Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அமெரிக்க வீரர்கள் 100 பேருக்கு ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குறி

Posted:

டமாஸ்கஸ்: தங்கள் அமைப்பிற்கு எதிராக செயல்படும், 100 அமெரிக்க ராணுவ வீரர்களின் புகைப்படத்துடன் கூடிய பட்டியலை, இணையத்தில் வெளியிட்டு உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அவர்களை கண்டதும் கொலை செய்யுமாறு, தங்கள் ஆதர வாளர்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

பதிலடி:
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், உலகம் முழுவதும் தங்கள் அமைப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, தங்கள் அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ...

ரூ.333 வாடகையில் 2 'சூட்' அறைகள்: லாலுவுக்கு கிடைக்குது இந்த வசதி!

Posted:

புதுடில்லி: லாலு பிரசாத்தின், ஆர்.ஜே.டி., எனப்படும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி வசம், 15 ஆண்டுகளாக டில்லியில் இருக்கும், இரண்டு, 'சூட்' அறைகளுக்கும் சேர்த்து, மாத வாடகையாக, 333 ரூபாயைத் தான் அந்த கட்சி, அரசுக்கு செலுத்தி வருகிறது.

பல முறை 'நோட்டீஸ்':
மிகக் குறைந்த இந்த வாடகையை, 15 ஆண்டுகளாக அந்த கட்சி, மத்திய அரசின் நகர்ப்புற அபிவிருத்தித் துறைக்கு வழங்கி வருகிறது.இந்த சூட் அறை ஒன்றில், குறைந்தபட்சம், 15 பேர் தங்கலாம். இந்த அறைகளுக்கு அருகிலேயே, மூன்று மாடிகளைக் கொண்ட பிரமாண்டமான கட்சி தலைமை அலுவலகத்தை, ஆர்.ஜே.டி., கட்சி திறந்துள்ளது. எனினும், பல முறை, ...

300 கி.மீ., வேக வைர நாற்கர ரயில் திட்டம்: செயல்திட்டத்திற்கு பல நாடுகள் போட்டி

Posted:

புதுடில்லி : நாட்டின் முக்கிய நகரங்களை இணைத்து, உருவாக்கப்பட திட்டமிட்டுள்ள, வைர நாற்கர ரயில் பாதை செயல்திட்டத்தை வடிவமைக்க, பல நாடுகள் முன்வந்துள்ளன. மும்பை - சென்னை, டில்லி - மும்பை, டில்லி - கோல்கட்டா இடையே அதிவேக, 'புல்லட்' ரயில்களை இயக்குவது தான், புதிய, வைர நாற்கர ரயில் பாதை திட்டத்தின் நோக்கம். இந்தப் பணியை செய்து முடிக்க, இப்போதுள்ள நிலையில், குறைந்தபட்சம், இரண்டு லட்சம் கோடி ரூபாய் செலவாகும். இதற்கான நிதி ஆதாரங்களை திரட்ட, மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான, செயல்திட்டத்தை தயாரிக்க, ...

தேசிய நலனில் அக்கறை செலுத்த 'டிவி' சேனல்களுக்கு அரசு அறிவுரை

Posted:

புதுடில்லி : தேசிய நலன், பாதுகாப்பு காரணங்கள் கருதி, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை, 'டிவி' சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் மீது, கடந்த 20ம் தேதி, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். போலீசார் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை, சில 'டிவி' சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன. 'டிவி' சேனல்களின் இந்த செயல், மத்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி ...

நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதா: அன்னா ஹசாரேவுக்கு கருணாநிதி ஆதரவு

Posted:

சென்னை: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேக்கு, கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதா குறித்து, தாங்கள் அனுப்பிய கடிதத்தில், அந்த மசோதாவில் உள்ள ஆறு முக்கிய அம்சங்களையும், அவற்றை அனைத்து அரசியல் கட்சிகளும், மிக தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது குறித்தும்தெரிவித்து உள்ளீர்கள். கடந்த 2013ல், நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில், 'எந்த நோக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அதற்காக, 5 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை மீண்டும் விவசாயிகளிடமே திருப்பி ...

'ரிசர்வ் வங்கியுடன் மோதல் இல்லை': அருண் ஜெட்லி

Posted:

புதுடில்லி: ''நிதிச் சந்தை கட்டுப்பாடுகள் தொடர்பாக, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே, கருத்து வேறுபாடு எதுவும் இல்லை,'' என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். டில்லியில், ரிசர்வ் வங்கி இயக்குனர் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பிறகு, அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் பேசியதாவது:ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு எப்போதும், வெளிப்படையாக, திறந்த மனதுடன் விவாதம் நடத்தி வருகிறது. அதனால், இரு அமைப்பிற்கும் ...

வெளிநாட்டு சொத்துகள்: வருமான வரி துறை ஆய்வு

Posted:

புதுடில்லி: வெளிநாடுகளில், சொத்து அல்லது வங்கிக் கணக்கு உள்ளதாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோரின் விவரங்களை, வரும் 31ம் தேதிக்குள் தீவிரமாக ஆய்வு செய்து முடிக்குமாறு, வருமான வரித் துறைக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாரியம், கடந்த, 2012 - 13ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில், வெளிநாட்டு சொத்துக்கென புதிய பிரிவைச் சேர்த்தது. இப்பிரிவின் கீழ், வெளிநாட்டில் சொத்து அல்லது வங்கிக் கணக்கு வைத்திருந்தால், அதை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.இதன்படி, வெளிநாட்டு சொத்து விவரங்களை தெரிவித்த பலரின் கணக்குகளை ஆராய்ந்து, ...

விவசாயிகளை குழப்ப எதிர்க்கட்சிகள் பொய் சொல்றாங்க: நில மசோதா விவகாரத்தில் பிரதமர் மோடி அதிரடி

Posted:

புதுடில்லி: ''விவசாயிகளுக்கும், கிராமங்களுக்கும் நன்மை அளிக்க உள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற விடாமல் சதி செய்யும் எதிர்க்கட்சிகள், விவசாயிகளை குழப்புவதற்காக, இல்லாத பொல்லாத பொய்களை கூறி வருகின்றனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.'மன் கீ பாத்' என்ற பெயரில், ஒவ்வொரு மாதமும், 'ஆல் இந்தியா ரேடியோ' வானொலி மூலம் பொதுமக்களிடம் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஆற்றிய உரையில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவின் சிறப்புகள் பற்றியும், அந்த மசோதா குறித்து எதிர்க்கட்சி கள் நடத்தி வரும் திட்டமிட்ட விஷம பிரசாரம் ...

'வாட்ஸ் அப்'பில் கேள்வித்தாள் அனுப்பிய விவகாரத்தில் ஆள்மாறாட்டம்: அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் சிக்குகின்றனர்

Posted:

பிளஸ் 2 தேர்வு கணித வினாத்தாளை, 'வாட்ஸ் அப்'பில் அனுப்பிய விவகாரத்தில், ஆள்மாறாட்ட முறைகேடும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் இருவர், தலைமைக் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் என, மேலும், ஐந்து பேர் சிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த, 18ம் தேதி, பிளஸ் 2 கணிதத் தேர்வு நடந்தது. அப்போது, ஓசூர், பரிமளம் மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில், கண்காணிப்பாளராக இருந்த, தனியார் பள்ளி ஆசிரியர் மகேந்திரன் என்பவர், தேர்வுக்கு வராத மாணவர் ஒருவரின் வினாத்தாளை, மொபைலில் படம் எடுத்தார்.

நான்கு ...

இந்தியா - சீனா எல்லை பிரச்னைக்கு தீர்வு ஏற்படுமா?

Posted:

புதுடில்லி:நீண்டகாலமாக இருந்து வரும் எல்லை பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது குறித்து, இந்திய - சீன நாட்டு பிரதிநிகளுக்கு இடையே, டில்லியில் இன்று பேச்சு நடக்கிறது.
நரேந்திர மோடி பிரதமரானபின், முதல் முறையாக எல்லை பிரச்னை குறித்து பேச்சு நடப்பதால், இதில் தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே, நீண்டகலாமாகவே எல்லை பிரச்னை உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அருகில் உள்ள அக்சாய் சின் பகுதியை, சீன ராணுவம், 1962ல் இருந்து ஆக்கிரமித்துள்ளது.அக்சாய் சின் வழியாக, சீனாவின் சின்சியாங் மாகாணத்தையும், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™