Tamil News | Online Tamil News |
- கருணாநிதி குடும்பம் ஒரே இடத்தில் சங்கமம்
- தள்ளாடும் மின் வாரியத்துக்கு கூடுதல் நஷ்டம் ரூ.400 கோடி: சரக்கு கட்டண உயர்வு, நிலக்கரிக்கு கூடுதல் வரி காரணம்
- கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியில் துவங்கி விட்டது கும்மாங்குத்து: போர்க்கொடி தூக்கும் யாதவ், பூஷனை நீக்க முடிவு?
- கேன்டீனில் உணவருந்திய முதல் பிரதமர்: உணவளித்த நபரை மனமாற வாழ்த்தினார்
- 'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா
- கான் நடிகர்களின் வலையில் விழாதீங்க: பா.ஜ., - எம்.பி., பிராச்சி 'அட்வைஸ்'
- தி.மு.க., ஆட்சியில் தள்ளுபடியான கடனுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் 'நோட்டீஸ்': விவசாயிகள் அதிர்ச்சி
- 'இந்திய ஒப்பந்தத்தை வேண்டுமென்றே தவிர்த்தேன்': சிறிசேன ஒப்புதல்
- 10 ஆண்டுகளில் தேசிய கட்சிகள் வசூலித்த நன்கொடை 5 மடங்கு அதிகரிப்பு
- அந்த பெண்ணிடம் தான் தவறு உள்ளது: நியாயம் கற்பிக்கிறான் கொடூர கற்பழிப்பு குற்றவாளி
| கருணாநிதி குடும்பம் ஒரே இடத்தில் சங்கமம் Posted: சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், நேற்று நடைபெற்ற, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பேரன் திருமண நிச்சயதார்த்த விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, பொருளாளர் ஸ்டாலின், மாநில மகளிர் அணி செயலர் கனிமொழி உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சங்கமித்தனர்.தி.மு.க., தலைவர் கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசு. இவரது மகனும், நடிகருமான அருள்நிதிக்கும், முன்னாள் நீதிபதியின் மகளுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான நிச்சயதார்த்த விழா, நேற்று மாலை, 6:00 மணிக்கு, சென்னை தி.நகரில் உள்ள, 'ரெசிடென்சி டவர்' நட்சத்திர ஓட்டலில் நடந்தது. கருணாநிதி தலைமையில் நடந்த ... |
| Posted: மத்திய பட்ஜெட்டில் சரக்கு கட்டணம் மற்றும் நிலக்கரிக்கான 'கிளீன் எனர்ஜி' வரி உயர்த்தப்பட்டதால் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு கூடுதலாக 400 கோடி ரூபாய் செலவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு மின் வாரியத்திற்கு திருவள்ளூர் - எண்ணூர்; வட சென்னை; சேலம் - மேட்டூர்; தூத்துக்குடி என 4,770 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் உள்ளன. இந்த மின் நிலையங்களில் மின் உற்பத்திக்கு நாள்தோறும் 75 ஆயிரம் டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. மின் வாரியம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 'கோல் இந்தியா' நிலக்கரி சுரங்கம்; ... |
| Posted: புதுடில்லி: 'அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில், தலைவர்கள் இடையே மோதல் உருவாகி உள்ளது. அதனால், கட்சியின் மூத்த தலைவர்களான யோகேந்திர யாதவும், பிரசாந்த் பூஷனும், தேசிய செயற்குழுவில் இருந்து வெளியேற்றப்படலாம்' என, தகவல்கள் வெளியாகி உள்ளன.டில்லியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 70 தொகுதிகளில், 67 இடங்களைப் பிடித்து, ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி. இந்தக் கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகி உள்ளார்.பத்திரிகை செய்தி: தற்போது, ஆம் ஆத்மியில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், கட்சியின் நிறுவன தலைவர்களான ... |
| கேன்டீனில் உணவருந்திய முதல் பிரதமர்: உணவளித்த நபரை மனமாற வாழ்த்தினார் Posted: புதுடில்லி: பார்லிமென்ட் கேன்டீனுக்கு, நேற்று திடீர் விஜயம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, சக எம்.பி.,க்களுடன் உணவருந்தியதோடு, பசிக்கு உணவளித்த சமையலரை வாழ்த்தி குறிப்பெழுதியது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.பார்லிமென்ட் வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள, அறை எண், 70ல், எம்.பி.,க்களுக்கான பிரத்யேக கேன்டீன் உள்ளது. இதில், பல்வேறு எம்.பி.,க்களும் உணவருந்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று, பார்லிமென்ட் கேன்டீனுக்கு திடீர் விஜயம் செய்த மோடி, அங்கு ஏற்கனவே உணவருந்திக் கொண்டிருந்த எம்.பி.,க்களுக்கு அருகில் அமர்ந்தார். பிரதமரின் வருகையை சற்றும் எதிர்பாராத ... |
| 'சிந்து நதியின் மிசை நிலவினிலே:' சிரிப்பாய் சிரிக்குது ராஜ்யசபா Posted: தனக்கு அளிக்கப்பட்ட, 3 நிமிடத்தில், 2 நிமிடத்திற்கு ராகம் போட்டு பாட்டுப்பாடி, மீதமுள்ள ஒரு நிமிடத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்திய, அ.தி.மு.க., - எம்.பி.,யை பார்த்து, ராஜ்யபா துணைத் தலைவர் குரியன் உட்பட ஒட்டுமொத்த சபையும், விலா நோகச் சிரித்து தீர்த்தது.ராகத்துடன்...: ராஜ்யசபாவில் நேற்று காலை, பொது முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில், தமிழக எம்.பி.,யான விஜிலா சத்யானந்திற்கு, பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் எழுந்து, மாநிலங்களுக்கு இடையிலான ஒற்றுமை குறித்து, சில வார்த்தைகளை பேசிவிட்டு, திடீரென, 'சிந்து ... |
| கான் நடிகர்களின் வலையில் விழாதீங்க: பா.ஜ., - எம்.பி., பிராச்சி 'அட்வைஸ்' Posted: டேராடூன்: ''பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, வன்முறை கலாசாரத்தை பரப்பி வருகின்றனர்; இளைஞர்கள், அவர்களின் வலையில் விழக் கூடாது,'' என, பா.ஜ., - எம்.பி., சாத்வி பிராச்சி பேசினார்.பெண் துறவி: பெண் துறவியும், பா.ஜ., - எம்.பி.,யுமான பிராச்சி, உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் நடந்த வி.எச்.பி., விழாவில் நேற்று பேசியதாவது: உ.பி., மாநிலம் மீரட்டுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அப்போது, அங்கிருந்த சிறுவர்களிடம்,'எதிர்காலத்தில் யாரைப் போல் ஆக ஆசைப்படுகிறீர்கள்' என, கேட்டேன். அதற்கு, அவர்களில் பலரும், சல்மான் கான், ... |
| தி.மு.க., ஆட்சியில் தள்ளுபடியான கடனுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் 'நோட்டீஸ்': விவசாயிகள் அதிர்ச்சி Posted: தஞ்சாவூர்: தி.மு.க., ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடன்களுக்கு, வட்டியுடன் கடனை திருப்பிச் செலுத்துமாறு, இந்த ஆட்சியில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு வருவதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த, 2006 சட்டசபை தேர்தலுக்குப் பின், ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க., அரசு, கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகள் பெற்ற விவசாயக் கடனை, வட்டியுடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்து, அதற்கான அரசாணையையும் வெளியிட்டது. இதையடுத்து, விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக, சம்பந்தப்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாயிகளுக்கு தெரிவித்தன. தி.மு.க., அரசின் ... |
| 'இந்திய ஒப்பந்தத்தை வேண்டுமென்றே தவிர்த்தேன்': சிறிசேன ஒப்புதல் Posted: கொழும்பு: ''இந்தியாவுடன், விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் (சி.இ.பி.ஏ.,) தொடர்பான பேச்சுவார்த்தையை வேண்டுமென்றே தவிர்த்தேன்,'' என, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கொழும்புவில், தொழில் அமைப்புகள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: எந்தவொரு நாட்டுடனும், இலங்கையின் வர்த்தகத்தை பாதிக்கக் கூடிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட மாட்டாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். நவரத்தினங்கள் மற்றும் சுரங்க துறையில், வெளிநாடுகளுடன், இலங்கை செய்து கொண்ட, 16 ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளேன். கடந்த மாதம் டில்லி சென்ற போதும், நிகழ்ச்சி ... |
| 10 ஆண்டுகளில் தேசிய கட்சிகள் வசூலித்த நன்கொடை 5 மடங்கு அதிகரிப்பு Posted: புதுடில்லி: கடந்த பத்து ஆண்டுகளில் தேசிய கட்சிகள் வசூலித்த தேர்தல் நன்கொடை 5 மடங்கு எகிறியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் இரு பெரும் தேசிய கட்சிகளான பா.ஜ.,வும் காங்., கட்சியும் முதலிடத்தில் உள்ளன.தேர்தல் காலங்களில் தேசிய கட்சிகள் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நன்கொடை வசூலிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பான (ஏ.டி.ஆர்.) என்ற அமைப்பு, கடந்த 10 ஆண்டுகளில் தேசிய கட்சிகள் வசூலித்த நன்கொடைகள் மற்றும் தேர்தல் செலவு கணக்கு விவரங்களை தலைமை தேர்தல் கமிஷனிடம், சமர்பித்த ... |
| அந்த பெண்ணிடம் தான் தவறு உள்ளது: நியாயம் கற்பிக்கிறான் கொடூர கற்பழிப்பு குற்றவாளி Posted: புதுடில்லி: ''கற்பழிக்கும் போது, முரண்டு பிடித்து, எதிர்ப்பு தெரிவித்து ஆக்ரோஷமாக நடந்து கொண்டதால் தான், அந்தப் பெண்ணை கொடூரமாக துன்புறுத்தினோம்,'' என, டில்லி மருத்துவ மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்ததற்காக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனான, முகேஷ் சிங், 28, கூறியுள்ளான்.டில்லி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவன், பி.பி.சி., செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: எங்களைப் போன்ற கற்பழிப்பு குற்றவாளிகளை தூக்கில் போடுவதால், கற்பழிப்புக்கு ஆளாகும் பெண்களுக்குத் தான் பாதிப்பு. கற்பழிக்கப்படும் பெண்ணை, சும்மா ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 03,2015 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |