Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் வழக்கு: ராமலிங்க ராஜு உள்பட 10 பேரும் குற்றவாளிகள் - சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 08 Apr 2015 11:05 PM PDT

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வரவு செலவு கணக்கில், பல ஆண்டுகளாக மோசடி செய்து, லாபத்தை அதிகமாக காட்டி ஊழலில் ஈடுபட்டதாக அதன் தலைவர் பி. ராமலிங்க ராஜூ மீது கடந்த 2009-ம் ஆண்டு புகார் எழுந்தது. நாட்டின் மிகப்பெரிய கணக்கு மோசடி என கூறப்பட்ட இந்த வழக்கில்

செம்மரக்கடத்தல் வேட்டையில் ராசிபுரம் கடத்தல்காரர் உள்பட 14 கூலி ஆட்கள் கைது: ஆந்திர போலீசார் நடவடிக்கை

Posted: 08 Apr 2015 10:56 PM PDT

திருப்பதி மலையில் செம்மரக் கட்டை கடத்தல்காரர்கள் மீது ஆந்திர வனத்துறையில் நடத்திய தாக்குதல் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் தப்பிச் சென்றதாக போலீசார் கருதினார்கள். அவர்களை பிடிக்க சித்தூர் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கொல்லப்பட்ட 20 தமிழர்களும் மிக அருகில் நின்று சுடப்பட்டுள்ளனர்: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

Posted: 08 Apr 2015 10:51 PM PDT

ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக நேற்று முன்தினம் அதிகாலை 20 தமிழர்கள் ஆந்திர மாநில போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். செம்மர கடத்தல் கும்பல் தங்களை மிக கடுமையாக தாக்கியதால் உயிரை தற்காத்துக் கொள்ள துப்பாக்கி சூடு நடத்த வேண்டியதாகி விட்டது என்று ஆந்திர மாநில அரசும், ஆந்திர போலீசாரும் விளக்கம் அளித்துள்ளனர்.

13–ந்தேதி அம்பேத்கார் பிறந்த நாள் கொண்டாட்டம்: சோனியா ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்

Posted: 08 Apr 2015 10:50 PM PDT

அம்பேத்கார் பிறந்த நாள் ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியவில்லை. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய யாகூப் மேமனின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

Posted: 08 Apr 2015 10:49 PM PDT

மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு தொடர் வெடிகுண்டு தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான யாகூப் மேமனுக்கு மும்பை விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்கா கவர்னர் ஆகிறார்

Posted: 08 Apr 2015 10:48 PM PDT

முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்கா கவர்னராக நியமிக்கப்படுகிறார். மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கவர்னர்களை மாற்ற முடிவு செய்து அவர்களை பதவி விலக உத்தரவிட்டது. ஆனால் கவர்னர்கள் மறுத்துவிட்டதால் அவர்களை மத்திய அரசு இட மாற்றம் செய்தும், ஊழல் புகார்கள் மற்றும் தனிப்பட்ட

பி.சி. ஜார்ஜின் கடிதத்தை பார்த்து அதிர்ச்சியானேன்: முதல்–மந்திரி உம்மன்சாண்டி

Posted: 08 Apr 2015 10:47 PM PDT

மந்திரி மாணி, அவரது மகன் ஜோஸ் கே. மாணி ஆகியோர் குறித்து பி.சி. ஜார்ஜ் எழுதிய கடிதம் பற்றி முதல்– மந்திரி உம்மன்சாண்டியிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:– பி.சி. ஜார்ஜ் எழுதிய கடிதத்தை படித்து பார்த்ததும், அதிர்ச்சியாக இருந்தது. அதில் இருந்த விவரங்களை என்னால் நம்ப இயல வில்லை. இப்படியும்

மந்திரி மாணியின் மகனுக்கு சரிதா நாயருடன் செக்ஸ் தொடர்பு: பி.சி. ஜார்ஜ் கடிதம்

Posted: 08 Apr 2015 10:47 PM PDT

கேரளாவில் மது பார் ஊழல் வழக்கில் புகார் கூறப்பட்ட நிதி மந்திரி மாணி மீது அவரது கட்சி துணைத்தலைவரும், அரசு கொறடாவாக இருந்த பி.சி. ஜார்ஜும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். ஊழலில் நிதி மந்திரிக்கு தொடர்பு இருக்கும் என்று பகிரங்கமாக

இந்து கோவில் வரைபடங்களுடன் ஆந்திராவில் சிமி தீவிரவாதி கைது

Posted: 08 Apr 2015 10:41 PM PDT

தெலுங்கானா மாநிலம் வரங்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 5 சிமி தீவிரவாதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் ஐதராபாத் அழைத்துச் சென்றனர். அலெர்–ஜான்கான் ஆகிய இடங்களுக்கு இடையே போலீசாரை தாக்கி 5 பேரும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் 5 பேரையும் சுட்டுக் கொன்றனர்.

கேரளாவில் ரெயிலில் அடிபட்டு பா.ஜனதா பெண் நிர்வாகி பலியானதை செல்போனில் படம் எடுத்த வாலிபர்கள்

Posted: 08 Apr 2015 10:40 PM PDT

கோட்டயம் நகராட்சியின் 19–வது வார்டு பா.ஜனதா கட்சியின் நிர்வாகி லைலா தங்கச்சன் (வயது 47). இவர் நேற்று தனது வீடு அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது திடீரென அந்த வழியாக கோட்டயத்தில்

செம்மரக்காடுகளில் கடத்தலை தடுக்கும் நடவடிக்கை மேலும் கடுமையாக்கப்படும்: ஆந்திர டி.ஜி.பி. சொல்கிறார்

Posted: 08 Apr 2015 10:35 PM PDT

திருப்பதி மலையில் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டை சேர்ந்த 20 பேரை ஆந்திர வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் ஆரம்பமே தவிர முடிவு அல்ல என்று ஆந்திர வனத்துறை மந்திரி கோபாலகிருஷ்ண ரெட்டி கூறினார். செம்மரக்கட்டை கடத்தலை தடுக்கும் நடவடிக்கையை மேலும் கடுமையாக்க ஆந்திர போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இது குறித்து போலீசார் மற்றும்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Posted: 08 Apr 2015 09:50 PM PDT

கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள அப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் அனில்குட்டன்(வயது 29). இவர் திரிபுரா மாநிலத்தில் உள்ள 12–வது பட்டாலியனில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். அனில்குட்டனுக்கும் புதுக்கோடு பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் வருகிற 23–ந் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பியவர் மனித உரிமை கமிஷன் முன் ஆஜராகிறார்: சதித்திட்டம் அம்பலமாகிறது

Posted: 08 Apr 2015 09:32 PM PDT

ஆந்திராவில் செம்மரம் வெட்டச்சென்ற அப்பாவி தமிழர்கள் 20 பேரை அம்மாநில போலீஸ் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொன்றது. மரம் வெட்ட சென்ற தமிழர்கள் போலீசாரை தாக்கியதாகவும், இதனையடுத்து தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் ஆந்திர காவல்துறை தெரிவித்தது.

நேரு 125வது பிறந்த நாளை முன்னிட்டு புதிய 5 ரூபாய் நாணயம்: ரிசர்வ் வங்கி

Posted: 08 Apr 2015 09:30 PM PDT

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125–வது பிறந்த தினம் நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி புதிய 5 ரூபாய் நாணயம் வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ம.பி.யில் மணல் மாபியாவால் கொல்லப்பட்ட போலீசின் தம்பி பிக் பாக்கெட் பேர்வழியுடன் ஏற்பட்ட மோதலில் கால்களை இழந்தார்

Posted: 08 Apr 2015 09:08 PM PDT

மத்தியப்பிரதேசத்தில் மணல் மாபியாவால் கொல்லப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் தர்மேந்திர சிங் சவுகானின் தம்பியான சுதீர் சிங் சவுகான், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். மணல் லாரியை ஏற்றி தனது சகோதரர் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும் தனது சொந்த ஊரான குவாலியருக்கு புறப்பட்டார்.

தமிழர்கள் சுட்டுக்கொலை: தகவல்களை நாளைக்குள் மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும்- ஐதராபாத் ஐகோர்ட்டு

Posted: 08 Apr 2015 09:07 PM PDT

திருப்பதியில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றிய தகவல்களை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு ஐதராபாத் ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும்: இடதுசாரிகள் வலியுறுத்தல்

Posted: 08 Apr 2015 09:03 PM PDT

ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் படுகொலை சம்பவம் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன.

நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேற்றப்பட்டால் நிலமற்ற 30 கோடி மக்களுக்கு வேலை கிடைக்கும்: அருண் ஜெட்லி

Posted: 08 Apr 2015 08:03 PM PDT

நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்த மசோதாவை கடந்த சில மாதங்களுக்கு முன் அவசர சட்டமாக கொண்டு வந்த மத்திய அரசு, பின்னர் பாராளுமன்றத்தில் அதை நிறைவேற்றியது. எனினும் மேல்-சபையில் மத்திய அரசுக்கு போதிய பலம் இல்லாததால், அங்கு நிறைவேற்ற முடியவில்லை.

இமாச்சல பிரதேசத்தில் மகாபாரத காலத்திய கோவிலில் தீ விபத்து

Posted: 08 Apr 2015 07:49 PM PDT

இமாச்சலபிரதேச மாநிலத்தில், சிம்லாவில் இருந்து 90 கி.மீ. தொலைவில், சாய்ஞ்ச் பள்ளத்தாக்கில், ஷங்கார் என்ற கிராமத்தில் ஷாங்சல் மகாதேவ் கோவில் உள்ளது. இந்தக் கோவில் மிகவும் பழமையானது. இது மகாபாரத காலத்தில் பாண்டவர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை ஜூலை 15-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

Posted: 08 Apr 2015 07:39 PM PDT

ஒடிசா மாநிலத்தின் தலபிரா-2 நிலக்கரி சுரங்கத்தை 2005-ம் ஆண்டு ஒதுக்கீடு செய்தது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. கடந்த டிசம்பர் மாதம் இந்த வழக்கை கைவிடுவதற்கான அறிக்கையை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தது. எனினும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி பரத் பராசர் இதை ஏற்க மறுத்துவிட்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™