Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திரிணாமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. மம்தா அரசு மீது ஊழல் வழக்கு தொடர்ந்தார்

Posted: 22 Apr 2015 11:25 PM PDT

மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டம் சூரி தொகுதி எம்.எல்.ஏ. ஸ்வாபன் காந்தி கோஷ். இவர் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். இவர் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளரும், டெல்லி மேல்–சபை எம்.பி.யுமான முகுல்ராயின் நெருங்கிய ஆதரவாளர் ஆவார். சாரதா சிட்பண்ட்

விவசாயி தற்கொலை: கெஜ்ரிவால் வீட்டு முன்பு இளைஞர் காங்கிரசார் போராட்டம்- ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை

Posted: 22 Apr 2015 11:01 PM PDT

டெல்லியில் ஆம் ஆத்மி போராட்டத்தின் போது தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் மரணம் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கெஜிரிவால் தான் காரணம் என கூறி அவரது வீட்டு முன்பு இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்திவருகிறார்கள். மேலும் அவரின் உருவப்படத்தையும் தீயிட்டு எரித்தும் அவருக்கு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பி வருகிறார்கள்.

டெல்லியில் விவசாயி தற்கொலை: மரத்தில் ஏறி நாடகமாடிய போது உயிரிழந்தாரா?- முதல் கட்ட விசாரணையில் தகவல்

Posted: 22 Apr 2015 10:38 PM PDT

டெல்லியில் நேற்று ஆம்ஆத்மி கட்சி சார்பில் நிலம் கையகப்படுத்தும் அவசரச்சட்டத்துக்கு எதிராக பேரணி நடத்தப்பட்ட போது ராஜஸ்தானை சேர்ந்த விவசாயி கஜேந்திரசிங் என்பவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். ஆயிரக்கணக்கானவர்கள் கண் எதிரில் இந்த பரிதாப சம்பவம் நடந்தது. தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் ஒரு துண்டு கடிதத்தை வீசி எறிந்தார்.

திருவனந்தபுரம் அருகே 2 இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து கற்பழிப்பு: வாலிபர் கைது

Posted: 22 Apr 2015 09:46 PM PDT

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் வினோத் (வயது 36). குடும்பத்தகராறு காரணமாக இவரது மனைவி குழந்தையுடன் இவரை பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 23 வயது பெண்ணும், அவரது

கேரளாவில் மழை நீடிப்பு: வெள்ளத்தில் சிக்கி ஆசிரியர் பலி

Posted: 22 Apr 2015 09:45 PM PDT

கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை நேற்றும் நீடித்தது. திருவனந்தபுரம், கண்ணூர், காசர்கோடு, கொல்லம், கொட்டாரக்கரா, பத்தனம் திட்டா போன்ற இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகரான திருவனந்தபுரத்தில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 16 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதனால் திருவனந்தபுரத்தில் சாலைகள் ஆறுகள்

செம்மரக்கட்டை கடத்தலை தடுக்க வனச்சட்டத்தை கடுமையாக்க ஆந்திர அரசு முடிவு

Posted: 22 Apr 2015 08:39 PM PDT

ஆந்திர மாநிலத்தில் சமீபகாலமாக செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவது அதிகரித்து உள்ளது. இதனை தடுப்பதற்காகவும், வன வளங்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுப்பதற்காகவும் வனச்சட்டத்தை கடுமையானதாக மாற்றும் வகையில் திருத்தம் செய்ய ஆந்திர அரசு முடிவு செய்தது.

10 ஆண்டுகளாக இருட்டறையில் அடைந்து கிடந்த சகோதரிகள்: தன்னார்வ தொண்டு அமைப்பினர் மீட்டனர்

Posted: 22 Apr 2015 08:37 PM PDT

உடுப்பி அருகே கடபாடி பித்ரோடியா காலனியில் பழைய ஓட்டு வீடு ஒன்று உள்ளது. அந்த வீடு எப்போது இடிந்து விழுமோ என்று அச்சப்படும் வகையில் பாழடைந்து காணப்படுகிறது. அங்கு வெளியுலக தொடர்பே இன்றி சகோதரிகள் 2 பேர் அடைந்து கிடப்பதாக தனியார் தொண்டு அமைப்பு

தனியார் தொலைக்காட்சி செய்தி எதிரொலி: பச்சிளங் குழந்தைகளை விற்ற ஆந்திரா சொர்ணக்கா கைது

Posted: 22 Apr 2015 08:33 PM PDT

தெலுங்கானா மாநிலத்தில் பச்சிளங் குழந்தைகள் விற்கப்படுவது குறித்து ஆதாரப்பூர்வத்துடன் தனியார் தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியது. இதை தொடர்ந்து அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், குழந்தைகளை கடத்தி விற்ற காம்லி என்ற பெயர் கொண்ட கேடி சொர்ணக்காவை ஆந்திர போலீஸ் கைது செய்தது.

இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் இளம் சிறார்களை விசாரிக்கலாம்: சட்ட திருத்தத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Posted: 22 Apr 2015 08:20 PM PDT

கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களை இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் விசாரிக்கலாம் என்ற சட்ட திருத்தத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. குற்றச் செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள், இளம் சிறார்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள், வயது

டெல்லியில் விவசாயி தற்கொலை பற்றி விசாரணை நடத்த ராஜ்நாத்சிங் உத்தரவு

Posted: 22 Apr 2015 08:05 PM PDT

ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், டெல்லி நகர போலீஸ் கமிஷனர் பஸ்சியை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அவர் உத்தரவிட்டார்.

கிணற்றில் பாய்ந்த காரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள்: போலீஸ் விசாரணை

Posted: 22 Apr 2015 08:01 PM PDT

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த ஏர்ப்பேடு அருகில் உள்ள விவசாய கிணற்றின் வழியாக நேற்று முன்தினம் பொதுமக்கள் சென்றனர். அப்போது கிணற்றில் கார் ஒன்று தண்ணீரில் பாதி அளவு மூழ்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

டெல்லி: விவசாயி தற்கொலைக்கு மோடி இரங்கல்

Posted: 22 Apr 2015 07:56 PM PDT

ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் எழுதி இருப்பதாவது:- கஜேந்திர சிங்கின் மரணம், நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி விட்டது. நான் பெரிதும் நொறுங்கிப் போய்விட்டேன். அவருடைய குடும்பத்துக்கு இரங்கலை

நீதிபதிகளை நியமிக்கும் புதிய முறை: மத்திய-மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

Posted: 22 Apr 2015 07:47 PM PDT

நீதிபதிகளை நியமிக்கும் புதிய முறை குறித்து பதிலளிக்குமாறு கோரி மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்க வகை செய்யும் அரசியல் சட்டதிருத்தத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் சங்கம் சார்பாக மூத்த

டெல்லியில் பாய்லர் வெடித்ததால் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: குழந்தை உள்பட 2 பேர் சாவு

Posted: 22 Apr 2015 07:40 PM PDT

டெல்லியில் பாய்லர் வெடித்ததால் 3 மாடி கட்டிடம் நேற்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் ஒரு குழந்தை உள்பட 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 11 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள மோதி நகரில் சுதர்சன் பூங்கா பகுதியில் 3 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில்

பாராளுமன்ற பாதுகாப்பில் குளறுபடி: ஆய்வில் கண்டுபிடிப்பு

Posted: 22 Apr 2015 04:41 PM PDT

பாராளுமன்ற பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி, முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங், மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங், ராஜஸ்தான் முன்னாள் டி.ஜி.பி. ஹரிஷ் சந்திரமீனா ஆகிய 3 எம்.பி.க்கள் அடங்கிய பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டது. அக்குழு ஆய்வு நடத்தி, சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

நடப்பு கூட்டத்தொடரிலேயே சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற்றப்படும்: அருண் ஜெட்லி

Posted: 22 Apr 2015 03:19 PM PDT

மத்திய, மாநில அரசுகள் ஏராளமான மறைமுக வரிகளை வசூலித்து வருகின்றன. இவை எல்லாவற்றுக்கும் மாற்றாக 'சரக்கு மற்றும் சேவை வரி' என்ற ஒரே வரியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், மத்திய அரசின் உற்பத்தி வரி, மாநில அரசின் மதிப்பு கூட்டு

15 வண்ண மயில்களின் உயிரைப் பறித்த விஷப் பூச்சிக்கொல்லி மருந்து

Posted: 22 Apr 2015 02:39 PM PDT

தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் விஷத்தன்மையுள்ள பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட பயிர்களைக் கொத்தித் தின்ற 15 வண்ண மயில்கள் துடிதுடித்து பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய் அன்று வாரங்கல்லின் கர்ஷகாநகர் காட்டுப் பகுதியில்

கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்ன சலூன் கடைக்காரரை சுட்டுக் கொன்ற வாடிக்கையாளர்

Posted: 22 Apr 2015 01:39 PM PDT

தன்னை சிறிது நேரம் காத்திருக்கச் சொன்ன சலூன் கடைக்காரரை வாடிக்கையாளர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கொலை செய்யப்பட்ட சலூன் கடைக்காரரின் குடும்பத்தினர் போலீசில் அளித்துள்ள புகாரின் படி, தென்-கிழக்கு

20 தமிழர்கள் சுட்டுக்கொலை: தேசிய மனித உரிமை கமிஷன் விசாரணை இன்று தொடங்குகிறது

Posted: 22 Apr 2015 01:05 PM PDT

திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த 7-ந் தேதி 20 தமிழர்கள், ஆந்திர சிறப்பு அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை தேசிய மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. சம்பவம் குறித்து ஆந்திர அரசிடம் ஏற்கனவே விளக்கம் கேட்டுள்ளது.

பயிர்சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மனநல சிகிச்சை: ஆக்ரா மருத்துவமனையில் சிறப்பு வார்டு

Posted: 22 Apr 2015 12:36 PM PDT

பயிர்கள் சேதமடைந்த அதிர்ச்சியினால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ள நிலையில், 'ஆக்ரா மனநல மற்றும் சுகாதார மருத்துவமனை நிறுவனம்' சிறப்பு வார்டு ஒன்றை அமைத்து மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணத்தால்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™