மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி: சட்டசபை தேர்தலை முன்னதாக நடத்த மம்தா திட்டம்
- தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கோழைகள் - கிரிமினல்கள்: அரியானா மந்திரி உளறல்
- நேபாள பூகம்பம்: கண் முன்பே கட்டிடங்கள் சரிந்து விழுந்தன- உயிர் தப்பிய கேரள தம்பதி பேட்டி
- வேளாண் நலதிட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்: கனிமொழி பேச்சு
- நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பெண்: 33 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்ட இந்திய பேரிடர் மீட்பு படை
- சோமசீலா நீர்த்தேக்கத்தில் தண்ணீருக்குள் 500 டன் செம்மர கட்டைகள் பதுக்கல்
- கேரள மது பார் ஊழல் வழக்கு: கலால் மந்திரி பாபு ரூ.10 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்
- நில நடுக்க பீதியால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நோயாளிகள் மறுப்பு
- பீகாரில் நில நடுக்க சேத மதிப்பை ஆய்வு செய்ய 4 மத்திய மந்திரிகள்: பிரதமர் மோடி உத்தரவு
- டெல்லி சட்ட மந்திரியின் கல்வி சான்றிதழ் போலியானது: பதவி நீக்கம் செய்ய பா.ஜனதா, காங்கிரஸ் வலியுறுத்தல்
- நேபாளத்தில் மலையேறச் சென்ற 250 பேரை காணவில்லை: பனிப்பாறை சரிவில் சிக்கி பலியானார்களா?
- சென்னையைச் சேர்ந்த செம்மரக் கடத்தல்காரர் ரவிசோமு தடுப்பு காவல் சட்டத்தில் கைது
- டெல்லியில் மத்திய மந்திரிகளுடன் விஜயகாந்த் சந்திப்பு: தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை
- நிலநடுக்கத்தால் காயம் அடைந்தவர்களின் நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டி அவமதித்த பீகார் மருத்துவமனை
- உத்தரபிரதேச மாநிலத்தில் சூறாவளி காற்றுடன் மழை: 36 பேர் சாவு
- கிரியோஜனிக் எஞ்ஜின் வெற்றிகரமாக சோதனை: பிரதமர் மோடி பாராட்டு
- ரூ.3 கோடி தங்கம் கடத்திவந்த ஆப்கானிஸ்தான் நாட்டினர் உள்பட 5 பேர் டெல்லி விமான நிலையத்தில் கைது
- மேற்கு வங்காளத்தில் முழு அடைப்புக்கு அனுமதி இல்லை; மீறினால் கடும் நடவடிக்கை- மம்தா எச்சரிக்கை
- நேபாளத்தில் இருந்து இன்று மட்டும் சாலை மார்க்கமாக 1038 பேர் இந்தியா வந்தடைந்தனர்
- வாட்ஸ்அப் மூலம் நிலநடுக்க வதந்தியை பரப்பிய முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு
| மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி: சட்டசபை தேர்தலை முன்னதாக நடத்த மம்தா திட்டம் Posted: 28 Apr 2015 10:39 PM PDT மேற்கு வங்க மாநில நகரங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. மேற்கு வங்க மாநிலத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் 92 உள்ளன. இதில் 71 உள்ளாட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று அவற்றை கைப்பற்றியது. கொல்கத்தா மாநகராட்சியில் மொத்தம் 144 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த முறை 95 இடங்களில் வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் |
| தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கோழைகள் - கிரிமினல்கள்: அரியானா மந்திரி உளறல் Posted: 28 Apr 2015 10:38 PM PDT தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கோழைகள், கிரிமினல்கள் என அரியானா மந்திரி ஓ.பி.தங்கர் கூறியுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வறட்சியும், கால நிலை தவறி பெய்யும் மழையும் வட மாநில விவசாயிகளை பெரிதும் பாதித்து வரும் நிலையில், பல விவசாயிகள் |
| நேபாள பூகம்பம்: கண் முன்பே கட்டிடங்கள் சரிந்து விழுந்தன- உயிர் தப்பிய கேரள தம்பதி பேட்டி Posted: 28 Apr 2015 10:03 PM PDT நேபாளத்தில் வரலாறு காணாத பூகம்பம் ஏற்பட்டதில் ஏராளமானோர் உயிர் இழந்தனர். அங்கு மீட்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட உலக நாடுகள் மீட்புப் பணிக்கு உதவி வருகிறது. மேலும் பூகம்பத்தில் சிக்கி உயிர் தப்பியவர்களை மீட்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. |
| வேளாண் நலதிட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்: கனிமொழி பேச்சு Posted: 28 Apr 2015 09:59 PM PDT இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து பாராளுமன்ற மேல்சபையில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:– நமது நாட்டில் இருக்கும் விவசாயிகளின் உண்மையான நிலைமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டுமானால்... அவர்களின் தற்கொலைக்குப் பின்னால் இருக்கும் கசப்பான உண்மைகளை அறிந்து கொண்டாக வேண்டும். |
| Posted: 28 Apr 2015 09:57 PM PDT நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு 33 மணி நேரம் ஆன நிலையில், பெண் ஒருவரை இந்திய பேரிடர் மீட்பு படை வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். அந்நாட்டில் கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த 7.9 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தால், நாட்டின் பல நகரங்கள் உருக்குலைந்தன. இதில் தலைநகர் காத்மாண்டு அருகே உள்ள பசுந்தரா பகுதியில் ஐந்து அடுக்குமாடி கட்டிடம் |
| சோமசீலா நீர்த்தேக்கத்தில் தண்ணீருக்குள் 500 டன் செம்மர கட்டைகள் பதுக்கல் Posted: 28 Apr 2015 09:56 PM PDT ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் சோசீலா நீர்த்தேக்கம் உள்ளது. இது மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும். இந்த நீர்த்தேக்கத்தை யொட்டி வெளி கொண்டா வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான செம்மரங்கள் உள்ளன. கடத்தல் காரர்கள் இந்த பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டி எடுத்துச் சென்று சோமசீலா நீர்த்தேக்கத்தில் பதுக்குவது வழக்கம். மீனவர்கள் போல |
| கேரள மது பார் ஊழல் வழக்கு: கலால் மந்திரி பாபு ரூ.10 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் Posted: 28 Apr 2015 09:45 PM PDT கேரளாவில் மது பார் ஊழல் வழக்கில் மற்றொரு மந்திரியான கலால் மந்திரி பாபு ரூ.10 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்துவருகிறது. முதல்-மந்திரி உம்மன்சாண்டி கேரள மாநிலத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று |
| நில நடுக்க பீதியால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நோயாளிகள் மறுப்பு Posted: 28 Apr 2015 08:34 PM PDT கடந்த 25-ந்தேதி நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 4,400 பேருக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 8 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்காக காட்மாண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு |
| பீகாரில் நில நடுக்க சேத மதிப்பை ஆய்வு செய்ய 4 மத்திய மந்திரிகள்: பிரதமர் மோடி உத்தரவு Posted: 28 Apr 2015 08:13 PM PDT பீகாரில் நில நடுக்க சேத மதிப்பை ஆய்வு செய்ய 4 மத்திய மந்திரிகள்: பிரதமர் மோடி உத்தரவு |
| Posted: 28 Apr 2015 08:02 PM PDT டெல்லி மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சட்ட மந்திரியாக இருப்பவர் ஜிதேந்தர்சிங் தோமர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை தேர்தலின்போது வேட்பு மனுவுடன் சேர்த்து தனது கல்வி சான்றிதழ்களையும் தாக்கல் செய்தார். அவர் பீகாரில் உள்ள திலக் |
| நேபாளத்தில் மலையேறச் சென்ற 250 பேரை காணவில்லை: பனிப்பாறை சரிவில் சிக்கி பலியானார்களா? Posted: 28 Apr 2015 07:55 PM PDT நேபாள தலைநகர் காட்மாண்டுவின் வடக்கு பகுதியில் ரசுவா என்னும் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள கோடதபேலா என்ற கிராமம் மலையேற்றத்துக்கு பிரசித்தி பெற்றது. இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். கடந்த 25-ந்தேதி நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது |
| சென்னையைச் சேர்ந்த செம்மரக் கடத்தல்காரர் ரவிசோமு தடுப்பு காவல் சட்டத்தில் கைது Posted: 28 Apr 2015 07:36 PM PDT ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா-கொடூர் நெடுஞ்சாலையில் கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி தம்புருதீர்த்தம் குறுக்கு சாலை என்னும் இடம் அருகே ரேணிகுண்டா துணை போலீஸ் சூப்பிரண்டு நஞ்சுண்டப்பா தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக |
| டெல்லியில் மத்திய மந்திரிகளுடன் விஜயகாந்த் சந்திப்பு: தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை Posted: 28 Apr 2015 07:20 PM PDT காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் திட்டத்துக்கு தடை விதிப்பது உள்பட பல்வேறு பிரச்சினைகளை பிரதமர் நரேந்திரமோடிக்கு தெரிவிப்பதற்காக, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையிலான அரசியல் கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவினர் டெல்லி |
| நிலநடுக்கத்தால் காயம் அடைந்தவர்களின் நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டி அவமதித்த பீகார் மருத்துவமனை Posted: 28 Apr 2015 05:00 PM PDT நிலநடுக்கத்தால் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தவர்களின் நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டியதால் பீகார் மருத்துவமனை ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது. பீகாரின் தர்பங்கா மருத்துவ கல்லூரிக்கு, சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் காயம் அடைந்த 15 பேர் சிகிச்சைக்காக |
| உத்தரபிரதேச மாநிலத்தில் சூறாவளி காற்றுடன் மழை: 36 பேர் சாவு Posted: 28 Apr 2015 03:48 PM PDT உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி, அமேதி பகுதிகளில் நேற்று காலை திடீரென்று பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென்று காற்றுடன் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது. ரேபரேலி |
| கிரியோஜனிக் எஞ்ஜின் வெற்றிகரமாக சோதனை: பிரதமர் மோடி பாராட்டு Posted: 28 Apr 2015 11:05 AM PDT கிரியோஜனிக் எஞ்ஜினை வெற்றிகரமாக சோதனை செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தற்போது சோதனை செய்யப்பட்டிருக்கும் கிரியோஜனிக் எஞ்ஜின் மூலம் சுமார் 4 ஆயிரம் கிலோ எடையுள்ள செயற்கை கோள்களை விண்வெளியின் |
| ரூ.3 கோடி தங்கம் கடத்திவந்த ஆப்கானிஸ்தான் நாட்டினர் உள்பட 5 பேர் டெல்லி விமான நிலையத்தில் கைது Posted: 28 Apr 2015 09:15 AM PDT வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதையடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சோதனை ஏற்பாடுகளை சுங்கத்துறையினர் பலப்படுத்தி வருகின்றனர். |
| மேற்கு வங்காளத்தில் முழு அடைப்புக்கு அனுமதி இல்லை; மீறினால் கடும் நடவடிக்கை- மம்தா எச்சரிக்கை Posted: 28 Apr 2015 08:59 AM PDT மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது நடந்த வன்முறை செயல்களை கண்டித்து நாளை மறுநாள் (ஏப்ரல் 30) மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு இடதுசாரி கட்சிகள் மற்றும் பா.ஜனதா அழைப்பு விடுத்துள்ளது. |
| நேபாளத்தில் இருந்து இன்று மட்டும் சாலை மார்க்கமாக 1038 பேர் இந்தியா வந்தடைந்தனர் Posted: 28 Apr 2015 08:05 AM PDT நேபாளத்தில் ஏற்பட்ட கொடூர நில நடுக்கத்தின் ஒவ்வொரு மணிநேரமும் நூற்றுக்கணக்கான பிணங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் அங்கு சிக்கித்தவித்த இந்தியர்களில் இன்று மட்டும் 1038 பேர் சாலை மார்க்கமாக உத்தரப்பிரதேச மாநில எல்லையை வந்தடைந்துள்ளனர். |
| வாட்ஸ்அப் மூலம் நிலநடுக்க வதந்தியை பரப்பிய முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு Posted: 28 Apr 2015 07:36 AM PDT நேபாளம் மற்றும் வட இந்திய பகுதிகளில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்ச்சியில் மக்கள் உறைந்திருந்த நிலையில், பீகாரில் அன்று மீண்டும் நிலநடுக்கம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக வாட்ஸ்அப் மூலம் வதந்தி பரவியது. இது தொடர்பாக பீகார் முன்னாள் எம்.எல்.ஏ. தயானந்த் ராய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |