Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எதிர்க்கட்சிகளுக்கு காங்., - எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கடி: பழைய வழக்குகளை தூசி தட்ட வலியுறுத்தல்

Posted:

பெங்களூரு: 'பா.ஜ., - ம.ஜ.த., ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகளை, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைப்பதன் மூலம், அக்கட்சிகளுக்கு அரசியல் பதிலடி தர வேண்டும்' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், முதல்வர் சித்தராமையாவிடம் வலியுறுத்தினர்.

முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், பெங்களூரு விதான் சவுதாவில் நடந்தது. கூட்டத்தில், 'என்னையும், காங்கிரசையும் ஒழிக்கும் குறிக்கோளுடன், எதிர்க்கட்சிகள் தேவையின்றி குற்றம் சாட்டுகின்றன. அரசியல் ரீதியாக என்னை, 'டார்கெட்' செய்துள்ள பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களுக்கு, பதிலடி தர, நீங்கள் அனைவரும் தயாராக ...

'பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன'

Posted:

போபால்: ''கடந்த இரு ஆண்டுகளாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை தடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,'' என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார்.

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடந்த தடயவியல் துறை தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜூ பேசியதாவது: கடந்த இரு ஆண்டுகளாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன; இது, கவலைக்குரிய விஷயம். ஆனாலும், முன்பு, தங்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கு ...

மிரட்டலுக்கு பயந்து வீடு மாறிய வேளாண் அதிகாரி குடும்பம்

Posted:

திருநெல்வேலி: நெல்லையில், வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், அவிழாத மர்ம முடிச்சுகள் பல உள்ள நிலையில், வழக்கை, 'குளோஸ்' செய்து, அ.தி.மு.க.,வினரை காப்பாற்றும் நோக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கொந்தளிப்பு:
வேளாண் துறையில், டிரைவர்கள் நியமன விவகாரத்தில், நெருக்கடி காரணமாக, நெல்லையைச் சேர்ந்த வேளாண் அதிகாரி, முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்ட விவகாரம், தமிழகத்தில், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி ...

சீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்பகுதியில் உளவு

Posted:

புதுடில்லி: அரபிக் கடலில், ஏடன் வளைகுடாவுக்கு அருகில், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்தியுள்ள சீனா, இந்தியாவை உளவு பார்ப்பதாக, இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு அருகில் படைத்தளத்தை அமைத்து, தன்னுடைய படை பலத்தை அதிகரிக்கும் நோக்கில் சீனா செயல்பட்டு வருகிறது. அரபிக் கடலில், ஏடன் வளைகுடாவிற்கு அருகில், கடல் கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை சீனா நிறுத்தியுள்ளதாக, இந்திய ராணுவ படைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு கடற்படை அனுப்பிய அறிக்கையில் ...

வாஜ்பாய்க்கு நாளை 'பாரத ரத்னா' விருது: வீட்டிற்கு சென்று வழங்குகிறார் பிரணாப்

Posted:

புதுடில்லி: முன்னாள் பிரதமர், பா.ஜ.,வைச் சேர்ந்த, வாஜ்பாய்க்கு, நாளை, அவர் வீட்டில், 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட உள்ளது. பிரதமர் மோடி முன்னிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, விருதை வழங்குகிறார்.ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் தான், வழக்கமாக, பாரத ரத்னா விருதுகள் வழங்கப்படும். உடல் நலக்குறைவால் வாஜ்பாய், படுத்த படுக்கையாக இருப்பதால், அவர் வீட்டுக்குச் சென்று, விருது வழங்கப்படுகிறது. டிசம்பர் 25ம் தேதி, வாஜ்பாயின் பிறந்த நாள். அதற்கு ஒரு நாள் முன்னதாக, கடந்த ஆண்டு, டிசம்பர் 24ல், அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. வாஜ்பாய்க்கும், சுதந்திர ...

ஏழை மாணவர்களுக்கு கல்வி உரிமை சட்டத்தை முழுதாக அமல்படுத்த தனியார் பள்ளிகள் மறுப்பு

Posted:

புதுடில்லி; கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், 21 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், அதில், 29 சதவீத இடங்களே நிரப்பப்படுகின்றன. கண்காணிப்பு இல்லாதது; இதுபோன்ற வசதி இருக்கிறது என்பது தெரியாதது; தனியார் பள்ளிகளின் பணத்தாசை போன்றவற்றால், இந்த உயரிய திட்டம் பாழாகிறது. ஏராளமான ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியும் கிடைக்காமல் போகிறது.தனியார் பள்ளிகள், ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது என்பதை உணர்ந்த மத்திய அரசு, கடந்த 2009ம் ஆண்டு, கல்வி உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன் படி, தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில், 25 ...

ஜெ., மேல் முறையீட்டு வழக்கு மனு மீதான தீர்ப்பு இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு

Posted:

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு, இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளது.ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். நீதிபதி குமாரசாமி முன்னிலையில், ?? நாட்கள், மேல் முறையீட்டு வழக்கு விசாரணை நடந்தது. கடந்த, 11ம் தேதி விசாரணை முடிந்து, தேதி குறிப்பிடப்படாமல், தீர்ப்பு ஒத்தி ...

நிதி நெருக்கடி மத்திய அரசு கவனத்துக்கு செல்லாதது ஏன்?

Posted:

தமிழக பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர்.தி.மு.க., தலைவர், கருணாநிதி: தமிழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது; மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, 21,116 கோடி ரூபாய் அளவுக்கு குறைக்கப்பட்டு உள்ளது; நடைமுறை நிர்வாக தேவைகளுக்குக் கூட, மத்திய அரசை நம்பியே இருக்க வேண்டி உள்ளது என, பட்ஜெட் உரையில், முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இந்நிலையில், தமிழகம் வந்து, ஜெயலலிதாவை சந்தித்த, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கவனத்துக்கு, இவற்றை ஏன் கொண்டு செல்லவில்லை.விஜயகாந்த்: தற்போதைய பட்ஜெட்டில், ...

மாநிலத்தின் கடன் சுமை ரூ.1.81 லட்சம் கோடி தான்: நிதி நிலையில் தமிழகம் பாதுகாப்பாக உள்ளது: நிதி செயலர் தகவல்

Posted:

சென்னை: ''நிதி நிலையில், தமிழகம் பாதுகாப்பான நிலையிலேயே உள்ளது,'' என, நிதித் துறை செயலர் சண்முகம் கூறினார்.தமிழகத்தின், 2015 - 16 பட்ஜெட் குறித்து, அவர் கூறியதாவது: பட்ஜெட் அளவு, 1.84 லட்சம் கோடி ரூபாய்; வரவு - 1.42 லட்சம் கோடி ரூபாய்; செலவு - 1.47 லட்சம் கோடி ரூபாய்; வருவாய் பற்றாக்குறை - 4,616 கோடி ரூபாய்.

மந்த நிலை:
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால், வருவாய் பற்றாக்குறை, இந்தியா முழுவதும் உள்ளது; இதற்கு, தமிழகமும் விதிவிலக்கல்ல. வணிகவரித் துறை, பத்திரப்பதிவுத் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பிற துறைகளில், எதிர்பார்த்த வரி வருவாய் ...

நிதி நெருக்கடியில் தமிழகம்: பட்ஜெட்டில் முதல்வர் தகவல்

Posted:

தமிழக அரசு, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள விவரம், பட்ஜெட்டில்தெரிவிக்கப்பட்டுள்ளது.அவற்றின் விவரம்:*கடந்த ஆண்டில் இருந்து, உலக அளவிலும், தேசிய அளவிலும் ஏற்பட்ட, பொருளாதார வீழ்ச்சி, நமக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.*தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளாக, வரி வருவாய் எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை.*சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால், பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விற்பனை விலையில், தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, மாநிலத்தின் வரி வருவாய், கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது.*அதிக அளவு மானியங்களாலும், நாம் தொடர்ந்து ...

தமிழக அரசின் கடன் சுமை ரூ.2 லட்சம் கோடியை தாண்டுகிறது: பட்ஜெட்டில் ரூ.4,600 கோடி பற்றாக்குறை; புது வரிகள் இல்லை

Posted:

சென்னை:புதிய வரிகள் இல்லாத, 4,616.02 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட்டை, முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில், மாநில அரசின் மொத்த நிலுவைக் கடன், 2,11,483 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பன்னீர்செல்வம், 2015 - 16க்கான தமிழக பட்ஜெட்டை, நேற்று, சட்டசபையில் தாக்கல் செய்தார். பட்ஜெட் விவரம்:வரும், 2015 - 16ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை, 4,616.02 கோடி ரூபாய். வரி வருவாய் வளர்ச்சி குறைவாக உள்ளதாலும், மானியங்களுக்கும், சமூக நல திட்டங்களுக்கும், உயர் ஒதுக்கீடு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™