Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பஞ்சாபில் தொடரும் பலாத்காரம்: 11 பேர் கொண்ட கும்பலால் இளம் பெண் கடத்தி கற்பழிப்பு

Posted: 30 Apr 2015 11:38 PM PDT

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஓடும் பஸ்சில் பாலியல் துன்புறுத்தலுக்குப்பிறகு தள்ளி விடப்பட்ட 14 வயது பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த பஸ், பஞ்சாப் முதல் – மந்திரி பாதல் குடும்பத்தினருக்கு சொந்தமானது என்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது பற்றி

நிலச்சரிவால் மூடப்பட்ட ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு திறப்பு

Posted: 30 Apr 2015 10:47 PM PDT

காஷ்மீரில் நிலச்சரிவால் மூடப்பட்ட ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை இன்று ஒருவழிப் பாதையாக போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக, கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் அனைத்து காலநிலைகளிலும்

நேபாள பூகம்பத்தில் பாதித்த கிராமத்தை மறந்த நேபாள அரசு: மீட்பு பணியில் ஈடுபடும் மக்கள்

Posted: 30 Apr 2015 10:46 PM PDT

பூகம்பத்தில் பாதித்த கிராமத்தை நேபாள அரசு மறந்து விட்டதால் மீட்பு பணியில் மக்களே ஈடுபடுகின்றனர். நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களுக்கு மீட்பு குழுவினர் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. பூகம்பத்தில் திபெத் எல்லையில் உள்ள நியூபூர் சிபாகத் கவ்ரே என்ற மலை கிராமம் அழிந்து விட்டது.

வேன் மீது லாரி மோதியது: மணமகன்–மணமகள் உள்பட 12 பேர் பரிதாப சாவு

Posted: 30 Apr 2015 10:15 PM PDT

மேற்கு வங்காள மாநிலம் அலிபுர் துவார் மாவட்டத்தில் ஒரு வேனில் திருமண கோஷ்டியைச் சேர்ந்த 18 பேர் ஒரு வேனில் சென்று கொண்டு இருந்தனர். அதில் மணமகனும், மணமகளும் இருந்தனர். பிர்பரா என்ற இடத்தில் இருந்து புறப்பட்டு மதரிஹாட் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த லாரி வேன்

கேரள மாநிலத்தின் சுற்றுலா தூதுவர்களாக ஷாருக்கான், ஸ்டெபிகிராப்: வெளிநாட்டு பயணிகளை ஈர்க்க அரசு ஏற்பாடு

Posted: 30 Apr 2015 10:11 PM PDT

கேரளாவில் இயற்கை எழில் சூழ்ந்த கடற்கரையும், மலைவாசஸ்தலங்களும் உள்ளன. ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் இங்கு ஏராளமாக உள்ளன. இவற்றை நாடி வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது

கோட்டயத்தில் ஊருக்குள் புகுந்த சிங்கவால் குரங்கு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓட்டம்

Posted: 30 Apr 2015 08:33 PM PDT

கோட்டயம் மற்றும் கொல்லம் மாவட்ட எல்லையில் அஷ்டமுடி அருகே வாளையில் பகுதியில் வசிப்பவர் ரம்யா (வயது 31). இவரது மகன் அபிமன்யு(1). வாளையில் பகுதி வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளதால், அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் அடிக்கடி புகுந்து

சாலை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு: மேற்கு வங்க முழு அடைப்பில் வன்முறை - 200 பேர் கைது

Posted: 30 Apr 2015 08:06 PM PDT

மத்திய அரசின் சாலை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மோட்டார் வாகன சட்டம் 1988 மாற்றியமைக்கப்பட்டு, சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா-2015 என்ற பெயரில் புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மோட்டார் வாகன தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை: சி.பி.ஐ. விசாரணை கிடையாது - மத்திய அரசு அறிவிப்பு

Posted: 30 Apr 2015 07:31 PM PDT

டெல்லி மேல்-சபையில் நேற்று தமிழக எம்.பி.க்கள் ஆந்திராவில் தமிழகத்தை சேர்ந்த செம்மரம் வெட்டும் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். அதற்கு பதில் அளித்து உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

பயணிக்கு திடீர் உடல்நலக் குறைவு: விமானத்தில் மருத்துவம் பார்த்த டாக்டர் அன்புமணி ராமதாஸ்

Posted: 30 Apr 2015 07:21 PM PDT

டெல்லியில் இருந்து சென்னை செல்லும் விமானம் புறப்படும் நேரத்தில் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்ட ஒரு பயணிக்கு அன்புமணி ராமதாஸ் மருத்துவம் பார்த்தார். டெல்லியில் இருந்து சென்னைக்கு நேற்று பகல் 12.25 மணிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று கிளம்புவதற்கு தயாராக

பேஸ்புக்கை பயன்படுத்தி ஆபாச செய்கைகள் செய்தவர்களை போலீசில் மாட்டவைத்த தெலுங்கு நடிகை

Posted: 30 Apr 2015 03:52 PM PDT

சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு நடிகை அஸ்மிதா கர்னானி ஐதராபத்தில் தன்னுடைய காரில் சென்றுகொண்டிருந்த போது, பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் அவரை நோக்கி ஆபாச செய்கைகள் செய்துள்ளனர். மேலும் அவருக்கு தொல்லை தந்ததுடன் அவரது காரை வழிமறிக்கவும் முயன்றுள்ளனர். ஆனால் அஸ்மிதா சாமர்த்தியமாக செயல்பட்டு அந்த இருவரையும், அவர்கள் வந்த வண்டியின் பதிவு எண்களையும் தனது போன் மூலம் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அந்த புகைப்படங்களை தனது

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 3.96-யும் மற்றும் டீசல் ரூ 2.37-யும் விலை உயர்வு

Posted: 30 Apr 2015 01:51 PM PDT

பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.3.96-யாகவும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.2.37-யாகவும் விலையை உயர்த்தியுள்ளன எண்ணெய் நிறுவனங்கள். இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இரண்டு முறை விலை குறைப்பிற்கு பின் மீண்டும் பெட்ரோல், டீசலின் விலை திடீரென அதிகளவு உயர்ந்திருப்பது பொது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதிய விலை உயர்வின்படி, டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.63.16 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு ரூ.49.57 காசுகளாகவும் விற்கப்படும்.

சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு - மத்திய அரசின் புதிய மசோதா சொல்வது என்ன?

Posted: 30 Apr 2015 01:34 PM PDT

நாட்டில் விபத்துகளும், அதன் காரணமாக உயிர் இழப்புகளும் அதிகரித்து இருப்பதால், பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு தயாரித்து உள்ளது. அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * பாதுகாப்பற்ற நிலையில் உள்ள வாகனத்தை ஓட்டினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

மாதம் ஒரு ரூபாய் பிரீமியத்தில் காப்பீடு: பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்

Posted: 30 Apr 2015 10:45 AM PDT

வரும் 9-ந்தேதி சமூக பாதுகாப்பிற்கான காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களை பிரதமர் மோடி கொல்கத்தாவில் துவங்கி வைக்கிறார். சந்தாதாரர்களின் வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாக தானாகவே சந்தா தொகையை (auto-debit facility) செலுத்தும் வகையில் இந்த திட்டங்கள் அறிமுகமாகிறது. கடந்த பிப்ரவரி 28-ந்தேதி மத்திய பட்ஜெட்டில் இந்த காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்திருந்தார்.

சத்தீஸ்கரில் திருமண கோஷ்டியினர் சென்ற வேன் விபத்தில் சிக்கியது: 11 பெண்கள் பலி

Posted: 30 Apr 2015 07:05 AM PDT

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே இன்று நடந்த சாலை விபத்தில் 11 பெண்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராய்ப்பூர் மாவட்டம் கோடாவில் இருந்து தாண்டிலோக்ராவுக்கு திருமண கோஷ்டியினர் ஒரு வேனில் சென்றுகொண்டிருந்தனர். ஆராமுர்கசா கிராமம் அருகே சென்றபோது இரும்பு கம்பிகள் ஏற்ற வந்த மினி லாரியுடன் மோதி

2015ம் ஆண்டுக்கான நிதி மசோதா மக்களவையில் நிறைவேறியது

Posted: 30 Apr 2015 06:18 AM PDT

மக்களவையில் இன்று 2015ம் ஆண்டுக்கான நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது. நடப்பு நிதியாண்டுக்கான செலவினங்களை எதிர்கொள்ள மத்தியத் தொகுப்பு நிதியிலிருந்து ரூ.62.03 லட்சம் கோடியை மத்திய அரசு பெறுவதற்கு அனுமதி அளிக்க வகை செய்யும் நிதி ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசின் வரித்

அரசியல் தடை நீங்கினால் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும்: அருண் ஜெட்லி

Posted: 30 Apr 2015 05:43 AM PDT

அரசியல் தடை நீங்கினால் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசினார். மக்களவையில் இன்று நிதி மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசியதாவது:- நாடு 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவது என்பது சவாலானது.

மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது: பிரதமரை சந்தித்த பின் சித்தராமையா பேட்டி

Posted: 30 Apr 2015 05:11 AM PDT

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் கர்நாடக அனைத்துக்கட்சி தலைவர்கள் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கையை முன் வைத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட பிரதமர், இதுபற்றி ஆய்வு செய்வதாக கூறியுள்ளார்.

திருமண விழாவில் காதலியை கைப்பிடிக்க பெண் வேடமணிந்து வந்த காதலன்: போலீசில் பிடித்துகொடுத்த பெண்கள்

Posted: 30 Apr 2015 03:41 AM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பேரேலி மாவட்டத்தில் உள்ள பலியா கிராமத்தை சேர்ந்த 19 வயது சந்தோஷும், பதான் மாவட்டத்தின் அல்லாஹ்பூர் சமரி கிராமத்தை சேர்ந்த 18 வயது பெண்ணும் காதலர்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது தாபா(உணவகம்) ஒன்றில் உணவு அருந்த சென்ற இருவரையும் போலீசார்

தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்: தேசிய பழங்குடியினர் ஆணையம் பரிந்துரை

Posted: 30 Apr 2015 02:46 AM PDT

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி மலைப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய பழங்குடியினர் தேசிய ஆணையம், தனது அறிக்கையில் ஆந்திர சிறப்பு அதிரடிப்படையின் இந்த என்கவுண்டர் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வன்முறையை கண்டித்து மேற்கு வங்கத்தில் இன்று பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 30 Apr 2015 02:22 AM PDT

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வன்முறை ஏற்பட்டதை கண்டித்து இன்று அங்கு பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™