்களுடன் துப்பாக்கிச் சண்டை: 7 போலீசார் பலி

Posted: 11 Apr 2015 05:11 AM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் ஒழிப்பு வேட்டையில் ஈடுப்பட்டிருந்த 7 சிறப்பு படை போலீசார் இன்று நக்சலைட்களின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரமடைந்துவரும் நக்சலைட்களின்

சீன எல்லை அருகே இந்திய ரெயில் நிலையம்: பாதுகாப்பு மந்திரி தகவல்

Posted: 11 Apr 2015 04:53 AM PDT

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய-சீன எல்லைக்கு அருகே புதிய ரெயில் நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று மத்திய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாரிக்கர் கூறுகையில் "இந்தியா சீனாவுக்கு இடையேயான

மனைவிக்கு மருந்து வாங்க 2 மாத மகனை 700 ரூபாய்க்கு விற்ற குடும்பத்தலைவன்

Posted: 11 Apr 2015 04:00 AM PDT

வறுமை கொடியது என்பர். அதனிலும் கொடியது நோயுற்ற நேரத்தில் வாட்டி வதைக்கும் வறுமை என்பதற்கு சான்றாக கட்டிய மனைவிக்கு மருந்து வாங்க வழியறியாத ஒரு குடும்பத்தலைவன் தங்களது 2 மாத ஆண் குழந்தையை 700 ரூபாய் ரொக்கப் பணத்துக்கும், 50 கிலோ அரிசிக்கும் விற்ற கொடுமை சமூக ஆர்வலர்களின் புருவங்களை உயரச் செய்துள்ளது.

முதியவரை அடித்துக் கொன்ற நண்பரின் மகன்

Posted: 11 Apr 2015 03:39 AM PDT

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் 62 வயதான முதியவர் ஒருவரை, அவரது நண்பரின் மகனே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தானே நகரில் உள்ள திகுஜினி வாடி பகுதியில் வசித்து வருபவர் தத்து வாக்மேர்(23). இவர் நேற்றிரவு தனது அப்பாவின் நண்பரான தத்யா நிகமை தனது வீட்டிற்கு அழைத்து சென்று அவருக்கு இரவு உணவு வழங்கினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™