மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தொடர்ந்து குறையும் நிலத்தடி நீர்: ஒரு குடும்பம் - ஒரு வீடு சட்டம் அமல்படுத்த மத்திய நிலத்தடி நீர் ஆணையம் பரிந்துரை
- 2 மாதம் திடீர் ஓய்வு: ராகுல்காந்தி மியான்மரில் மன அமைதிக்காக தியானம்
- கேரளாவில் கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகம் பெய்த கோடை மழை
- வனப்பகுதியில் மரத்தை வெட்டினால் 5 ஆண்டு ஜெயில் - சொத்துக்கள் ஜப்தி: ஆந்திர அரசு அதிரடி நடவடிக்கை
- சுப்ரீம்கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் மனித உரிமை கமிஷன் தலைவர் ஆகிறார்
- குருவாயூர் கோவிலுக்கு நாளை இலங்கை பிரதமர் வருகை
- கற்பழிப்புக்குள்ளான பெண்ணின் கருவை கலைக்க உத்தரவிட குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு
- காஷ்மீர் பேரணியில் பாகிஸ்தான் கொடியை பறக்கவிட்ட பிரிவினைவாதி மஸரத் ஆலம் அதிரடி கைது
- மோடி அரசை அகற்ற ஜனதா பரிவாரை தொடங்கவில்லை: தேவேகவுடா பேட்டி
- பெங்களூரு மாநகராட்சியை பிரிக்கும் முடிவில் அரசு உறுதி: சித்தராமையா திட்டவட்டம்
- நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்கள் விவகாரம்: மத்திய அரசு அமைத்த குழு முக்கிய முடிவு
- டெல்லிக்கு ராகுல் காந்தி திரும்பியது பற்றி பா.ஜனதா கருத்து
- கறைபடிந்த அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படாது: மத்திய அரசு அறிவிப்பு
- பிரணாப் முகர்ஜி 2 நாள் சுற்றுப்பயணமாக சத்தீஷ்கார், பீகார் மாநிலங்களுக்கு செல்கிறார்
- கற்பழிப்பு வழக்கில் சாமியார் அசராம் பாபு மகனுக்கு குஜராத் ஐகோர்ட்டு ஜாமீன்
- பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் மோடி பேச்சு: காங்கிரஸ் கண்டனம்
- பணியாளர்களுக்கு 2,628 கோடி மெகா போனஸ்: டி.சி.எஸ் அதிரடி அறிவிப்பு
- பிரிவினைவாத தலைவர்கள் கிலானி மற்றும் மசராத் ஆலம் இருவரையும் வீட்டுகாவலில் வைத்தது போலீஸ்
- சூர்ய பகதூர் தாபா மரணம்: நேபாளம் தலைசிறந்த தலைவரை இழந்துவிட்டது - பிரணாப் முகர்ஜி இரங்கல்
- மாடியில் இருந்து தூக்கி வீசி குழந்தையை கொன்ற தாய்: பரபரப்பு தகவல்கள்
| Posted: 16 Apr 2015 10:45 PM PDT நாட்டின் தலைநகரை ஒட்டியுள்ள தொழில்நகரமான நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருவதால் ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு சட்டத்தை அமல்படுத்துமாறு மத்திய நிலத்தடி நீர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. |
| 2 மாதம் திடீர் ஓய்வு: ராகுல்காந்தி மியான்மரில் மன அமைதிக்காக தியானம் Posted: 16 Apr 2015 10:38 PM PDT பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததால் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. தேர்தல் தோல்விக்கு மூத்த தலைவர்கள் பலர் ராகுல்காந்தி மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள். மேலும் பா.ஜனதா அரசும் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் |
| கேரளாவில் கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகம் பெய்த கோடை மழை Posted: 16 Apr 2015 10:18 PM PDT கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரம் தென்மேற்கு பருவ மழை தொடங்கும். கடந்த ஆண்டு இந்த மழை எதிர்பார்த்ததைவிட கூடுதலாக பெய்தது. |
| வனப்பகுதியில் மரத்தை வெட்டினால் 5 ஆண்டு ஜெயில் - சொத்துக்கள் ஜப்தி: ஆந்திர அரசு அதிரடி நடவடிக்கை Posted: 16 Apr 2015 10:18 PM PDT திருப்பதி சேஷாசல மலையில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திர போலீசாரின் இந்த அதிரடி என்கவுன்டருக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளது. |
| சுப்ரீம்கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் மனித உரிமை கமிஷன் தலைவர் ஆகிறார் Posted: 16 Apr 2015 10:17 PM PDT தேசிய மனித உரிமை கமிஷனின் தலைவராக தற்போது கே.ஜி.பாலகிருஷ்ணன் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையடுத்து மனித உரிமை கமிஷனின் புதிய தலைவராக யாரை நியமனம் செய்யலாம் என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் |
| குருவாயூர் கோவிலுக்கு நாளை இலங்கை பிரதமர் வருகை Posted: 16 Apr 2015 10:16 PM PDT கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று. இங்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நாளை சாமி தரிசனம் செய்ய வருகிறார். இதனை குருவாயூர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கோவிலில் நாளை உச்ச பூஜை முடிந்த பின்பு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும், அவரது குடும்பத்தினரும் கோவிலுக்கு வந்து சாமி |
| கற்பழிப்புக்குள்ளான பெண்ணின் கருவை கலைக்க உத்தரவிட குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு Posted: 16 Apr 2015 10:06 PM PDT குஜராத் மாநிலத்தில் கற்பழிப்புக்குள்ளான 24 வயது பெண்ணின் 28 வார கருவை கலைக்க உத்தரவிட அம்மாநில உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 20 வாரத்திற்கும் மேற்பட்ட கருவை கலைக்க உத்தரவிட சட்டத்தில் இடமில்லாததால், அனுமதி வழங்கமுடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே சமயம் அப்பெண் ஆபத்தில்லாமல் குழந்தையை |
| காஷ்மீர் பேரணியில் பாகிஸ்தான் கொடியை பறக்கவிட்ட பிரிவினைவாதி மஸரத் ஆலம் அதிரடி கைது Posted: 16 Apr 2015 09:03 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியை பறக்க விட்ட குற்றத்திற்காக பிரிவினைவாதி மஸரத் ஆலம் இன்று காலை கைது செய்யப்பட்டார். தெற்கு காஷ்மீரின் டரால் நகரில் இன்று பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பிரிவினைவாத தலைவர் கிலானி மற்றும் மஸரத் ஆலம் |
| மோடி அரசை அகற்ற ஜனதா பரிவாரை தொடங்கவில்லை: தேவேகவுடா பேட்டி Posted: 16 Apr 2015 08:31 PM PDT பெங்களூருவில், முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "பெங்களூரு மாநகராட்சியை பிரிக்கக்கூடாது என்ற எங்கள் கட்சியின் |
| பெங்களூரு மாநகராட்சியை பிரிக்கும் முடிவில் அரசு உறுதி: சித்தராமையா திட்டவட்டம் Posted: 16 Apr 2015 08:17 PM PDT பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் மக்கள்தொகை கணக்கெடுப்பாளர்கள் விவரங்களை சேகரித்தனர். அதன் பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பெங்களூரு மாநகராட்சியை பிரிக்கும் முடிவில் அரசு உறுதியாக உள்ளது. |
| நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்கள் விவகாரம்: மத்திய அரசு அமைத்த குழு முக்கிய முடிவு Posted: 16 Apr 2015 07:04 PM PDT நேதாஜி தொடர்பான 90 ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று அவருடைய உறவினர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி ஆராய மத்திய உள்துறை, சட்டம், பணியாளர் நலன் ஆகிய துறைகளின் செயலாளர்கள் அடங்கிய குழுவை நேற்றுமுன்தினம் மத்திய அரசு அமைத்தது. |
| டெல்லிக்கு ராகுல் காந்தி திரும்பியது பற்றி பா.ஜனதா கருத்து Posted: 16 Apr 2015 04:41 PM PDT காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி 56 நாள் ஓய்வுக்குப்பின் நேற்று டெல்லி திரும்பினார். இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜனதா கட்சி, ராகுல் காந்தியும், காங்கிரசும் குழப்பத்தில் உள்ளதாக கிண்டலாக கூறியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில் |
| கறைபடிந்த அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படாது: மத்திய அரசு அறிவிப்பு Posted: 16 Apr 2015 04:16 PM PDT மத்திய அரசு பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை சார்பில் நிதித்துறை விதி 49 குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன்பின்னர் பணியாளர் நலத்துறை வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:- ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள ஊழியர்கள் அல்லது ஆண்டு |
| பிரணாப் முகர்ஜி 2 நாள் சுற்றுப்பயணமாக சத்தீஷ்கார், பீகார் மாநிலங்களுக்கு செல்கிறார் Posted: 16 Apr 2015 02:44 PM PDT ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2 நாள் சுற்றுப்பயணமாக சத்தீஷ்கார் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) புறப்படுகிறார். இந்த பயணத்தின் போது சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெறும் ஐ.ஐ.எம்-ன் 4-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். |
| கற்பழிப்பு வழக்கில் சாமியார் அசராம் பாபு மகனுக்கு குஜராத் ஐகோர்ட்டு ஜாமீன் Posted: 16 Apr 2015 02:25 PM PDT குஜராத்தை சேர்ந்த பிரபல சாமியார் அசராம் பாபு சிறுமி கற்பழிப்பு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மகனான நாராயண் சாய் சூரத் ஆசிரமத்தில் தங்கி இருந்த ஒரு பெண்ணை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு ஆண்டாக சூரத் ஜெயிலில் உள்ளார். |
| பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் மோடி பேச்சு: காங்கிரஸ் கண்டனம் Posted: 16 Apr 2015 01:47 PM PDT பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் மோடி பேசி உள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. கனடா நாட்டில் டொராண்டோ நகரில் கனடா வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர், முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை மறைமுகமாக சாடினார். இது குறித்து அவர் |
| பணியாளர்களுக்கு 2,628 கோடி மெகா போனஸ்: டி.சி.எஸ் அதிரடி அறிவிப்பு Posted: 16 Apr 2015 01:02 PM PDT இந்தியாவின் மிக பெரிய மென்பொருள் நிறுவனமான டி.சி.எஸ். தனது பணியாளர்களுக்கு 2,628 கோடி போனஸ் கொடுக்கபோவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. பங்குச் சந்தைக்கு வந்து 10 ஆண்டுகள் வந்ததை கொண்டாடும் விதமாக இந்த மெகா போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது டி.சி.எஸ். |
| பிரிவினைவாத தலைவர்கள் கிலானி மற்றும் மசராத் ஆலம் இருவரையும் வீட்டுகாவலில் வைத்தது போலீஸ் Posted: 16 Apr 2015 12:33 PM PDT தெற்கு காஷ்மீரின் டரால் நகரில் நாளை பேரணி நடைபெறவிருக்கும் நிலையில் பிரிவினைவாத தலைவர்கள் கிலானி மற்றும் மசராத் ஆலம் இருவரும் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதன்கிழமை அன்று பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியுடன் பேரணியாக சென்றதால் எழுந்துள்ள கடும் எதிர்ப்புக்கு பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
| சூர்ய பகதூர் தாபா மரணம்: நேபாளம் தலைசிறந்த தலைவரை இழந்துவிட்டது - பிரணாப் முகர்ஜி இரங்கல் Posted: 16 Apr 2015 11:29 AM PDT நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சூர்ய பகதூர் தாபா டெல்லியில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்து உள்ளார். சூர்ய பகதூர் தாபா மகன் சுனில் தாபாக்கு அனுப்பியுள்ள இரங்கள் செய்தியில் அவர் " சூர்ய பகதூர் தாபா உடனான நட்பை நான் மிகவும் |
| மாடியில் இருந்து தூக்கி வீசி குழந்தையை கொன்ற தாய்: பரபரப்பு தகவல்கள் Posted: 16 Apr 2015 10:16 AM PDT ஆஸ்பத்திரி மாடியில் இருந்து தூக்கி வீசி குழந்தையை கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர். தானே, டோம்பிவிலி பகுதியை சேர்ந்தவர் சுஜாதா. இவருக்கு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், மீண்டும் கர்ப்பமான சுஜாதா கடந்த மாதம் பிரசவத்திற்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |