மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோர்ட்டு சம்மன்: மே 2–ந் தேதி ஆஜராக உத்தரவு
- திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்தல்: 20 தமிழர்கள் சுட்டுக்கொலை
- திருப்பதி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 84 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
- மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா: பேப் இண்டியா நிர்வாகிகளுக்கு போலீஸ் சம்மன்
- சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல்: பீகாருக்கு 1 லட்சம் கோடி சிறப்பு திட்டம்- மத்திய அரசு முடிவு
- டெல்லி போலீசார் அதிரடி பாய்ச்சல்: எம்.எல்.ஏ.க்களிடம் பணம் கேட்டு மிரட்டிய கொடூர குற்றவாளி நீரஜ் பவானா கைது
- இந்தியா என்ற சொந்த நாட்டிலேயே 70 ஆண்டுகளாக அகதிகளாக வாழும் இந்துக்கள்: சொந்த பூமியின்றி வறுமையில் வாடும் அவலம்
- 7 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் ரத்து தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 23-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
- இளம் குற்றவாளிகள் தொடர்பான சட்டத்தில் மறுஆய்வு தேவை: சுப்ரீம் கோர்ட்டு கருத்து
- இடுக்கி அணையை விடுமுறை நாட்களிலும் பார்வையிட அனுமதி: கேரள அரசு உத்தரவு அமலுக்கு வந்தது
- பெங்களூருவில் செயல்பட்டு வரும் செயற்கைகோள் மைய இயக்குனராக மயில்சாமி அண்ணாதுரை பதவி ஏற்பு
- புகையிலை பொருட்கள் மீதான எச்சரிக்கை அளவை உயர்த்தக்கோரி வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு
- கருப்பு பணம் பதுக்கியவர்களுடன் நியாயமான உடன்பாட்டுக்கு வாய்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
- அரசு அதிகாரிகள் ஊழலைக் கைவிட 6 மாதம் அவகாசமளித்த அரியானா முதல்வர்
- பசுக்களையும் எருதுகளையும் மட்டும் கொல்வதற்கு தடை விதித்தது ஏன்?- மகாராஷ்டிர அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி
- பாரதீய ஜனதா கட்சி தொடங்கப்பட்ட நாளைக் கொண்டாடும் விழாவிற்கு அத்வானிக்கு அழைப்பில்லை: பா.ஜ.க மறுப்பு
- மஸ்தான் பாபுவின் உடலைக் கொண்டு வருவதற்கான செலவினை அரசே ஏற்கும்: பாபுவின் தாயாரிடம் வெங்கையா நாயுடு
- முஸ்லிம் சமுதாயத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற மோடி உறுதி
- இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு உத்தரவிட்ட பாகிஸ்தான் ராணுவம்
- டெல்லியில் 19-ந்தேதி நடக்கும் விவசாயிகள் மாநாட்டில் ராகுல் காந்தி நிச்சயம் பங்கேற்பார்
| ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோர்ட்டு சம்மன்: மே 2–ந் தேதி ஆஜராக உத்தரவு Posted: 06 Apr 2015 10:50 PM PDT ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. சி.பி.ஐ. தொடர்ந்த இந்த வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டியின் பல கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கி வைத்து உள்ளனர். |
| திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்தல்: 20 தமிழர்கள் சுட்டுக்கொலை Posted: 06 Apr 2015 10:16 PM PDT ஆந்திர மாநில காடுகளில் விலை மதிப்பு மிக்க செம்மரங்கள் அதிகம் உள்ளன. இந்த மரங்களுக்கு வெளிநாடுகளில் அதிக மவுசு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டம் வழியாக ஆந்திர மாநில காடுகளில் இருந்து செம்மரங்கள் வெட்டி கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இது சம்பந்தமாக வேலூர்–திருவண்ணாமலை சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால் |
| திருப்பதி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 84 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் Posted: 06 Apr 2015 10:14 PM PDT கடந்த புனித வெள்ளியில் தொடங்கி தொடர்ந்து 3 நாள் அரசு விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சனிக்கிழமை சந்திர கிரகணம் என்பதால் கோவில் நடை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மூடப்பட்டது. 8 மணிக்கு பிறகே பக்தர்கள் |
| மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா: பேப் இண்டியா நிர்வாகிகளுக்கு போலீஸ் சம்மன் Posted: 06 Apr 2015 09:53 PM PDT கோவா மாநிலத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் கேமரா இருந்தது தொடர்பான வழக்கில் பேப் இண்டியாவின் 11 முக்கிய நிர்வாகிகளுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி, அம்மாநிலத்தின் காண்டோலிம் பகுதியில் உள்ள பேப் இண்டியா ரெடிமேட் கடையில் சில துணிகளை வாங்கினார். பின்னர் |
| சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல்: பீகாருக்கு 1 லட்சம் கோடி சிறப்பு திட்டம்- மத்திய அரசு முடிவு Posted: 06 Apr 2015 09:53 PM PDT பீகார் மாநில சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து அம்மாநிலத்திற்கு 1 லட்சம் கோடியில் சிறப்பு திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. அடைந்த மோசமான தோல்வியை அடுத்து மோடி அலை ஓய்ந்துவிட்டதாக பலரும் கூறிவருகிறார்கள். இதனால் கடும் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள அமித்ஷா-மோடி கூட்டணி |
| Posted: 06 Apr 2015 09:25 PM PDT மிரட்டி பணம் பறிப்பு, கொலை முயற்சி ஆகிய வழக்குகளில் டெல்லி போலீசாரால் தேடப்பட்டு வந்த கொடூர குற்றவாளியான நீரஜ் பவானா இன்று கைது செய்யப்பட்டான். டெல்லி புறநகர் பகுதியில் உள்ள பவானா கிராமத்தில் பிறந்த நீரஜ், முண்ட்கா தொகுதி எம்.எல்.ஏ.வான ரம்பீர் ஷோகீனின் உறவினராவான். |
| Posted: 06 Apr 2015 09:00 PM PDT இந்தியா இந்துக்களின் நாடு என சொல்லப்படுவது ஏட்டளவில் மட்டுமே இருப்பதற்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அகதிகளாக உள்ள இந்துக்களே மிகப்பெரிய சாட்சியாக உள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்த போது பாகிஸ்தான் வசம் சென்ற பஞ்சாப் மாகாணத்தில் பிறந்த மங்கு ராம், சுதந்திரத்திற்கு பின் இரு நாடுகளுக்கு |
| Posted: 06 Apr 2015 08:34 PM PDT இந்தியாவில் உள்ள பல நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் தரமற்ற கல்வி வழங்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் 2006-ம் ஆண்டு விப்லவ் சர்மா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இதுபற்றி தாண்டன் குழு ஆய்வு செய்து 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று பரிந்துரை செய்தது. இதில் 7 நிகர்நிலை |
| இளம் குற்றவாளிகள் தொடர்பான சட்டத்தில் மறுஆய்வு தேவை: சுப்ரீம் கோர்ட்டு கருத்து Posted: 06 Apr 2015 08:29 PM PDT கற்பழிப்பு, கொலை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதுதொடர்பான சட்டத்தில் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. கடனை திருப்பிச் செலுத்தாத |
| இடுக்கி அணையை விடுமுறை நாட்களிலும் பார்வையிட அனுமதி: கேரள அரசு உத்தரவு அமலுக்கு வந்தது Posted: 06 Apr 2015 08:07 PM PDT ஆசிய கண்டத்தில் 2-வது மிகப்பெரிய அணையான இடுக்கி அணை கேரள மாநிலத்தில் உள்ளது. இரண்டு பெரிய மலைகளை இணைத்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இயற்கை எழில்மிகுந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மூலம் கேரள மாநிலத்தின் 40 சதவீத மின்தேவை பூர்த்தி |
| பெங்களூருவில் செயல்பட்டு வரும் செயற்கைகோள் மைய இயக்குனராக மயில்சாமி அண்ணாதுரை பதவி ஏற்பு Posted: 06 Apr 2015 08:02 PM PDT பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் (இஸ்ரோ) விஞ்ஞானியாகவும், ஐ.ஆர்.எஸ். மற்றும் எஸ்.எஸ்.எஸ். செயற்கைகோள் திட்ட இயக்குனராகவும் இருப்பவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை. இவரது சொந்த ஊர் கோவை மாவட்டம் |
| Posted: 06 Apr 2015 08:00 PM PDT புகையிலை பொருட்களின் மீதான அபாய எச்சரிக்கை அடங்கிய வாசகங்களின் அளவை உயர்த்த வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கின் மீது மத்திய அரசு பதில் மனுவை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. புகையிலைப் பொருட்களின் மீது அச்சடிக்கப்படும் அபாய எச்சரிக்கை |
| கருப்பு பணம் பதுக்கியவர்களுடன் நியாயமான உடன்பாட்டுக்கு வாய்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு Posted: 06 Apr 2015 07:31 PM PDT கருப்பு பணம் பதுக்கியவர்கள், தாங்கள் தூய்மையானவர்களாக வெளிவர விரும்பினால், அவர்களுடன் நியாயமான உடன்பாட்டுக்கு புதிய மசோதாவில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பதற்காக, மத்திய அரசு புதிய மசோதாவை பாராளுமன்றத்தில் |
| அரசு அதிகாரிகள் ஊழலைக் கைவிட 6 மாதம் அவகாசமளித்த அரியானா முதல்வர் Posted: 06 Apr 2015 04:11 PM PDT அரியானா மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும், அதிகாரிகள் 6 மாதத்திற்குள் ஊழலைக் கைவிட வேண்டுமென்றும், கைவிடாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். |
| Posted: 06 Apr 2015 03:05 PM PDT மகாராஷ்டிர மாநிலத்தில் பசுக்கள், மற்றும் எருதுகள் மட்டும் கொல்லப்படுவதற்கு தடை விதித்திருப்பது ஏன்? என்று அம்மாநில அரசிடம் மும்பை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. அண்மையில் பாரதிய ஜனதா கட்சி, ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் பசுவதைக்கு தடைவிதிக்கப்பட்டது. இதற்காக மகாராஷ்டிர விலங்குகள் |
| பாரதீய ஜனதா கட்சி தொடங்கப்பட்ட நாளைக் கொண்டாடும் விழாவிற்கு அத்வானிக்கு அழைப்பில்லை: பா.ஜ.க மறுப்பு Posted: 06 Apr 2015 11:15 AM PDT பாரதீய ஜனதா கட்சி தொடங்கப்பட்ட நாளான இன்று, கட்சித் தலைமையகத்தில் நடந்த விழாவிற்கு, அக்கட்சி மூத்த தலைவர் அத்வானிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படவில்லை என்று வெளியான தகவலை, பா.ஜ.க திட்டவட்டாமாக மறுத்துள்ளது. |
| மஸ்தான் பாபுவின் உடலைக் கொண்டு வருவதற்கான செலவினை அரசே ஏற்கும்: பாபுவின் தாயாரிடம் வெங்கையா நாயுடு Posted: 06 Apr 2015 10:39 AM PDT கின்னஸ் சாதனை படைத்த, இந்தியாவின் முன்னணி மலையேற்ற வீரரான மல்லி மஸ்தான் பாபு, அர்ஜென்டினா மற்றும் சிலி எல்லையில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் கடந்த 4-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, அவரது பிரேதத்தை கொண்டு வருவதற்கான முழு |
| முஸ்லிம் சமுதாயத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற மோடி உறுதி Posted: 06 Apr 2015 08:57 AM PDT இந்தியாவிலுள்ள அனைத்து பிரிவு முஸ்லிம் சமுதாயத்தினரின் கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்ய முழு ஆதரவு அளிக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். நாடு முழுவதுமுள்ள முஸ்லீம் தலைவர்களில் சையது அலி அக்பர் (சென்னை), ஹாஜி அப்துல் ஹபீஸ் கான், மௌலானா அபுபக்கர் பசானி (ராஜஸ்தான்), சையது அப்துல் ரசீத் அலி (மத்திய பிரதேசம்) உள்ளிட்ட 10 தலைவர்கள் கொண்ட குழு இன்று பிரதமர் மோடியை சந்தித்து முஸ்லீம் சமுதாயத்திற்கான கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக, சமூக சூழ்நிலைகளை சீர்படுத்துதல், முஸ்லீம் இளைஞர்களுக்கான கல்விக் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. |
| இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு உத்தரவிட்ட பாகிஸ்தான் ராணுவம் Posted: 06 Apr 2015 08:51 AM PDT ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும்படி என்று தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டு உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 3 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சோபியான் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 3 போலீசார் உயிரிழந்தனர். பாரமுல்லா மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்டார். குண்டு காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புல்வாமா மாவட்டத்தில் முன்னாள் ஹிஸ்புல் முஜாகிதீன் |
| டெல்லியில் 19-ந்தேதி நடக்கும் விவசாயிகள் மாநாட்டில் ராகுல் காந்தி நிச்சயம் பங்கேற்பார் Posted: 06 Apr 2015 07:32 AM PDT காங்கிரஸ் சார்பில் வரும் 19-ம் தேதி டெல்லியில் நடக்கும் விவசாயிகள் மாநாட்டில் ராகுல் காந்தி உரையாற்றுவார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் திட்டவட்டமாக கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பின்னர், மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி பல்வேறு மாற்றங்களை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி நீண்ட விடுமுறையில் சென்றுவிட்டார். கடந்த பிப்ரவரி 22-ம் தேதி சென்ற அவர், மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரில்கூட கலந்துகொள்ளவில்லை. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |