மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சித்தூர் கூடுதல் கலெக்டர் அதிரடி சஸ்பெண்டு: சந்திரபாபுநாயுடு நடவடிக்கை
- பார் உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கியதாக புகார்: கேரள மந்திரி பாபு மீதான ஆதாரங்கள் குறித்து ஆய்வு
- செம்மரம் கடத்தல் நடிகை மூலம் பணம் பரிமாற்றம் நடந்தது எப்படி? போலீசார் அதிரடி விசாரணை
- மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் கமிஷனருக்கு கவர்னர் கண்டிப்பு
- சத்ய சாய்பாபா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: பிரதமர் மோடிக்கு உறவினர் கடிதம்
- கேரளாவில் நள்ளிரவு போலீஸ் நிலையத்தை சூறையாடிய கைதி: சப்–இன்ஸ்பெக்டருக்கு அடி–உதை
- மராட்டிய உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.க.வுக்கு கடும் பின்னடைவு
- மேற்கு வங்கத்தில் 6 நகரங்களின் பெயர் மாற்றம்
- விவசாயி தற்கொலை முயற்சிக்கு பிறகும் பேசியதற்கு கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்டார்
- நான்கு கால்கள் நான்கு கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை: விநாயகனின் அவதாரம் என்று பார்க்க குவியும் மக்கள்
- பெங்களூரு அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர்கள் 5 பேர் சாவு
- தலைமறைவு குற்றவாளிக்கு அடைக்கலமா? மத்திய ராணுவ மந்திரி வீட்டை சோதனையிட கோர்ட்டு தடை
- திருமண விழாவில் நடனம் ஆட மறுத்த பெண் சுட்டுக்கொலை
- 5 நாள் துயரம் முடிவுக்கு வந்தது: 25 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட பெண் குழந்தை தாயுடன் சேர்ந்தது
- நீண்ட விடுமுறையை தொடர்ந்து ராகுல் காந்தி ஆன்மிக பயணம்
- டெல்லி: பியூட்டி பார்லரில் அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
- காவிரியின் குறுக்கே அணை கட்டும் பிரச்சினை: பாராளுமன்றத்தில் தமிழக, கர்நாடக எம்.பி.க்கள் மோதல்
- அதிரடி மாற்றம்: அனைத்து படிவங்களிலும் மூன்றாம் பாலினத்தையும் சேர்க்க வங்கிகளுக்கு ரிசர்வ் பேங்க் உத்தரவு
- அண்ணல் அம்பேத்கரின் வீட்டை கையகப்படுத்த லண்டன் சென்ற மகாராஷ்டிர அமைச்சர்கள்
- மும்பையின் பிரபல போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவி பேபி கைது
| சித்தூர் கூடுதல் கலெக்டர் அதிரடி சஸ்பெண்டு: சந்திரபாபுநாயுடு நடவடிக்கை Posted: 23 Apr 2015 11:27 PM PDT ஆந்திர மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதர். இவர் சித்தூர் மாவட்ட இணை கலெக்டராக பணியாற்றிய போது திருப்பதி அருகே உள்ள 100 ஏக்கர் அரசு நிலம் தனியாருக்கு சொந்தம் என உத்தரவு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது இதுபற்றி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த ஆந்திர அரசு உத்தரவிட்டது. விசாரணை அறிக்கையில் ஆவணங்களை முறையாக சரிபார்க்காமல் |
| பார் உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கியதாக புகார்: கேரள மந்திரி பாபு மீதான ஆதாரங்கள் குறித்து ஆய்வு Posted: 23 Apr 2015 11:03 PM PDT கேரளாவில் மூடப்பட்ட மது பார்களை மீண்டும் திறக்க மது பார் உரிமையாளர்கள் முயற்சி செய்தனர். இதற்காக மாநில நிதி மந்திரி மாணி ரூ.5 கோடி லஞ்சம் கேட்டார் எனவும், அதில் ரூ.1 கோடியை அவரிடம் கொடுத்ததாகவும் மது பார் உரிமையாளர் சங்க தலைவர் பிஜூ ரமேஷ் கூறினார். இது தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எதிர்கட்சி தலைவர் |
| செம்மரம் கடத்தல் நடிகை மூலம் பணம் பரிமாற்றம் நடந்தது எப்படி? போலீசார் அதிரடி விசாரணை Posted: 23 Apr 2015 11:03 PM PDT திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரில் தப்பிய கூலித் தொழிலாளர்கள் பலரை போலீசார் கைது செய்தனர். |
| மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் கமிஷனருக்கு கவர்னர் கண்டிப்பு Posted: 23 Apr 2015 11:02 PM PDT மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் பல கட்டங்களாக நடைபெறுகிறது. நாளை அடுத்த கட்ட தேர்தல் நடக்கிறது. நாளைய ஓட்டுப்பதிவின் போது கலவரம் அபாயம் இருப்பதாகவும், இதற்காக வங்காளதேசத்தில் இருந்தும், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் |
| சத்ய சாய்பாபா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணை வேண்டும்: பிரதமர் மோடிக்கு உறவினர் கடிதம் Posted: 23 Apr 2015 10:53 PM PDT ஆந்திர மாநிலம் புட்ட பர்த்தி சத்ய சாய்பாபா கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் 24–ந்தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாகவும் இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது உறவினர் கணபதி ராஜு மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார். |
| கேரளாவில் நள்ளிரவு போலீஸ் நிலையத்தை சூறையாடிய கைதி: சப்–இன்ஸ்பெக்டருக்கு அடி–உதை Posted: 23 Apr 2015 10:46 PM PDT திருவனந்தபுரத்தை அடுத்த காஞ்சிரங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஷிபு (வயது 36). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே போலீசார் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஷிபு விடுதலையாகி வெளியே வந்தார். அதன்பின்பும் அவர் அடி–தடி சம்பவங்களில் ஈடுபடுவதை நிறுத்தவில்லை. |
| மராட்டிய உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.க.வுக்கு கடும் பின்னடைவு Posted: 23 Apr 2015 10:45 PM PDT மராட்டியம் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. நேற்று மாலை வெற்றி நிலவரம் தெரிய வந்தது. இந்த உள்ளாட்சித் |
| மேற்கு வங்கத்தில் 6 நகரங்களின் பெயர் மாற்றம் Posted: 23 Apr 2015 10:41 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 6 நகரங்களின் பெயர்கள் நேற்று மாற்றப்பட்டன. இதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். |
| விவசாயி தற்கொலை முயற்சிக்கு பிறகும் பேசியதற்கு கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்டார் Posted: 23 Apr 2015 10:40 PM PDT டெல்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு ஆம்ஆத்மியே காரணம் என்று போலீசார் கொடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். விவசாயி கஜேந்திரசிங் தூக்கு போட்டுக்கொள்ள ஆம்ஆத்மி தொண்டர்கள் தான் கை தட்டி தூண்டி விட்டனர் என்று போலீசார் கூறுகிறார்கள். இதற்கு ஆம்ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது. |
| Posted: 23 Apr 2015 10:00 PM PDT ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான டும்ரி-இஸ்ரியில் நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் அதிசய ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து சில நாட்களே ஆன நிலையில், பெயர் வைக்கப்பட்டாத இக்குழந்தை விநாயகரின் அவதாரம் என்று கருதும் அம்மாநில மக்கள் பல பகுதிகளில் இருந்தும் குழந்தையை பார்க்க குவிந்து வருகின்றனர். விநாயகரும் நான்கு கைகளுடன் பிறந்தவர் என்பதால் இக்குழந்தையும் விநாயகரின் அவதாரம் |
| பெங்களூரு அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர்கள் 5 பேர் சாவு Posted: 23 Apr 2015 08:34 PM PDT பெங்களூரு புறநகர் சென்னஹள்ளியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் நேபாளத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 20) மற்றும் கே.பி.பட்டேல் (19) ஆகியோர் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். கல்லூரி விடுதியில் அவர்கள் தங்கியிருந்தனர். அதே கல்லூரியில் பெங்களூருவை சேர்ந்த அருண், ஹரீஷ், நந்தகுமார் ஆகியோரும் 2-ம் |
| தலைமறைவு குற்றவாளிக்கு அடைக்கலமா? மத்திய ராணுவ மந்திரி வீட்டை சோதனையிட கோர்ட்டு தடை Posted: 23 Apr 2015 08:26 PM PDT கோவா மாநிலத்தில் உள்ளாட்சித்துறை மந்திரியாக இருந்தவர் பிரான்சிஸ்கோ மிக்கி பச்சேகோ. கோவா விகாஸ் கட்சியின் தலைவர். பா.ஜனதா ஆட்சி செய்யும் கோவாவில் கூட்டணி கட்சியாக உள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு மின்வாரிய என்ஜினீயரை பிரான்சிஸ்கோ மிக்கி பச்சேகோ தாக்கியதாக புகார் எழுந்தது. |
| திருமண விழாவில் நடனம் ஆட மறுத்த பெண் சுட்டுக்கொலை Posted: 23 Apr 2015 07:13 PM PDT மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெண் நடனக்கலைஞர் பியூ (வயது 23). திருமண விழா போன்றவற்றின் போது நடைபெறும் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடுவார். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் நடைபெற்ற |
| 5 நாள் துயரம் முடிவுக்கு வந்தது: 25 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட பெண் குழந்தை தாயுடன் சேர்ந்தது Posted: 23 Apr 2015 05:05 PM PDT 25 ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்ட கணவன் பச்சிளம் குழந்தையை விற்று விட்டதால், தன் குழந்தையைக் காணாமல் 5 நாட்களாக அழுது கொண்டே இருந்த, 'சல்மா பேகம்' என்ற தாயின் கண்ணீர் நேற்றிரவோடு முடிவுக்கு வந்துள்ளது. |
| நீண்ட விடுமுறையை தொடர்ந்து ராகுல் காந்தி ஆன்மிக பயணம் Posted: 23 Apr 2015 03:23 PM PDT கடந்த பாராளுமன்றத்தேர்தல் மற்றும் அதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை துணைத்தலைவரான ராகுல்காந்திக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதற்கு சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். |
| டெல்லி: பியூட்டி பார்லரில் அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது Posted: 23 Apr 2015 02:22 PM PDT டெல்லியில் பியூட்டி பார்லரில் வைத்து அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். வர்த்தக விஷயமாக இந்தியா வந்துள்ள 35 வயதான அமெரிக்க பெண் |
| காவிரியின் குறுக்கே அணை கட்டும் பிரச்சினை: பாராளுமன்றத்தில் தமிழக, கர்நாடக எம்.பி.க்கள் மோதல் Posted: 23 Apr 2015 01:36 PM PDT பாராளுமன்றத்தில் நேற்று டெல்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட பிரச்சினை குறித்த விவாதம் முடிந்த பின்னர் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபாலை (திருவள்ளூர் தொகுதி) பேசும்படி அழைத்தார். |
| Posted: 23 Apr 2015 12:53 PM PDT சென்ற வருடம் ஏப்ரல் 14-ம் தேதி திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின சட்ட அங்கீகாரம் அளித்து உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. இருப்பினும் மூன்றாம் பாலினம் என்ற அடையாளம் பொதுவெளியிலும் அரசு ஆவணங்களிலும் திருநங்கைகளுக்கு |
| அண்ணல் அம்பேத்கரின் வீட்டை கையகப்படுத்த லண்டன் சென்ற மகாராஷ்டிர அமைச்சர்கள் Posted: 23 Apr 2015 11:59 AM PDT லண்டனில் அண்ணல் அம்பேத்கர் தங்கிய வீட்டை கையகப்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் செயல்படுத்தும் வகையில் மகாராஷ்டிர சமூக நீதித்துறை மந்திரி ராஜ்குமார் படோலே, இணை மந்திரி திலீப் காம்பிளே மற்றும் முதன்மை செயலாளர் உஜ்வால் உகே ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று லண்டன் சென்றனர். |
| மும்பையின் பிரபல போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவி பேபி கைது Posted: 23 Apr 2015 09:56 AM PDT மும்பை போலீசாருக்கு நீண்ட காலமாக டிமிக்கி கொடுத்து வந்த மும்பை போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவியான பேபி படங்கரை(53) போலீசார் இன்று கைது செய்தனர். மும்பையில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் நம்பர் ஒன் புள்ளியாக இருந்து வந்த பேபி, இதன் மூலமாக பல கோடி மதிப்புள்ள |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |