Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சொத்து குவிப்பு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது - ஆனால் தீர்ப்பு வழங்கலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

Posted: 26 Apr 2015 10:54 PM PDT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் ஆஜராகி வரும் பவானி சிங்கை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனினும் வழக்கை மீண்டும் விசாரிக்க தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவரெஸ்ட் சிகரத்திலிருந்து 19 வெளிநாட்டு மலையேற்ற வீரர்களின் பிரேதங்களை மீட்ட ராணுவம்: 61 பேர் உயிருடன் மீட்பு

Posted: 26 Apr 2015 10:47 PM PDT

நேபாளத்தையே நேற்று முன்தினம் புரட்டிப் போட்ட நிலநடுக்கத்தின் போது, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையேறுவதற்காக வந்திருந்த வெளிநாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் பலர் பனிச்சரிவில் புதையுண்டனர். மேலும் பலர் பனிச்சரிவில் சிக்கி கடும் குளிரில் நடுங்கியபடி உயிருக்கு போராடி வந்தனர்.

செம்மரக்கடத்தல் வழக்கில் கைதான நடிகை பின்னணியில் அரசியல்வாதிகள்: காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

Posted: 26 Apr 2015 10:16 PM PDT

செம்மரக்கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் தேடப்பட்டு வந்த தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் நேற்று கைது செய்யப்பட்டார். நீத்து அகர்வால் 'பிரேமபிராயணம்' என்ற தெலுங்கு படத்தில் அறிமுக கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்

வடக்கை குலுக்கிய பூகம்பம்: பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு

Posted: 26 Apr 2015 10:00 PM PDT

நேபாளத்தைத் தொடர்ந்து இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களையும் நடுங்க செய்த நில நடுக்கத்தினால் நாடு முழுவதும் பலர் பலியாகியுள்ள நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 51 பேர் பலியாகியுள்ளனர். 173 பேர் காயமடைந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.

திருவனந்தபுரத்தில் மணமகன் விபத்தில் சிக்கியதால் ஆஸ்பத்திரியில் நடந்த திருமணம்

Posted: 26 Apr 2015 09:47 PM PDT

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்மனாபபுரத்தை சேர்ந்தவர் அப்துல்ரகுமான்(வயது 32). இவருக்கும் திருவனந்தபுரம் அருகே உள்ள பட்டம் பகுதியை சேர்ந்த ஹசீனா(26) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. நேற்று திருமணம்

நேபாளத்திலிருந்து 1935 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர்: மத்திய அரசு

Posted: 26 Apr 2015 09:31 PM PDT

நேபாள நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி தவித்த இந்தியர்களில் 1935 பேர் இதுவரை மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படையின் தொடர் முயற்சி காரணமாக, 12 விமானங்களில் குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளனர்.

8 கிலோ தலையுடன் உயிருக்கு போராடும் 7 வயது சிறுமி: அறுவை சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் பெற்றோர்

Posted: 26 Apr 2015 08:30 PM PDT

சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா சாலுஹூனிசே கிராமத்தை சேர்ந்தவர் ஈரண்ணா. கூலி தொழிலாளி. இவரது மனைவி காயத்ரியம்மா. இந்த தம்பதிக்கு ராதா (வயது 7) என்ற மகள் இருக்கிறாள். பிறக்கும்போது ராதா நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்தாள். இந்த நிலையில் ராதாவை மர்ம நோய் தாக்கியது. அதனால் அவளது தலை மற்றும் உடலில் பிறந்த 3

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஒரே ஆண்டில் ரூ.7848 கோடி கருப்பு பணம் கண்டுபிடிப்பு: மத்திய அரசு நடவடிக்கை

Posted: 26 Apr 2015 08:17 PM PDT

கருப்பு பணத்துக்கு எதிராக மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், 2013-2014-ம் நிதி ஆண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதி அமைச்சகம் புதிய அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. அதில், நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு புலனாய்வு அமைப்புகள், மேற்கண்ட ஒரே நிதியாண்டில் உள்நாட்டிலும்,

சரக்கு, சேவை வரி மசோதா மீது பாராளுமன்றத்தில் இன்று விவாதம்

Posted: 26 Apr 2015 08:16 PM PDT

சரக்கு, சேவை வரிச் மசோதா மீது பாராளுமன்றத்தில் இன்று விவாதம் நடக்க உள்ளது. அப்போது, மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையை கொண்டு வர மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு விரும்புகிறது. இதற்கு வழிவகை

காங்கிரசுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அமைக்காது: சீதாராம் யெச்சூரி பேட்டி

Posted: 26 Apr 2015 08:10 PM PDT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு சீதாராம் யெச்சூரி முதல் முறையாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்றார். அப்போது, கொல்கத்தா நகரில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பிரிவினைவாத தலைவர் கிலானி தொடர்ந்து வீட்டுக்காவலில் சிறைவைப்பு

Posted: 26 Apr 2015 08:07 PM PDT

டெல்லியில் தங்கி இருந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரும், ஹூரியத் மாநாட்டு கட்சித்தலைவருமான சையது அலி ஷா கிலானி, கடந்த 16-ந்தேதி ஸ்ரீநகர் திரும்பினார். விமானநிலையத்தில் அவரை வரவேற்ற ஆதரவாளர்கள் பாகிஸ்தான் கொடிகளை ஏந்தியவாறு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மற்றொரு பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் கைது செய்யப்பட்டார்.

பத்மநாபசாமி கோவில் குளத்தில் பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு: போலீஸ் விசாரணை

Posted: 26 Apr 2015 07:55 PM PDT

திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில் உள்ளது. இங்குள்ள ரகசிய அறைகளில் அரிய வகை பொற்குவியல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து உலக பிரசித்திப்பெற்ற தலங்களுள் ஒன்றாக பத்மநாபசாமி கோவில் கருதப்பட்டு வருகிறது. அரிய

வானொலியில் பேசியபோது சாய்னா நேவால், சானியா மிர்சாவுக்கு மோடி பாராட்டு

Posted: 26 Apr 2015 07:55 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் வானொலியில் பேசிய போது, விளையாட்டு துறையில் சாதனை படைத்துவரும் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், சானியா மிர்சா ஆகியோருக்கு புகழாரம் சூட்டினார்.

30 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து தவித்த காட்டுயானை: வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி மீட்டனர்

Posted: 26 Apr 2015 07:46 PM PDT

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குற்றியாம்சால் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானை ஒன்று திடீர் என்று புகுந்தது. அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்த அந்த யானையை பார்த்து பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அந்த யானையை பொதுமக்கள் வெடி வெடித்து விரட்டும்

உத்தரபிரதேசத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

Posted: 26 Apr 2015 03:26 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் தத்தாலி என்ற கிரமத்தை சேர்ந்தவர் அஷ்ராம் (வயது 35). விவசாயி. நேற்று அந்த பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு சென்ற அஷ்ராம் திடீரென அலுவலகம் முன்பு இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மழையால் பயிர்கள் சேதமடைந்ததால் மனம் உடைந்த நிலையில் இருந்து

செம்மர கட்டைகளை கடத்தியதாக சென்னையை சேர்ந்த 3 பேர் கைது

Posted: 26 Apr 2015 02:11 PM PDT

செம்மர கட்டைகளை கடத்திய சென்னையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை-பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சித்தூர் மாவட்டம், நேன்ற குண்டா-பாகாலா சாலையில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த

நேபாள நிலநடுக்க நிவாரணத்திற்கு ஒரு மாத சம்பளத்தை கொடுக்கும் சிவசேனா எம்.பி.க்கள்

Posted: 26 Apr 2015 09:13 AM PDT

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் 2200-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்தியா அதிக அளவில் உதவி வருகிறது. இன்று 13 விமானப்படை விமானத்தை மீட்பு பணியில் ஈடுபட நேபாளத்திற்கு அனுப்பி உள்ளது. மேலும், மருத்துவ உதவிகள் செய்ய தயாராகி வருகிறது.

பீகாரில் மட்டும் நில நடுக்கத்துக்கு 50 பேர் பலி: நிதிஷ் குமார் அறிவிப்பு

Posted: 26 Apr 2015 07:39 AM PDT

நேபாளத்தை தொடர்ந்து இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களையும் பதம் பார்த்த நில நடுக்கத்தில் இதுவரை நாடு முழுவதும் 62 பேர் பலியாகியுள்ள நிலையில் இவர்களில் சுமார் 50 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நில நடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் 62 பேரின் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை 6 லட்சமாக உயர்வு: பிரதமர் மோடி உத்தரவு

Posted: 26 Apr 2015 07:22 AM PDT

நேபாளத்தை தொடர்ந்து இந்தியாவையும் உலுக்கி எடுத்த நில நடுக்கத்தால் பலியான 62 பேரின் குடும்பத்தாருக்கு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, புயல், வெள்ளம், நில நடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த

நேபாளத்தில் மீட்புப் பணிகளுக்கு உதவ மேலும் 13 ராணுவ விமானங்கள்: இந்தியா அனுப்பியது

Posted: 26 Apr 2015 06:38 AM PDT

நேபாளத்தில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்றும் மீட்புப் பணிகளில் இந்திய விமானப் படை மற்றும் ராணுவ விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில், இன்றும் ஏற்பட்ட 6.7 ரிக்டர் அளவிலான நில நடுக்கம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™