Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வரும் 31-ம்தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம்

Posted: 25 Mar 2015 01:38 PM PDT

கரூர் மாவட்டத்தில் வரும் மாரச். 31-ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து,மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் உள்ள

கரூர் லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளி சிறப்பிடம்

Posted: 25 Mar 2015 01:38 PM PDT

ஒலிம்பியாடு தேர்வில் கரூர் லிட்டில் ஏஞ்சல்ஸ் ஆங்கில மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

மீன் பிடிக்க ஆசை : கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு

Posted: 25 Mar 2015 01:37 PM PDT

வேலாயுதம்பாளையத்தில் கிணற்றில் மூழ்கி 5 ஆம் வகுப்பு மாணவர் புதன்கிழமை உயிரிழந்தார். கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (35).

டீசல் திருடி வந்த 4 பேர் கைது

Posted: 25 Mar 2015 01:37 PM PDT

அரவக்குறிச்சி அருகே டாரஸ் லாரியில் டீசல் திருடிய 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஒரு டெம்போ வேன் மற்றும் 35 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெண்ணை காதலித்து திருமணத்துக்கு மறுத்தவர் கைது

Posted: 25 Mar 2015 01:36 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்ள மறுத்த இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைதுசெய்தனர்.

அரியலூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 25 Mar 2015 01:36 PM PDT

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நடைபெறவுள்ளது.

பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

Posted: 25 Mar 2015 01:36 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரு கே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

வளாக நேர்காணல்: 63 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

Posted: 25 Mar 2015 01:36 PM PDT

பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வளாக நேர்காணலில் 63 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

வெவ்வேறு சம்வங்களில் 3 பேர் சாவு

Posted: 25 Mar 2015 01:35 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வெவ்வேறு சம்பவங்களில் கடந்த 2 நாட்களில் 3 பேர் உயிரிழந்தனர்.

இணை மின்னுற்பத்தி திட்டத்தை விரைந்து செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

Posted: 25 Mar 2015 01:35 PM PDT

எறையூர் சர்க்கரை ஆலையில் தொடங்கப்பட்ட இணை மின்னுற்பத்தி திட்டத்தை விரைவாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட 84 இருசக்கர வாகனங்கள்

Posted: 25 Mar 2015 01:34 PM PDT

பெரம்பலூர் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட 84 இருசக்கர வாகனங்கள் ரூ. 2.52 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டது.

கர்ப்பிணிகளுக்கான ரத்தசோகை தடுப்பு மருத்துவ முகாம்

Posted: 25 Mar 2015 01:34 PM PDT

தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில், அண்டகுளம் அருகே திருமலைராயபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான ரத்தசோகை தடுப்பு

"காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது

Posted: 25 Mar 2015 01:34 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பயனளிக்கும் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பும், நிதி ஒதுக்கீடும் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

மவுன்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச மாநாடு

Posted: 25 Mar 2015 01:34 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், லெனாவிலக்கு மவுன்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் பொறியியல் தொழில்நுட்பத்தில் நவீன வளர்ச்சி குறித்த 2 நாள் தேசிய மாநாடு செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது

மகாத்மா கல்வி நிறுவனங்களில் வளாக நேர்காணல்: 25 பேர் தேர்வு

Posted: 25 Mar 2015 01:33 PM PDT

புதுக்கோட்டை அருகே ஆரியூரிலுள்ள மகாத்மா கல்வி நிறுவனங்களில் செவ்வாய்க்கிழமை நடந்த வளாக நேர்காணலில் மாணவ, மாணவிகள் 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ரூ. 5,248 கோடி

Posted: 25 Mar 2015 01:33 PM PDT

வரும் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்த ரூ. 5,248 கோடி ஒதுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

"வெளிநாட்டு பல்கலை.யில் தமிழ் மொழி ஆய்வுக்கு அடித்தளமிட்டவர்களை அறிந்து கொள்வது அவசியம்'

Posted: 25 Mar 2015 01:33 PM PDT

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மற்றும் பிற திராவிட மொழிகளின் ஆய்வுக்கு அடித்தளமிட்ட முன்னோடிகளை தற்போதுள்ள தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்றார் சென்னை மொழி அறக்கட்டளைச் செயலர் பா.ரா. சுப்பிரமணியன்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ. 5,151 கோடி கடன் வழங்க இலக்கு

Posted: 25 Mar 2015 01:32 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகிற நிதியாண்டில் ரூ. 5,151 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

மார்ச் 28-ல் மின் தடை

Posted: 25 Mar 2015 01:32 PM PDT

இதுகுறித்து மின்வாரியத்தின் கும்பகோணம் உதவி பொறியாளர் ராஜகோபாலன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் 28-ம் தேதி கும்பகோணம் நகரம் முழுவதும்

"மாதிரியாக்கம், உருவகப்படுத்துதல் ஒரு தொடர் நிகழ்வு'

Posted: 25 Mar 2015 01:32 PM PDT

மாதிரியாக்கமும், உருவகப்படுத்துதலும் வாழ்க்கையில் தொடர் நிகழ்வாக இருக்கிறது என்றார் பெங்களூர் வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு நிலையத் திட்ட இயக்குநர் எஸ். கிறிஸ்டோபர்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 15 லட்சம் கழிப்பறைகள் கட்டப்படும்

Posted: 25 Mar 2015 01:32 PM PDT

கிராமப்புறத் தூய்மை இந்தியா திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் 15 லட்சம் கழிப்பறைகள் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாணவி தற்கொலை

Posted: 25 Mar 2015 01:31 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மருதூர் தெற்கு அண்டியப்பன்காடு பகுதியைச் சேர்ந்வர் முத்துராமன் மகள் வள்ளி(14) இவர் தகட்டூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நக்சலைட்டுகள் ஊடுருவ வாய்ப்புள்ள பகுதிகளுக்கு ரூ.75 கோடியில் திட்டம்

Posted: 25 Mar 2015 01:31 PM PDT

நக்சலைட்டுகள் ஊடுருவ வாய்ப்புள்ள பகுதிகளுக்கு ரூ.75 கோடியில் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடல் அட்டைகள்கடத்த முயன்ற மூவர் கைது

Posted: 25 Mar 2015 01:31 PM PDT

நாகப்பட்டினத்திலிருந்து அகதிகள் இலங்கை செல்லவிருப்பதாக கியூ பிராஞ்ச் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகை துறைமுகத்தில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் தனியாக நின்றிருந்த விசைப்படகை சோதனை செய்தனர்.

கரூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தர்னா

Posted: 25 Mar 2015 01:31 PM PDT

கரூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தர்னா போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர்

2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ரூ. 150 கோடி

Posted: 25 Mar 2015 01:30 PM PDT

வரும் நிதியாண்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க ரூ. 150 கோடி ஒதுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் திருப்தியளிக்கும் தமிழக பட்ஜெட்

Posted: 25 Mar 2015 01:30 PM PDT

தமிழக அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் திருப்தியளிக்கும் விதமாக உள்ளது என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவர் வழக்குரைஞர்

இழப்பீடு கோரி ஏப். 29-ல் போராட்டம்

Posted: 25 Mar 2015 01:30 PM PDT

கரூர் மாவட்டத்தில் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம் செய்ய இருப்பதாக கூறினார் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டீ. என். சிவசுப்பிரமணியன்.

காவல் துறைக்கு ரூ.5,568 கோடி ஒதுக்கீடு

Posted: 25 Mar 2015 01:30 PM PDT

காவல் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு ரூ.5,568 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தொழில்முனைவோருக்கு ரூ.301.84 லட்சம் வங்கிக்கடன்

Posted: 25 Mar 2015 01:30 PM PDT

கரூர் மாவட்டத்தில் தொழில்முனைவோருக்கு ரூ.301.84 லட்சம் வங்கிக்கடன் புதன்கிழமை வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட தொழில் மையம் மூலம் நடைபெற்ற வேலைவாய்ப்புப் பயிற்சி குறித்த கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. மேலும் அவர் பேசியதாவது:

மருத்துவமனை ஊழியர் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது

Posted: 25 Mar 2015 01:29 PM PDT

ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

அனுமதியின்றி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: 5 பேர் மீது வழக்கு

Posted: 25 Mar 2015 01:29 PM PDT

கரூர் மாவட்டம், கடவூர் அருகே அனுமதியின்றி ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர் வைத்திருந்த 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அடைக்கம்பட்டியில் 941 பேருக்கு விலையில்லா பொருட்கள்

Posted: 25 Mar 2015 01:29 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், எலந்தலப்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.20,936 கோடி

Posted: 25 Mar 2015 01:28 PM PDT

தமிழக அரசின் 2015-16-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 20,936.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 25 Mar 2015 01:28 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் மதுரை கிரீன் அறக்கட்டளை சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம், அரசுப் பள்ளிகள் மற்றும் கிராமப்புறங்களில்

மார்ச் 28-ல் ஆசிரியர் பணி நியமனக் கலந்தாய்வு

Posted: 25 Mar 2015 01:28 PM PDT

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (2013-14, 2014-15) போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, தாற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட தேர்வாளர்களில், பெரம்பலூர் மாவட்ட முகவரியில் விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்ட

பெரம்பலூர்: நாளை "அம்மா' திட்ட முகாம்

Posted: 25 Mar 2015 01:28 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மா- திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெண்ணை காதலித்துதிருமணத்துக்கு மறுத்தவர் கைது

Posted: 25 Mar 2015 01:27 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்ள மறுத்த இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைதுசெய்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் 88,748 பேருக்கு விலையில்லா பொருட்கள்

Posted: 25 Mar 2015 01:27 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் 88,748 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

திருமழபாடியில் மார்ச் 28-ல் நந்தி திருக்கல்யாணம்

Posted: 25 Mar 2015 01:27 PM PDT

அரியலூர் மாவட்டம், திருமழபாடி வைத்தியநாதசாமி கோயிலில் வரும் சனிக்கிழமை (மார்ச் 28) நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

புதுகையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

Posted: 25 Mar 2015 01:26 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

ஓய்வூதியப் பலன்களுக்காக ரூ.18,668 கோடி ஒதுக்கீடு

Posted: 25 Mar 2015 01:26 PM PDT

அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்களுக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.18,668 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மென்பொருள் ஏற்றுமதி ரூ. 82,445 கோடியாக உயர்வு

Posted: 25 Mar 2015 01:25 PM PDT

கடந்த 2014-15-ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் மென்பொருள் ஏற்றுமதி ரூ. 82,445 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

உணவு மானியத்துக்கு ரூ.5,300 கோடி ஒதுக்கீடு

Posted: 25 Mar 2015 01:23 PM PDT

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில், உணவு மானியத்துக்கு ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

67 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்

Posted: 25 Mar 2015 01:22 PM PDT

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 67 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மின் துறைக்கு ரூ.13,586 கோடி

Posted: 25 Mar 2015 01:15 PM PDT

2015-16-ஆம் ஆண்டில் மின்சாரத் துறைக்கு மொத்த நிதியுதவியாக ரூ.13,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சுகாதாரத் துறைக்கு ரூ.8,245 கோடி

Posted: 25 Mar 2015 01:14 PM PDT

தமிழக அரசின் 2015-16 நிதி நிலை அறிக்கையில் (பட்ஜெட்) சுகாதாரத் துறைக்கு ரூ.8,245 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த நிதி ஒதுக்கீட்டில் 4.52 சதவீதமாகும்.

புதிய நிதிப் பகிர்வு முறையால்: 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.35 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்

Posted: 25 Mar 2015 01:13 PM PDT

புதிய நிதிப் பகிர்வு முறையால், வரும் ஐந்து ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.35 ஆயிரத்து 485 கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

உயர் கல்வித் துறைக்கு ரூ. 3,696 கோடி

Posted: 25 Mar 2015 01:12 PM PDT

தமிழக அரசின் 2015-16-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் உயர் கல்வித் துறைக்கு ரூ. 3,696.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுகவினர் வெளிநடப்பு

Posted: 25 Mar 2015 01:11 PM PDT

தமிழக நிதிநிலை அறிக்கையைப் புறக்கணித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

ராமநாதபுரம், தூத்துக்குடியில் ரூ. 1,947 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள்

Posted: 25 Mar 2015 01:10 PM PDT

ராமநாதபுரம், தூத்துக்குடியில் ரூ. 1,947 கோடியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:

வேளாண் துறைக்கு அதிகபட்சமாக ரூ.6,613 கோடி ஒதுக்கீடு

Posted: 25 Mar 2015 01:05 PM PDT

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில், இதுவரை இல்லாத அளவுக்கு வேளாண் துறைக்கென ரூ.6,613.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.5,500 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு

Posted: 25 Mar 2015 01:03 PM PDT

வரும் நிதியாண்டில் ரூ.5,500 கோடிக்கு பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறைக்கு என்ன காரணம்? நிதித் துறைச் செயலாளர் சண்முகம் விளக்கம்

Posted: 25 Mar 2015 12:58 PM PDT

வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து நிதித் துறைச் செயலாளர் க. சண்முகம் விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்பார்: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 25 Mar 2015 12:56 PM PDT

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழை மதித்த பிரதமர்!

Posted: 25 Mar 2015 12:48 PM PDT

வங்கிகள் மாற வேண்டும்

Posted: 25 Mar 2015 12:45 PM PDT

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கவில்லை என்று சொல்வது, வங்கித் துறையின் சமீபத்திய நடவடிக்கைக்கு மிகப் பொருத்தமான ஒன்றாகும். கடந்த இரண்டு மாத காலத்தில், ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) இரு முறை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.

அப்பாடா, பிழைத்தோம்!

Posted: 25 Mar 2015 12:43 PM PDT

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(அ) பிரிவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வரும், ரோஹிண்டன் நாரிமனும் வழங்கி இருக்கும் தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழக நலன்களைப் பாதுகாக்க நிதிக் குழு தவறிவிட்டது

Posted: 25 Mar 2015 12:27 PM PDT

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் நலன்களைப் பாதுகாக்க 14-ஆவது நிதிக் குழு தவறிவிட்டதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

"நாம் அனுபவிக்கும் சுதந்திரத்துக்கு பகத்சிங் போன்றோரின் தியாகமே காரணம்'

Posted: 25 Mar 2015 12:25 PM PDT

நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்துக்கு மாவீரன் பகத்சிங் போன்றோரின் தியாகமே காரணம் என்றார் திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர் த. இந்திரஜித்.

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை தடுக்க சட்டரீதியான நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 25 Mar 2015 12:25 PM PDT

மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு எத்தகைய முயற்சி எடுத்தாலும், அவற்றைத் தடுக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

வங்கிக் கடனுக்கு காலநீட்டிப்பு வழங்க வலியுறுத்தல்

Posted: 25 Mar 2015 12:25 PM PDT

கடும் வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நகைக்கடன் உள்ளிட்ட வங்கிக் கடன்களுக்கான வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்வதுடன், திரும்பப் பெறுவதற்கான காலத்தையும் நீட்டிப்பு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்ப்பு

Posted: 25 Mar 2015 12:24 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்க்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

பட்ஜெட் மீது 4 நாள்கள் விவாதம்: பேரவைத் தலைவர் தகவல்

Posted: 25 Mar 2015 12:24 PM PDT

தமிழக நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நான்கு நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவித்தார்.

தமிழக பட்ஜெட்: விவசாயிகள் ஏமாற்றம்

Posted: 25 Mar 2015 12:24 PM PDT

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

புதுப்பட சிடி விற்ற இருவர் கைது

Posted: 25 Mar 2015 12:24 PM PDT

கும்பகோணத்தில் புதுப்பட சிடிக்கள் விற்ற இருவரை போலீஸார் கைது செய்தனர். கும்பகோணம் சாóச் ரோடு மற்றும் ஹாஜியார் தெருவில் புதிய சினிமா படங்களின் சிடிக்கள்

யேமன் தாக்குதல்: இந்தியர்கள் தாயகம் திரும்ப அறிவுறுத்தல்

Posted: 25 Mar 2015 12:24 PM PDT

அரபு நாடுகளில் ஒன்றான யேமன் நாட்டில் பணிபுரியும் இந்தியர்கள், அந்த நாட்டை விட்டு வெளியேறி தாயகம் திரும்ப வேண்டும் என, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவுறுத்தியது.

விஜயகாந்த் மீதான வழக்கு ஒத்திவைப்பு

Posted: 25 Mar 2015 12:24 PM PDT

தேமுதிக தலைவர் விஜயகாந்த், விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பார்த்தசாரதி, தலைமைக்கழக பேச்சாளர் ஏ. ஜெயக்குமார் ஆகிய 3 பேர் மீதான அவதூறு வழக்கு ஏப்ரல் 30-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

மகாமகத்தை தேசிய திருவிழாவாக அறிவிக்க வேண்டும்

Posted: 25 Mar 2015 12:23 PM PDT

மகாமகத் திருவிழாவை தேசிய திருவிழாவாக மத்திய அரசு அறிவித்து, அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என கர்நாடக மாநில சாதுக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

3 நாடுகளுக்கு மோடி ஏப்.9-இல் பயணம்

Posted: 25 Mar 2015 12:23 PM PDT

பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 9-ஆம் தேதி தொடங்க உள்ளார்.

மின்கம்பியை மிதித்த பெண் சாவு

Posted: 25 Mar 2015 12:23 PM PDT

திருவையாறு அருகே தென்னந்தோப்பில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இந்தியா - கத்தார் இடையே 6 ஒப்பந்தங்கள்

Posted: 25 Mar 2015 12:23 PM PDT

இந்தியா - கத்தார் இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் புதன்கிழமை கையெழுத்தாகின. இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கத்தார் கைதிகளையும், கத்தார் சிறையிலுள்ள இந்தியர்களையும், தங்களது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான ஒப்பந்தம் அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சேமிப்புக் கிடங்குகள் அமைப்பது பற்றி அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது

Posted: 25 Mar 2015 12:22 PM PDT

திறந்த வெளி கிடங்குகளில் அடுக்கப்படும் நெல்லை பாதுகாப்பாக வைக்க சேமிப்புக் கிடங்குகள் அமைப்பது பற்றி தமிழக பட்ஜெட்டில் கூறாதது ஏமாற்றமளிக்கிறது என்றார் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்

மனைவி கொலை: கணவர் கைது

Posted: 25 Mar 2015 12:22 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: மின் வாரிய ஊழியர் சாவு

Posted: 25 Mar 2015 12:22 PM PDT

நாகை அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மின் வாரிய ஊழியர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். நாகை கலசம்பாடி, பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாயமூர்த்தி (4

மன்னார்குடி பகுதியில்கோயில்கள், வீடுகளில் திருடிய 4 பேர் கைது

Posted: 25 Mar 2015 12:21 PM PDT

மன்னார்குடி பகுதியில் கோயில்கள் மற்றும் வீடுகளில் திருடிய 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

ம.பி. ஆளுநரின் மகன் மர்மச் சாவு

Posted: 25 Mar 2015 12:21 PM PDT

மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் யாதவ், உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னௌவில் உள்ள தந்தையின் வீட்டில் மர்மமான முறையில் புதன்கிழமை இறந்து கிடந்தார்.

அரியலூர்

Posted: 25 Mar 2015 12:21 PM PDT

கும்பகோணம்

Posted: 25 Mar 2015 12:21 PM PDT

2ஜி: தயாளு அம்மாள், அமிர்தம் எழுத்துப்பூர்வ பதில்

Posted: 25 Mar 2015 12:20 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டி.வி. இயக்குநர் அமிர்தம், சினியூக் மீடியா நிறுவன இயக்குநர் கரீம் மொரானி உள்பட 6 பேர்களின் எழுத்துப்பூர்வ பதில்கள் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா நாளை நேரில் வழங்குகிறார் பிரணாப்

Posted: 25 Mar 2015 12:20 PM PDT

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) வழங்கப்படுகிறது.

விஐடியில் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி முகாம்

Posted: 25 Mar 2015 12:14 PM PDT

அறிவியல், பொறியியல் பட்டதாரிகளை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான 4 வார காலப் பயிற்சி முகாம் விஐடி பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 22-இல் தொடங்க உள்ளதாக விஐடி பல்கலை. வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.

கோடை வெயில்:போலீஸாருக்கு குளிர்பானம்

Posted: 25 Mar 2015 12:14 PM PDT

வேலூர் மாவட்டத்தில் கோடை வெயிலில் போக்குவரத்துச் ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் அனைவருக்கும் நண்பகலில் குளிர்பானம் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

காலணித் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

Posted: 25 Mar 2015 12:14 PM PDT

பள்ளிகொண்டா அருகே காலணித் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் ஊதியம் கோரி 3-வது நாளாக புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை வணிக வளாகத்தில் தீ

Posted: 25 Mar 2015 12:10 PM PDT

மும்பை புறநகர்ப் பகுதியில் வணிக வளாகம் ஒன்றில் புதன்கிழமை காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: டைட்லருக்கு எதிரான வழக்கை முடித்துக் கொள்கிறது சிபிஐ

Posted: 25 Mar 2015 12:10 PM PDT

கடந்த 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லருக்கு எதிரான வழக்கை முடித்துக் கொள்ளும் அறிக்கையை தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

நிலம் கையக அவசரச் சட்டம் காலாவதியா? வெங்கய்ய நாயுடு மறுப்பு

Posted: 25 Mar 2015 12:09 PM PDT

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டம் காலாவதியாக உள்ளதாக வெளியான தகவல்கள் ஊகத்தின் அடிப்படையிலானது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

பாகிஸ்தான் கொடி ஏற்றியவர் மீது வழக்கு

Posted: 25 Mar 2015 12:08 PM PDT

பாகிஸ்தான் நாட்டின் தேசிய தினத்தின் போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றிவைத்ததாக பிரிவினைவாத அமைப்புத் தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அம்மா சிமென்ட் விநியோகத்தில் முறைகேட்டை தடுக்க தனிக் கிடங்கு

Posted: 25 Mar 2015 12:03 PM PDT

அம்மா சிமென்ட் விநியோகத்தில் முறைகேடு நடப்பதாகவும், இதனால் பல்வேறு திட்டப் பணிகள் முடங்கி இருப்பதாகவும், வாலாஜாபேட்டை ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தனியாக சிமென்ட் கிடங்கு அமைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பங்குனி உத்திரப் பெருவிழா தொடக்கம்

Posted: 25 Mar 2015 12:03 PM PDT

அரக்கோணம், பஜாரிலுள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

சாலை சீரமைக்கப்படுமா?

Posted: 25 Mar 2015 12:03 PM PDT

வந்தவாசி-காஞ்சிபுரம் பிரதான சாலை குண்டும், குழியுமாக மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது. இதனை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக வழக்குரைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Mar 2015 12:03 PM PDT

நாகை மாவட்ட பெண் நீதிபதி தாக்கப்பட்டதையும், திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதையும் கண்டித்து, ஆம்பூர் நீதிமன்ற திமுக வழக்குரைஞர் அண

அழைப்பாணையை எதிர்த்து மன்மோகன் முறையீடு

Posted: 25 Mar 2015 12:03 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பான வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர் என்று கூறி, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தனக்கு அழைப்பாணை அனுப்பியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.

அஃப்சல் குரு உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்

Posted: 25 Mar 2015 12:03 PM PDT

பயங்கரவாதி அஃப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தி, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் ரகளையில் ஈடுபட்டார்.

மத்திய உள்துறை அரசாணைக்கு எதிராக தில்லி பேரவையில் தீர்மானம்

Posted: 25 Mar 2015 12:03 PM PDT

தில்லி அரசின் ஊழல் தடுப்பு பிரிவின் அதிகார வரம்புகளை குறைக்கும் வகையில், கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அரசாணைக்கு எதிராக தில்லி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்குகெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

தில்லியை நவீன நகரமாக்க என்டிஎம்சி முனைப்பு!

Posted: 25 Mar 2015 12:02 PM PDT

தில்லி மாநகரை நவீன நகரமாக (ஸ்மார்ட் சிட்டி) மாற்றும் வகையில் எல்இடி விளக்குகள், சூரிய எரிசக்தி மின்சாரம், இலவச வைஃபை போன்ற திட்டங்களுக்கு புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) 2015-16 நிதியாண்டு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.10 லட்சம் கோடிக்கு அலைக்கற்றை ஏலம்

Posted: 25 Mar 2015 12:02 PM PDT

தொலைத்தொடர்பு அலைக்கற்றைகளை விற்பதற்காக, மத்திய அரசால் கடந்த 19 நாள்களாக நடத்தப்பட்டு வந்த ஏலம் புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. இதில், ரூ.1.10 லட்சம் கோடிக்கு அலைக்கற்றைகள் ஏலம் போனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 மாதங்களில் தாஜ் மான்சிங் ஹோட்டல் ஏலம்

Posted: 25 Mar 2015 12:02 PM PDT

புது தில்லி பகுதியில் உள்ள தாஜ் மான்சிங் நட்சத்திர ஹோட்டலை மூன்று மாதங்களில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) அறிவித்துள்ளது.

"குடிநீர் ஏடிஎம்' திட்டத்துக்கு விருது

Posted: 25 Mar 2015 12:02 PM PDT

ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாக குடிநீர் வழங்கும் தில்லி ஜல் போர்டின் திட்டத்துக்கு மதிப்பு மிக்க "வாட்டர் டைஜஸ்ட் வாட்டர் அவார்ட்ஸ்' அமைப்பின் விருது கிடைத்துள்ளது.

கடற்படை விமானம் கடலில் விழுந்து விபத்து; 2 அதிகாரிகளைக் காணவில்லை

Posted: 25 Mar 2015 12:01 PM PDT

கோவா கடற்பகுதியில் கடற்படைக்குச் சொந்தமான கண்காணிப்பு விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்த விமானி உள்ளிட்ட 2 அதிகாரிகளைக் காணவில்லை. இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு கடற்படை உத்தரவிட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™