மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சபரிமலையில் ரூ.31 கோடி செலவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி
- சென்னையில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ: பயணிகள் அலறல்
- கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே பெய்ய வாய்ப்பு
- சீத்தாராம் யெச்சூரியா? ராமச்சந்திரன் பிள்ளையா? யார் கட்சிக்கு பொதுச்செயலாளர்: இன்று முடிவு செய்கிறது மா.கம்யூ கட்சி
- முதல்வர் பட்னவிஸ்சின் சொந்த பூமியில் 3 மாதத்தில் 319 விவசாயிகள் தற்கொலை: என்ன செய்கிறது மகாராஷ்டிரா அரசு?
- கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் பயங்கர வன்முறை
- டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக இன்று விவசாயிகள் பேரணி: ராகுல் பங்கேற்கிறார்
- மத்திய மந்திரியின் சகோதரி வீட்டில் கொள்ளை: தங்கம்-வெள்ளி பொருட்கள் திருட்டு
- காவிரியில் அணை கட்டும் முடிவை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை: கன்னட அமைப்பினரிடம் சித்தராமையா உறுதி
- மந்திரிகளுக்கான போலீஸ் அணிவகுப்பு மரியாதை முறை ஒழிக்கப்படும்: பட்னாவிஸ் அதிரடி முடிவு
- சீனாவில் பெங்களூரு; பிரதமர் மோடியிடம் உதவி கேட்கிறார் சீன அதிபர்
- ரெயில்வே துறைக்கு ஆராய்ச்சி மையம்: விரைவில் வருகிறது
- வெளிநாட்டு பயண தகவல்களை தெரியப்படுத்தும் உத்தரவு மறுபரிசீலனை: மத்திய அரசு
- பீகாரை கலக்கிய நெடுஞ்சாலை கொள்ளையர்கள் சிக்கினர்: ஆயுதங்கள் பறிமுதல்
- இந்து மத விழாவில் பணத்தை வாரி இறைத்த பா.ஜ.க பெண் எம்.பி - வீடியோ பரவியதால் சர்ச்சை
- காஷ்மீர் போராட்டத்தில் வாலிபர் சுட்டுக் கொலை: 2 போலீஸ்காரர்கள் கைது
- ஏமனில் இருந்து 337 வங்காளதேசத்தினரை பாதுகாப்பாக அழைத்து வந்த இந்தியாவுக்கு வங்காளதேச தூதரகம் நன்றி
- வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அக்பருதீனுக்கு பதவி உயர்வு: புதிய செய்தி தொடர்பாளராக விகாஸ் ஸ்வருப் நியமனம்
- காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீச்சில் விகாரமாகி, பார்வையிழந்த இளம்பெண்ணுக்கு வாழ்வளித்த வாலிபர்
- விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு தர்ணா போராட்டத்திற்கு தயாராகும் வருண் காந்தி
| சபரிமலையில் ரூ.31 கோடி செலவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி Posted: 18 Apr 2015 10:59 PM PDT கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகள் மிகவும் சிறப்பு பெற்றது. இதில் பங்கேற்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். நாளுக்கு நாள் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் பக்தர்கள் வசதிக்காக தேவசம் போர்டு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. |
| சென்னையில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ: பயணிகள் அலறல் Posted: 18 Apr 2015 10:51 PM PDT சென்னையில் இருந்து அவுரா செல்லும் கோரமண்டல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். ரெயில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் நிடதசெலு ரெயில் நிலையத்தை நெருங்கிய போது ஒரு பெட்டியில் இருந்து புகை கிளம்பியது. இதனை கண்ட பயணிகள் அலறினார்கள். உடனே சிலர் அபாய சங்கிலியை |
| கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே பெய்ய வாய்ப்பு Posted: 18 Apr 2015 10:21 PM PDT கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1–ந்தேதி தொடங்கும். இந்த வருடம் தென்மேற்கு பருவமழை 5 நாட்களுக்கு முன்பே கேரளாவில் தொடங்கும் என்று தனியார் வானிலை ஆராய்ச்சி நிறுவனமான 'ஸ்கைமெட்' அறிவித்துள்ளது. வருகிற மே மாதம் 27–ந் தேதியே தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்றும், கடந்த வருடத்தை விட இந்த வருடம் கூடுதலாக கேரளாவில் மழை பெய்யும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. |
| Posted: 18 Apr 2015 09:34 PM PDT விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு இன்று நிறைவு பெற உள்ள நிலையில் தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள பிரகாத் காரத்துக்கு பதிலாக புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இப்பதவியை கைப்பற்றுவதில் சீத்தாராம் யெச்சூரிக்கும், ராமச்சந்திரன் பிள்ளைக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. |
| Posted: 18 Apr 2015 09:25 PM PDT மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலை தொடர்கதையாகி வருவது நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் அங்கு 601 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 7 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அம்மாநிலத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டில் |
| கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் பயங்கர வன்முறை Posted: 18 Apr 2015 08:36 PM PDT கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில் ஏராளமான வன்முறைகளும், முறைகேடுகளும் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. மாற்றுக்கட்சி வாக்காளர்களை பயமுறுத்துவதற்காக, ஆறு இடங்களில் குண்டுகள் வீசப்பட்டன. குண்டு வீச்சில், 3 காங்கிரஸ் தொண்டர்கள் காயம் அடைந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவரை நோக்கி துப்பாக்கி சூடு நடந்தது. அதில் ஒரு போலீஸ் அதிகாரி காயம் அடைந்தார். |
| Posted: 18 Apr 2015 08:11 PM PDT காங்கிரஸ் துணை தலைவரான ராகுல் காந்தி, அரசியல் பணிகளில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு 60 நாள்களுக்கு பின் இன்று முதல் முறையாக மீண்டும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். டெல்லியில் இன்று ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி நடத்தும் விவசாயிகள் பேரணியில் கலந்துகொள்ளும் ராகுல், மத்திய அரசின் நிலம் |
| மத்திய மந்திரியின் சகோதரி வீட்டில் கொள்ளை: தங்கம்-வெள்ளி பொருட்கள் திருட்டு Posted: 18 Apr 2015 07:29 PM PDT மத்திய மந்திரி நிதின் கட்காரியின் சகோதரி மனிஷா. இவர் தனது கணவர் கிஷோர் தோதாடேவுடன் மாராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள பாண்டே லே அவுட் பகுதியில் வசித்துவருகிறார். வேலை காரணமாக கொல்கத்தா சென்றும் திரும்பும் கணவர் கிஷோரை |
| காவிரியில் அணை கட்டும் முடிவை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை: கன்னட அமைப்பினரிடம் சித்தராமையா உறுதி Posted: 18 Apr 2015 07:14 PM PDT காவிரியில் அணை கட்டும் முடிவை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று கன்னட அமைப்பினரிடம் முதல்-மந்திரி சித்தராமையா உறுதி அளித்தார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழகத்தை கண்டித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு கர்நாடகத்தில் |
| மந்திரிகளுக்கான போலீஸ் அணிவகுப்பு மரியாதை முறை ஒழிக்கப்படும்: பட்னாவிஸ் அதிரடி முடிவு Posted: 18 Apr 2015 03:35 PM PDT மாவட்ட அளவிலான பயணத்தின்போது மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் போலீஸ் அணிவகுப்பு மரியாதை முறை ஒழிக்கப்படும் என்று மராட்டிய அரசு அறிவித்து உள்ளது. போலீஸ் அணிவகுப்பு மரியாதை இந்தியா பிரிட்டிஷ் ஆளுகைக்கு |
| சீனாவில் பெங்களூரு; பிரதமர் மோடியிடம் உதவி கேட்கிறார் சீன அதிபர் Posted: 18 Apr 2015 01:42 PM PDT சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நகரம் சியான். இந்த நகரத்தை இந்தியாவின் ஐ.டி தலைநகரமாக கருதப்படும் பெங்களூரு சிட்டி மாடலில் புதிய சாப்ட்வேர் சிட்டியாக மாற்ற சீன அரசு முயற்சி செய்து வருகிறது. |
| ரெயில்வே துறைக்கு ஆராய்ச்சி மையம்: விரைவில் வருகிறது Posted: 18 Apr 2015 01:07 PM PDT மத்திய ரெயில்வே துறை மற்றும் மும்பை பல்கலைக்கழகத்திற்கு இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதில், ரெயில்வே துறைக்கு புதிய ஆராய்ச்சி மையம் ஒன்றை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை ராஜ்பவனில் மகாராஷ்டிர கவர்னர் |
| வெளிநாட்டு பயண தகவல்களை தெரியப்படுத்தும் உத்தரவு மறுபரிசீலனை: மத்திய அரசு Posted: 18 Apr 2015 12:56 PM PDT வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்து இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை பதுக்கி வைக்கும் இந்தியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் கருப்பு பண மசோதா ஒன்றையும் மத்திய அரசு தாக்கல் செய்தது. |
| பீகாரை கலக்கிய நெடுஞ்சாலை கொள்ளையர்கள் சிக்கினர்: ஆயுதங்கள் பறிமுதல் Posted: 18 Apr 2015 12:41 PM PDT பீகார் மாநிலத்தை அச்சுறுத்தி நெடுஞ்சாலை வாகன ஓட்டிகளைத் தாக்கி கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 9 பேரை போஜ்பூர் மாவட்ட போலீசார் நேற்று கைது செய்தனர். நெடுஞ்சாலைக் கொள்ளையர்களுக்கு நீண்ட நாட்களாக வலை வீசி வந்த போஜ்பூர் போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று NH-30 |
| இந்து மத விழாவில் பணத்தை வாரி இறைத்த பா.ஜ.க பெண் எம்.பி - வீடியோ பரவியதால் சர்ச்சை Posted: 18 Apr 2015 10:37 AM PDT குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் நடந்த மத-சமூக விழா ஒன்றில் கலந்து கொண்ட பா.ஜ.க பெண் எம்.பி ஒருவர் பணத்தை வாரி இறைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. |
| காஷ்மீர் போராட்டத்தில் வாலிபர் சுட்டுக் கொலை: 2 போலீஸ்காரர்கள் கைது Posted: 18 Apr 2015 08:57 AM PDT காஷ்மீரில் இன்று நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலியானது தொடர்பாக, 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்தற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் இன்று முழுஅடைப்பு போராட்டத்திற்கு பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி அழைப்பு விடுத்திருந்தார். இதனால், இன்று மாநிலம் முழுவதும் விரிவான |
| ஏமனில் இருந்து 337 வங்காளதேசத்தினரை பாதுகாப்பாக அழைத்து வந்த இந்தியாவுக்கு வங்காளதேச தூதரகம் நன்றி Posted: 18 Apr 2015 08:50 AM PDT உச்சகட்ட உள்நாட்டுப் போரால் அமைதியின்றி காணப்படும் ஏமனில் இருந்து தங்கள் நாட்டை சேர்ந்த 337 பேரை அழைத்துவந்த இந்திய அரசுக்கு வங்காளதேச தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் பல நகரங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அந்நாட்டு அதிபர் மன்சூர் ஹாதி சவுதி அரேபியாவுக்கு தப்பி சென்றார். மேலும் தங்கள் நாட்டுக்கு உதவுமாறும் அவர் சவுதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் |
| Posted: 18 Apr 2015 08:25 AM PDT இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளராக சிறப்பாக பணியாற்றிய அக்பருதீன் பதவி உயர்வு பெற்று வெளியுறவு துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அக்பருதீன் இதுவரை வகித்துவந்த பொறுப்பில் ஸ்லம்டாக் மில்லியனைர் படத்தின் கதையை எழுதிய விகாஸ் ஸ்வருப் நியமிக்கப்பட்டுள்ளார். |
| காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீச்சில் விகாரமாகி, பார்வையிழந்த இளம்பெண்ணுக்கு வாழ்வளித்த வாலிபர் Posted: 18 Apr 2015 07:31 AM PDT ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாட் நகரை சேர்ந்தவர் சோனாலி முகர்ஜி. பூத்துக் குலுங்கும் பருவத்தில்17 வயது இளம்பெண்ணாக இவர் இருந்தபோது கடந்த 2003-ம் ஆண்டு இவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 3 வாலிபர்கள் சோனாலியின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு |
| விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு தர்ணா போராட்டத்திற்கு தயாராகும் வருண் காந்தி Posted: 18 Apr 2015 06:18 AM PDT உத்தர பிரதேசத்தில் பருவமற்ற காலத்தில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இக்கோரிக்கையை முன்வைத்து பா.ஜனதா தலைவரும் மக்களவை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |