Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ரூ.35 லட்சம் இழப்பீடு தராவிட்டால் ரெயிலை ஜப்தி செய்யுங்கள்: இமாச்சல பிரதேச கோர்ட்டு அதிரடி

Posted: 13 Apr 2015 10:35 PM PDT

இமாச்சல பிரதேசம் மாநிலம் உனா மாவட்டத்தில் ரெயில் பாதை அமைப்பதற்காக 1998–ம் ஆண்டு விவாசயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக விவசாயிகளுக்கு ரெயில்வே இலாகா இழப்பீடு வழங்கியது. நிலத்தை இழந்த விவசாயிகளில் மேலாராம் மற்றும் மதன்லால் ஆகிய இருவரும் தங்களுக்கு மிகவும் குறைவான இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாக

55 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு ராகுல் நாளை டெல்லி திரும்புகிறார்

Posted: 13 Apr 2015 10:28 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை தழுவியதால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மிகவும் அதிருப்தியும் விரக்தியும் அடைந்தார். காங்கிரசுக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்கும் திட்டங்களை அவர் வகுத்து வந்தார். அதை செயல்படுத்த ராகுல் நாடெங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யப்போகிறார் என்று கூறப்பட்டது.

லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்

Posted: 13 Apr 2015 09:36 PM PDT

மும்பையில் கடந்த 2008–ம் ஆண்டு பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் கடல் வழியாக ஊடுருவி வந்து பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். அந்த சம்பவத்தில் 166 பேர் பலியானார்கள். மும்பையில் மீண்டும் அதே போன்று தாக்குதலை நடத்தப்போவதாக கடந்த ஆண்டு லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகள் அறிவித்தனர். இதை தொடர்ந்து

அசாமில் கார் திருட்டு வழக்கில் பெண் எம்.எல்.ஏ. கைது

Posted: 13 Apr 2015 09:35 PM PDT

அசாம் மாநிலம் கவுகாத்தியில் கார் திருட்டு கும்பல் செயல்பட்டு வந்தது. இவர்கள் அசாமில் கார்கள் மற்றும் ஆட்டோக்களை திருடி அவற்றை வேறுவடியில் மாற்றி புதுகார் ஆட்டோக்கள் போல் மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் விற்று வந்தனர். இந்த திருட்டு கும்பல் தலைவனாக அனில் சவுகான் செயல்பட்டு வந்தான். இவனுக்கு மும்பை, டெல்லியில் உள்ள கார் திருட்டு கும்பல்களுடன்

வெளிநாடுகளுக்கு போவது இருக்கட்டும், முதலில் இந்தியாவை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்: மோடி மீது மம்தா பாய்ச்சல்

Posted: 13 Apr 2015 05:22 PM PDT

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு போவதற்குதான் அதிகம் விரும்புவதாகவும் ஆனால் இந்தியாவை முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நடந்த பேரணி ஒன்றில் பேசிய அவர் மேலும் கூறியதாவது, 9 மாதங்களில் 11 முறை வெளிநாடுகளுக்கு சுற்று பயணம்

நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் எழுத்தாளர் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

Posted: 13 Apr 2015 05:09 PM PDT

நோபல் பரிசு பெற்ற, தலை சிறந்த ஜெர்மன் எழுத்தாளரான கண்டர் கிராஸ்(87) நேற்று காலமானார். அவருடைய மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். மூன்று நாள் அரசுமுறை பயணமாக ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் பேசும் போதும் பின்னர் தனது டுவிட்டர் பக்கத்திலும் கண்டர் கிராஸ் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: நீதி விசாரணை நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

Posted: 13 Apr 2015 03:40 PM PDT

20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி வருவதால் உண்மை விவரம் வெளியே தெரிந்தால் தங்களின் பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் ஆந்திர போலீசார் இருப்பதாக கூறப்படுகிறது.

பீகாரில் மாணவர் தலைவர் சுட்டுக்கொலை

Posted: 13 Apr 2015 02:35 PM PDT

பீகார் மாநிலம் சிதாமார்கி மாவட்டம் பகடேவ்பூர் கிராமத்தில் அம்பேத்கர் நல மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் மாணவர் தலைவர் கிஷோரி ராம் (வயது 33) தங்கி இருந்தார். நேற்று அதிகாலையில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அந்த விடுதிக்குள் புகுந்தது. அவர்கள் அங்கு தங்கியிருந்து மாணவர் தலைவர் கிஷோரி ராமை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

126 போர்விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது இந்தியா

Posted: 13 Apr 2015 01:53 PM PDT

பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து 126 போர்விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது. இந்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு நடுத்தர வகையை சேர்ந்த 126 போர்விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தாஸ்சால்ட் விமான

அன்பழகன் தாக்கல் செய்த பவானிசிங்கை நீக்கக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு

Posted: 13 Apr 2015 12:41 PM PDT

பெங்களூரு தனிக்கோர்ட்டு சொத்து குவிப்பு வழக்கில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் நீதிபதி குமாரசாமி தீர்ப்பை ஒத்திவைத்து உள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட சஞ்சய் ராவத் மீது வழக்கு பதிவு செய்ய லக்னோ கோர்ட்டு உத்தரவு

Posted: 13 Apr 2015 11:57 AM PDT

சிவசேனாவின் கட்சி பத்திரிகையான 'சாம்னா'வில் அக்கட்சியின் டெல்லி மேல்-சபை உறுப்பினர் சஞ்சய் ராவத் எழுதிய தலையங்கத்தில், சில அரசியல் கட்சிகள் வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுவதாகவும் இதற்கு முடிவு கட்ட முஸ்லிம்களின் வாக்குரிமையை திரும்பப் பெற வேண்டும் என்றும் எழுதி இருந்தார். மேலும் எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும்

இணைய சமத்துவம்: ஆம் ஆத்மி கட்சி முழு ஆதரவு

Posted: 13 Apr 2015 11:07 AM PDT

இந்தியாவில் இணைய சமத்துவம் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இணைய வசதிகளை அணுகும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும், இணையவழியாக பயணிக்கும் தகவல்கள் எந்த குறுக்கீடும் இல்லாமல் அனைவரையும் சென்றடையவேண்டும் என்ற நோக்கத்தில்

கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

Posted: 13 Apr 2015 10:45 AM PDT

கிறிஸ்தவ சமுதாயத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கூறியுள்ளார். ஆக்ராவின் ஆர்ச் பிஷப் மற்றும் இந்திய கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பின் பொது செயலாளருமான ஆல்பர்ட் டி சோசா தலைமையிலான 3 பேர் கொண்ட கிறிஸ்தவ குழுவிடம் அவர் இதனை தெரிவித்தார்.

இணைய சமத்துவ கொள்கை இந்தியாவில் நடைமுறைக்கு வருமா? - மத்திய அரசு குழு தீவிர ஆலோசனை

Posted: 13 Apr 2015 09:24 AM PDT

இணைய வசதிகளை அணுகும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும், இணையவழியாக பயணிக்கும் தகவல்கள் எந்த குறுக்கீடும் இல்லாமல் அனைவரையும் சென்றடையவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இணைய சமத்துவம். இவ்வாறு பயணிக்கும் தகவல்களை இணைய சேவை நிறுவனங்கள் தங்களது அதிகாரத்தைக் கொண்டு நிறுத்தவோ, அதன் வேகத்தைக் கூட்டவோ, குறைக்கவோ கூடாது. நாடு, இடம் சார்ந்து ஒரு சில தகவல்களை

பாபா ராம்தேவுக்கு மந்திரிக்குரிய அந்தஸ்து-சலுகைகள்: அரியானா அரசு முடிவு

Posted: 13 Apr 2015 09:15 AM PDT

யோகாசன குருவான பாபா ராம்தேவுக்கு ஒரு மாநில மந்திரிக்குரிய அந்தஸ்துகளையும் சலுகைகளையும் வழங்க அரியானா அரசு முடிவு செய்துள்ளது. அரியானா மாநில மக்களிடையில் யோகாசனம் மற்றும் ஆயுர்வேத வைத்தியத்தின் மகத்துவத்தை பிரசாரம் செய்வதற்கான நல்லெண்ண தூதராக பாபா ராம்தேவை அரியானா மாநில அரசு சமீபத்தில் நியமித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும் கண்டனமும் தெரிவித்தன.

அருண் ஜெட்லி நாளை அமெரிக்கா பயணம்: சர்வதேச நாணய நிதியம்-உலக வங்கி கூட்டத்தில் பங்கேற்கிறார்

Posted: 13 Apr 2015 09:10 AM PDT

வாஷிங்டனில் வரும் 17-ம் தேதி முதல் 3 நாட்கள் சர்வதேச நாணய நிதியம்-உலக வங்கி வசந்தகால கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நாளை இரவு அமெரிக்காவுக்கு புறப்படுகிறார். ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், நிதித்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிகளும் அவருடன் செல்கின்றனர்.

நக்சலைட்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு வீரதீர விருது: ராஜ்நாத் சிங்

Posted: 13 Apr 2015 07:52 AM PDT

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்த பாதுகாப்பு படையினருக்கு தைரியத்திற்கான வீரதீர விருதுகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், அவர்களது உறவினர்களுக்கு தேவையான வசதிகளை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் இருந்து 450 கி.மீட்டர் தொலைவில் பொலம்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் நக்சலைட்டுகள் நடத்திய

திருப்பதியில் மொட்டை போடுவதற்கான கட்டணம் ரத்து

Posted: 13 Apr 2015 07:08 AM PDT

திருப்பதியில் பக்தர்கள் முடிக்காணிக்கைக்கான (மொட்டை போடுதல்) கட்டணத்தை ரத்து செய்து திருப்பதி-திருமலா தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் நேர்த்தி கடனுக்காக முடிக்காணிக்கை செலுத்துவது வழக்கம். இவ்வாறு முடிக்காணிக்கை கொடுக்கும் பக்தர்கள் மொட்டை போடும் போது பக்தர்களிடம் மொட்டியடிக்கும் பணியாளர்கள் கூடுதலாக பணம் பறிப்பதாக சமீபத்தில்

சத்தீஸ்கரில் மீண்டும் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 4 போலீசார் பலி-7 பேர் படுகாயம்

Posted: 13 Apr 2015 05:33 AM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அதிரடிப்படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், அவர்களை குறிவைத்து மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்று தண்டேவாடா மாவட்டத்தில் போலீசாரின் கண்ணிவெடி அகற்றும் வாகனத்தை மாவோயிஸ்டுகள் குண்டு வைத்து தகர்த்தனர்.

முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்பதா? சிவசேனாவுக்கு ஒவைசி கடும் கண்டனம்

Posted: 13 Apr 2015 04:03 AM PDT

முஸ்லிம்களின் வாக்கு உரிமையை பறிக்க வேண்டும் என்ற கட்டுரையை வெளியிட்ட சிவசேனா ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒவைசி வலியுறுத்தி உள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கவேண்டும் என சிவசேனா தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் தீட்டியிருந்தது. சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எழுதியுள்ள அந்த கட்டுரையில், இஸ்லாமிய


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™